அன்பு சாயி அன்பர்களே... பக்தர்களே! நவம்பர்-23 நம் சாயிராமின் 81ஆவது பிறந்தநாள்.
அவரினால் தான் நான் இன்று உயிருடன் இருப்பதை என்னால் மறக்க முடியாது. அவருக்கென்று ஒரு ஊஞ்சல் பாட்டு
"லாலி..." இயற்றி அவருக்கு பாத காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.
ராகம்:வலசி
தாளம்:ஆதி{வேறு ராகத்திலும் அமைத்துக் கொள்ளலாம்}
சுருண்ட முடி மாதவனே ஸ்ரீ சத்ய சாயீ,
அன்பு ஒளி அள்ளிவீச ஆடுகிறார் ஊஞ்சல்
ஆடுகிறார் ஊஞ்சல்...ஆனந்தமாக
ஆனந்த சாயி ஸ்ரீ சத்ய சாயி
லாலி சுப லாலி...லாலி சுபலாலி
சத்ய தர்ம சாந்தி பிரேம ஸ்ரீசத்ய சாயி
பர்த்தியில் வந்துதித்த கருணாமூர்த்தி சாயி
முத்துப்பல், சாந்தமுகம் புன்னகையுடன் விளங்க
பக்த கோடி அன்பர்களுக்கு ஆசிகொடுக்கும் சாயி
ஆடுகிறார் ஊஞ்சல் ஆனந்த சாயி
லாலி சுப லாலி...
ஈச்வராம்பா, தாய் ஈன்ற மாணிக்கமே சாயி
ஒழுக்கம் பெற்ற கல்வி நிலையம் நிர்வகிக்கும் சாயி
பலரின் நோயைத் தீர்க்கும் வைத்தியநாத சாயி
உன் கமல பாதம் பணிந்து நின்றேன்...ஆசி வேண்டும் சாயி
ஆடுகிறார் ஊஞ்சல் ஆனந்த சாயி
ஆனந்த சாயி ஸ்ரீசத்ய சாயி,
லாலி சுப லாலி... லாலி சுப லாலி...
அன்புடன் விசாலம்
Friday, April 6, 2007
அன்பின் ஒளி "சாய் ராம்"
Posted by
Meerambikai
at
8:49 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment