மந்திரத்தில் ஒரு சிறந்த மந்திரம்,
தலைகாணி மந்திரமாம்...
பெண்களுக்கென்றே பிறந்த மந்திரம்,
படுக்கை அறையில் ஓதும் மந்திரம்,
பண்டைக்காலாமாய் திகழும் மந்திரம்,
முக்கியப் பங்கு பெறுவது தந்திரம்,
குரு இல்லாமலே கற்கும் மந்திரம்,
சிலவில்லாமலே படிக்கும் மந்திரம்,
சொன்னவுடன் செயல் படும்,
பெட்டிப் பாம்பாய் மாற்றி விடும்,
தன் தாயைப் புகழ்ந்த வாய்...காலை
மந்திரம் கேட்டு வாறும் காலை,
பெண்களுக்கே கை வந்தக் கலை,
கண்ணீரும் இதற்கு ஒரு தலை,
உள்ளே கோபத்துடன் போகும் மகன்,
சிரித்த முகத்துடன் காலை வருவான்,
சண்டை போட உள்ளே நுழைவான்,
மந்திரம் கேட்டு மயங்கி வருவான்,
மனைவியின் சுகத்தில் தன்னை மறப்பான்,
ஈன்ற தாயையும் பகைத்துக் கொள்வான்,
நன்மைக்கும் இது உபயோகம்
சுய நலத்திற்கும் இது ஒரு யோகம்,
தலைகாணி மந்திரம் சிறக்கட்டும்.
பொது நலத்திற்கு மனைவி ஓதட்டும்...
அன்புடன் விசாலம்
Sunday, April 8, 2007
தலைகாணி மந்திரம்
Posted by
Meerambikai
at
5:06 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment