Friday, February 8, 2008

காட்டு மிருகம் நாட்டில்

நான் தான் காவலன் முத்து,
சத்தியம் கடமை, நேர்மை,
எனக்குக் கிடைத்த முத்து
என் தந்தையின் இது வேதவாக்கு
அவர் மரணப்படுக்கையின் வாக்கு
"முத்துக்கண்ணா,,,,,,,,
நியாயத்திற்குச் செய்த போர்
அதில் கிடைத்த மெடலைப் பார்
லஞ்சம் பக்கம் திரும்பாதே,
பேராசையில் கையை நீட்டாதே "

ஓய்வு பெறும் வரை
வாழ்ந்தார் ஒரு சின்ன வீட்டில்
அவருடன் சேர்ந்தவர்கள்
வாழ்வது பங்களாவில்
"பிழைக்கத் தெரியாதவன்"
தட்டினார்கள் மட்டம் ,
நேர்மைக்கு ஒரு பாராட்டு,
அதுவே கிடைத்தப் பட்டம் ,
அவர் கொள்கையில் வாழ்ந்தேன்
அதிலே இன்பம் கண்டேன்
பிடித்தேன் ஒரு நாள்
கையும் களவுமாய்
ஒரு ரௌடியை ,
பலாத்காரம் செய்த குற்றம்
பெண்ணைக் கொன்ற குற்றம் ,
கண்ணால் பார்த்ததும் நானே,
அதன் சாட்சியும் நானே ,

அரசியல் நுழைந்தது ,
சாட்சிகள் மாற்றப்பட்டன
மந்திரியின் மகனாயிற்றே!
அடி வாங்கினேன்
துன்புறுத்தப்பட்டேன்
என் கொலைக்கும் திட்டம்
கேஸ் அனுமார் வால் போல் நீள்
பெயரளவுக்கு அவன் உள்ளே
சீக்கிரம் வெளி வருவான் ,,,,,,

ஆனால் என் வாழ்க்கை?
அன்பு மனைவி விபத்தில்
இன்று அவள் இல்லை ,
நான் ஒரு காட்டு இலாக்காவில்
மிருகங்களோ நாட்டில் ,!
உண்மை ஒரு நாள் வெல்லும்
என் தந்தை மனமும் வாழ்த்தும்

அன்புடன் விசாலம்

No comments: