நீங்கள் யாவரும் பொம்மை கொலுவைக்கண்டு களித்திருப்பீர்கள். ஆனால் பாத்திர கொலுவைப் பார்த்திருக்கிறீகளா?நான் தில்லியில் குடியேறின வருடம் தீபாவளியின் இரு நாட்கள் முன்பு இந்தக்கொலுவைக்கண்டேன் நான் அப்போது "கரோல்பாக்" என்ற இடத்தில் இருந்தேன் . சென்னையின் தி .நகர். போன்ற ஒரு இடம் அது . பல தமிழர்கள் அங்கு குடியிருந்தார்கள். பல சர்தார்ஜிகள் மதராசி என்றவுடன் தங்கள் வீட்டு சில பகுதிகளை வாடகைக்கு கொடுத்து விடுவார்கள். மதராசிகள் நாணயமாக ஒன்றாம் தேதி வந்தவுடன் வாடகையைக் கொடுத்துவிடுவதால் அவர்களுக்கு மிக நல்ல பெயர்.தவிர தோசா,இட்லி ,சாம்பார் சட்னி ரொம்ப ஈசியாக அவர்களிடமிருந்து பெறலாமே! கரோல்பாக்கில் அஜ்மல்கான் ரோடு சுமார் ஒரு கிமீ தூரமாவது வியாபித்திருக்கும்.
அன்று காலை நான் பள்ளிக்கு கிளம்பினேன்.போகும் வழியெல்லாம் நிறைய மரப்பலகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.எதுக்கு இவ்வளவு பலகை என்று எண்ணியபடி நடையக்கட்டினேன். ஆனால் பள்ளியிலிருந்து மாலை திரும்பும் போது கொலுப்படிகள் போல் அந்தத் தெரு முழுதும் பலகையால் கட்டப்பட்டிருந்தன .மரப்படிகள் நடக்க வசதியாக இடம் சற்று விட்டு அமைக்கப்பட்டிருந்தன.எல்லாமே ஐந்தடி நீளம் அளவில் இருந்தன.வியாபாரிகள் தங்கள் பொருட்களை அலங்காரமாக வைத்து விற்க இந்த ஏற்பாடாக இருக்கும் என்று நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தேன் .மறு நாள் பள்ளிக்குப்போகும் போது நிறைய காகிதப்பூக்களின் சரம்,.அலங்கார விளக்குகளென்று பல இடங்கள் நிரம்பி இருக்க பலர் கூட்டம் கூட்டமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர்.அது என்ன ஒற்றுமை!அது என்ன உற்சாகம் !எங்கும் சிரிப்பு,.எங்கும் இனிப்பு .நான் திரும்பி வரும்போது நான் தினமும் நடக்கும் இடம் இதுதானா என்று நினைக்கும்படி கரோல்பாக்கே மாறி இருந்தது.ஜகஜ்ஜோதியாக எங்கும் விளக்குகள்.மரங்கள் மீதும் பச்சை விளக்கு பல்புகள் கண் சிமிட்டி மின்ன,அந்தத்தெருவில் நடக்கவே ஏதோ ஒரு திருமண விழாவுக்குள் நுழைந்தது போல் இருந்தது.அந்த கொலுப்படிகள் முழுதும் பாத்திரங்களோ பாத்திரங்கள்.எவர்சில்வர் என்ன ,பித்தளை என்ன.ஹிண்டேலியம் என்ன என்று களைக்கட்டின.பெரிய பக்கெட்டிலிருந்து ஆரம்பித்து சின்ன ஸ்பூன் வரை அங்கு பார்க்க முடிந்தது ,அப்பாடி ! இத்தனை பாத்திரங்கள் விற்றுபோகுமா? தீபாவளிக்கு பாத்திரங்கள் ஏன் வாங்க வேண்டும் ?என்று பல கேள்விகள் என் மண்டையைக்குடைந்தன.தீபாவளிக்கு முதல் நாள் நான் எங்கு இருக்கிறேன் என்றே தெரியவில்லை.தெரு முழுவதும் தார் ரோடே தெரியாமல் தரி என்ற சமக்காளம் விரித்து மூடியிருந்தனர்.மழையில் நனையாமல் இருக்க மேலே முழுவதும் பந்தல் போட்டு பிளாஸ்டிக் ஷீட்டினால் மூடப்பட்டிருந்தது.வாகனப்போக்கு வரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.எல்லா கடைகளும் திறந்திருக்க, நடைபாதை கொலு வியாபாரமும் களைக்கட்ட கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக வலுத்தது.குண்டூசியிலிருந்து ஆரம்பித்து அத்தனைப்பொருட்களும் அங்கு கிடைத்தன.ஒரு பக்கம் காலணி குவியல் .ஒரு பக்கம் லேடீஸ் ஹாண்பேக் குவியல் .ஷால் .ஸ்வெட்டர். தில்லி மோடா ..பல புடவைகளின் குவியல் என்று பலதரப்பட்ட குவியல்கள். ஆனால் அங்கு வரும் கும்பலை சமாளிக்க முடியாது. வேண்டுமென்று பெண்களை இடித்து இன்பம் பெறும் கும்பல், நாசுக்காக இடித்து மணிபர்ஸ் அடிக்கும் கும்பல் .கிட்ட வருவது போல் வந்து கழுத்து சங்கலியை அறுத்து ஓடும் கும்பல் என இருந்தாலும் இந்த தீபாவளி மார்க்கெட்டை காண ஒருவரும் தவறுவதில்லை. இதைத்தவிர கோல் சக்கர் என்று சொல்லுப்படும் நாலு வீதிகள் கூடும் இடத்தில் பெரிய அலங்கார பந்தல் போட அழகாக என் உயரத்தில் ஒரு பகவதி வந்து அமர்வாள். "பகவதி ஜாகரண்" என்று சொல்லப்படும் இந்த நிகழ்ச்சி இரவு 10 மணிக்குத் தொடங்கி விடிய விடிய நடைப்பெறும்.மிகவும் புகழ்ப்பெற்ற திரு அனூப் ஜலோடா போன்றவர்கள் இரவு முழுவதும் தேவியின் புகழை சினிமா பாடல் மெட்டில் பாடுவார்கள். பிரசாதம் சூஜி கி ஹல்வா என்ற ரவா கேசரியும் , பூரியும் சோலேயும் வருபவர்கள் அவ்வளவு பேர்களுக்கும் வழங்கப்படும் செய்யப்படும் பாத்திரம் கூட மிகப்பெரிய அளவில் இருக்கும் .அதைத்தூக்கி வைக்க நாலு பேர்களாவது வேண்டும்,
என் பள்ளித் தோழியிடம் இந்த பாத்திர கொலுவைப் பற்றிக்கேட்டேன். தீபாவளிக்கு முதல் நாள் லட்சுமியை வரவேற்க குந்துமணி அளவு தங்கமாவது வாங்க வேண்டுமாம் .இல்லையென்றால் கொஞ்சம் வெள்ளியாவது வாங்குவது வழக்கமாம்,இது எல்லாம் முடியாத நிலைமை நடுத்தரமக்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்படும் போது எதாவது பாத்திரமாவது வாங்க வேண்டுமாம் .அவரவர் சம்பாத்தியத்திற்கு தகுந்தபடி பாத்திரங்கள் வாங்கி விடுவர்.இதற்கு காரணம் 'தன் தேரஸ் "என்ற திருநாள் தான் . தமிழ்நாட்டில் பொதுவாக 'நரகசதுர்தசி' என்று நரகாசுரனை அழித்த தினம் மட்டும் கொண்டாடுகிறார்கள்.அத்துடன் லட்சுமி குபேர பூஜையும் சில வீடுகளில் நடக்கும்.ஆனால் வட இந்தியாவில் தீபாவளி என்றால் ஐந்து நாட்கள் கொண்டாட்டம் .தன் தேரஸ், லட்சுமி குபேர பூஜா, பாடுவா, கோவர்தன் பூஜா, பையா தூஜ் ,தான் அவைகள்.அன்று காலை நான் பள்ளிக்கு கிளம்பினேன்.போகும் வழியெல்லாம் நிறைய மரப்பலகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.எதுக்கு இவ்வளவு பலகை என்று எண்ணியபடி நடையக்கட்டினேன். ஆனால் பள்ளியிலிருந்து மாலை திரும்பும் போது கொலுப்படிகள் போல் அந்தத் தெரு முழுதும் பலகையால் கட்டப்பட்டிருந்தன .மரப்படிகள் நடக்க வசதியாக இடம் சற்று விட்டு அமைக்கப்பட்டிருந்தன.எல்லாமே ஐந்தடி நீளம் அளவில் இருந்தன.வியாபாரிகள் தங்கள் பொருட்களை அலங்காரமாக வைத்து விற்க இந்த ஏற்பாடாக இருக்கும் என்று நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தேன் .மறு நாள் பள்ளிக்குப்போகும் போது நிறைய காகிதப்பூக்களின் சரம்,.அலங்கார விளக்குகளென்று பல இடங்கள் நிரம்பி இருக்க பலர் கூட்டம் கூட்டமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர்.அது என்ன ஒற்றுமை!அது என்ன உற்சாகம் !எங்கும் சிரிப்பு,.எங்கும் இனிப்பு .நான் திரும்பி வரும்போது நான் தினமும் நடக்கும் இடம் இதுதானா என்று நினைக்கும்படி கரோல்பாக்கே மாறி இருந்தது.ஜகஜ்ஜோதியாக எங்கும் விளக்குகள்.மரங்கள் மீதும் பச்சை விளக்கு பல்புகள் கண் சிமிட்டி மின்ன,அந்தத்தெருவில் நடக்கவே ஏதோ ஒரு திருமண விழாவுக்குள் நுழைந்தது போல் இருந்தது.அந்த கொலுப்படிகள் முழுதும் பாத்திரங்களோ பாத்திரங்கள்.எவர்சில்வர் என்ன ,பித்தளை என்ன.ஹிண்டேலியம் என்ன என்று களைக்கட்டின.பெரிய பக்கெட்டிலிருந்து ஆரம்பித்து சின்ன ஸ்பூன் வரை அங்கு பார்க்க முடிந்தது ,அப்பாடி ! இத்தனை பாத்திரங்கள் விற்றுபோகுமா? தீபாவளிக்கு பாத்திரங்கள் ஏன் வாங்க வேண்டும் ?என்று பல கேள்விகள் என் மண்டையைக்குடைந்தன.தீபாவளிக்கு முதல் நாள் நான் எங்கு இருக்கிறேன் என்றே தெரியவில்லை.தெரு முழுவதும் தார் ரோடே தெரியாமல் தரி என்ற சமக்காளம் விரித்து மூடியிருந்தனர்.மழையில் நனையாமல் இருக்க மேலே முழுவதும் பந்தல் போட்டு பிளாஸ்டிக் ஷீட்டினால் மூடப்பட்டிருந்தது.வாகனப்போக்கு
No comments:
Post a Comment