என் தோழியின் வீட்டில் முதல் மகன் அமெரிக்காவிற்கு போக, இரண்டாவது மகன் வீட்டுப் பிரச்சனையால் வேறு வீட்டிற்கு தனிக் குடித்தனம், போக அன்று அவர்கள் வீட்டிற்கு நான் போயிருந்தேன். அப்போது அவர்கள் வீட்டு சிறுபெண் தன் பாட்டியைப் பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தாள். அன்று நான் வீடு வந்தவுடன் இந்தக் கவிதை பிறந்தது.
தாத்தா இல்லை முத்தா கொடுக்க,
பாட்டி இல்லை கதைகள் சொல்ல,
சித்தி இல்லை இனிய பாட்டு பாட,
சித்தப்பா இல்லை கேரம் ஆட,
மாமா இல்லை என்னைத் தூக்க
மாமியும் இல்லை என்னைத் தாங்க,
அத்தை மடி மெத்தையும் இல்லை
விளையாட ஒரு குழந்தையும் இல்லை,
அடுத்த வீட்டில் யார்? தெரியவில்லை,
ஒருவர்க்கொருவர் பார்க்க நேரமுமில்லை
தனி வீட்டிற்கு ஏன் வந்தோம் அம்மா?
பாட்டி வீட்டிற்கே போலாம் அம்மா!
அன்புடன் விசாலம்
Sunday, April 15, 2007
ஏம்மா...இந்தத் தனி வீடு?
Posted by
Meerambikai
at
6:33 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment