அந்த இறைசக்தி ஒன்றுதான்
நமக்குள் ஒளிர்வதும் அதுவேதான்
ராம் என்று அழைத்தால் என்ன?
ஏசு என்று அழைத்தால் என்ன?
அல்லா என்று அழைத்தால் என்ன?
போகும் வழிகள் சற்று மாறினாலும்
கடைசியில் சங்கமம் ஒன்றுதான்.
அன்பிலே கனியும் இறைசக்தி
பண்பிலே பிறக்கும் இறைசக்தி
கடமையிலே மலரும் இறை சக்தி
ஏழைக் கண்ணீர் துடைப்பில் இறை சக்தி
குழந்தையின் மழலையில் இறை சக்தி
இயற்கை அழகிலும் இறை சக்தி
தன்நலமற்ற உதவியில் இறைசக்தி
நேர்மையின் உழைப்பிலும் இறை சக்தி
எங்கும் வியாபிக்கும் இறை சக்தி
எல்லா மதங்களிலும் இறை சக்தி
பெயர்கள் வேறு ஆனால் தத்துவம் ஒன்றே!
மொழிகள் வேறு ஆனால் விஷயம் ஒன்றே!
அன்புடன் விசாலம்
Sunday, April 15, 2007
இறை சக்தி ஒன்றுதான்
Posted by
Meerambikai
at
3:37 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment