ஸ்தலங்களில் முதனமையானதும் அருள் மிகு ரங்கநாதர் சயனகோலத்தில் இருக்கும் க்ஷேத்திரமும் ஸ்ரீரங்கமாகும் இங்கு நடக்கும் உத்சவங்கள் யாவுமே மிகச்சிறப்பு வாய்ந்தவை ,அதிலும் மார்கழி மாதம் நடைப்பெறும் வைகுநத ஏகாதசி மிக முக்கியப்பங்கு வகிக்கிறது "பகல் பத்து " ",இராப்பத்து" இயற்பா என்று 21 நாட்கள் பாடப்படும் பகல்பத்தின் போது திரு அரங்கநாதர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுவார் ,இராப்பத்தின் போது பெருமாள்ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி சேவைச் சாதிப்பது தொன்று தொட்டே நிகழ்ந்து வருகிறது
"மாதங்களில் நான் மார்க்ழியாக இருப்பேன்" என்று கீதையின் நாயகன் சொன்னார் .இந்த மாதத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி திரு ஆண்டா.ளும் பாவை நோன்பு நூற்று அந்தஸ்ரீரங்கநாதனையே மணந்து அவருடன் ஐக்கியமானாள் ,அதே மார்கழியில் தான் இந்த வைகுண்ட ஏகாதசியும் வருகிறது ,ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆனி மாதம் சுக்ல ஏகாதசிமுதல் ஐப்பசிசுக்ல ஏகாதசிவரை இருக்கும் காலங்களில் யோக நித்திரைசெய்கிறாராம் . இதனால் இது சயன ஏகாதசி என்று கூறப்படுகிறது .ஆவணி மாதம் வரும் சுக்ல ஏகாதசியன்று வலது பக்கம் திரும்பிப்படுப்பதால் இதை பரிவர்த்தன ஏகாதசி என்றும் கூறப்படுகிறது ,பின் கார்த்திகை மாத சுகல ஏகாதசியை கைசிக ஏகாதசி என்கின்றனர் மார்கழிமாதம் தேவர்களுக்கு உஷா காலம் ,இந்த மாதத்தில் வரும் வைகுந்த ஏகாதசியில் திருவாய்மொழி ஓதப்படுகிறது பகல் பத்து நேரத்தில் திருமொழிப்பாசுரங்கள் சொல்லப்படும். பின் இராப்பத்தில் திருவாய் மொழிப்பாசுரங்கள் அபிநயங்களுடன் அரையர்களால் சேவிக்கப்படும் பத்தாம் நாள் திருநாளில் பெருமாள் மோகினி அவதாரத்துடன் வருவார் ,பின் வைகுந்த ஏகாதசியன்று நம்பெருமாள் ரத்ன அங்கியில் ஜொலிப்பார் மூலவரோ முத்தங்கியுடன் அழகு மிளிரக் காட்சி அளிப்பார் இதைக்காணக் கோடிக்கண்கள் போதாது, அத்தனை அழகு ,,,,வைகுந்த ஏகாதசிய்ன்று காலை 4 மணிக்க நம்பெருமாள் பரமபத வாசல் வழியே வந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளுகிறார் .இதையே "சுவர்க்க வாசல் திறப்பு"என்று கூறுகின்றனர் இந்த வைபவத்தில் தாம் நடுநாயகமாகப்பெருமாள் எழுந்தருளி நிற்க அவருக்கு எதிரில் அனைத்து ஆழ்வார்களும் வரிசையாக எழுந்தருளியிருக்கின்றனர் .இந்தக்காட்சி இந்த மார்கழி மாதத்தில் தான் காண முடியும் இத்துடன் இராப்பத்து எட்டாம் நாள் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வந்து வேடுபறி கண்டருளுவர். பின் நம்மாழ்வார் மோட்சம் சேவிப்பது என்ற வைபவமும் கண்கொளாக்காட்சியாகும் இந்த உற்சவம் திருமங்கையாழவார் காலத்திலிருந்தே தொடங்கி இன்றும் நடைப்பெறுகிறது இத்துடன் இந்தவருடம் ஸ்ரீராமானுஜரின் முக்கிய சீடரான திரு கூரத்தாழ்வார் அவர்களின் 1000 வது ஆண்டும் சேர்ந்து வருகிறது அரசனுக்கும் அஞ்சாது ஸ்ரீ நாராயணனே பரம் பொருள் என்று வாதாடி வெற்றிக்கண்டு வைணவத்திற்காக தன் கண்களும் இழந்து வாழ்ந்தவரும் குருபக்த்தியில் மிகச்சிறந்து விளங்கிய திருகூரத்தாழ்வாரையும் வணங்கி அவர் அருள் பெறுவோம் குருவருள் ,திருவருள் இரண்டும் கிடைத்து வாழ்க்கையின் பலனைஅடைவோம் ,,,,,ஓம் நமோ நாராயணாய
அன்புடன் விசாலம்
Monday, January 5, 2009
பூலோக வைகுந்தம் ஸ்ரீரங்கம்
Posted by Meerambikai at 8:58 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment