Sunday, November 18, 2007

கட்டுவேன் தாலி

பொன்னுதாயி

மாடு மேச்சு போற மச்சான் ,
என்னப் பாக்காம் போறயே !
மனச கிள்ளிப் போட்டாயே
பரிசம் போட வருவாயா?

முனுசாமி

கையில் செல்லு காசு இல்லைடி
தாலி வாங்க பணம் ஏதடி ?
நில விளச்சலும் இல்லையடி
வேறு ஆள நீ பாத்துக்கோடி

பொன்னுதாயி

வருமானம் என்னாத்துக்கு
மனப்பொருத்தம் போதுமில்ல
மஞ்சள் கயிறு கட்டு மச்சான்
தங்கத்தாலி தேவையில்ல

பத்து தேச்சு உழைக்கறேன்
கஞ்சி வச்சு அன்பு த்ரேன்
இட்லி வித்து காசு தரேன்
தாலி மட்டும் கட்டு மச்சான்

முனுசாமி

ஆ என் கண்ண துறந்துபுட்ட
உன் அன்ப காட்டிபுட்ட
எறுதுழுது வச்சிடுவோம்
ஒன்று சேர உழச்சிடுவோம்

பொன்னுதாயி

அப்படி வா வழிக்கு மச்சான்

கோயில்ல வந்து தாலிகட்டு
மாரியாத்தா கண் திறப்பா
கஞ்சி குடிக்க வழி செயவா

முனுசாமி

நெற்றி வேர்வ சிந்த உனக்கு
தாலி செஞ்சு கட்டுவேன்
உழைக்கும் சனம் வளரட்டும்
ஒத்துமையும் உயரட்டும்


அன்புடன் விசாலம்

No comments: