Wednesday, July 22, 2009

"பசுபதியே நீயே கதி "

உரையாடல் சமூக, கலை , இலக்கிய அமைப்பு ” நடத்தும்
சிறுகதைப்போட்டி ……..,,,,,,,,,,,,


பசுபதியே நீயே கதி ,,,,,,,,,


காலைப்பொழுது ,,,,பால் ,,என்ற சத்தம் கேட்டு விழித்தேன் ,என்னால் எழுந்திருக்க
முடியவில்லை , சம தலைவலி ,,மண்டைப்பிளக்கும் தலைவலி ,டம்டம் என்று இடித்தது
மழையில் நனைந்ததால் இருக்குமோ ,,,,அல்லது சைனஸ் தொந்தரவோ,,,,துப்பட்டாவை
எடுத்துத் தலையில் முண்டாசுப்போல் கட்டிக்கொண்டேன் ,துப்பட்டா பலருக்கு இப்போதெல்லாம் மூட வேண்டிய இடம் மூடாமல் கழுத்தில் சிவனது பாம்புப்போல் சுருண்டு கிடக்கிறது …..என் கணவரோ ஹிந்து பேப்பரில் மூழ்கி இருந்தார் காலையில் பேப்பர் அவர் கையில் கிடைத்துவிட்டாலோ பூலோகமா ஸ்வர்கமா ஒன்றும் தெரியாது அவருக்கு ,,,,
நல்ல வேளை,காலைக்காப்பி அவரே செய்து குடித்து விடுவதால் நான் தப்பித்தேன் ,

“கமலா கமலா ,,,அடுத்தாத்துப்பாட்டியின் குரல் ,,என் தலை முண்டாசுடன் அவள் முன்
தரிசனம் தந்தேன் ,

“ஐயோ என்ன இது ? தலைவலியா ,,,,மண்டை குத்துகிறதா?”

“ஆமாம் “ தலையை ஆட்டினேன் ,,,,,,

“இரு தலைக்குப்பத்து செஞ்சிண்டு வரேன்…….. அத நெத்திலே தடவிக்கோ சரியாப்போயிடும் ,

பாட்டி தன் வீட்டிற்குப்போய் சுக்கை நன்றாக இழைத்து அத்துடன் மஞ்சள் பொடி மிளகுப்பொடியைக்கலந்து நீருடன் கலக்கி இலுப்பக்கரண்டியில் சுட வைத்தாள்,
அது கொஞ்சம் இளகியதும் என் தலையில் தடவி விட்டார்,தலை விறுவிறுவென்று
இழுத்தது கொஞ்சம் எரிந்தது ஆனால் இதமாக இருந்தது ,மறுநாள் ,,,,,எனக்குத்தலைவலி
குறைந்தது ,, ஆனால் திரும்பவும் அன்றிரவு தலைவலி ஆரம்பித்தது ,

என் தோழி சரோஜா யதேச்சையாக வந்தாள்,

“என்ன கமலா முகமெல்லாம் ரொம்ப வாடி இருக்கு ஏன் இப்படி டல்லாக இருக்கே?”

இல்லடிசரோஜ் தலைவலி பத்துப்போட்டும் போகலைனு கவலை ,,,,,,”

“என்க்குத்தெரிந்த அலோபதி டாக்டர் சூப்பராகப் பார்ப்பார் நல்ல கைராசி .. அட்ரஸ் தரேன்
அங்கு போய் காமி…” ஏதாவது டியூமர் போல் இருக்கபோகிறது ,ரொம்ப ஈசியா எடுத்துக்காதே”

தலை உடலுக்கு மிக முக்கியமானது ஆயிற்றே. “எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் “
என்ற பழமொழியும் உண்டே ! சரோஜா சொன்னது போல் தலையில் எதாவது கட்டி இருந்தால் ,,,,,,மனதில் பயம் வர அவள் சொன்ன டாக்கடரைப்பார்த்து அலோபதிக்கு ஓடினேன் ….அவர் எல்லாம் சரிவரப்பார்த்து ஒரு பேபரில் ஒரு கிறுக்கல் வரைந்தார்
அவைகள் ம்ருந்தின் பெயர்கள் அந்தத்தாளைப்பல பக்கங்கள் திருப்பிப்பார்த்தும் அவர் எழுதியதைப் படிக்கமுடியவில்லை ,அதை மருந்துக்கடையில் கொடுக்க கடைக்காரர்
பல மருந்துகள் கொடுத்தார் ,பிராக்சிவான் என்ற மாத்திரையும் இருந்தது , கடையில் வேறு ஒருவர் நின்றுக்கொண்டிருந்தார் , இந்தப் “பிராக்சிவான்” என்ற மாத்திரையைப்பார்த்து
“அம்மா இந்த மாத்திரையைப் பார்த்துப்போட்டுக்கொள்ளுங்கள் இது ரொம்ப ஸ்ட்ராங்,,,,,,,கிட்னியைப்பாதிக்கும் “……
அவர் சொன்னது மனதிலே குடைய வீட்டிற்குப்போய் ஒரு மாத்திரைப்போட்டுக்கொண்டு
பின் பயத்தில் நிறுத்திவிட்டேன். இரண்டு நாள் பிறகு திரும்பவும் அதே டாக்டரிடம் போனேன் .
“டாக்டர் இன்னும் தலைவலி வருவதும் போவதுமாக இருக்கிறது என்னசெய்வது ?’
அவ்வளவுதான் …ஏண்டாப்பா கேட்டோம் என்று ஆனது ……..அங்கு மாட்டிக்கொண்டேன் ,,ஸ்கேன் ,சுகர் டெஸ்ட் ,என்று பலவித டெஸ்டுகள் பல ஆயிரம் அந்த
ஆஸ்பதிரிக்கு அழுதேன் , ரிசல்ட் எல்லாம்
நார்மல் என்று தான் வந்தது . அலோபதி மருந்து சாப்பிட தலைவலி போகத் திருகுவலி வந்ததே! இல்லை…..
இல்லை ,,, தலைவலிப்போகாமலே திருகுவலி…….மாத்திரைகள் சாப்பிட்டதில் வயிறு எரிச்சலுடன்
நெஞ்சும் எரிந்தது . ”ஐயோ ராமா இது என்ன? வயிறு வலி யும் சேர்ந்துக்கொண்டதே ! “அவர் கைராசி டாக்டர் தான். எனக்குத்தான் ராசி இல்லை போலிருக்கிறது ” என்று நினைத்து வீடு வந்தேன்
மகாகனம் பொருந்திய உமாபதி . அதுதான் என் கணவரின் பெயர் . “என்ன ஆச்சு ?’ என்று கேட்பது போல் முகபாவம் செய்தார் ,
“ஒன்றுமில்லை எல்லாம் நார்மல் தான் ” என்றேன்
என்னைப்பார்த்துக்கிண்டலாக ஒரு சிரிப்ப சிரித்தார் ” உன் உடம்பில் ஒரு கோளாறும் இல்லை, எல்லாம் மனசுதான்
காரணம் ஓடிஓடி ஏதாவது வேலைச்செய் சரியாகிவிடும் “என்றார் . சில
நாட்கள் கழிந்தன ,என் அண்ணனைப்போல் ஒரு நண்பன் வந்தான் ,வந்தால்
சும்மாஇருக்காமல் “என்ன கமலா இப்படி இளைச்சுப் போயிட்டே! என்ன உடம்பு “?என்று கேட்டான் .

ஆரம்பித்தேன் திரும்ப என் இராமாயணம்.
“ஹோமியோபதி “டாக்டர் சிவராமன் ரொம்ப சூப்பரரொம்ப கரெக்ட்டாக மருந்து தருவார் , என் கூட வா அழைத்துப்போகிறேன் “

சரியென்று ஹோமியோபதி டாக்டரைப்பார்க்கக் கிளம்பினேன் ,அங்கு அந்த டாக்டர் ஒரு
கனமானப் புத்தகம் ஒன்றைத்திறந்து ஒவ்வொரு பக்கமாகப் பிரித்துப்பிரித்துப் பார்த்தார் ,
பின் சர்க்கைரைக் கோலிகளில் சில சொட்டு மருந்துகளை விட்டுக் குலுக்கிக் கொடுத்தார்
அங்கு ஒரு ஆயிரம் சிலவாயிற்று.. பணம் போனால் போகட்டும் உடம்பு சரியானால் சரி
என்று என்னைத் தேற்றிக்கொண்டேன் ,டாக்டரிடம் சென்று வந்தப்பின்னர் மருந்துக்கலந்த அந்தச்சர்க்கரை
கோலிகளை ஸ்வாமி படத்தின் முன் வைத்தேன் ,ஒரு தடவை எடுத்துக்கொண்டேன் ,அடுத்தவீட்டுப்பாட்டியின் குட்டிப்பேரன் இதைப்பார்த்தான் , நான் குளிக்கச்சென்றேன்
திரும்பி வந்துப்பர்த்தேன் அந்தச்சின்னப்புட்டியில் ஒரு நாலு கோலிகள் தான் பாக்கி , மருந்துக்கும் எனக்கும் ராசி இல்லைப்போலிருக்கிறது என நினைக்கும் போது அந்தப்பேராண்டி வந்தான் “மாமி நான் அந்தச்சர்க்கரை கோலிகளைத் தின்னுட்டேன் , வந்து மாமி,,,,,,மாமி
ஸ்வாமி பிரசாதம்னு நினைத்தேன் “ …….எனக்குச்சிரிப்புத்தான் வந்தது ..
இப்படியாக ஹோமியோபதியும் பாதியில் நின்றது ,


ஒரு வாரம் சென்றது . மனம் மறுபடியும் குரங்குப்போல்
தாவியது திரும்ப என்ன வைத்தியம் செய்தால் சரியாகும்
என்று குழம்பினேன் ,ஒரு பத்திரிக்கையைத் திருப்பினேன் .கண்ணில் கொட்டையாகத் தெரிந்தது ஒரு விளம்பரம் ,, “இயற்கை வைத்தியம் ” ஆம் இன்னொரு
பதி ,,,அதுதான் ஆங்கிலத்தில் “நேசரோபதி “எல்லாவிதவியாதிகளையும் மூலிகையினாலும் இயற்கை
வைத்தியத்தினாலும் சரியாக்கி விடுகிறோம் குண்டுக்கு
ஒரு சவால் , பீப்பாயாக இருக்கும் இடையாளை
பிடி இடையாளாக ஆக்கிவிடுவோம் ” என்று ஒரு ராமாயணமே எழுதி இருந்தது , என் கண்முன்னே நான்
பிடி இடையாளாக வந்து அழகுப்போட்டியில் கலந்து பரிசு வாங்கும் அருமையானக்காட்சி ,,,,,,,இந்த மாதிரி ,கற்பனைக்காட்சி வந்து
அடிக்கடி என்னை அங்கும் இங்கும் ஓட வைக்கும்
கற்பனையும் நிஜமாகலாமே என்று நினைத்துப் போனை
அடித்தேன் . மேலும் விசாரித்தேன் ,
அங்கு ஒரு பத்துநாட்கள் தங்க வேண்டுமாம், இயற்கைச்சூழலில் வைத்தியமாம்.மூலிகையினால்
வைத்தியமாம், ஒரு பக்க விளைவும் இல்லை ஆனால்
பத்தாயிரம் கட்ட வேண்டுமாம் ,,
ஆஹா அருமைதான் வீட்டைவிட்டு ஹாய்யாக ஒரு பத்து நாள் ,,சமையல் அறைக்கு விடுதலை
“விடுதலை விடுதலை விடுதலை,
சமையலுக்கும் அரைச்சலுக்கும், சப்பாத்திக்கும் விடுதலை”
என்று என் மனம் பாரதியார் என்ற நினனப்பில் பாடியது.
வீட்டைவிட்டு ஒரு பத்துநாள் போனால்தான் கணவருக்கு என் அருமைத் தெரியும் ஆனால் பூனைக்கு மணி எப்படி கட்டுவது ? அதான் ,,அந்தப்பத்தாயிரத்தை எப்படி அவரிடமிருந்துக்கறப்பது? சரி நல்ல மூடில் இருக்கும் போது கிட்டப்போகலாம் என்று நினைத்தேன் ,

கிரிக்கெட் மாட்ச்சில் நம்மவர்கள் சம விளையாட்டு விளையாடி வெற்றி பெரும் நிலை ,, அவருக்கு ஒரே குஷி
இதுதான் சரியான சமயம் என்று விளம்பரத்தைக்
காட்டினேன் , “ஏன்னா இந்த விளம்பரத்தைப்பாத்தேளா?’
“நான் இங்கே போய்ச்சேர்ந்து வைத்தியம் செய்துக்கொள்ளட்டுமா?

” சரி சரி போ போ அதை ஒண்ணு பாக்கி வைப்பானேன் ,’
வழக்கம் போல் பஞ்சாங்கம் பார்ப்பாயே அஷ்டமி நவமி
சந்தராஷ்டமம் என்று ,,,,,” அடுக்கிக்கொண்டே போனார்

கிண்டல்தான் ! என்ன செய்வது ? நான் வளர்ந்த விதம் அப்படி ,,,,ஓடிபோய் பாம்புப்பஞ்சாங்கம் பார்த்து ஒரு நல்ல நாளைதேர்ந்த்டுத்தேன் ஆனால் கடைசியில் சின்ன எழுத்தில் கரி நாள் என்று எழுதியது என் கண்ணிற்குத்
தென்படலையே ,,,,,,,
ஆயிற்று ஒரு வாரத்திற்கு வேண்டிய உடைகளுடன் இயற்கை வைத்தியம் “ அரும்பாக்கத்திற்கு வந்தாயிற்று ,
உள்ளே ஒருவர் என்னை நன்றாகப்பரிசோதித்து
தினமும் செய்யவேண்டிய் அட்டவணையைக்கொடுத்தார்

ஐயோ இதெல்லாம் எப்படி செய்யப்போகிறேன்
காலை 5 மணிக்குள் எழுந்திருந்து ,,,,வேப்பங்குச்சி
அல்லது ஆலங்குச்சியால் பல் தேய்க்க வேண்டும் .தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்இதையாவது செய்துவிடலாம் ஆனால் காப்பி இல்லாமல் வெறும் வயிற்றுடன் ஒரு 10 சுற்று ஓடவேண்டுமே ,,, சீரியல்கள் எல்லாம் பார்க்க முடியாது அதுவே பெரிய தண்டனை ஆயிற்றே!,,

தவிர பிராணாயாமம தேகப்பயிற்சி மாலையில் பஜன் என அட்டவணையைக் கண்டேன் இரவில் டிபன் தான் ,அதுவும் உடலைப்பொருத்தமாதிரிதான் ,,,,,,


மறுநாள் காலை திருப்பள்ளி எழுச்சிப்போல் மணி அடித்து
சுப்ரபாதம் வைக்கப்பட்டது ,காலை சூரியன் இன்னும் உதிக்கவில்லை பிரண்டுப்படுத்தேன் கண்முழித்தால்தானே,,, பலர் எழுந்துவிட்டது நடமாட்டத்தினால் தெரியவந்தது , “சீ வெட்கக்கேடு
இன்னும் படுத்தால் நன்றாக இருக்காது என்று நினைத்து
சுருட்டிக்கொண்டு எழுந்தேன் பல் தேய்த்தேன்
மனம் சுடச்சுட காப்பி காப்பி என் ஜபம் செய்தது ,எத்தனை வருடப் பழக்கங்கள் ?,விட்டுபோகுமா?

ஏதாவது சூடாகக்கிடைக்காதா என்று ஏங்கினேன் ,,வந்தது ஒரு காப்பி ,,சுக்குமல்லிக்காப்பியாம் ,,,அதைச்சாப்பிட என் மூஞ்சி போன போக்கைப்பார்க்கணுமே ,,என்ன செய்வது ?
உரலில் தலையைக்கொடுத்தாச்சு …என் கண் முன் பத்தாயிரம் ரூபாயும் அடிக்கடி வந்து நின்றது , கூடவே கண்வர் உமாபதியின் முகமும் ,,,,,,
பெரிய மைதானத்தில் ரொம்பக்கஷ்டப்பட்டு ஒரு சுற்று முடித்தேன் ,ஆமை முயல் பந்தயம் ஞாபகம் வந்தது ,
மூச்சு இறைக்க நின்று நின்று நடந்தேன் ,
ஆ சொல்ல மறந்தேனே இதற்கென்று ஒரு சல்வார்
கமீஸ் வேறு தைத்துக்கொண்டேன் …அப்பாடி போதும் போதுமென்று ஆகிவிட்டது , அத்துடன் கசப்பு மருந்துகள்
வேறு ,,அதுதான் கஷாயமாமே,,,,,,,பின் சாப்பாடு இருக்கும்
என்று நினைத்தேனே ,,,,வந்தது பூஷிணிக்காய் ஜூஸ் ,,

அதே போல் ஒருநாள் அருகம்புல் ஜூஸ் பின் இளநீர் என்று வந்ததே தவிர சாப்பாட்டைக் கண்ணிலே காட்டவே இல்லை , அட இரண்டு இட்லி சட்னியாவது தரக்கூடாதா ,,,,,,இத்தனைப் பட்னிப்போட்டுத்தான் “பிடி இடையாளாக ஆக்குகிறார்களோ ,,,,

மாலை வந்தது ,, தேகப்பயிற்ச்சி முடிந்து திரும்ப பூஷிணிக்காய் ஜூஸ் ,,,,
இப்படியே இரண்டு நாட்கள் தள்ளிவிட்டேன் என் கண்முன் மிளகாய் பஜ்ஜியும் வெங்காயப் பக்கோடாவும் வந்து நாக்கை ஊற வைத்தன. பின் என்னைப் படுக்க வைத்து நெற்றி மேல் சொட்டு சொட்டாக எணணெய் விட்டார்கள். ஒரு செம்பு துளையுடன் இருக்க அது வழியாக மருந்தெண்ணை
சொட்டுகிறது அசையாமல் படுக்க வேண்டும் ,, இது தான்
எண்ணைய் தாரா வாம் இதில் ஊற சளிப்பிடித்தாற்போல்
பிரமை
முதுகெல்லாம் வலிப்பது போன்ற பிரமை ,ஆடத்
தெரியாதவளுக்கு முற்றம் கோணல் “என்பது போல் எனக்கு ஒன்றுமே ஒத்துவரவில்லை.. மனம் ஒத்துழைத்தால்தானே….
நல்ல வைத்தியம் தான் , இதற்கு திடமன்ம் வேண்டுமே!

மேலும் இதை வளர்த்துவானேன் நாலாவ்து நாள் ….பொறுமை இழந்தேன் . என் வீடே சுவர்க்கமாகத் தெரிந்தது ,
10000த்தில் மூவாயிரம் தான் சிலவானது இன்னும் பாக்கி இருக்கிறது
என் கணவர் உமாபதிக்குப்போன் போட்டேன்

” நான் திரும்பி வந்துவிடுகிறேன் , இங்கு சுக்கு மல்லிக்காப்பி தான் கிடைக்கிறது வீட்டுக்காப்பியைப் பார்த்து பல நாட்கள் ஆனால் போல் இருக்கிறது”

அங்கிருந்து கடுமையானக் குரல் பதிலாக வந்தது .

“வேறு வேலைஎன்ன்?எல்லா இடத்திலும் காலைவைக்க வேண்டியது .அப்பறம் பாதியில் ஓடி வர வேண்டியது ,,
உங்கப்பன் சமபளம் பாரு”! திரும்பம நக்கல் ……
“இல்லேன்னா என்னாலே ஓட முடியல , தவிர தினமும்
பூஷணிக்காய் ஜூஸ் வேறு , உள்ளே இறங்க மாட்டேங்கறது “
“ஆமாம் பெரிய ராணி ,,உனக்கு வாதாங்கீர் கொடுக்க ,, இயற்கை வைத்தியம்னா பஜ்ஜி பகோடாவா கொடுப்பா .
சரி சரி வீட்டிற்கு வா ,இதுதான் கடைசித்தடவை ,,இனிமே அங்கப்போறேன் இங்கப்போறேன்னு சொல்லு ,,,,என்ன செய்யறேன்னு பாரு” பட்டென்று டெலிபோனை வைத்து விட்டார் ,
அப்பாடி …..ஒரு எரிமலை வெடித்து அடங்கியது
உடனே வீடு கிளம்பினேன். எல்லோரும் ஒரு மாதிரியாகப்
பார்த்தனர்
“கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை” என்று என் உள்
மனமும் சொல்லியது .வாயையும் மனத்தையும் கட்டாமல் உடம்பில் தொல்லை என்றுச்சொல்லுவதில்
என்ன பயன் ?பொறுமை வீசை என்ன விலை என்று கேட்கும் எனக்கு என்ன வைத்தியம் ஒத்துப்போகும் ?

அசடு வழிய வீடு வந்தேன் ,,போன மச்சான் திரும்பி வந்தான் “என்பது போல் திரும்பி வந்தேன் க்ட்டியப்பணம்
கோவிந்தா ஆனது , என் கணவர் முகத்தைப்பார்க்கவே
எப்படியோ இருந்தது நல்ல காலம் ,,மாலையில் காலாற
நடக்கப்போயிருந்தார் , சாவியைப்போட்டுத்திறந்தேன்
கிச்சன் என்னை வா வா என்று அழைக்க சூடாகக்
காப்பிப்போட்டுக்குடித்தேன் , சுவாமிக்கு விளக்கு ஏற்றினேன் , “அப்பா ,,பசுபதியே நீயே கதி “
அலோபதி பார்த்தாச்சு ஹோமியோபதி பாத்தாச்சு நேசுரோபதி பாத்தாச்சு இனி என் கணவர் உமாபதியுடன் இந்தப்பசுபதியே கதி ,,,,இனி நீதான் என்னைக் காக்கவேண்டும் பசுபதியே என்று சிவனை வணங்கினேன் ,

திரும்ப ஒரு போன் வந்தது என் மைத்துனர் சபாபதி பேசினார் ,

“மன்னி உங்கள் தலைவலிக்கு அக்குபஞ்சர் அக்குபிரஷர்
வைத்தியம் இருக்கு ஒரு டாக்டர் ரொம்ப நன்னா பாக்கறார் ,,, வரேளா “

“என் தலைவலி போய்விட்டது இனிபசுபதிதான் வைத்தியர் “

போனை வைத்தேன் அப்பாடி இப்போதுதான் மனம் நிம்மதி அடைந்தது , எல்லா வியாதிகளுக்கும் மனமே
காரணம் இல்லையா ?

1 comment:

Anonymous said...

நல்ல முடிவு.