வந்தது போகிப் பண்டிகை
சூழ்கிறது ஒரே புகை,
வீட்டின் குப்பைகள் வெளியே வார,
வெளிக்குப்பைகளும் அதனுடன் சேர,
தெருவுக்குத்தெரு அதுவும் எரிய,
சுற்றுச் சூழ்நிலை வெகுவாய்க் கரிய,
அளவிலாத மாசில் மூச்சும் அடைக்க,
இதுத் தேவையா? என்று மனமும் கேட்க...
யார் சொல்லுவார் பதில்?
இந்தச் சமூகத்தில் !
உன் மனதில் குப்பை நிறைந்துள்ளதே!
அதில் அழுக்கும் சேர்ந்துள்ளதே...
கெட்ட எண்ணங்களும் சுழலுதே!
அன்பும் வாய்மையும் போனதே,
அதையே முதலில் எரியப்பா,
மனதைப் புனிதம் ஆக்கப்பா,
அதுதான் போகித் திருநாளாம்,
அன்பு நிறைந்த மன நாளாம்
அன்புடன் விசாலம்
Sunday, April 8, 2007
போகிப் பண்டிகை
Posted by
Meerambikai
at
1:47 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment