பெங்களூரில் ஒரு பிள்ளையார் கோயில் பார்த்தேன் அவர் வாகனம் மூஞ்சூர் இல்லை ஆனால் சிங்கமாக இருந்தது இவர் ஆசனத்தில் அமராமல் நின்ற
நிலையில் அருள் புரிகிறார், கீழே இருக்கும் சிங்கமோ அவர் கீழ் சுண்டெலி போல் காட்சி தருகிறது அனுமாருக்கு வடை மாலை சார்த்துவது போல் இவருக்குக் குழக்கட்டை மாலை சாத்துகிறார்கள் இதை கடுபு மாலை என்று சொல்கிறார்கள் தினமுமே இவருக்கு "கணேஷ் சதுர்த்தி" போல் கூட்டம் திரளாக வருகிறது. வெண்ணெயும் சிலர் சாத்துகின்றனர் மிகவும் சக்தி வாய்ந்தவர் இவர்.
இதேபோல் பஞ்சமுக கணபதி சென்னையில் சுவாமிநாத கோயில் கந்தாஸ்ரமத்திலும் காணலாம் இங்கு இருக்கும் ஹேரம்ப கண்பதியின் அடி சுமார்12 அடி, பத்து கைகள் அதில் முறையே பாசம், தந்தம, ருத்ராக்ஷம், பரசு, உலக்கை, மோதகம், அருகம்புல் போன்றவைகள் இருக்கின்றன. இது போல் திருவானைக்காலிலும், புதுக்கோட்டை புவனேஸ்வரி கோயிலிலும் காணலாம்.
யானை முகமே இல்லாமல் மனித முகம் போல் இருக்கும் கணபதியை திருசெங்கட்டான்குடியில் காணலாம்.
இரண்டு முகம் கொண்ட கணபதி மஹாராஷ்ட்ராவில் அருள் புரிகிறார்.
இவரது வர்ணம் பச்சையாம்.
இதேபோல் மூன்று முகம் கொண்ட கணபதி சிவப்பு நிறத்தில் இருக்க, பாசம், அங்குசம், அட்சமாலையுடன் அமர்ந்திருக்கிறார். அவரது இருக்கை பொற்றாமரை மலர்.
ஜப்பானில் இந்த மூன்று முகப் பிள்ளையாரைக் காணலாம்.
நாலு முக கணபதி சீனாவில் இருக்கிறாராம்.
திருக்கழுகுன்றில் ஆறுமுக கணபதி அருள் புரிகிறார்.
இவரை ஷண்முக கணபதி என்று அழைக்கிறார்கள்.
நாம் பிடிக்கும் மஞ்சள் பிள்ளையாரில் முகம் இல்லாமல் வெறும் ஒரு கோணம் தான் இருக்கிறது ஆனாலும் அதிலும் அவர் ஜம்மென்று அமர்ந்து அருள் புரிகிறார்.
Friday, September 24, 2010
பலமுக கணபதி
:ஓம் கணேசாய நம:
Posted by Meerambikai at 6:51 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment