Friday, April 13, 2007

நான் யார்?


குழந்தைகளே!
உங்கள் அன்பான இணையப் பாட்டியான என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். :எனது பூர்வீகம் தஞ்சாவூர் ஜில்லாவைச் சேர்ந்த நாகைப்பட்டினம். பம்பாய்: பிறந்ததிலிருந்து இருபது வயது வரை எனக்கு ஆன்மீகமும், கல்வியும், புகழும் கிடைத்த இடம். இயல், இசை, நாடகம்: என் 12 வயதிலிருந்தே பல மேடைகளில் பேச ஆரம்பித்தேன். பரிசுகள்: ஹிந்தி, தமிழ்ப் பேச்சுப் போட்டிகள், எழுத்துப் போட்டிகள் இவற்றில் முதல் பரிசுகள் பெற்றுள்ளேன். பாராட்டியவர்கள் திரு கி.வா. ஜகன்நாதன், திரு கி.ஆ.பே. விசுவநாதம், திரு நாடோடி, திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி, திருமதி ஆனந்தி ராமசந்திரன், திருமதி சுபஸ்ரீ இசை: கர்நாடக சங்கீதத்தில் வாய்ப்பாட்டு, வயலின், ஆர்மோனியம், இவற்றில் பல கச்சேரிகள் செய்திருக்கிறேன், பாட்டிற்கு ஸ்வரம் எழுதுவதும் உண்டு. நடனம் ஓரளவு தெரியும், பள்ளியில் பங்கேற்றது உண்டு. நாடகம்: எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று. பம்பாயில் தமிழ்ச் சங்கம் லேடீஸ் கிளப்பில் பல நாடகங்களில் பங்கு பெற்று நடித்திருக்கிறேன். தில்லியிலும் இதைத் தொடர்ந்தேன். நடிக மேதை டி.கே. ஷண்முகம், திரு டி.கே. பகவதி, திரு ஸஹஸ்ரநாமம், திரு ஜெமினி கணேஷ், திருமதி சாவித்திரி, திரு மனோஹர், திருமதி பத்மினி போன்றவர்கள் பாராட்டியுள்ளார்கள். தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி.ஓரளவு தெரிந்த மொழிகள்: மலையாளம், மராட்டி,கலைத்துறை அனுபவம்: சில டாகுமென்டரிப் படங்களுக்குக் குரல் கொடுத்துள்ளேன். படிப்பு: P G B.ed, Rastrabhasha ratna, Saahithya ratana 1st part, மஹாராஷ்டிர மாகாணத்தில் இரண்டாவது இடம், பரிசு பெற்றுள்ளேன். தொழில்: ஆசிரியை, 16 வயதில் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து நடைபெறுகிறது. தில்லியில் பல வருடங்கள் தலைமை ஆசிரியராகவும், பள்ளியின் தலைவராகவும் இருந்துள்ளேன், திரு எஸ்.பி. சவான் அவர்கள் {cabinet minister} பாராட்டியுள்ளார். தெரிந்த கலைகள்: ஜோசியம், கைரேகை, நியூமராலஜி, நேமாலஜி, வாஸ்து, ஹோமியோ, பூக்களின் தெரபி, அக்கு பிரஷர், சுஜோக் தெரபி முதலியன. படித்த கோர்ஸ்: ரெய்கி கிராண்ட் மாஸ்டர், பிரானிக் ஹீலிங், மேக்னிஃபைட் ஹீலிங், ஆர்ட் ஆஃப் லிவ்விங், ஈஷா யோகா, ஆல்ஃபா மைண்ட் பவர், காயத்திரி ஹீலிங், பிரமிட் மெடிடேஷன், ஜோதி மெடிடேஷன், மனவளக் கலை முதலியன. தீக்ஷை எடுத்தது: பாலா மந்திரம், சிந்தாமணி கணபதி மந்திரம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் குரு ஓதிய மந்திரம், அன்னையின் மந்திரம், அரவிந்த காயத்திரி. பொதுநல சேவை: சாயி சமிதி, ரேய்கி ஹீலிங். எழுத்து உலகம்: சிறு வயதிலிருந்தே கவிதை, கட்டுரை, கதைகள் எழுதுவதில் விருப்பம். படைப்புகள் பம்பாயில் "விந்தியா",கோயம்பத்துரில் "வானப்பிரஸ்தா flash", தில்லியில் "குஞ்சன்" என்ற சின்னப் பத்திரிக்கைகளில் வந்துள்ளன. "அவள் விகட"னில் நவம்பர் மாதப் பதிப்பில் "அக்கரைச் சீமையிலே" என்ற கட்டுரை வந்துள்ளது. என் தனி வலைப்பதிவு அன்னையின் அருள்வோர்ட் பிரஸ், அதில் நிறையப் பதிப்பிக்கிறேன். ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் எழுதுகிறேன். பிடித்தது: தன்நலமற்ற அன்பு. மறக்க முடியாதது: அன்பு சாய் ராமுடன் பேட்டியும் கிடைத்து, புகைப்படமும் எடுத்துக் கொண்டது. பார்த்து ரசிப்பது: இயற்கைதிருப்தி தருவது: பிறருக்குச் செய்யும் பிரார்த்தனை. பிடிக்காதது: ஏமாற்றும் மனிதர்கள் பொய், இரட்டை வேடம். வேண்டுவது: எல்லோருடைய ஆசிகள், வாழ்த்துக்கள். நன்றி!


அன்புடன் அம்மம்மா விசாலம்

1 comment:

mynah said...

விசாலம்,
உங்களின் “நான் யார்” படித்துவிட்டு நான் நினைத்தது - அம்மம்மா!!! விசாலம் (எத்தனை விசாலமான (பெரிய) அநுபவஸ்தர்.

உங்களை எப்படிக் கூப்பிடுவது? அம்மம்மா என்றால் பரவாயில்லையா?