கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தில் மிக அழகாக அமைந்த விட்டலனது கோயிலுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை மிகச்சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது பக்தர்கள் கஷ்டத்தைப்பார்த்து உடனே ஓடோடி வந்து உதவும் பாண்டுரங்கனை மிகவும் எளிதாக நாமஸ்மரணையினால் நாம் அடைந்துவிடலாம் . பண்டரிபுரம் போனால் ஆகாயம் முழுவதும் 'விட்டல விட் டல' என்ற நாமமே எதிரொலிக்கும் .அதுவும் ஆஷாட ஏகாதசியன்று கேட்கவே வேண் டாம் . நாம் அந்த நாமத்திலேயே
மூழ்கிவிடுவோம்
அந்த விட்டலனை நினைக்கும் போது எனக்கு ஜனாபாயி என்ற பக்தையின் ஞாபகம் வருகிறது .பண்டரிபுரத்தில் வசித்து வந்த அவளுக்கு உறவினர் என்று ஒருவருமில்லை .பெற்றோர்களுமில்லை. அவளுக்கு நாமதேவர் தன் வீட்டில் இடம் கொடுதிருந்தார் .அங்கு அவள் வரும் பக்தர்களுக்கும் சாதுக்களுக்கும் சேவை செய்து வந்தாள் .சேவை செய்யும் நேரம் போக மற்ற நேரங்களில் விட்டலனைக்குறித்து பல 'அபங்க்' பாடி அவனையே மனதுக்குள் நிறுத்திக்கொள்வாள்.அவள் உடல் .மனம் எல்லா இடத்திலும் பாண்டுரங்கனே
வியாபித்திருந்தான் .
ஒருநாள் சாதுக்களின் துணிகளைச் சந்த்ரபாகா நதிக்கரையில் தோய்க்க எடுத்துபோனாள். உடைகள் அதிகமாக இருந்தது .ஜனாபாயி உடலில் அத்தனை சக்தியுமில்லை . பார்த்தார் பாண்டுரங்கன் . தன் பக்தை கஷ்டப்படுவதைப்பார்க்க இயலாமல் தானும் ஒரு பெண்போல் தோய்க்குமிடத்தில் வந்து அவளுக்குத்தோய்த்து உதவினான் .
சாதுஜன சேவை பாண்டுரங்கனுக்கு மிகப்பிடித்த ஒன்று . ஜனாபாயி தன்
வாழ்க்கை முழுவதும் சேவைக்காகவே அர்ப்பித்துக்கொண்டதால் அந்தப்பரந்தாமன்
மனமகிழ்ந்து அவளுக்குச்சேவை செய்கிறான் பாருங்கள் .என்ன கருணை !
மற்றொரு சம்பவம்....... . பாண்டுரங்கன் பிரசாதத்திற்காக அரிசியை மாவாக்க
வேண்டியிருந்தது. அந்தக்காலத்தில் மிக்சி இல்லை. கையினால் அரைக்கும்
கல் இயந்திரம் தான் இருந்தது . அதன் கைப்பிடியைப்ப்டித்துக்கொண்டு அதைச்
சுற்ற வேண்டும் .ஒவ்வொரு பிடியாக அரிசியையும் உள்ளே போட்டு அரைக்க
வேண்டும் . பொறுப்பானா பாண்டுரங்கன் ! ஓடோடி வந்தான் தானும் அந்த
மர கைப்பிடியைப்பிடித்தபடி மாவு ஆட்டினான் .ஜனாபாயின் இந்த்சேவையினால்
மனம் மகிழ்ந்துப்போனான் அவன் . தன் மார்பில் அலங்கரித்த கௌஸ்துபமணி
மாலையை அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான்
மறுநாள் காலை கோயில் கதவு திறக்கப்பட்டது . அர்ச்சகர் உள்ளே நுழைந்து
" ஐயோ இது என்ன சோதனை ?பண்டரிநாதனின் கௌஸ்துபமணி மாலை காணவில்லையே! யார் எடுத்து சென்றார்?" என்று பதட்டத்துடன் கத்தினார் அங்கிருந்த பலரைச்சோதனையிட்டனர் .
"இதோ இங்கிருக்கிறது .வாருங்கள் .ஜனாபாயிடம் இந்த மாலை இருக்கிறது .
என்று ஒருவர் செய்தி சொல்ல எல்லோரும் அவள் அருகில் ஓடினர்
ஜனாபாயின் கழுத்தை அந்தக்கௌஸ்துபமாலை அலங்கரித்திருந்தது .
கண்ணன் தான் கொடுத்தான் என்று சொன்னால் யார் நம்புவார்கள்?
'ஜனாபாய் தான் திருடிவிட்டாள்' என்று அவளை மன்னர் முன் அழைத்துபோனார்கள்.
அவள் குற்றவாளி என்று தீர்ப்பாகி அவளை கழுகுமரத்தில் ஏற்றும்படி கட்டளைப்பிறந்த்து ,
ஜனாவும் சந்தோஷமாக அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் நடந்தது என்ன?
கழுகமரத்தில் ஏற்றும் சமயத்தில் கழுகுமரம் தீப்பற்றி எரிந்தது.பின் சாம்பலாகியது.
ஜனாபாய் நிரபராதி என நிதரிசனமாகத்தெரிய எல்லோரும் இது அந்த விட்டலனின்
லீலை என்று புரிந்துக்கொண்டு எல்லோரும் ஜனாபாயை வணங்கினர்
ஜனாபாய் பாடிய 'அப்ங்க்' பஜனைகளை பாண்டுரங்கன் எழுதிவைத்துக்கொண்டது
பாண்டுரங்கன் மேல் அவளின் தீவிர பக்தியை எடுத்துக்காட்டுகிறது
''விட்டல விட்டல , பாண்டுரங்க விட்டல "
No comments:
Post a Comment