பார்வதி தேவியின் அவதாரமான ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரியே ஆரிய வைசியர்களின் குலதெய்வமாகப் போற்றப்படுகிறாள். இவளை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி என்றும் அழைக்கிறார்கள். வாணிபத்துடன் தர்மசிந்தனை மேலோங்க பண்பும் கலாச்சாரமும் வழுவாமல் நன்னெறியுடன் வாழ்ந்து வரும் ஆரிய வைசியர்களுக்கு எல்லாமே இந்த வாசவி என்ற கன்னிகாபரமேச்வரி தெய்வம் தான்
நான் அருள்மிகு திரு மாசாணியம்மன் கோயில் போக பொள்ளாச்சி போயிருந்தேன் .அப்போது கன்னிகா பரமேஸ்வரி ஆலயமும் அங்கு இருக்கிறது என்று மக்கள் சொன்னார்கள் ,கரூரிலும் இந்தத்தேவியின் கோயில் உள்ளது
அம்மன் இங்கு மிக பெரிய உருவத்துடன் தெற்குப்பார்த்து நிற்கிறாள்.
வாயிலில் இரு துவாரபாலகிகள் உள்ளனர் .இந்தக்கோயிலின் நவகிரஹங்கள் தாமரைவடிவபீடத்தின் மேல் அமர்ந்திருக்கின்றனர் .சுற்றி இருக்கும் சுவரில்
பல சிற்பங்கள் கதை வடிவில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அதில் வள்ளி கல்யாணம் ,சீதா கல்யாணம் மிகவும் அழகாக காட்சியளிக்கின்றன.
சென்னையிலும் கொத்தவால் சாவடியி ல் கன்னிகா பரமேச்வரியம்மனைக்கா ணமுடிகிறது
ஆடி மாதமும் பின் நவராத்திரியு ம் இங்கு மிக விசேஷமாக கொண்டாடப் படுகிறது ,
கன்னிகாபரமேச்வரிஅம்மனுக்கு வா சவி என்ற பெயர் எப்படி வந்தது?
ஒரு சமயம் பரமேஸ்வரி நந்தி பகவானுக்குச்சாபம் தரும் சூழ்நிலை ஏற்பட
நந்திபகவானும் பார்வதிதேவிக்கு சாபமிட்டார்
தான் கங்கையில் நீராடிவிட்டு பின் திரும்பிய நந்திபகவான் ஈசன் முன் நின்று
நடனமாடினார் .அருகில் அம்ர்ந்திருந்த பார்வதிதேவியைக்கவனிக்கவில்லை .
தன்னை அலட்சியம் செய்ததாகக்கருதிய தேவி நந்திக்கு பூலோகத்தில்
மானிடராகப் பிறக்க சாபமிட்டாள் . நந்திபகவானும் தான் செய்யாத தவருக்குச்சாபமா என்று வருந்தி சிவனிடம் தானும் சாபம் கொடுக்கும் வரனைப்பெற்று பார்வதிக்கும் பூலோகத்தில் பெண்ணாகப்பிறக்க சாபமிட்டார் /
இதனால் இருவருமே மன்னர் குஸுமரேஷ்டிக்கு இரட்டை குழந்தைகளாகப்பிறந்தனர் . அந்தப்பெண்ணிற்கு வாஸவாம்பாள் எனப்பெயர்
வைத்து பின் வாஸவி என்றும் அழைத்தனர் .ஆண்குழந்தை விரூபாஷன் என்ற
பெயருடன் வளர்ந்தான் பெண்னிற்கு மணப்பருவம் வந்தது அண்டை நாட்டு விஷ்ணுவர்த்தனன் { முற்பிறவியில் ஒரு கந்தர்வன் } வாஸவி மேல் காதல் கொண்டு அவளை மணக்க சம்மதம் கேட்டான்
குஸுமரேஷ்டி தான் கடைப்பிடிக்கும் வைச்யதர்மப்படி ஒரு மன்னனுக்குப்பெண்
தரக்கூடாது என்பதால் மறுத்தான் இருப்பினும் பலரிடம் ஆலோசனைக்கேட்டான் .
முக்கால்வாசி மக்கள் பெண் கொடுக்கலாம் என்றனர்,சிலர் இதை எதிர்த்தனர்,
இதனால் குழப்பம் ஏற்பட்டு பலர் நாட்டைவிட்டுச்செல்லத்திடங்கி னர்.
எல்லா நிழ்வுகளுக்கும் தானே காரணம் என்று நினைத்து மிக வருத்தமுற்றாள்
வாஸுகி . .பின் அதற்குப் பரிகாரமாக தீக்குளிக்க முடிவு செய்தாள்.
கோயிலினுள் பெரிய அக்னிகுண்டத்தை வளர்த்து அதில் அக்னிப்பிரவேசம் செய்தாள். இதைப்பொறுக்காமல் அவளுடன் பலரும் அக்னியில் குதித்தனர்
அவர்கள் எல்லோரும் முக்திநிலை அடைந்தனராம். வாசவியைக்காதலித் த
விஷ்ணுவர்தனனும் தலை வெடித்து இறந்துப்போனான், அவனது மகன் ராஜராஜ நரேந்துரன் தன் தந்தையின் ஆத்மசாந்திக்காக தன் ராஜ்யம் முழுவதும் அளித்து தகுந்த பரிகாரம் தேடிக்கொண்டானாம் பின்னர் நித்யகன்னியான
வாசவி , .ஸ்ரீ வாசவிகன்னிகா பரமேச்வரியாக மாறி ஆரிய வைசியர்களின்
குலதெய்வ்மாக ஆசி புரிந்து வருகிறாள்
இன்றும் கொத்துவால் சாவடியில் வாசவி அம்மன் அக்னிபிரவேசம் செய்வதுப்போல் கன்னிகாபரமேச்வரி அம்மன் கோயிலில் நடைப்பெறுகிறது . மஞ்சளில் அம்மன் செய்து அக்னியில் பிரவேசிக்கச்செய்து அத்துடன் முழுத்தேங்காய் கொப்பரைகளையும் போடுகிறார்கள் நவாராத்திரியின் பத்தாவது நாள் கன்னிகா பரமேச்வரி மகிஷாசுரமர்த்தனியாக பல அடிகள் உயரமான விமானத்தில் எழுந்தருளி
வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். கேட்டது கொடுக்கும்
மிகச்சக்தி வாய்ந்த தேவி இவள்
No comments:
Post a Comment