சத்ய சாயி பாபாவைச் சில பக்தர்கள் சந்திக்கச் சென்றனர்அவரது அறையில் சிலருக்கு ஒரு சந்தேகம் கேட்டு அதற்கு பதிலும்தெரிந்துக்கொள்ள ஆவலாக இருந்தது ,பாபா அவர்கள் அவர்களிடம்" ஏதோ கேட்க நினைத்தீர்கள் அல்லவா?தயக்கமில்லாமல் கேளுங்கள்" என்றார்,"சுவாமி துன்பம் எங்களைத் துரத்துகிறது , அந்தத் துன்பத்தைவிட்டுவிலகிப்போக ஏதாவது வழியுண்டா?"" நீங்கள் இப்போது சூரியனை நோக்கி நடந்து பின் வந்த வழியே எதிர்ப்புறமாகத் திரும்பி வாருங்கள்"அவர்களும் எழுந்துச்சென்று பாபா கூறினப்படியே செய்து விட்டுவந்தனர் ,பாபா அவர்களிடம் கேட்டார் ,,,,,," போகும் போது என்ன கவனித்தீர்கள்?பின் வரும்போது என்னகவனித்தீர்கள்?"நாங்கள் ஒன்றும் கவனிக்கவில்லையே!"" சூரியனை நோக்கி நீங்கள் சென்றபோது உங்களுடைய நிழல் உங்களுக்குப்பின்னே போய்விட்டது.சூரியனிடமிருந்து நீங்கள்விலகி வந்த போது உங்களுடைய நிழல் உங்கள் முன்னே சென்று வழிக்காட்டத்தொடங்கியது .இறைவனை நோக்கி நீங்கள்சென்றால் உங்களுடய துன்பம் பின்னே போய்விடும் .இறைவனிடமிருந்து நீங்கள் விலகிச் சென்றால் துன்பம் உங்களுக்குவழிகாட்டத் தொடங்கும் " பக்தர்கள் இந்த விளக்கத்தால் மனம் நிறைந்தனர் .நம்முடைய நிழல் நம்மையே தொடரும் அதைப்பிரிக்க முடியாது அதே போல வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரு பக்கங்கள் ,தவிர்க்க முடியாத ஒன்று இறைவனது நாமத்தால் துன்பம் பின்னேதள்ளப்படுகிறது .நாம் ஒரு அடி இறைவனை நோக்கி முன் வைத்தால் அவர் நம்மைநோக்கி ஆறு அடி முன் வருவாராம் ,துன்பத்தை விலக்குவதும் ,பெற்றுக்கொள்வதும் நம் கையிலேதான்ஒம் சாயி ராம்
Friday, April 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment