அந்தக்காலத்தில் இருந்த வீரத்தாய்மார்களை இப்போது காணமுடிவதில்லைபள்ளியில் மாணவனைக்கொஞ்சம் கோபித்துக்கொண்டால் போதும் ஆசிரியருடன் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள் பெற்றோர்கள் செல்லம் அதிகம் கொடுக்கிறார்களோ ? அல்லது அவர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் தங்கள் செல்வங்களுடன் சேர்ந்து இருக்க முடியாத சூழ்நிலையினால்குழந்தைகள் கேட்டது எல்லாம் வாங்கித் தருகின்றனரோ ? தில்லியில் லோகமான்ய திலக் ஜயந்தி ஆகஸ்டு ஒன்றாம் தேதி விமரிசையாக நடக்கும் எல்லா மராட்டியர்களும் அதில் பங்கு ஏற்பார்கள் . அத்துடன் சில மந்திரிகளும் வருவார்கள் நாங்களும் சில மாணவ மாணவிகளை அழைத்துக்கொண்டு காலை 8 மணிக்கு லோகமானயதிலக் அவர்களின் சிலைக்க்குப்போய்மாலை அணிவித்து வணக்கத்துடன் மரியாதை செலுத்துவோம் .குழந்தைகளுக்கு தேசபக்தி வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ஆனால் ஒருதடவை மிகவும் வெப்பத்துடன் புழுக்கமும் சேர்ந்துஒரு மாணவன் மயக்கமுற்று கீழே சாய்ந்தான் . அவனை ஓடிப்போய் தாங்கிபின் எலக்ட்ரால் கொடுத்து கொஞ்சம் பிஸ்கட்டுகளும் கொடுக்க அவன்பழைய நிலமைக்கு வந்தான் ஆனாலும் அவன் வீட்டில் இது தெரிய அவனது தாய் "நல்லதேசபக்தி கத்துக்கொடுப்பது ! அந்த திலக்ஜியைப்பற்றித்தெரிந்துகொண்டால் இந்தியா சரியாகிவிடுமா ! எல்லாம் நேரமும் வேஸ்ட் என் குழந்தை மயக்கம் போட்டுவிழுந்தானாம் "என்று கனனாபின்னா என்று பள்ளிக்கு வந்து திட்டினாள் அவள் குழந்தை என்று சொன்னது ஒன்பதாவது படிக்கும் மாணவன் தான் எத்தனை வயதானாலும் தாய்க்கு தன் குஞ்சு பொன்குஞ்சுதானே!. அந்தத்தாய் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர் என்று எனக்கு தெரியுமாதலால் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது தமிழ் நாட்டிலும் தேசப்பற்று மிகுந்துதேசத்திற்காகத் தியாகம் செய்த திருப்பூர் குமரன் .கப்பலோட்டிய தமிழன்திரு வ உ சிதமபரனார் ஆங்கிலேயரை விரட்டிய கட்டபொம்மன் ,,,,,இதுபோல் எத்தனைப்பேர் இருந்தார்கள் , ஆனாலும் சர்தார்ஜி பஞ்சாபிகள் போல் வீரம் தீரம் ஊட்டி வளர்க்கும் தாய் தமிழ்நாட்டில் அத்தனை இல்லையோ என தோன்றுகிறது தீபாவள்யின் போது சர்தார்ஜியின் இரண்டு வயது குழந்தையின்கையில் பட்டாசு இருக்கும் நம்மைப்போல் பார்ப்பவர்களுக்கு மனம் திக்திக் என்று இருக்கும் ஆனால் சர்தார்ஜி குடும்பம் கவலையே படாது. தெருவைத்தாண்டிப்போகும் போதும் தமிழ் அன்னை "கையைப்பிடிச்சுக்கோடா செல்லம் "என்றுஅந்தப்பையனின் கையைப்பிடித்து அழைத்துபோவதைப்பார்த்திருக்கிறேன்ஆனால் பஞ்சாபி குழந்தை கையைப்பிடித்தாலே உதறிவிடும் அத்துடன் அந்தக்குழந்தையின் பெற்றோர்களும் மிகவும் கோழையாக வளர்க்க விரும்பமாட்டார்கள் இதை நினைக்கும் போது எனக்கு ஒரு வீரத்தாயின்கதை ஞாபகம் வருகிறது அந்த வீரத்தாய் தன் மகனின் அஸ்தியை என்ன செய்தாள் தெரியுமா?
ஒருவன் இறந்து விட்டால் அவனுடைய சாம்பல் நல்ல நதியில் தூவப் படுகிறது .சிலர் காசிக்குச் சென்று கங்கையில் கறைப்பார்கள்,அன்னை இந்திரா காந்தி அவர்களின் அஸ்தி இமயமலையிலும் கூட ஹெலிக்காப்டரில் எடுத்துச் சென்று மேலிருந்து தூவினார்கள்,ஆனால் ஒருவனது சாம்பலை அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு இளம் தாயும் தங்கள் வயிற்றில் அந்தச்சாம்பலைபூசிக்கொண்டார்கள், ஏன் என்றால் தங்களுக்கும் இது போல் ஒரு மகன் பிறக்க வேண்டும் என்பதால் தான் ஆம் அந்த வீர மகன் ,எல்லோராலும் போற்றப்பட்ட மகன் , நாட்டுக்காக தன் உயிரையே கொடுத்தத் தியாகி ,இள்ஞ்சிங்கம் ஸர்தார் பகத் சிங் தான் , 1931ல் மார்ச் 23ந்தேதிபகத் சிங்கைதூக்கிலிட்டு,பின் வெள்ளையர்கள் அவனை எரித்தச் சாம்பலை அவன் தாயிற்கு அனுப்பி வைத்தனர் ,அந்த வீரத்தாயைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் ,தூக்குத்தண்டனையிலிருந்து தப்ப பாவம் அந்தத் தந்தை மனம் சோர்ந்துப்போய் ஒரு கருணை மனு கொடுத்தால் மகனைக் காப்பாற்றலாம் என்று வக்கீல் சொல்லக் கேட்டு ஒரு மனு பத்திரம் வாங்கியும் வந்தார் ,தன் மனைவியைக் கூப்பிட்டார் , "பகத்சிங்கின் தாயே நமக்கு நம் மகன் வேண்டாமா?இந்தக் கருணை மனுவில் ஒரு கையெழுத்துப் போடு நான் போட்டுவிட்டேன் ,நீதான் பாக்கி" என்று அந்தப் பத்திரத்தைக் கொடுத்தார் ,அந்தத் தாய் அதை வாங்கிப்பொருமையாகப்படித்தார்., பின் சுக்குக் சுக்காகக் கிழித்துப்போட்டார் பத்திரத்தை ,,,,,,"மானமில்லையா எனக்கு ? வெள்ளையினிடம் போய் உயிர்ப்பிச்சை கேட்க வேண்டுமா? என் மகன் வெள்ளையனுக்கு எதிராக நின்று ஜயித்து வெள்ளையனை வீழ்த்தினான் என்ற பெருமையிலே அவன் சாவதை நான் விரும்புவேனேத்தவிர கருணை மனுவைப் பெற்று உயிர் வாழ்வதை நான் விரும்ப மாட்டேன் . அவன் கோழையில்லை வீரன், என் மகன் வீரன் . அவன் புகழோடு மடிவதைப் பார்த்தாலும் பார்ப்பேன் வெள்ளையன் தயவில் உயிருடன் அலைவதை ஒருக்காலும் விரும்ப மாட்டேன் " ஆஹா இப்படி ஒரு தாயா ? இரண்டு கரங்களையும் கூப்பி வணங்க தோன்றுகிறது அல்லவா?
Sunday, September 26, 2010
சாம்பலை உடம்பில் பூசி .........
Posted by Meerambikai at 3:20 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment