Wednesday, June 10, 2009

இரு படகுகள்

நம்பிக்கை என்ற கடலைக்கண்டேன்,

வாழ்க்கை என்ற படகைக்கண்டேன் ,

மனம் என்ற பாய்மரம் கண்டேன்

,கடவுள் அன்பு காற்றாய்க்கண்டேன்

கருணைத் தென்றல் அங்கு வீசக்கண்டேன்

மனம் அங்கு விரியக்கண்டேன்

,அன்பெனும் துடுப்பைச்செலுத்தக்கண்டேன்

,தெய்வபலம் அங்கு புகுவதைக்கண்டேன்,

சோதனையில் சாதனை பெருகக்கண்டேன்

எதிர்நீச்சலில் மன உறுதி வலுக்கக்கண்டேன்

வாழ்க்கைக்கடலின் இன்பம் உணரக்கண்டேன்

இயற்கையில் தெய்வதரிசனம் அங்கு கண்டேன்

இரண்டாவது படகு ,,,,,,

அவநம்பிக்கை என்ற கடலைக்கண்டேன்

வாழ்க்கைப்படகு அங்கு மிதக்கக் கண்டேன்

மனம் என்ற பாய்மரம் இறுகக்கண்டேன்

வெறுப்பு என்ற துடுப்பு செலுத்தக்கண்டேன்

பேராசை,பொறாமை அலைகள் வீசக்கண்டேன்

குறுகிய மனத்தில் புயல் வீசக்கண்டேன்

சூராவளி ஒன்று அங்கு அடிக்கக்கண்டேன்

,வாழ்க்கைப்படகு தத்தளிப்பதைக்கண்டேன்

மன உறுதி அங்கு துவளக் கண்டேன்

மனச்சாட்சி அங்கு மடியக்கண்டேன்

இறைச்சக்தி அங்கு மறையக்கண்டேன்

ஒளி அடங்கி மன இருளில் ஒடுங்கக் கண்டேன்

வாழ்க்கைப்படகில் அங்கு துன்பத்தைக்கண்டேன்

No comments: