அப்பர் சுவாமிகள் முதன் முதலில் சமணத்தில் இருந்தார் , ஆனால் அவருக்கு
வந்த தீராத வயிற்றுவலியைத் தீர்த்தருளியது அந்தச்சிவபெருமானே. அவர்
பாடிய முதல் பதிகம் இதைத்தெரிவிக்கிறது .
"நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் " என்றும்
"உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் " என்றும் சிவபெருமானை அழைத்து
உறுதியாகக்கூறுகிறார்
அவருடைய பக்தியைப்பார்த்து திருபைஞ்ஞீலியில் பசியுடன் இருந்த
அப்பருக்கு சிவபெருமானே பொதி சோறு கொண்டு வந்து அவரது
பசியைத்தீர்த்தார். பல பாடல்களால் சிவபெருமானைப்புகழ்ந்த அப்பருக்கு
ஒரு சமயம் கயிலைமலைத்தரிசனம் செய்ய ஆசை வந்தது . தள்ளாத வயதுதான் ஆனாலும் மனதில் ஒரு உறுதி இருந்தது தீர்த்தயாத்திரைப்போல் கிளம்பிவிட்டார் .பல
ஆன்மீகப்புகழ் வாய்ந்த ஸ்தலங்கள் சென்றப்பின் காசி வந்துச்சேர்ந்தார் .
அங்கு அருள் புரியும் விசுவநாதரைக்கண்டு மனம் பரவசமுற்று " அப்பா
கயிலைக்கும் வந்து நான் உன்னைக் காண வேண்டும் எனக்கு அருள் புரி" என்று
மனதார வேண்டிக்கொண்டார் நடக்க நடக்க உடல் ஒத்துழைக்காமல் தளர்ந்தது .
தன் உயிர் போனாலும் பரவாயில்லை கயிலைக்குப்போகத்தான் வேண்டும் என்ற மன
உறுதி மேலோங்கியது.
நடக்க முடியவில்லை .குழந்தைப்போல் தவிழ்ந்தபடி செல்ல ஆரம்பித்தார். அவர்
எலும்பு தேய ஆரம்பித்தது . அவர் பக்தியைக்கண்டு வியந்தார் பரமேஸ்வரன் .
அவர் படும் பாட்டைக்காண இயலாமல் தானே நேரில் வந்துவிட்டார்.
"அப்பர் பெருமானே ! நீ நேரே திருவையாருக்குச்செல்லவும் .அங்கு நான்
கயிலை க் காட்சியை உனக்குத்தெரியவைத்து தரிசனம் தருகிறேன் " என்றார்.
அதேபோல் அவருக்கு தரிசனமும் கிட்டியது . பல வருடங்கள் இந்தப்பூவுலகில்
இருந்து பல பதிகங்கள் இயற்றிபாடவேண்டும் என்பதே அந்தச்சிவனுடைய
விருப்பமாக இருந்திருக்க வேண்டும் ஆகையால் தானோ என்னவோ
அவருக்குக்கயிலைக்காட்சியைத் திருவாருரிலேயே முடித்துக்கொடுத்துவிட்டார் அந்த ஈசன் .
அப்பருடைய இறுதி நாட்களில் அவர் திருப்புகலூரையே தன் இடமாகக்கொண்டு
வாழ்ந்தார் .தன் இறுதி மூச்சு முடிவது தெரிந்து " புண்ணியா உன்னடிகே
போதுகின்றேன் " என்று பதிகம் பாடியபடியே சிவனுடன் இரண்டறக்
கலந்துவிட்டார் .
அப்பர் தொண்டுக்கென்றே பிறந்தார் . அடக்கமாக தொண்டைச்செய்தார்
.புகழுக்காக அவர் ஒருபோதும் செய்ததில்லை அவர் வாழ்க்கையில் பரமேஸ்வரன்
பல அற்புதங்களை நிகழ்தியிருக்கிறார் . திருஞான சம்பந்தர் ஒருசமயம்
திருபூந்துருத்திக்கு முத்துப்பல்லக்கில் விஜயம் செய்த போது அப்பர் அந்தச்சிவிகையைத்தன்
தோளில் சுமந்து வீதி வலம் வந்தார் .அதைத்தன் பாக்கியமாகவே கருதினார்
அவர் .
அப்பர் என்ற பெயர் ஆளுடையபிள்ளையாரால் அளிக்கப்பட்டது . அப்பருக்கு ஏன்
அந்தப்பெயரை அவர் கொடுத்தார் ? திருஞ்சானசமபந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய
உமையம்மை சம்பந்தருக்கு அம்மையாகிறாள் .அதனால் சிவபெருமான்
சம்பந்தருக்கு அப்பனாகிறார். அந்த அப்பன் என்ற பெயரைக்கொடுத்து திருநாவுக்கரசரை
மேலும் உயர்வாக்க ஆளுடையபிள்ளையார் அந்தப்பெயரைக்கொடுத்து விளித்தாராம்
அப்பரும் , திருஞானசம்பந்தரும் சேர்ந்து பல புண்ணியஸ்தலங்கள் சென்று
பல பாடல்கள் . பதிகங்கள் இயற்றியதில் தமிழகம் எங்கும் சிவநாமம்
ஒளிர்ந்தது

No comments:
Post a Comment