ராமாயணம் முழுவதும் படிக்கப் படிக்க ஆனந்தம் தான் அதிலும் சுந்தரகாண்டம்படித்தால் சகல கார்ய சித்தி தீராத வியாதிகள்போகல் விவாகம் நடத்தல் தனலாபம் போன்றவைகள் கிடைக்கின்றன , இதைப்படிக்கவும் முறைகள் உண்டுஇது "உமா சம்ஹிதை" யில் பார்வதி பரமேஸ்வர சம்வாதத்தில் சிறப்பாகக் கூறப்பட்டுள்லனதவிர அவரவர் ஜாதக ரீதியாக நடக்கும் தசை தோஷங்கள் போக்க பாராயணம் செய்ய சில ஸ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளனஇதை நான் பின்பற்றி அதன் பலனையும்கண்டிருக்கிறேன் ,பல மருத்தவர்கள் கைவிட்ட தீராதவியாதியும் தீரக் கண்டிருக்கிறேன்மிகவும் எளிது சக்திக்கும் வசதிக்கும் ஏற்ப செய்தால் போதுமானது ஒரு நல்ல நாளில் சங்கல்பம் செய்து கொண்டு ஸ்ரீராமர் சீதை லக்ஷ்மணர்அனுமார் சஹிதமாக பிரதிமையோ போட்டோவோவைத்துக்கொண்டு முறைப்படி பிரதிஷ்டைச் செய்து கொள்ள வேண்டும்பின்சுந்தரகாண்டத்தின் ஸப்த ஸர்க பாராயணம்செய்யவேண்டும் கடைசி நாள் பட்டாபிஷேக சர்க்கத்தையும் படித்துபின் பாராயணத்தைக் கற்பூரம் காட்டி முடிக்க வேண்டும்அவரவருக்குத்தகுந்தாற்போல் நைவேத்தியம் வைக்கலாம் பின் அன்னதானம் ஏழை எளியவர்களுக்குச் செய்யலாம் ,மனோவியாதி பூதபிசாசு பயங்கள் ஹனுமாரின் லங்காவிஜயம் வர்ணிக்கும் மூன்றாவது ஸர்க்கம் மாலையில் முதலில் சர்க்கரான்னம் நைவேத்தியம் செய்து பின் படிக்க வேண்டும் தாரித்திரியத்தைப் போக்க ஹனுமார் லங்கையில் ஸ்ரீசீதாவைக்கண்ட 15 வ்துஸர்க்கம் படிக்க வேண்டும் விட்டுப்பிரிந்த பந்துக்கள் சேர ஸ்ரீ ஹனுமார் சீதாவிற்கு மோதிரம் கொடுத்த36 சர்க்கம் காலையிலும் மாலையிலும் படிக்கவேண்டும் மாம்பழம் பலாப்பழம் நிவேதனம் செய்யவேண்டும் கெட்ட ஸ்வப்பனம் தோஷ சாந்திக்கு திரிஜடை கண்ட கனவை விவரிக்கும்27வது ச்வர்க்கம் படித்து சர்க்கரை நிவேதனம் செய்யவேண்டும் தெரிந்தோ தெரியாமலோ செய்த அபராதங்களைப் போக்க காகாசுரனுக்கு அனுக்கிரஹம்செய்த38 வது ஸ்ர்க்கம் படித்து ஸ்ரீ ராமனை நமஸ்கரிக்கவேண்டும் சந்தர தசை தோஷம் 5வது ஸர்க்கம் படிக்க வேண்டும் செவ்வாய் தோஷம் ,,ஹனுமார் ராவணனுக்கு உபதேசித்த 51ஸர்க்கம் படிக்க வேண்டும் குஜதசையில் சுக்ரபுக்தி கெட 52 ஸர்க்கம் ஹனுமாருக்காக ஸ்ரீதேவி அக்னி யைப் பிராத்திக்கும் ஸ்லோகம் படிக்கவேண்டும் ராஹூதசையில் சுக்ரபுக்தி கெட்டிருந்தால் ஹனுமார் அக்ஷன் எனும் ராக்ஷசனை வதம் செய்த 47 வது ஸர்க்கத்தைப் பாராயணம் செய்யவேண்டும் குருதசை கடுமையாக இருந்தால் சுந்தர காண்டத்தின் முதலாவது ஸர்க்கம் ஸ்ரீஹனுமான் கடலைத் தாண்டியதைப் படித்து பின் பொரியை நிவேதனம்செய்யவேண்டும் குருதசையில் கேது கெட்டிருந்தல் 61 62 ஸர்க்கம் ஹனுமான் மதுவனத்தை அழித்தது படிக்க வேண்டும் சனி தசை தோஷம் ஹனுமார் பிரும்மாஸ்திரத்திலிருந்து விடுப்பட்ட 48 வதுஸர்க்கம் படிக்க வேண்டும் சனி தசையில் சுக்ரபுக்தி கெட்டிருந்தா; ஸ்ரீதேவிக்கு சூடாமணியைத் தந்த 38ஸர்க்கத்தைப் படிக்க வேண்டும்
Friday, April 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உங்கள் பதிவுகள் படித்தேன்.
சுந்தர காண்டம் பற்றிய பதிவு தெளிவாக விளக்கமாக இருக்கிறது.
ஆத்திக பணியினைத் தொடர எல்லாம் வல்ல இறைவன்
தங்களுக்கு அருளட்டும்.
சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com
http://movieraghas.blogspot.com
Post a Comment