அக்டோபர் மாதம் தில்லியில் நல்ல குளிர் முன்பெல்லாம் இருக்கும், இப்போது நவம்பர் கடைசியில் தான் குளிர் வர ஆரம்பிக்கிறது அடுக்கு மாடி கட்டிடங்கள் பெருகப் பெருக இயற்கையிலும் மாற்றம் ஏற்படுகின்றன, அப்போது வெட்ட வெளி அதிகம், இந்த அக்டோபர் மாதம் வந்தாலே என் பழைய ஞாபகங்கள் கிளறப் பட்டு விடுகின்றன,
அக்டோபர் மாதம், முப்பது 1984, காலை சுமார் ஒரு பத்து மணி இருக்கும், கரோல்பாக் என்ற இடம் சின்ன மாதுங்கா{ மும்பாய்,,} எனலாம் அல்லது
மாம்பலம்{சென்னை}எனலாம் அங்கு தான் என் வீடு எல்லா வீட்டுகாரர்களும் அநேகமாக ஸர்தார்ஜீயாக இருந்தனர். அந்தக்
காலத்தில் பாகிஸ்தான் இந்தியா பிரிவினையின் போது பலர் அங்கிருந்து தப்பி ஓடி வந்து இங்கேயே தங்க வீட்டையும் கட்டி கொண்டனர். அவர்கள் மதராசி என்றாலே வீடு வாடகைக்குக் கொடுத்து விடுவார்கள். முதல் தேதியே தமிழர்கள் நாணயமாக வாடகை
தந்து விடுவார்கள். சண்டைப் போட மாட்டார்கள் என்ற நல்ல பெயர்
நான் காலையில் கடிதம் போஸ்ட் செய்ய ஒரு தபால் நிலயத்திற்கு சென்றேன். அந்தப் போஸ்ட் ஆபீஸ் அருகில் ஒரு பெரிய வீடியோ கடை இருந்தது மூன்று சர்தார்ஜிகள் அதைப் பார்த்து வந்தனர் திடீரென்று ஒரு பெரிய சுனாமி அலைப் போல் மளமளவென்று ஒரு கூட்டம் வந்தது நான் அந்தக் கூட்டத்திற்குள் மாட்டிக்கொண்டேன் என் வாய்
நாமஸ்மரணைச் செய்ய ஒருவன் எனக்கு வழி விட்டான். பின் அவர்கள் அந்த சர்தார்ஜியின் கடைக்குள் நுழைந்து அவனைப் பிடித்து அடி அடி என்று அடித்து முதுகிலும் தோளிலும் குத்தி ஒரே வில்லன் சண்டை தான் சிலர் உள்ளே நுழைந்து பல கேசட்கள் சூறையாடி பைகளில் போட்டுக் கொண்டனர், குரங்கு கையில் பூமாலைப் போல் கடை ஆனது.
நான் ஒரே ஓட்டம்... மனது படபடவென்று அடித்துக்கொண்டது. நேரே வீடு ஓடி வந்தேன் நல்ல வேளையாக வீடு அருகில் இருந்ததால் பிழைத்தேன். முதல் காரியமாக சர்தார்ஜி அப்பாவைக் கூப்பிட்டேன் விவரம் சொன்னேன். அத்ற்குள் ரேடியோ அலறத் தொடங்கிற்று
கூட டிவி யும் தான் அதுதான் ஸ்ரீமதி இந்திரா காந்தி அம்மையார் அவரது காவல் காப்போனால் சுடப்பட்டு விட்டார். பல இடத்தில் கோலிகள் துளைத்துக் கொண்டு சென்றிருக்கின்றன என்றும் செய்திகள் மாறி மாறி வந்துக் கொண்டிருந்தன. ஒரு சீக்கிய மெய்க்காவலனே அவரைச் சுட்டு விட்டான். அகில இந்திய மருத்துவ மனையில்
சேர்க்கப் பட்டிருக்கிறார், என்றும் தகவல், எங்கும் பிரார்த்தனைகள், எங்கும் மனதில் ஒரு பீதி, கலவரம், சோகம் அப்பப்பா சொல்ல முடியாது. ஒரு தீப்பொறிப் போல் பற்றி எல்லா இடமும் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது, எல்லா அலுவலகங்களும் செயலிழந்து போயின, ஒருவர் கூட வேலை செய்யவில்லை, ஆஸ்பத்திர்யின் வாசலில் கூட்டம் சொல்லி முடியாது, பலர் டிவி முன் சாப்பாடு கூட இல்லாமல் உட்கார்ந்திருந்தனர். பள்ளி, காலேஜ் மூடப்பட்டன. மாலை வந்தது, ஒரு பிரளயத்தைக் கண்டேன் ஆம் முன்னாள் பாரதப் பிரதமர் பாரதரத்னா ஸ்ரீமதி இந்திராகாந்தி அவர்கள் மரணம் அடைந்தார் என்ற செய்தி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாற்போல் ஒரு ஆட்டம் ஆட வைத்தது...
வளரும்...
Friday, May 18, 2007
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-8
Posted by
Meerambikai
at
8:48 AM
1 comments
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-7
என் வீட்டின் முன் புறம் இரண்டு கார் ஷெட்டுகள் இருந்தன, அதைச் சர்தார்ஜி சரி செய்து இரண்டு கடைகளுக்குக் கொடுத்திருந்தார். ஒன்று சாய் கடை... அத்துடன் பிஸ்கெட்ஸ், பன், பிரட், பட்டர் என்று காலை நாஸ்தாவுக்கு வேண்டியது கிடைக்கும், அத்துடன் ஆம்லெட்டும் செய்து கொடுப்பான். அவன் ஜய்பூரியன் பெயர்... முன்னா அவன் டீ போட்டால் நல்ல ஏலக்காய் மசாலாவுடன் வாசனைத் தூக்கும். குளிர் வந்தால் நல்ல அதரக் {இஞ்சி } சாய் மிகப் பிரமாதமாக இருக்கும். நானே பள்ளியிலிருந்து வந்தால் அங்கு இருந்து சாப்பிட்டு வருவேன். மற்றொரு கடை முடித் திருத்தும் நிலயம் அவன் பெயர் போலா..., கடையின் பெயர் "ராயல் முடி திருத்தும் நிலையம்". அவன் லாஹூரிலிருந்து வந்தவன். அவன் அங்கு இருப்பது என் கணவருக்கு மிக ஜாலிதான். ஒரு கூட்டம் இல்லாமல் ஒரு ஸ்பெஷல் கவனிப்பு... இவர்கள் இருவரும் மிக நல்லவர்களாக அன்பு உள்ளம் கொண்டவர்களாக இருந்தனர், என் வீட்டிற்கு ஒரு சரியான பாதுகாப்பு, நான் சில சமயம் தமிழ் பத்திரிக்கை வாங்க கதவைப் பூட்டாமல் இவர்களிடம் சொல்லி விட்டுச் செல்வேன் கவலையில்லாமல். தவிர நான் பள்ளியிலிருந்து பல கட்டு திருத்தும் தாள்கள் கொண்டுவர பள்ளி பஸ்ஸிலிருந்து இறங்குவேன். என்னைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களில் ஒருவன் ஓடி வந்து என் மூட்டைகளை வாங்கி வீடு வரை கொடுத்துதவுவான். ஒரு நாள் பள்ளியில் வேலை நிறைய இருந்ததால் நான் பஸ்ஸில் ஏறவில்லை. பின் ஒரு ஆட்டோ பிடித்து கொண்டு வந்தேன். என் வீடு வரும் முன் ஒரு நாற்சந்தியைக் கிடக்க வேண்டும், அங்கு போலீஸ் இருப்பதில்லை... தவிர டிராபிக் சிக்னலும் கிடையாது. இஷ்டத்திற்கு அவரவர்கள் ஓட்டுவார்கள் என் ஆட்டோ வீடு அருகில் வந்ததும் இறங்க ஏற்பாடு செய்துக் கொண்டு ஓரமாக வந்தேன். அப்போது ஒரு குண்டு வெடிப்பது போல் ஒரு பெரிய சத்தம் என் காதில் விழுந்தது. அதற்குப் பின் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை...நினவு வந்து கண் விழித்துப் பார்த்த போது சாய் கடையின் பெஞ்சில் படுத்திருந்தேன், எனக்கு நல்ல டீ போட்டு அந்தக் கப்புடன் அந்த தர்மா அருகில் இருந்தான். அவசரமாக எழுந்திருக்க முனைந்தேன், முடியவில்லை இடுப்பிலும் இடது கையிலும் நல்ல அடி.என் மனதெல்லாம் என் பள்ளி மாணவர்களின் விடைத்தாள் எங்கே போயிற்று? என்ற கவலையில் தான் இருந்தது... பின் என் குழப்பத்தைப் பார்த்து அந்த தர்மா, நடந்தைச் சொன்னான். ஒரு கார் என் ஆட்டோவை மோதி வேகமாக நிற்காமல் சென்று விட்டது. நான் நடை பாதையில் வீசி எறியப்பட்டேன், என் துப்பட்டா எங்கேயோ விழ, என் ஹேண்ட் பேக்கும் பறக்க என் பேபர்கள் அலங்கோலமாய் கீழே பரப்ப இந்தக் கடைக்காரர்கள் ஓடி வந்து, "ஆ மேம் சாஹப் " என்று அலறி அடித்துக் கொண்டு ' என்னைத் தூக்கி என் துப்பட்டாவை எடுத்துப் போர்த்தி இந்தக்கடையின் பெஞ்சின் மீது படுக்க வைதிருக்கிறார்கள் ,பின் எல்லா ஓடும் வாகனங்களை நிறுத்தி என் மற்ற பொருட்களையும் சேகரித்து வைத்தார்கள்...
வளரும்...
அன்புடன் விசாலம்.
Posted by
Meerambikai
at
8:44 AM
0
comments
Saturday, May 12, 2007
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-6
நாங்கள் இப்போது ஒரே குடும்பத்தினர்.. எல்லாப் பண்டிகைகளும் சேர்ந்து தான் கொண்டாட்டம், அதில் வீடு பெருக்குபவர்கள் கக்கூஸ் பாத்ரூம் அலம்புபவள் எல்லோரும் ஒன்றுதான். எலோரும் வருவார்கள், என் வரலட்சுமி பூஜைக்கு அவர்களுக்கும் தாம்பூலம் உண்டு. முதலில் அவர்களுக்கு அதை என்ன செய்வது என்று தெரியவில்லை.
நானே அவள் நெற்றியில் குங்கும் வைப்பேன் அவர்கள் என் அன்பில் நெகிழ்ந்து போவதைப் பார்த்து நான் மனம் பூரித்துப் போவேன். அதே போல் அவர்களும் ஹோலி வர்ணங்களின் பண்டிகையின் போது என் மேல் கலர் பூசுவார்கள் நான் இட்லி செய்தால் ஒரு ஐம்பதாவது செய்ய வேண்டும் அத்துடன் குட்டி வெங்காயச் சாம்பார் வேறு, கப்பு..கப்பாக அந்தச் சர்தார்ஜியின் குடும்பம் குடித்து விடும், அவ்வளவு அதன் மே ஆசை, இதே போல் மசால் தோசா ஊத்தப்பம் என்று பல செய்ய... எனக்கு கிச்சன் விட்டு எப்படா போகலாம் என்று தோன்றினாலும் அவர்கள் திருப்தியுடன் " பஹுத் அச்சா... பிடியா கீ ஹாத் கி க்மால் " என்று அனுபவித்து சாப்பிடும் போது நான் அனுபவிக்கும் இன்பமே தனிதான். எப்போதுமே விரும்பி உள்ளனபுடன் சமைத்தால் அதன் டேஸ்டே தனிதான். சில கோவில்களில் குருத்வாராக்களில் கொடுக்கும் சொஜ்ஜிப் பிரசாதம் ரொம்பப் பிரமாதமாக இருக்கும் . இதே போல் அவர்களும் எனக்கு சோலே மட்டர், பன்னீர் ஆலு, கோபி தந்தூர் கி ரோடி என்று கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட பஞ்சாபி சமையல் என்றும் எனக்குக் கை கொடுக்கிறது. அதே போல் பஞ்சாபி மொழியும் தான், ஆனால் அவர்களுக்கு வா... போ... இல்ல... வேண்டா... என்ற நாலைந்து சொற்கள் தான் வநதன. பாவம் முயற்சி செய்து விட்டு விட்டனர்.
அந்தக் கிஷன் சிங்கிற்கு ஒரு முஸ்லிம் நண்பர் மிகவும் வயதானவர் அப்துல் என்று பெயர் ஒரு தடவை என்னை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் என் அப்பா சிங்.
இதற்கு நடுவில் எனக்கு டைபாய்டு சுரம் வந்து விட்டது, அந்த நேரம் என் மாமியார் அவர்களும்,சென்னைக்கு வந்திருந்தார், நான் தனித்து விடப்பட்டேன். என் கணவருக்குW HO ல் நிறைய டெலிகேட்ஸ் வந்து இருந்ததால் லீவு எடுக்க முடியவில்லை,அப்போது எனக்கு காலை டீயிலிருந்து கவனித்துக் கொள்ள அவர்கள் வந்து விடுவார்கள், கூடவே அந்த முஸ்லிம் சாஹபும் உதவுவார், எத்தனை வைத்தியம் செய்தும் எனக்கு சரியாகவே இல்லை, வீட்டில் எல்லோர் மூடும் கராப் தான்.
நான் என்ன செய்வது மனதிற்குள் இப்படி படுத்து கொண்டுவிட்டோமே என்று வேதனை.
அப்போது தான் அந்த முஸ்லிம் ஸாஹப் "நஜர் லக் கயா ஹொகா "(கண் திருஷ்டி ஆக இருக்கும்) என்று சொல்லி அதற்கு என்னை ஒரு மஸ்ஜிதிற்கு அழைத்துப் போவதாகக் கூறினார். அப்போது இருந்த நிலையில் எதைத் தின்னால் பித்தம் தெளிடும் என்ற நிலை, ஆகையால் என் கணவரும் ஒகே சொல்லி விட்டார். நான் சிங் பின் அந்த அப்துல் சாஹப் மூன்று பேர்களும் ஒரு ஆட்டோவில் ஏறி சாந்தினி சௌக்கில் சென்றோம். அங்கு ஒரு மரத்தடியின் கீழ் வயதான முஸ்லிம் கிழவர் ஒரு மயில் தோகையுடன் உட்க்கார்ந்திருந்தார். அவர் அருகில் ஒரு மூக்கு வைத்த நீள் ஜாடியில் தண்ணீர் இருந்தது, என்னை அவர் முன்னால் உட்க்கார வைத்தார்கள், நான் எனக்குப் பிடித்த சீரடி சாயி என்ற நாமம் விடாது சொல்ல அவரும் ஒரே புகையாக எதோ போட்டு என்னைச் சுற்றி அபிரதட்சிணம் என்று சுற்றி திருஷ்டிக் கழித்தார். பின் என் கையில் ஒரு தாவீஜ் (தாயத்து) கட்டினார். சர்க்கரை மிட்டாயும் கொடுத்தார். அவ்வளவுதான் நிறைய ஆசிகளுடன் திரும்பி வந்தேன். அந்த முஸ்லிம் அப்துலுக்குத்தான் எவ்வளவு அன்பு, மிகவும் வியந்தேன். அன்புக்கு ஜாதி மாதம் ஒன்றும் இல்லை! அது எல்லாவற்றுக்கும் அப்பால்பட்டது. இத்தனை நடந்தும் அந்த மாடி வீட்டு மாமி மாலை என்னை வந்து பார்ப்பாள் காலையில் அவர் பூஜை மடி ஆசாரம் போன்ற விஷயங்கள் அவரை கீழே வர விடாமல் தடுக்கும், ஆனால் பின்னால் நான் அவருடன் பேசி பேசி அவரை மாற்றி விட்டேன். அது ஒரு தனி கதை...
வளரும்...
அன்புடன் விசாலம்
Posted by
Meerambikai
at
11:29 PM
1 comments
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-5
அந்தச் சுந்தரராமன் வீட்டு எதிர் வீடு {neighbour}..அங்கு ஒரு தாயும் இரண்டு பையன்களும் குடி இருந்தார்கள், பெரியவன் சிவராமன் சின்னவன் சேதுமாதவன், அந்தத் தாய் நடு நடுவில் மதுரை போய் விடுவாள். அப்போது அந்த வீட்டைப் பார்க்க வேண்டுமே ஒரே சீட்டுக்கச்சேரி தான், ஒரே கும்மாளம் ஒரே சிரிப்பு.. அதற்கு நடு நடுவே
என் வீட்டிலிருந்து நொறுக்குத் தீனியும் டீயும் ஸப்ளை... அப்போது என் கணவர் கீழே வந்து என்னை டீ போடச்சொல்லி எடுத்துப் போவார், அவரும் தான் அந்தச் சீட்டுக்கச்சேரியில் பங்கு ஏற்பார்.எனக்கு அதில் ஏபிசிடி கூடத் தெரியாது, மேலும் மேலே அந்த அறைக்குப் போனால் ஒரே புகை மூட்டம் தான்... சிவ சிவ என்று ரேடியோ கேட்டுக் கொண்டிருப்பேன். அல்லது வயலின் வாசித்துக் கொண்டிருப்பேன். அதைக் கேட்க நாலு சுவர் தான் இருக்கும் ஆத்ம திருப்திக்கு அது போதும் என்று மனது சொன்னாலும் பெரிய கச்சேரிகளுக்கு வாசித்த நான் இப்போது நாலு சுவருக்குள் என் கலைகளை அடக்க வேண்டும் என்றால் மிக சிரமாக இருந்தது... இது காரணமாக சனி ஞாயிறு வந்தால்... ஏன் வருகிறது என்று தோன்றும் அல்லது அந்த மதுரை மாமி எப்போது திரும்பி வருவார் என்று இருக்கும்... நாளைடவில் இதுவும் பழகிப் போயிற்று பாபிஜி என்று என் மேல் அவர்களுக்கு ரொம்ப ஆசை தமிழன் ஆனாலும் எல்லோருக்கும் நான் baabhiji தான்...
அந்தச் சிவராமனுக்கு இரவில் நடக்கும் வியாதி இருந்தது {insominia } ரொம்ப வேடிக்கை...
ஒரு நாள் இரவு... கீழே நான் குடி இருந்த இடத்தில் வந்து கதவைத் தட்ட நான் திறக்க அவன் நின்றான்... நான் "என்னவாயிற்று உன் அம்மாவுக்கு எதாவது..."என்று இழுத்தேன்.
அவன் ஒன்றும் சொல்லாமல் வந்த வழியே மாடி ஏறி திரும்பிப் போய்விட்டான் எனக்கு ஒரே ஆச்சரியம்! கீழே வருவானேன் பின் மௌனமாகப் போவானேன் என் தூக்கத்தைக் கலைத்து விட்டு... பின் என் கணவரிடம் மறு நாள் இதைப் பற்றிச் சொல்ல, அவர் இந்தத் தகவல் அதாவது தூக்கத்தில் நடக்கும் வியாதி என்று கூறினார்.
அவன் என்றாவது கீழே விழுந்து விட்டால் என் மனத்தில் ஒரு கீறல்... ஓ...சொல்ல மறந்து விட்டேனே... எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு சக்தி intuition என்று சொல்வார்கள் அது உண்டு... என்ன இப்படி நினைக்கிறோமே... என்று எண்ணி அதை மறந்தும் விட்டேன்.
மதுரை மாமி வந்து ஒரு மாதம் ஆனது, எனக்கு அதில் மிக சந்தோஷம், என்னிடம் அவர் ஹிந்தி படித்தார். ஒரு நாள் இரவு... வேனில் காலம் ஒரே சூடு ஆகையால்...
முற்றத்தில் பல பக்கெட் தண்ணீர் விட்டு நாங்கள் எல்லோரும் அங்கு படுத்துக் கொண்டோம் ஒரு பக்கம் சர்தார்ஜி குடும்பம் மறு பக்கம் நாங்கள் மூன்று பேர்கள் நான்,என் மாமியார் அவர்கள், என் கணவர்...இரவு ஒரு இரண்டு மணி இருக்கும்,நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்தது, திடீரென்று டபார் என்று சத்தம் நான் வீல் என்று அலறி விட்டேன், எல்லோரும் எழுந்து பார்க்க சர்தார்ஜியின் மனைவி "கீ ஹுவா..." என்று பஞ்சாபியில் கேட்க, லைட் போட அப்பப்பா என்ன பயங்கரம் நான் நினைத்த காட்சிதான்... நடந்து விட்டது. அந்த சிவராமன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். மண்டையில் நல்ல அடி... நினைவு துளி் கூட இல்லை... அந்த இரத்தம் பார்த்து எனக்கு மயக்கமே வந்து விட்டது. உள்ளே ஓடி விபூதியை இட்டுக் கொண்டேன்.
என் கணவர் மிக தைரியசாலி பயம் என்பது அவரது அகராதியிலேயே கிடையாது.மேலே மாடிக்குப் போய் அந்த மதுரை மாமி {அவனது அம்மா}வை மணி அடித்து எழுப்பினார், இந்தச் சிவராமன் தூக்கத்தில் நடக்கும் வியாதியில் கதவு திறந்து வந்து பால்கனி வழியாக குதித்து விட்டான். அந்த மாமிக்கு நடந்த ஒன்றுமே தெரியாததால்...
"யாரு இந்த அர்த்த ராத்ரியிலே " என்று முணுமுணுத்துக் கொண்டு கதவைத் திறக்க என் கணவரைப் பார்த்து திகைத்தாள். என் கணவர் அவரிடம் விஷயம் தெரிவிக்க அவள் கீழே ஓடி வந்து பார்த்தாள், பின் இரு கண்களையும் பொத்திக் கொண்டு மேலே தன் வீட்டிற்கு ஓடி வந்து விட்டாள். அதற்குப் பின் தன் மகன் என்ன ஆனான் என்று அவள் பார்க்க வராதது எப்படியோ இருந்தது, இரத்தம் பார்த்ததால் பயமா அல்லது மனதைரியம் குறைவா என்று நிர்ணயிக்க முடியவில்லை.
இந்தச் சர்தார்ஜியும் என் கணவரும் அவனை அலக்காகத் தூக்கி ஒரு காரில் வைத்து பல ஹாஸ்பிடலில் ஏறி இறங்க எல்லோரும் இந்தக் கேஸை எடுக்கத் தயங்கினார்கள்.பின் ஒரு ஹாஸ்படலில் இடம் கிடைத்து.
ஒரு 5 நாட்கள் ஆபீஸ் லீவு போட்டு அவனைப் பார்த்துக் கொண்டார்கள். பின் அவன் ஒரு மாதம் கழித்து வீடு வந்ததும் அவன் நண்பர்கள் அவனை turn by turn பார்த்துக்கொண்டனர். இன்று அவன் உயிருடன் இருப்பது அந்தச் சர்தார்ஜியியாலும் என் கணவராலும் தான்.
... அன்புடன் விசாலம்.
Posted by
Meerambikai
at
11:21 PM
0
comments
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-4
என் வீட்டு மாடியில் இரு குடும்பங்கள்...வலது பக்கத்தில்... இரண்டு பக்கங்களிலும் தமிழர்கள் தான்,ஒரு பக்கம் மாயவரம்... இன்னொரு பக்கம் மதுரை...இங்கு இருக்கும் பஞ்சாபிகள், ஸர்தார்ஜிகள் மதராசி என்றால் உடனே வாடகைக்கு வீடு கொடுத்துவிடுவார்கள்.மதராசிகள்
நாணயத்திற்கும் நேர்மைக்கும் பெயர் போனவர்களென்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள். இப்போது நாம் வருவோம் மாயவர குடும்பத்திற்கு... அங்கு இருந்தத் தமிழன் பெயர் திரு சுந்தர்ராமன், சுந்தரமாக இருப்பான், சுதந்திரமாகவும் இருப்பான்.
அவனுக்கு அப்பா இல்லை... அவன் அம்மா மாயவரத்திலிருந்து தன் பிள்ளைக்குப் பிடித்த வடாம், கருடாம் என்று போட்டு எடுத்து கொண்டு அன்பு மகனைப் பார்க்க வருவார்.
அதுவும் கடுமை வெய்யில் இல்லாமல்... குளிரும் அவ்வளவு இல்லாமல் நவராத்திரி சமயம் வருவார். ஒரு 4 மாதம் இருப்பார் அவர் வரும் நேரம் நம் திருவாளர் சுந்தர்ராமன மிக சமத்துப் பிள்ளையாக மாறிவிடுவார். நோ புகை... நோ விஸ்கி... அந்த அம்மா வந்தால் அவ்வளவுதான், கூடவே மடி ஆசாரம் வந்து விடும்.அப்ப்ப்பா அந்தக் குளிரிலும் காலையில் தலைக்குக் குளித்து ஈரப்புடவையைச் சுற்றிக் கொண்டு வரண்டாவிலிருந்து... உள்ளே அறைக்குள் போவதற்குள் பல்லெல்லாம் கிடுகிடு என்று தந்தி அடிக்கும். ஜபம் என்ன... ஸ்லோகங்கள் என்ன... எல்லாம் முடித்த பின் தான் அவருக்கு தன் வயிறு ஞாபகம் வரும். அவள் தான் தோய்த்து வந்தத் துணிகளை மேலே கொடியில் உலர்த்துவதே ஒரு கலைதான். நான் ஒரு நாள் முயற்சி செய்தேன் ஒரு கொம்பால் அந்த ஒன்பது கெஜப் புடவையை இழுக்க, அது ஒரு பக்கம் சாய்ந்து என்மேலே விழ, திரும்ப முயல கழுத்து வலி எடுத்தது.
அந்த அம்மாவோ இரண்டு நிமிடத்தில் மேலே போட்டு "சர்" என்று கொம்பால் இழுக்க அவ்வளவுதான் அளவு எடுத்தது போல அவ்வளவு அழகாக அமைந்தது. பிரதோஷம் ஏகாதசி என்று விரதமும் இருப்பார்.
இந்த அப்பா ஸர்தார்ஜி வேண்டுமென்றே அவரை சீண்ட அங்கே எப்போதாவது போவார் வாடகை வாங்கும் போது... அந்த மாமி என்னைக் கூப்பிடுவார். "அடியே விசாலம்... இங்கே வந்து பாரேன் கருமம் கருமம் உள்ளே வந்து கிச்சனிலிருந்து தண்ணீர் குடிக்கிறா...
பக்கத்து துணிமேலேல்லாம் பட்டு... சிவசிவா..." நான் சொல்லுவேன்..." என்ன மாமி? நல்ல மனசுதானே முக்கியம். துணி பட்டால் என்ன? அவர் மிகவும் நல்ல ஸர்தார்ஜி" என்று...
அந்த மாமி ஒத்துக்கொண்டால் தானே...மிக பழமையில் ஊறிவிட்டதனாலோ... அல்லது நிறைய இடங்கள் பர்க்காமல் ஒரேஇடத்தில் இருப்பதால்தானோ என்று தோன்றுகிறது.
உடல் சுத்தம், உடைசுத்தம் தேவைதான் அத்துடன் மனசு சுத்தமும்
மிக மிகத் தேவை. அன்புக்கு முன் எல்லா சுத்தமும் வந்து விடுகிறது. அகத்தூய்மைடைய அடைய மனம் பரந்து விரிகிறது... எதாவது பண்டிகை வந்தால் இந்தச் சர்தார்ஜி இந்தக் குடும்பத்தினருக்கும் ஸ்வீட் டப்பா அனுப்புவார். அந்த மாமியோ அதை அப்படியே எனக்கு கொடுத்து விடுவாள். இதற்கெல்லாம் சேர்த்துவைத்து அந்தச் சுந்தர்ராமன் மாமியில்லாமல் இருந்தால் அவர்கள் வீடே பழியாகக் கிடப்பான்.
அவர்களுடன் உணவு கொள்ளுவான் எல்லா பழக்கமும் பழகி கொண்டுவிட்டான்.
இதை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் கடைசி பாகத்தில் இது ரொம்ப முக்கியப் பங்கு வகிக்கும்...
வளரும்...
அன்புடன் விசாலம்.
Posted by
Meerambikai
at
11:13 PM
0
comments
Thursday, May 10, 2007
எல்லை இல்லா அன்பும் அடங்காத வெறியும் 3
என் மார்பு படபட என்று அடிக்கத் தொடங்கியது, என் மனதில் அப்போது ஒருதைரியமான ஒரு வேகம் வர அவர் கையை ஒரு உதறு உதறினேன், எதிர் பார்க்காமல் நடந்ததால் அவர் கை தண்ணிர் கிளாஸில் பட அது கீழே 'டணார்' என்ற சத்தத்துடன் விழுந்து உடைந்தது, சென்னை வாசியாய் இருந்தால் “என்ன நினைதாய் நீ? செறுப்பு பிஞ்சிடும்” என்று சொல்லியிருப்பேன்.ஆனாலும் என் காலில் அப்போது செறுப்பு இல்லை ஸாக்ஸ் தான் போட்டிருந்தேன் அதை அவிழ்த்து அடித்தால் அதற்கு ஒரு முத்தம் தந்து எடுத்துக் கொண்டு போயிருப்பார், அவரைச் சொல்லி குற்றமில்லை... அவருக்குள் போயிருக்கும் சரக்கு அல்லவா பேசுகிறது, அவர் கீழே விழுந்த கண்ணாடித் துண்டுகளைப் பொறுக்கக்குனிந்தார், “மாப் கர்னா ஜீ” என்று அவர் வாய் முணுமுணுத்தது. இதற்குள் நான் என்அம்மா{மாமியார்} அவரிடம் போய் நின்றேன்,அவர் முற்றத்தில் குளிர் போக வெயிலில் அனுபவித்து கையில் திரு சாண்டில்யன் அவர்களது "கடல் புறா"வில் மூழ்கி இருந்தார். கீழே "மிதிலாவிலாஸ்"என்ற புத்தகமும் இருந்தது. உள்ளே நடந்தது ஒன்றும் அவருக்குத் தெரியாமல் மனம் ஒன்றி நாவலில் மூழ்கி இருந்தார் “அம்மா உள்ளே வறேளா கொஞ்சம்... தன் கண்ணாடியை எடுத்து பின் என் முகத்தை நோக்கினார் என்ன? என்ற பாவத்துடன், நான் அவர் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனேன். உள்ளே என் அம்மா நுழைந்ததும் அந்தச் சர்தார்ஜி ஒன்றும் நடக்காதது போல் "நமஸ்தே மாதாஜி" என்று சர் என்று நடையைக் கட்டினார். என்னைப் பார்த்து நாளை வருவேன் என்றும் சொன்னார், என்க்கு சற்று உதறல் கண்டது, மறுநாள், எப்போது விடியும் என்று காத்திருந்தேன். இரவு தூக்கம்வரவில்லை, என் கணவர் ஆபீஸ் விஷயமாக பேங்காக் போயிருந்தார், காலை குருத்துவாரா போக என் ஸர்தார்ஜி அப்பா கிளம்பினார். "நீங்கள் குருத்த்வாரா போய் வாருங்கள். பின் உங்களிடம் நான் பேசவேண்டும்" என்றேன், அவரும் என்னை அவர் வீட்டிலேயே சாப்பிடச் சொன்னார், என் மாமியாருக்கு பாவம்…. வயிற்றில் அல்சர் இருந்ததால் எப்ப்போதும் கஞ்சி ஆகாரம் தான். பின் அவர்வந்தார், நான் அவரிடம் "என்ன நீங்கள் இவ்வளவு நல்லவாராக இருக்கிறீர்கள், உங்கள் நண்பர் இப்படி…" என்று இழுத்தேன்.
பின் விவரமாக நடந்ததைச் சொன்னேன். பொறுமையாகக் கேட்டார் "நான் இருக்கிறேன் கவலைப்படாதே! பார்த்துக் கொள்கிறேன்" என்று அபயம் கொடுத்தார். ஷீரடி பாபாவின் ஞாபகம் வந்தது "நான் இருக்க பயமேன்" என்ற அவர் படம் என்னைப் பார்த்து புன்னகை புரிந்தது. அன்று மாலை அவன் வந்தான், இனிமேல் "அவர்" என்பது போய் அவன் என்று ஆகிவிட்டது{இனி மரியாதைத் தேவை இல்லை என்று மனதிற்கு பட்டது}. என் அப்பா சர்தார்ஜி அவனைப் பார்த்தவுடன் வேகமாக வெளியே போனார் "அந்தர் மத் ஆஜா" "உள்ளே வராதே! திரும்பிப் போய்விடு இனி இந்தவீட்டில் உனக்கு இடமில்லை நாம் பார்த்துக் கொள்ளவேண்டுமானால் இனித்தெருவில் தான் பார்ப்போம்" என்று கத்த அவர் "ஏன்? "என்று கேட்க பதிலுக்கு இவர் "என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? இவள் உன் பெண்ணின் வயசல்லவோ..."அவரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளாதக் குறைதான்.. பலவருடங்களாக உயிருக்குயிராக இருந்த நட்பை என்க்காக முறித்துக் கொண்டு விட்டார். அவர் என் கண்முன் இந்த உலகத்தில் இல்லை என்றாலும் மிக உயர்ந்து நிற்கிறார். மறுநாள் அந்த்க் கர்தார் சிங்கின் மகன் அர்ஜுன் சிங் என்னிடம் வந்து தன் அப்பாவுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அவரும் ஒரு மன்னிப்புக் கடிதததைக் கொடுத்து அனுப்பி இருந்தார், நானும் மன்னித்து விட்டேன், தவறுவது சகஜம் அதை உணர்ந்து விட்டால் அவனும் நல்ல மனிதன் ஆகிறான் இல்லையா?
அன்புடன் விசாலம்.
Posted by
Meerambikai
at
12:19 AM
0
comments
Tuesday, May 8, 2007
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்"-2
இப்போது சர்தார்ஜி கிஷன் சிங் தன் நட்பையும் எனக்காக களைந்த சம்பவத்தைக் காணலாம்...
இந்தக் கிஷன் சிங்கிற்கு ஒரு மிகப் பழகிய நண்பர் இருந்தார். அவர் பெயர் கர்தார் சிங், வயது சுமார் 55 இருக்கலாம் அவர் ஒரு டேக்ஸி ஓட்டுனர், ஆங்கிலம் நன்கு பேசுவார், அவர் அடிக்கடி இங்கு வருவார், அவர் நம் முன்னாள் பிரதமர் ஸ்ரீமதி இந்திராகாந்தி அம்மையாருக்கு கார் ஓட்டுனராக இருந்ததாகச் சொல்லி கொண்டார். என்னைஅவருக்கு ஒரு நாள் அறிமுகம் செய்து வைத்தார்கள் சர்தார்ஜி குடும்பத்தினர், அங்கு ஆங்கிலம் பேசுவது நான் மட்டும் தான் என்பதால் இந்தக் கர்தர்சிங் என்னிடம் ஆங்கிலத்தில் அரசியலை ஆரம்பித்து அலசுவார், எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம்இருப்பினும் பொறுமையாகச் செவி சாய்ப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக அவர் என்வீட்டிற்குள் வந்து பேச ஆரம்பித்தார். என் மாமியார் அவர்களுக்கு தமிழ் நாவல் என்றால் உயிர்தான். அதுவும் திருமதி ஆர் சூடாமணி வை மு,கோ திருமதி லட்சுமி தமிழ்வாணன் போன்ற புத்தகங்கள் தமிழ்ச் சங்கத்திலிருந்து எடுத்து வந்து படிக்கஆரம்பித்தால் பூலோகமோ சுவர்கமோ தெரியாது. அவ்வளவு அதில் ஆழ்ந்துவிடுவார், அடிக்கடி தன் நண்பரைப் பார்க்க இந்த ஓட்டுனர் வந்து பின் முற்றத்தில் பேச்சுக்கள் தொடங்கி ஆரம்பித்து விடும் விஸ்கி பார்ட்டி, அதுவும்வாட்69 என்ற பிராண்ட், அத்துடன் பக்கோடா வேறு, ஒரே சிரிப்பும் கொம்மாளமும் தான் முற்றத்தின் ஒரு கோடியில் தான் என் வீட்டு டாய்லட் அமைந்திருந்ததால் எனக்கு இந்தக்கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டால் வீட்டுச் சிறைதான். வெளியே வரமுடியாது. சர்தார் கிஷன்சிங்கின் அன்புக்காக பொறுமையுடன் இருக்க முயற்சித்தேன். இதற்குஒரு முடிவு தா என்று நான் வணங்கும் தேவியிடம் முறை இட்டேன், ஒருநாள், அந்தக் கர்தார் சிங் அவர் நண்பர் இல்லாத நேரம் என் வீட்டில் திடீரென நுழைந்தார், கதவு அநேகமாக திறந்தே இருக்கும், நான் அந்த நேரம் ரேடியோவில் பினாக்காகீத் மாலா கேட்டுக் கொண்டிருந்தேன் அந்தப் பாட்டுக் கூட ஞாபகம்இருக்கிறது, "ஜரா ஸாம்னே தோ ஆவோ சலியே.." என்ற சிவரஞ்சனியில் மிக அருமையான பாடல். இவர் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டார். " நீ இன்று ரொம்ப அழகாக இருக்கிறாய்" என்றார்,ஐயோ இது என்ன ட்ராக் மாறுகிறதே என்று பேச்சை மாற்ற சாய் வேண்டுமா என்றேன், "இல்லை நீ இருந்தால் போதும் பாணிபிலாவோ" தண்ணீர் கேட்டார் சரி என்று தண்ணீர் எடுக்க உள்ளே சென்று ஒரு கிளாசில் தண்ணீர் வைத்து அதை ஒரு ட்ரேயில் வைத்து அவரிடம் நீட்டினேன், டம்ளரை கையில் கொடுக்கும்படிக் கேட்டார் கொடுத்த பின் உள்ளே நகர்ந்து விடலாம் என்று எண்ணி கிளாஸ் டம்ளரை அவரிடம் நீட்ட கிளாஸுடன் என் கையையும் பிடித்தார்...
வளரும்...
Posted by
Meerambikai
at
4:41 AM
0
comments
"எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும்" -1
நான் இந்த "எல்லை இல்லா அன்பும்... அடங்காத வெறியும் " என்பதைப் பற்றி எனக்கு தில்லியில் பலவருடங்கள்(45)இருந்த அனுபவம் எழுத உந்தியது, இது பெரியதாக வளரும் என்பதால் சிறு பகுதிகளாகப் பிரித்து எழுதுகிறேன். படிப்பதற்கும் வசதியாக இருக்கும். தயவு செய்து படித்து ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன். இது என் வாழ்க்கையில் நடந்தாலும் இதிலிருந்து நிறைய நாம் கற்றுக் கொள்ளலாம். என்பதால் பகிர்ந்து
கொள்கிறேன். எனக்கு திருமணம் நடந்தபின் புதிதாக புதுக் குடித்தனம் செய்ய தில்லி நகரில் காலடி வைத்தேன். ஹிந்தி நன்றாகத் தெரியுமாதலால் மொழி பயம் இருக்கவில்லை. நாங்கள் தம்பதி சமேதராக வீட்டு வாசலில் வந்து இறங்கியதும், நான் உள்ளே நுழைய முற்பட்டேன். என் பெற்றோர்கள் ஞாபகம் வர கண்களில் நீர் முட்டியது. அப்போது ஒரு சிங் பெரியவர் வந்தார்,
"டஹரியே டஹரியே "என்று அன்பாகக் கூறி எங்களை நிறுத்தி பின் தன் மனைவியை கடுகு எண்ணெய் கொண்டு வரச் சொல்லி வாசலில் ஒரு ஓரமாக விடச் சொன்னார். திருஷ்டி கழிக்கிறாராம்,பின் அவர் மகனை அழைத்து எங்களுக்கு ஒரு பூச்செண்டு கொடுக்கும்படி சொன்னார், பின் ஒரு ஆரத்தியும் எடுத்து "பிடியா{bitiyaa} அபி அந்தர் ஜாயியே" என்றார். முன் பின் தெரியாத என்னை அவர் மகளே என்று அழைத்து நல்ல மரியாதையும் செய்து உள்ளே அனுப்ப நான் என்னையே மறந்தேன்.
என் கண்வர் காலை 8 மணி போனால் இரவு 7க்கு வந்த பின், திரும்ப எம்பிஏ வகுப்புக்குப் போய்விடுவார். அங்கிருந்து வரும் நேரம் 11 மணிக்கு மேலாகிவிடும், அப்போதெல்லாம் என் தனிமையைப் போக்கி தாய் தந்தை போல் பார்த்துக் கொண்டது அந்தக் குடும்பம்.
எனக்காக அந்தச் சர்தார்ஜி விட்டது இரண்டு... ஒன்று அசைவம் இரண்டு ஒரு சிறந்த நட்பு.
ஒருநாள் நான் முற்றத்தில் உட்க்கார்ந்து ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருந்தேன் இரு குடும்பதினருக்கும் பொதுவான முற்றம், அப்போது அந்தச் சர்தார் கிஷன்சிங் வந்தார், கையில் ஒரு கோழி அதைத் தலை கீழே பிடித்துக் கொண்டிருந்தார் அது சிரசாசனம் போல் தொங்கியது, கால்கள் கட்டப்பட்டிருந்தன, நான் அதைப் பார்த்தேன்,
அவரும் விளையாட்டுக்கு அதை என்னிடம் கொண்டுவந்தார், அது என்னைப் பார்த்தது, என்னக்கண்கள்? பரிதாபமாக என்னை நோக்கியது. நடுநடுவே இறக்கைகளையும் அடித்துக் கொண்டது, அப்பப்பா அந்தக் காட்சி என் மனதை உலுக்கியது. நான் உள்ளே போய் என் கதவைச் சார்த்தி கொண்டேன். பின் கொஞ்சம் நேரம் கழித்து ஒரு மாதிரி அலறல் பின் மௌனம் குடிகொண்டது பின் "டக் டக் "என்றச் சத்தம். மெள்ள சன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். இறக்கைகள் பிய்க்கப் பட்டு அங்கும் இங்கும் கிடக்க, கோழியின் தலையும் தனியே கிடக்க, இங்கே என் இதயம் படபட என்று அடித்துக் கொண்டன, டாய்லெட் முற்றத்தில் தான் இருக்கிறது ஆனாலும் மனம் அங்கு போக மறுத்தது இங்கு சைவம் அசைவம் பற்றி விவாததிற்கு இடமே இல்லை, அவரருக்கு எது பிடிக்குமோ அது செய்யலாம். ஆனால் அந்தக் கோழியை அழகாக அணைத்து வந்து பின் ஒரே போடாக வெட்டினால் அவ்வளவு வேதனை அது அனுபவிதிருக்காது, ஒரு உயிரின் வேதனை என் மனக்கண்னின் முன் நின்றது. இரவு தலைவலி பின் வாந்தி
என்று உடல் நிலை கெட்டது, மனதிற்கும் உடலுக்கும் எத்தனைச் சமபந்தம் உள்ளது? மறு நாள் சுரமும் வந்தது என் இதயமும் கோழி போல தானோ என்னவோ? இப்போது அப்படியில்லை... அனுபவம் எதையும் தாங்கும் இதயமாக ஆக்கி உள்ளது. மறு நாள் நான் எழுந்து வராததைக் கண்டு அந்தச் சர்தார் குடும்பம் என்னைப் பார்க்க ஆப்பிள் பழங்களுடன் வந்தது. "ஏன் மகளே! இப்படிப் படுத்து விட்டாய் ?"என்று பாசமுடன் என் தலை கோதிய படியே விசாரிக்க நான் அந்தக் கோழி சமாசாரம் சொன்னேன் அவ்வளவுதான்... அவர் " என் ஆசை மகளுக்காக இன்றைய தினத்திலிருந்து இந்த வீட்டிற்கு இனி கோழி வராது! என் மகளுக்காக நான் இதை விட்டு விடுகிறேன்" என்றார் என் கண் கலங்கி அந்த அன்பின் ஊற்றில் மிதந்தேன்...
வளரும்...
அன்புடன் விசாலம்.
அன்புடன் விசாலம்
Posted by
Meerambikai
at
3:09 AM
0
comments
Monday, May 7, 2007
மருந்தில்லாத... மருத்துவம்..!
நாம் மருந்துகளை கோலிகளை முழங்கியே காலம் ஓட்டுகிறோம், ஒரு தலைவலியா? உடனே எடு ஒரு சாரிடோன். ஒரு ஜுரமா எடு ஒரு ஆஸ்பிரின், தூக்கம் வரவில்லையா? உடனே எடு ஒரு கம்போஸை... என்று அவசர உலகத்தில் அவசர வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். நம் உடலில் நமக்குள்ளேயே சரி செய்யும் சக்தியும் இருக்கிறது. நம் சரீரத்திற்குத் தகுந்த மாதிரி வாழ்க்கை முறையைக் கடைப் பிடித்தால்... ரோகமே வர வாய்ப்பு இல்லை, காலை எழுந்திருக்கும் நேரம் இரவு படுக்கும் நேரம் உண்ணும் உணவு கூடிய வரையிலும் இயற்கையுடன் ஒன்றி வாழ்தல் என்று ஒழுங்கு முறையுடன் வாழ பிரச்சனை வருவதில்லை. இயற்கைத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட அற்புதமாக செயல்படும் மெரிடியன் என்ற உடலில் உள்ள முக்கியப் புள்ளிகளில் அழுத்தம் தர மக்கள் மிகவும் பயனடைகின்றனர். இதை சுஜோக் தெரப்பி என்றும் அக்குபிரஷர் என்றும் சொல்லலாம். இதை உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்
செய்திருக்கிறது இதில் அக்குபங்சர் என்று ஊசிகளை மெரிடியனில் இலேசாக ஏற்றி சரி செய்வதும் உண்டு, மற்றொன்று ரிப்ளக்ஸாலஜி இதுவும் அக்குபிரஷருக்கு தம்பி என்று சொல்லலாம். சீனாவில் ஆரம்பித்து பின் ஜப்பான், அமெரிக்கா என்று இப்போது பல நாடுகளில் இந்த வைத்திய முறையை விரும்பி ஏற்கின்றனர். இதைப் பற்றி பலர் பல புத்தகங்கள் எழுதி உள்ளனர். அதில் சோன்{zone }Wiliam pitzgerald எழுதிய புத்தகம் மிகப் பிரமாதம். Perfect health buy Deepak vohra and accupressure and fitness by bojraj இந்த இரண்டு புத்தகங்களும் இதைப் பற்றி நன்கு சித்தரிக்கப்பட்டுளன. நமது உடலில் சக்தி {energy}யின் ஓட்ட்ம் நிற்காமல் ஓடிக் கொண்டு இருக்கிறது.நமது சக்தி ஓட்டத்தில் நடுவே தடங்கல் {blocks ] வந்தால் ஓட்டம் கெட்டு அதில் பாதிப்பு வருகிறது. நமது கை கால்களில் இருக்கும் முக்கியப் புள்ளிகளில் அழுத்தம் தர சக்தியின் ஓட்டம் சரியாகி அதன் பிரச்சனையும் சரியாகிவிடுகிறது. அந்த முக்கியப் புள்ளிகள் சர்க்கரை நோய்க்கு, இருதயம், சிறு நீரகம், இரைப்பை, தைராய்ட் சோலார் பிளக்செஸ் போன்ற இடங்களில் சம்பந்தப்பட்டு கால் பாதங்கள், கைகளில் அந்தப் புள்ளிகள் முடிவடைந்திருக்கும், அதை நாம் தெரிந்து வைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு அழுத்தம் கொடுக்க அந்த நோய் கட்டுப்பட்டு பின் சரியாகும், இதில் பக்கவிளைவு பின் விளைவு இல்லை,அந்தக் காலத்தில் கோலம் போடுவது. தோசைக்கு அரைப்பது கிணற்றிலிருந்து தண்ணீர் இழுப்பது போன்ற ஒவ்வொரு செயலும் இந்த அக்குபிரஷர் சமபந்தப்பட்டதே, இன்று எல்லாவற்றுக்கும் இயந்திரம் வந்து சோம்பேறிகளாக ஆக்கி விட்டு அதனால் நோயும் கொடுத்து விட்டது,
உள் மன எழுச்சியால் உடல் பாதிக்கிறது டென்சனில் முதுகு எலும்பு, துயரம் என்றால் குடல் வயிறு பாதிக்கப் படுகிறது கவலை என்றால் மண்ணீரல் வயிறு பாதிக்கிறது, மகிழ்ச்சி அதிகமானால் இருதயம், பயம் அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப் படுகிறது, இந்த மன எழுச்சி வராமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் எல்லாம் நன்மைக்கே
என்று எடுத்துக் கொள்ளும் பக்குவம் வளர்க்க வேண்டும். விரல்கள் நுனியில் அழுத்தம் கொடுத்து வர உடல் உறுப்புகள் சரிவர இயங்கும்
அன்புடன் விசாலம்
Posted by
Meerambikai
at
5:05 AM
0
comments
Sunday, May 6, 2007
நான் இருக்கிறேன் உனக்கு ,,,,,,,
போகலாம் வா" என்றான்
" என் வாழ்க்கையே இருளானதே,
எங்கே போவேன் நான்? என்றாள்
எங்கும் மௌனம்...
மன அலையும்
ஓயாமல் அடிக்க
கேட்டான் அவன்,
யார் அந்தக் கயவன்?
கூறாமல் விம்மினாள்,
கைகள் மணலில் கோலம்
அவள் வாழ்க்கையே அலங்கோலம்
மங்கலான முகம்
அங்கு தெரிந்தது
காதலில் ஏமாந்தாள் தங்கை,
அண்ணன் கொடுத்தான் தன் கை,
பெற்றோர்கள் ஒதுக்க
தங்கைக்கு ஒரு தாயானான்
காப்பாற்ற ஒரு தந்தையானான்
இனி அவனுக்கு ஏது திருமணம்?
தங்கையின் வாழ்வே நறுமணம்
இதுதான் அவன் லட்சியம்
அலைகளே அதற்கு சாட்சியம்
ஒரு வழிபிறந்தது அங்கு
பாசமலர் மலர்ந்தது அங்கு...
அன்புடன் விசாலம்
Posted by
Meerambikai
at
5:55 AM
1 comments
மன்னித்துவிடம்மா...
எப்படிம்மா இந்த மாதிரி நான்?
என்க்கே தெரியாத ஒன்று
நடந்து விட்டது இங்கு,
பல தடவை சொன்னாய் நீ
உன் குடியையே கெடுக்கும்"
எனக்கு இந்த நிலையா?
ஆக்கினவன் யாரம்மா?
ஆ என் மூளையும் மழுங்கியதே
ஞாபக சக்தியும் போனதே,
இரு நினைவு செய்கிறேன்,
சற்று யோசிக்கிறேன்...
ஆ என்னைவைத்து வியாபாரம்
செய்தவன் ஒரு டாக்டர் அம்மா.
தவறை உண்ர்ந்தேன்...
என்னை மன்னித்துவிடம்மா...
அன்புடன் விசாலம்
Posted by
Meerambikai
at
3:19 AM
0
comments
Be Happy
ஓ குண்டு மனிதா நீ ஹார்டிதானா?
உடம்பை இளைக்க இந்த ஆட்டமா?
இல்லை! ஆனந்தத்தின் எல்லையில் இந்த ஆட்டமா?
குழக்கட்டை சரிக்க இந்த ஆட்டமா?
“இல்லை! டிஸ்கோதே” யின் சரக்கில் இந்த ஆட்டமா?
எங்கே உந்தன் “லாரல்” தேடட்டுமா?
ஓ உன் அருகிலேயே இருப்பு,
ஓ ஏனப்பா இந்த இளைப்பு?
காதலியைப் பிரிந்த ஏக்கமா?
தனிமையை ஆட்டும் துக்கமா?
தினசரி சாப்பாடு மட்டமா?
ஆனாலும் உன் டான்ஸ் உச்சமா?
“ஹார்டி”யுட்ன் சேர்ந்து அமர்க்களமா?
Posted by
Meerambikai
at
2:39 AM
0
comments
Thursday, May 3, 2007
அமெரிக்காவில் ஒரு கோவில்!
நடக்கின்றன பண வசதி இல்லாமல் படிப்பு விட்டவர்களுக்கு மேற்படிப்புக்கு உதவுகிறார்கள். சில சமயம் நான் சென்னையில் இருக்கிறேனா என்று கூடத் தோன்றியது. நமது இந்தியர்கள் வெளி நாடுகளில் உள்ளன்போடு மனம் ஒன்றி பல நல்ல காரியங்களைச் செய்து பாரத நாட்டின் கலாசாரத்தைப் பரப்பி வருவது மனதிற்கு மிக ம்கிழ்ச்சியைத் தருகிறது.
அன்புடன் விசாலம்
Posted by
Meerambikai
at
4:01 AM
1 comments
Wednesday, May 2, 2007
புத்த பிரான்
ஷோய் ஷோஹோ ந்யோஸீஸோ nyo ze so
ந்யோஸீ ஷோ ந்யோ ஸோதாய் ,
ந்யோ ஸீரீகீ ந்யோஸீ ஸா
ந்யோ சீ இன் ந்யோஸீ என்,
ந்யோ ஸீகா ந்யோஸீ ஹோ
ந்யோ ஸீ ஹான் மக் காக்யோ டோ
அன்புடன் விசாலம்
Posted by
Meerambikai
at
4:39 AM
0
comments
மாயாப்பூர் நரசிம்மர்
பிரத்யாசிஷ்ட புராதன ப்ரஹரணக்கிரமா:
க்ஷணம் பாணிஜை:
அஸ்யாத் த்ரிணீ ஜகத்யகுண்ட மஹிமா,
வைகுண்ட கண்டீரவ:
யத்பிராதுர்பவனா தவந்த்ய ஜடரா
யாத்த்ருச்சிகாத் வேதஸாம்,
யா காசித் ஸஹஸா மஹஸுர க்ருஹ
ஸ்ததூணா பிதாமஹ்ய பூத்...
இப்போது நடந்த சம்பவத்திற்கு வருவோம், மேற்கு வங்கத்தில் ஒரு கோவில் அது இஸ்க்கான் இயக்கத்தைச் சேர்ந்தது அங்கு ஒரு சமயம் திடீரென்று கொள்ளைக் கூட்டம் வந்து கோவிலை ஒரு கலக்கு க்லக்கியது. ராதாவின் சிலை ஸ்ரீபிரபுபாதரின் சிலை ஸ்ரீ கிருஷ்ணரின் சிலை என்று, எடுத்துக் கொண்டு ஓடினர், அப்போது ஒருவர் அங்கு ஸ்ரீ
நரசிம்ம ஸ்வாமியின் உருவம் வைக்க இதுப்போல் நடக்காது என்றார், பின் அது போல் பெரிய ஆசார்யார்களிடம் கேட்டு சிலை வடிக்க முயன்றனர். அந்தச் சிலை உக்ர நரசிம்மர், அவர் கிரீடம் சுற்றி அக்னிப் பிழம்புகள், கண்களில் க்ரோதம், உடலில் ஒரு ஆக்ரோஷம் என்று செதுக்க வேண்டும். இந்த மாதிரி செதுக்க ஒருவரும் முன் வரவில்லை. கடைசியில் ஒரு தமிழ் நாடு ஸ்தபதி சிலை செதுக்க முன் வந்தார்.
அவரும் முதலில் செய்ய விரும்பவில்லை ஆனாலும் காஞ்சிப் பெரியவரிடம் உத்தரவு கேட்டு பின் சம்மதித்தார். உக்ர நரசிம்ஹரை வடித்தால் பிரதிஷ்டை செய்தால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதால் எல்லோரும் அதை வடிக்க பயந்தனர்.
அதைக் குறிப்பிட்ட வகையான் வண்டு துளைப் போட்டு உள்ளே போயிருக்குமானால் அநதக் கல்லுக்கு உயிர் உண்டு என்றும் கண்டு பிடிக்கும் வழி காட்டினார். அந்தச் சிலயை வடிக்க ஒரு ஆண்டு ஆனது. அந்த நரசிம்மர் 120அடி ஆனது அதை வைத்துவிட்டு ஸ்தபதி
ஊர் செல்ல திடீரென்று ஊரெல்லாம் மழை பொழிந்தது. ஆனால் ஸ்தபதி வீடு தீ பிடித்துக் கொண்டது. எல்லா மக்களும் இந்தச் சிலையை தய்வுசெய்து மாயாபூருக்கு உடனே கொண்டுச் செல்லுங்கள், எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று முறையிட அந்தச் சிலை ஒரு லாரியில் மாயாபூருக்கு வந்தது. நடுவில் பல விதமான சங்கடங்கள் வந்து பின் சிலை வந்து சேர்ந்தது. பரமாச்சரியார்களின் அனுக்கிரஹத்தினால்
உக்கிர சிலை சாந்தமானது. பூஜை செய்ய ஆரம்பித்த அர்ச்சகர்கள் அவர் முகம் பார்க்கவே அஞ்சி பாதங்களப் பார்த்து அர்ச்சனைச் செய்ய நர்சிம்மர் ஒருவர் கனவில் வந்து இந்தக் கோவிலையும் உங்கள் யாவரையும் ரக்ஷிக்கவே வந்துள்ளேன், பயப்படத் தேவை இல்லை என்று அவர் தோளைக் குலுக்கினாராம்... மறுநாள் அவர் தோளில் நரசிம்மரின் நகங்களின் அழுத்தம் தெரிந்ததாம், அன்றைய தினத்திலிருந்து மிகச் சிறந்த விதத்தில் பூஜை நடந்து வருகிறது
:ஓம் ஸ்ரீ நரசிம்ஹாய நம:
Posted by
Meerambikai
at
3:54 AM
0
comments