நாம் கல்வியை எடுத்துக்கொண்டால் அதை இரு அம்சங்களாகப் பிரிக்கலாம் ,ஒன்றுபுற உலகை ஒட்டிய கல்வி , இதில் நாம் புத்தகத்தைப் படித்து அறிவைவளர்த்து புற உலகைப் பற்றிய செய்திகள் அறிந்து நமக்கும் பணம் சம்பாதிக்கும் வழியையும் உணர்ந்து திறமைகளை வளர்த்து அதனால் பெரிய இடத்தைப்பிடிக்கவழி வகுக்கிறது ,இரண்டாவது அம்சம் உயிரூட்டும் கல்வி இதை விழுக்கல்விஎன்றும் சொல்லலாம் {educare } மனிதன் தன் வாழ்க்கையை இனிமையாக்க செம்மையாக்க பல பண்புகள் தேவைப் படுகின்றன .இந்தப்பண்புகள் இந்தவிழுக்கல்வியில் கற்றுதரப்படுகின்றன .கிருஸ்தவர் பள்ளியிலும் மாரல் ஸையின்ஸ் என்ற புத்தகம் படிக்க கோர்சில் முன்பு இருந்தது ,கல்வியின் பயன்.... நம் வாழ்க்கைக்குத் தேவையான் அன்பு நன்னடத்தை ,ஒழுக்கம் பணிவு மனித நேயம் என்று பல இதழ்கள் கொண்ட நம் வாழ்க்கை ஒரு மலராக மலர வேண்டும் ,இவைகள்இல்லாத கல்வி நாட்டிற்கும் வீட்டிற்கும் பயனளிப்பது இல்லை ,ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல மனித மேம்பாடுகள் மறைந்திருக்கின்றன ,விழுக்கல்வி நம் மனதில் மறைந்துக்கிடக்கும் ஒளியைத் தேடி எடுத்து அந்தத் தெய்வீகப்பண்புகளை வெளிக்கொணர்ந்து அன்றாட வாழ்க்கையில் உபயோகித்து பலர் பயனடையுமாறு செய்தல் வேண்டும் சுயநலம் , பேராசை பொறாமை அஹங்காரம் அறவே தவிர்க்க வேண்டும் இவைகள் இந்தக்கல்வி படிக்க தடைகள் ஆகின்றன காந்தீஜியின் மூன்று குரங்கு பொம்மைகள் போல் இருத்தல் அவசியம் .நல்லதையே நினை நல்லதையே பேசு நல்லதையே செய் என்ற மனப்பக்குவம் வந்து மேலே ஏறமுயற்சித்தால்மிக எளிதாக வெற்றி பெறலாம்இதற்கு தேவை ஆங்கிலத்தில் ஐந்து டி {D} கடவுள் பக்திமன்க்கட்டுப்பாட்டுடன் ஒழுக்கம் கூர்ந்து நோக்கும் அறிவு கடும் மன உறுதி கடமை அதாவது divinity discipline dedication determination dutyநல்ல எண்ணங்களை விதைப்போம் நல்ல பயிரை வளர்போம் நம் மனம் என்ற நிலத்தில் நல்ல விதைகள் விதைப்பது மிகஅவசியம் நல்ல செயலகள் வளர்ந்து நல்ல பழங்கள் அளிக்கும் அன்புடன் விசாலம்
Friday, April 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment