நொறுக்குத்தீனி ஒரு பொழுது போக்கு பலருக்கு,
குடும்ப பிரயாணமா ஒரு மூட்டைத்தீனி சிலருக்கு,
பிக்னிக்கா கூடவருவது ஸமோசா பக்கோடா இளைஞருக்கு,
ஒரு கூர் பாப்கார்ன் பெரிய கோன் அய்ஸ்கிரீம் வருகிறது காதலர்களுக்கு, சினிமா படம் ஒடுகிறது, இன்பமான இனிப்புகள் வாய்க்கு. வருகிறது சோடாவும் வறுத்த கடலையும் சீட்டு விளையாடும் சீமான்களுக்கு, சீடை முறுக்கு, வறுத்த பண்டங்கள் அழுகை சீரியல் பார்க்கும் மாமிகளுக்கு, கேட்பரீஸ் சாக்லேட்ஸ் கோலா,ஆரஞ்ச்,என்று வருகின்றன நம் அழும் பாப்பாக்களுக்கு,
உடலுக்கு ஒர் வேலையும் இல்லை,
உடலில் ஒர் அசைவும் இல்லை,
முன் போல் ஒரு அம்மி, குழவி இல்லை,
மாவு ஆட்ட ஒரு கல்லுரலும் இல்லை,
துணி துவைக்கும் கல்லும் இல்லை,
இடிக்க ஒரு உரல், உலக்கையும் இல்லை
எல்லாமே இயந்திரம் தான்.
என்ன செய்யும் இந்த உடல்,
ஏறுகிறது பல கேலரீஸ்,
ஊளைச்சதை பெருகுகிறது,
வியாதியும் உள்ளே நுழைகிறது
தீமை ஏற்படுகிறது உடலுக்கு
"வேண்டாம் மனிதாஇந்த விபரீதம்
உடல் பயிற்சி வேண்டுமப்பா"
திரும்ப,திரும்ப எச்சரிக்கிறது உடல்,
நாக்கை கட்டுபபடுத்துவாய், எல்லாம் நல்லதே முடியும்,
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் எப்படியப்பா முடியும்?
விசாலம்.
Friday, April 20, 2007
நொறுக்குத் தீனியா நோ... நோ... நோ..!
Posted by
Meerambikai
at
6:23 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment