Saturday, September 25, 2010

மாமரமே உயர்தரமே

மாமரமே மாமரமே
நிழல் கொடுக்கும் மாமரமே
பூஜைகளில் முதலிடம்
உன் இலைகளுக்கே மாமரமே
கலசம் வைக்க உன் இலைகள்
தோரணம் கட்டவும் உன் இலைகள்
மாம்பூவின் வாசனை ஊரைக்கூட்டும்
அது வசந்தத்தின் ஆரம்பத்தைக்காட்டும்
கிளிகள் அமர ஏற்ற இடம்
அவை "கீ கீ"என்று மகிழும் இடம்
பொத்து பொத்தென்று குதிக்கும் அணில்கள்
மாழ்பழம் சுவைக்கும். அருமை காட்சிகள்,
கனத்த காற்றில் கீழே விழும் மாவடுகள்
அதைப்பொருக்கி எடுத்து கடிக்கும் சிறுவர்கள்
துவர்ப்பும் புளிப்பும் ரசிக்கும் அவர்கள்.
மாங்காய் விழ வீசும் க்ற்கள

அம்மா போடும் மாவடின் ருசி
தயிர் சாதத்துடன் வளரும் பசி
மாமரமே !நீ கொடுக்கும் மாங்காயோ!
ஆவக்காய் ரூபத்தில் காட்சியோ!
சிவப்பு வர்ணத்தில் வருகிறாய்
உறைப்பின் உச்சியைத்தொடுகிறாய்
இனிக்கும் மாம்பழங்கள் தருகிறாய்,
பல "விட்டமின்" னும் கொடுக்கிறாய்.
வண்டுகளின் ரீங்காரத்தின் இனிமை
உற்சாகம் தந்து போக்குவது தனிமை

உன் கீழே கட்டிய மேடை
பஞ்சாயத்துக்கு உபயோகும் மேடை.
நிழலுக்கு அமரும் மேடை
களைப்பைப்போக்கும் மேடை
மாமரமே மாமரமே எங்கள் வீட்டு மாமரமே
நீ பலவகையிலும் உயர்தரமே

No comments: