Monday, November 12, 2007

செக்கு மாடு

என் நண்பர் காளையின் கஷ்டத்தைச்சொல்லி கவிதை எழுதியிருந்தார் ,நான் அவருக்கு" நானும் இதுபோல் ஒருகவிதை எழுதி இருக்கிறேன்" என்று எழுதியிருந்தேன் அவரும் அதைப் படிக்க ஆர்வம் காட்டினார் ,அந்த மடல் எத்தனைத் தேடியும் கிடைக்கவில்லை
ஆகையால் தனியாக எழுதுகிறேன் ,இனி எல்லா கவிதைகளும் "ஆனந்தமயி,,,, விசாலம்
பக்கம் "என்று இடுகிறேன்

"செக்கு மாடு "

ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறேன்
ஓயாமல் சலிக்காமல் இயங்குகிறேன்,
உழைக்கும் இயந்திரமும் நானேதான் ,
அந்தச்செக்கு மாடும் நானேதான் ,
மணிகணக்காய் சுற்றுகிறேன்
புண்ணாக்காய் ஆகிறேன்
ஒரு பழமொழியும் என் பேரில்
வாழ்க்கைப் போவது சோர்வில்

வண்டியையும் இழுக்கிறேன்
நடைத்தளர்ந்துப் போக
என் வாலும் முறுக்கப்படுகிறது
ஒரே வேகம்
ஓடித்தான் ஆகவேண்டும்
கொஞ்சம் குறைய
சாட்டையடியும்
வாங்கத்தான் வேண்டும்
அறிய மாட்டான்
இந்த மானிடன்
தார்க்குச்சியால் குத்துவான்
வலியில் பிச்சுக்கொண்டு ஓட,
அவன் ரசிப்பான்
வாயில் நுறைத் தள்ளியும்
சுமக்கத்தான் வேண்டும்
ஈவு இரக்கமில்லா ஜன்மம்
செக்கு மாடு ஆனது என் கருமம் ,
மனித நேயம் எங்கே ?
கருணை மனம் எங்கே ?


அன்புடன் விசாலம்

No comments: