Monday, June 29, 2009

அன்பே தெய்வம்

June 24, 2009
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு ” நடத்தும் சிறுகதை போட்டி ,,,,……………………
….அன்பே தெய்வம் …
…………….
“ட்ரிங் டிரிங் ” … டெலிபோன் மணி ஒலித்தது ,”இந்தப்போன்

பால் காச்சும் போதுதான் வரும், இரு இரு வரேன்” என்று ஒரு குழந்தைப்போல் சொல்லிக்கொண்டு ராஜம் போனை எடுத்தாள். “ஹலோ ஹலோ யார் பேசறது “?

“நான் தான் சுப்பிரமண்யன்”

“”நமஸ்காரம் இருங்கோ. இதோ எங்காத்து மாமாவைக் கூப்படறேன்”………டெலிபோனைப்பொத்தியபடி, “ஏன்னா இந்தாங்கோ நம்ம சம்பந்தி…. கூப்பிடறார் உடனே வாங்கோ”என்று தன் கணவர் சிவராமனைக் கூப்பிட்டாள் . பாதி ஷவரம் செய்த முகத்துடன் அவரும் வந்தார் “ஹலோ நமஸ்காரம் சௌக்கியமா? எப்போ முகூர்த்தத்தை வச்சுக்கலாம் ?

“அதுதான் சொல்ல வந்தேன். இந்தச்சம்பந்ததம் நடக்காது மன்னிக்கணும் , நீங்கள் நிச்சியதார்த்தம் அன்று போட்ட பொருட்கள் எல்லாம் திருப்பித் தந்துவிடுகிறோம், வந்து எடுத்துங்கோ.

“ஏன் என்ன ஆச்சு ? எல்லாம் நன்னாத்தானே நடந்தது இப்ப என்ன திடீர்னு …”

மேலே ஒண்ணும் சொல்லறதுக்கில்லை வச்சுடறேன்”

ராஜம் கேட்டாள் “என்ன ஆச்சு ?ஏன் இப்படி இடிஞ்சுப்போய் நிக்கறேள் ?

“நம்ம சம்பந்தம் வேண்டாம்னு சொல்றா …. நம்ம பையனுக்கு என்ன குறைச்சல் …ராஜா மாதிரி இருக்கான் சி ஏ வேறு …….கை நிறைய சம்பளம் ….அவாளுக்கு என்ன….. கசக்கறதா?சரி, விடு இந்தப்பெண் இல்லேன்னா எத்தனையோ பெண்கள்……..”ராஜத்திற்கு மனம் உளைச்சல் கண்டது . ஓடிப்போய் தன் தங்கையிடம் போனில் தெரிவித்தாள் பின் திருவாரூரில் இருக்கும் தன் அப்பாவைக்கூப்பிட்டாள்

,ஹலோ ஹலோ ,யாரு அப்பாவா…..’

“ஆமாம் ராஜமா …என்ன மோஹனுக்கு முகூர்த்ததேதி பார்த்தாச்சா”?

அதுதாம்பா சொல்ல வந்தேன் கல்யாணம் நின்னுபோயிடுத்து ,என்னகாரணம்னு தெரிலை நீங்கள் தான் துப்பறியும் சாம்பு போல் கண்டுபிடிக்க வேண்டும் பெண்ணோட தாத்தாவும் திருவாரூர்தானே….”

சரி ராஜம் நான் விஜாரிச்சு பின் சொல்றேன் ,கவலப்படாதே”

.அப்பாடி… இப்போத்தான் ராஜத்திற்கு மூச்சு வந்தது. உள்ளே போனாள்.

,” அப்துல் தும் கஹான் ஹோ?’ {அப்துல் நீ எங்குஇருக்கிறாய் “? என்று இந்தியில் பேச அப்துல் “அபி ஆயா{இதோவந்துவிட்டேன் } என்று பதில் சொன்னான் “சாப்பிட்டாயா …. அப்துல் …..நம்ம மோஹன் கல்யாணம் நின்றுவிட்டது தெரிமா”?


தெரியும் மாஜி ” என்று அவனும் தமிழில் பேச முயன்றான் அவன் கண்கள் கலங்கின.

தில்லியில் ஜனக்புரி என்ற இடத்தில் தான் சிவராமன் குடும்பம் இருந்தது. இரு மகன்கள் …..மூத்தவன் மோஹன்…. தம்பி சுரேஷ் ,,,பின் யார் இந்த அப்துல் “? இது தெரிய பத்து வருடங்களுக்கு முன்னால் நாம் போக வேண்டும். எப்போதும் தனக்கென்று ஒரு ரிக்க்ஷா வாலாவை ராஜம் தன் சிறு பிரயாணத்திற்கு அமர்த்திக்கொள்வாள். ஒருநாள் அவனைக்கூப்பிடப் போன போது ஒரு ஐந்து வயது சிறுவன் அங்கு அழுதுக்கொண்டிருந்தான். அவன் தான் ரிக்க்ஷாக்காரன் சலீமின் குட்டித்தம்பி அப்துல் …..ராஜம் அவன் ஏன் அழுகிறான் என்று கேட்க அவனும் தன் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் இந்தக்குட்டி அப்துலைத் தான் பார்த்துக்கொள்வதாகவும் வேலைக்குப்போக மிக கஷ்டமாக இருப்பதாகவும் கூறினான் தவிர வறுமை வேறு …..ராஜம் இயல்பாகவே இளகிய மனம் படைத்தவள் ஆதலால் அவனிடம் “சலீம் நான் இவனை வளர்த்து படிக்க வைக்கிறேன் அனுப்புகிறாயா ?”என்று கேட்டாள் கரும்பு தின்னக்கூலியா ? உடனேயே அவனை அனுப்பி வைத்தான். அப்துல் வயிறு ஒடுங்கி ஒல்லிக்குச்சியாய் ராஜத்தைத் தொடர்ந்தான். அன்று வந்தவன் தான் அப்துல் “மாஜி மாஜி “என்று அன்பைக்கொட்டினான். ராஜமும் அவனைப்பள்ளிக்கு அனுப்பித்தாள் . தமிழ் கற்றுக்கொடுத்தாள் விதவிதமான உடையும் வாங்கிக்கொடுத்தாள். அவனும் வளர்ந்தான். வீட்டுவேலையும் செய்துபின் படிப்பிலும் கவனம் செலுத்தினான். மொத்தத்தில் ராஜத்தின் வலது கையானான் ராஜத்தின் பிள்ளைகள் ஒரு வேலையும் செய்யாமல் அப்துலை வேலை வாங்குவார்கள். இது ராஜத்திற்கு மிக வருத்தம் உண்டாக்கும். அப்துலுக்கு அந்த வீட்டில் தனிச்சலுகை என்று இரண்டாவது மகன் மனம் வெம்பினான் பொறாமை வேறு அவனை ஆட்கொண்டது ஒருநாள் ராஜம் தலைவலியால் துடித்தாள் .அவள் மகன் சுரேஷ் காலேஜிலிருந்து வந்தான் ,”அம்மா என்ன திங்க வச்சிருக்கே எடுத்துக்கொடு”

“சுரேஷ் கண்ணா எனக்குத் தலைவலிடா….. நீயாகவே உள்ளே போய் தோசை எடுத்துக்கோ”

அப்போது அப்துலும் அங்கு வந்தான்.

“மாஜி என்ன ஆச்சு ?உங்கல்கு ,,,,,தலவலியா? இதோ நானு வரேன் ” என்று தனக்குத்தெரிந்தத்தமிழில் பேசித் தலைவலி பாம் கொண்டு வந்து தடவினான் ,பின் உள்ளே போய் தோசையும் கொண்டு வந்து “மாஜி இந்தா.. வாயைக்காட்டு,, தோசை சாப்பிடு” என்று ஆசையாகச் சொன்னான். ராஜம் மனம் நெகிழ்ந்தாள் அப்படியே அவனை அணைத்துக்கொண்டாள். இதையெல்லாம் பார்த்த சுரேஷுக்குக் கோபம் கோபமாக வந்தது “இந்த அம்மா என்ன இத்தனை மாறி விட்டாள் எப்போ பாத்தாலும் அப்துலையே கொஞ்சறாளே”


“ஏண்டா சுரேஷ் என்ன செய்யறே “என்று கேட்டபடி மோகன் அங்கு வந்தான் “ஒன்றுமில்லை அண்ணா… இந்த அப்துல் அம்மாவை என்ன மக்கன்{வெண்ணெய்} வைத்தானோ நன்னா மயக்கி வைத்திருக்கிறான் .அன்று நான் கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில் அம்மா அவனுக்காக இராமயணம் சானல் மாற்றினாள்”

ஆமாம் என்னிடமும் அம்மா அன்னிக்கு சொன்னாள் “இந்த அப்துல் எனக்குக்கால் பிடிச்சு விடறான், பாத்திரமும் அலம்பித்தருகிறான், ரொம்ப அன்பாக பழகுகிறான் நீங்கள்வருவதும் தெரிவதில்லை ஆபீஸ் போவதும் தெரிவதில்லை. என்ன பிள்ளைகள்டா நீங்கள் என்றாள்” இப்படிச்சொல்லும்போதே ராஜம் அங்கு வர பேச்சு நின்றுவிட்டது இந்த நிலையில் தான் மூத்தவன் மோஹனுக்கு பெண் பார்த்து அவர்கள் போபாலிலிருந்து வருவதாகச்சொன்னார்கள் அவர்கள்தில்லிக்கு ஒரு கல்யாணத்திற்கு வருவதாகவும் அப்போது பிள்ளையும் பெண்ணும் பார்த்து விடட்டும் ,என்று தீர்மானிக்கப்பட்டது வாசலில் வண்டி வந்து நின்றது “அப்துல் வாசலில் அவர்கள் வந்துவிட்டார்கள் போய் அழைத்துவரலாம் என்று அப்துலையும் அழைத்து வந்தாள் “ஆமாம் யார் இந்தப்பிள்ளை ‘? என்று கேட்டாள் பெண் சுமதியின் தாய் “இவன் தான் அப்துல என் பிள்ளை என்று அவனை அணைத்துக்கொண்டாள் ராஜம். பெண்ணின் தாய் முகம் சுளித்தாள் .பின் ராஜம் அந்த அப்துல் கையில் டிபன் காபி எல்லாம் கொடுத்து அனுப்பினாள் ..பெண்ணின் அம்மா ஆசாரம் இல்லை என்றாலும் அப்துல் பூஜை அறை கிச்சன் என்று நுழைவது அவளுக்குப் பிடிக்கவில்லை. பெண் சுமதியும் மோஹனும் தனியாகப் பேசிக்கொண்டு பின் ஒகே சொல்லி விட்டார்கள் .நிச்சியதார்த்தம் மிக நன்றாக நடந்தது ……………
.”போஸ்ட் என்று தபால்காரன் ஒரு கடிதத்தைப்போட ராஜம் அதை எடுத்துப்படித்தாள். அவள் அப்பா எழுதியிருந்தார்.அதில் அப்துலால் கல்யாணம் நின்றுவிட்டதாகவும் இரு மகன்கள் ராஜாப்போல் இருக்க இந்த அப்துலை ஏன் வளர்க்க வேண்டும் இந்தப்பையனுக்கும் அந்தக்குடுமபத்திற்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் வந்துவிட்டது அவர்களுக்கு என்றும் எழுதியிருந்தார்.

அவசரம் அவசரமாகப்போனை அடித்தாள்தன் அப்பாவுக்கு…….

“அப்பா லெட்டர் வந்தது. என்ன இது இப்படி அபாண்டமாகப்பழி….
,,,”"நீ ஏன் அந்த அப்துல் பயலை வளைய வர விட்டாய் அதுதான்கல்யாணமே நின்று விட்டது இப்போ ..பார்த்தாயா ?அதன் விளைவை ……”

“என்ன அப்பா…நீங்க ! அம்மா அப்பா இல்லாத ஒரு பிள்ளையைவளர்ப்பது தப்பா”?


“அதுசரி ராஜம்…. இப்போ என்ன செய்யப்போறே “?

வேறு வரன் வராமலா போய்விடும்? கடவுள் விட்ட வழி “

பேச்சு முடிந்தது .

,காலம் உருண்டது. வேறு பெண் மோஹனுக்கு நிச்சியம் ஆயிற்று

“சுரேஷ் அந்த அப்துலை என் கல்யாணத்திற்கு அப்புறம் வரசொல்” என்றான் மோஹன் .

“அம்மா அந்த அப்துல் பயலை கிட்நேப் செய்து கல்யாணம் ஆனபின் கொண்டுவிடுகிறேன் “என்று கிண்டல் அடித்தான் சுரேஷ்மோஹனும் சுரேஷும் தமிழர்கள் ஆனாலும் இந்தியில் பேசிக்கொண்டார்கள். ஆனால் அப்துலோ தமிழ் நன்றாகப்பேசினான். கல்யாணம் ஆனவுடனேயே மோஹன் தனிக்குடித்தனம் போய் விட்டான். இரண்டாவது மகனோ பூனாவில் வேலை சேர்ந்து விட்டான். சிவராமனும் ராஜமும் தனித்து விடப்பட்டனர். ஆனால் பிளைக்குப்பிள்ளையாக அப்துல் இருந்து காலேஜையும் முடித்தான்வேலையும் தேடினான் .

கொரியர் சர்விசில் ஒரு நல்ல வேலைக்கிடைத்தது .
அன்று முதல் சம்பளத்தை வாங்கி வீடு வந்து “மா..ஜி ஆசீர்வாதம்செய்யுங்கோ “என்று அவள் காலிலும் சிவராமன் காலிலும் விழுந்தான் தன் சம்பளத்தை அவள் கையில் கொடுத்தான்.

அடுத்த வீட்டிலிருந்து ஒரு இந்திபஜன் கேட்டது

“பிரேம் ஈஸ்வர் ஹை ஈஸ்வர் பிரேம் ஹை” {அன்பே கடவுள் கடவுளே அன்பு },,,,,ராம் ரஹீம் புத்த கரீம் …..கோயீ பி நாம் ஜபோ ரெ மனுவா ஈஸ்வர் ஏக்ஹை {ராம் என்று சொன்னாலும் ரஹீம் புத்தர் கரீம் என்று எந்தப்பெயர் சொன்னாலும் எல்லாமே ஒன்றுதான் ஈஸ்வரன் ஒன்றுதான் ,,,,,,

ராஜம் அப்துலை அணைத்தாள் . சொந்த மகன்கள்

எங்கேயோ இருக்க இந்த வளர்ப்பு மகன்

அதுவும் பீஹாரைச்சேர்ந்த முஸ்லிம் இப்படி அன்பைப்பொழிகிறன் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது அங்கு அன்பே தெய்வமானது.
அன்புடன் விசாலம்

No comments: