Wednesday, November 6, 2013
அந்தக்கால கொலு
Posted by
Meerambikai
at
1:50 AM
0
comments
மின்னி மீனாட்சி ஆனாள்
Posted by
Meerambikai
at
1:47 AM
0
comments
யம தீபம்
அன்று காலை நான் பள்ளிக்கு கிளம்பினேன்.போகும் வழியெல்லாம் நிறைய மரப்பலகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.எதுக்கு இவ்வளவு பலகை என்று எண்ணியபடி நடையக்கட்டினேன். ஆனால் பள்ளியிலிருந்து மாலை திரும்பும் போது கொலுப்படிகள் போல் அந்தத் தெரு முழுதும் பலகையால் கட்டப்பட்டிருந்தன .மரப்படிகள் நடக்க வசதியாக இடம் சற்று விட்டு அமைக்கப்பட்டிருந்தன.எல்லாமே ஐந்தடி நீளம் அளவில் இருந்தன.வியாபாரிகள் தங்கள் பொருட்களை அலங்காரமாக வைத்து விற்க இந்த ஏற்பாடாக இருக்கும் என்று நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தேன் .மறு நாள் பள்ளிக்குப்போகும் போது நிறைய காகிதப்பூக்களின் சரம்,.அலங்கார விளக்குகளென்று பல இடங்கள் நிரம்பி இருக்க பலர் கூட்டம் கூட்டமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர்.அது என்ன ஒற்றுமை!அது என்ன உற்சாகம் !எங்கும் சிரிப்பு,.எங்கும் இனிப்பு .நான் திரும்பி வரும்போது நான் தினமும் நடக்கும் இடம் இதுதானா என்று நினைக்கும்படி கரோல்பாக்கே மாறி இருந்தது.ஜகஜ்ஜோதியாக எங்கும் விளக்குகள்.மரங்கள் மீதும் பச்சை விளக்கு பல்புகள் கண் சிமிட்டி மின்ன,அந்தத்தெருவில் நடக்கவே ஏதோ ஒரு திருமண விழாவுக்குள் நுழைந்தது போல் இருந்தது.அந்த கொலுப்படிகள் முழுதும் பாத்திரங்களோ பாத்திரங்கள்.எவர்சில்வர் என்ன ,பித்தளை என்ன.ஹிண்டேலியம் என்ன என்று களைக்கட்டின.பெரிய பக்கெட்டிலிருந்து ஆரம்பித்து சின்ன ஸ்பூன் வரை அங்கு பார்க்க முடிந்தது ,அப்பாடி ! இத்தனை பாத்திரங்கள் விற்றுபோகுமா? தீபாவளிக்கு பாத்திரங்கள் ஏன் வாங்க வேண்டும் ?என்று பல கேள்விகள் என் மண்டையைக்குடைந்தன.தீபாவளிக்கு முதல் நாள் நான் எங்கு இருக்கிறேன் என்றே தெரியவில்லை.தெரு முழுவதும் தார் ரோடே தெரியாமல் தரி என்ற சமக்காளம் விரித்து மூடியிருந்தனர்.மழையில் நனையாமல் இருக்க மேலே முழுவதும் பந்தல் போட்டு பிளாஸ்டிக் ஷீட்டினால் மூடப்பட்டிருந்தது.வாகனப்போக்கு
Posted by
Meerambikai
at
1:41 AM
0
comments
Thursday, September 29, 2011
சுயம்வரம்
பழைய ' பாஞ்சால தேசம்" இன்று குஜரத் மாநிலத்தில் சௌராஷ்ட்ரா என்ற
பிரிவில் 'டார்னேடார்" என்ற இடமாக உள்ளது இந்த இடம் எதற்கு விசேஷம் என்றால் இந்த இடத்தில் தான் மஹாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனை திரௌபதி சுயம்வரமாக திருமணம் செய்து கொண்டாள்.
சுயம்வரத்தின் போட்டி மிகவும் கடினமான ஒன்று. சுற்றிக்கொண்டிருக்கும்
சக்கரத்தில் ஒரு மீன் ..அதுவும் தலைக்குமேலே சுழலும் . கீழே ஒரு நீர்த்தொட்டி. அதில் சுழலும் மீனின் பிம்பம் தெரியும் நீரில் தெரியும் மீனின் பிம்பத்தைப்பார்த்து
மேலே கட்டப்பட்டிருக்கும் மீனை அம்பால் குறிவைத்து எய்ய வேண்டும்.
அப்பா! இது என்ன ! சாமானமான காரியமா ? ஒரு இடத்திலேயே நிற்கும் மீனை
அடித்துவிடலாம் ஆனால் சுழலும் மீனை அதுவும் கீழே பிம்பம் பார்த்து
அடிக்க வேண்டுமென்றால் அர்சுனன் இந்தக்கலையில் எத்தனை மேதையாக
இருந்திருப்பான் .மீனை அடித்து வெற்றிக்கண்ட அர்சுனனை திரௌபதி
மிக மகிழ்ச்சியுடன் மணக்கிறாள்,
இந்த சுயம்வரம் நடந்து அர்சுனன வெற்றிப்பெற்ற இடம் தான் 'டார்னேடார்'
இன்றும் இந்த நாளை ஒரு திருவிழாவாக இங்கிருக்கும் மக்கள் கொண்டாடுகின்றனர் .இங்கிருக்கும் 'திருநேத்ரேஸ்வரர் ' என்ற கோயிலில்
முதல் நாள் கொடியேற்ற விழா விமரிசையாக நடக்கும் .
ராஜா கர்ணாசிங்ஜி ஜாலா'என்பவர் இந்தக்கோயிலைப்புதுப்பித்தது மாசிமதம் ,
அவர்தான் இந்தத்திருவிழாவையும் ஆரம்பித்தார் .
இந்தகோயில் மிகப்பழமை வாய்ந்தது எட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்தது ,
ராஜா சோலாங்கி மாந்தாதா என்ற மன்னர் முதன் முதலில் இந்தக்கோயிலைக்கட்டி 'திரிநேத்ரேஸ்வரர்' என்ற பெயரிட்டு வணங்கி வநதாராம்
இரண்டாம் நாளன்று கங்கை நீர் சேகரிக்கப்பட்டு எல்லோரும் அதில்
ஸ்னானம் செய்து தங்கள் பாபங்களைப்போக்கிக்கொள்வார்கள்
மூன்றாம் நாள் ' திரௌபதி சுயம்வரம்' ஞாபகமாக இங்கும் சுயம்வரம் நடக்கும்
பல மலைச்சாதிப்பெண்கள் இதில் கலந்துக்கொள்வார்கள் .எங்கும் பச்சை .சிவப்பு போன்ற ஆழமான வர்ணங்களின் உடைகள் அதில் பதிக்கப்பட்டு பளபளக்கும்
கண்ணாடிகள் .சம்க்கி வேலை செய்யப்பட்ட ரவிக்கைகள். குட்டிப்பாவாடையான
'காக்ராஸ்' அதில் இருக்கும் மடிப்புக்கள் பெரிய வட்டமாகச்சுழட்ட வசதியாக
இருக்கும் நெற்றியில் பெரிய பொட்டும் சரிகையுடன் மின்னும்
இந்தச்சுயம்வரப்பெண்கள் வரிசையாக நிற்க ஆண்களும் வரிசையாக எதிர்வரிசையில் நிற்பார்கள். அவர்களின் உடையும் வித்தியாசமாக இருக்கும்
கீழே பஞ்சகச்ச வேஷ்டி சரிகைப்போட்டது , தலையில் பளபளக்கும் சரிகை முண்டாசு . மேலே முழுக்கைசட்டை . மிகக்குட்டையாக இருக்கும்
இப்போது சுயம்வரம் ஆரம்பிக்கும் வாத்தியங்களில் ஷெனாய் முக்கியமாக இருந்து மங்கல ஒலி கிளப்பும் பின் மேளதாளங்கள் ஒவ்வொன்றாய் ஆரம்பிக்க
விழா களைக்கட்டும்
இப்போது ஒவ்வொரு ஆணும் பெண்ணிடம் சென்று குஜராத்தியில்
தங்கள் ஆசையைத்தெரிவிப்பார்கள் அப்படி என்னதான் சொல்கிறார்கள்?
"என்னைப்பார் என் அழகைப்பார் . என்னை மணக்க உனக்கு சம்மதமா?
என்று அவர்கள் கேட்ப்பார்களாம் சம்மதம் என்றால் மூன்று
முறை தலையை ஆட்டி பெண்கள் சம்மதம் தெரிவிப்பார்கள் ,
பின் என்ன .டும்டும் டும் என்று கலயாணம் ஆகும் பின் இந்த திரிநேத்திரேஸ்வரர்
கோயில் போய் வணங்குவார்கள் .
நடனம் இல்லாமலா ? குஜராத்திற்குப்பெயர் போன ''தாண்டியா'நடனம் நடக்கும்
சிலம்பாட்டம் ,பானைகளைத்தலையில் வைத்தபடி ஆட்டம் . குத்துச்சண்டை
கத்திச்சண்டை போன்ற கலைகளும் அங்கு வெளிப்படும்
மணமக்களுக்கு அடுக்கடுக்காக பூவேலைகளுடன் பல வண்ணங்களுடன் மணிகளுடன் செய்யப்பட்ட மூன்றடுக்கு குடை பரிசாக கொடுப்பார்கள்
இதைப்பார்க்க வெளிநாட்டினரும் வருகின்றனர்
முதல் வருடம் திருமணம் செய்துகொண்டவர்களும் மறுவருடம் இந்தநாளில்
வந்து நன்றிதெரிவித்து விழாவில் பங்கு பெருகிறார்கள் ,
Posted by
Meerambikai
at
2:24 AM
0
comments
துர்க்கை
நவராத்திரி என்றாலே தேவிபாகவதம் உடனே நினைவுக்கு வரும். தேவிபாகவதம்
என்று நினைக்க அழகான துர்க்கை நம் கண்முன் நின்று அருள் புரிவாள். வேதத்தில் துர்காசூக்தம் என்று ஒன்று உண்டு .அதில் ' தாமக்னி வர்ணாம் தபஸா
ஜ்வலந்தீம் ' என்றும் அக்னே த்வம் பாரயா நவ்யோ"என்றும் கூறப்பட்டிருக்கிறது இதில் துர்க்கையை அக்னியின் வடிவானவள் என்றும் அந்த ஜோதியின் வீர்யத்தையும் புகழ்கிறது இதனால்தானோ அநேக கோயில்களில் துர்க்கை அல்லது சில அம்பாளின் சிரசைச்சுற்றி அக்னிப்பிழம்புகள் வட்டமாக சூழப்பட்டிருக்கும் சில அம்மன் கோரப்பற்களுடனும் காணப்படுவாள். அநேகமாக
வடக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பாள் ,சில இடங்களில் 24 கரங்களுடன்
ஒவ்வொரு கரத்திலும் ஒவ்வொரு ஆயுதம் தாங்கி நிற்பாள்.ஒரு காலின் கீழ்
மகிஷனுடைய தலை மிதிப்பட்டிருக்கும் .
துர்க்கை என்றாலே நம்மைக்காப்பாற்றும் அன்னை என்ற பொருள் கொள்ளலாம்
கோட்டைக்கு சம்ஸ்கிருதத்தில் துர்க்கம் என்று சொல்வதால் இந்தப்பெயர்
துர்க்கைக்கு மிகப்பொருந்துகிறது . ஒரு அரண் போலிருந்து நம்மைக்காப்பாற்றும்
தேவியாக துர்க்கை விளங்குகிறாள்.
இவளுக்கு மகிஷாசுரமர்த்தினி என்றும் ஒரு பெயர் உண்டு . மகிஷன் என்ற அசுரனைக் கொன்றவள் இவள். ஒரு சமயம் தேவர்களின் தலைவனான
இந்திரனுக்கு 'மகிஷாசுரன்' என்ற அசுரனுடன் போர் மூண்டது . மிகவும் சக்தி
பெற்ற மகிஷனுடன் போர் செய்யமுடியாமல் பல தேவர்கள் தோற்றனர்.
மனம் கலங்கி அவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர் .பிரும்மா தேவர்களுடன்
மஹேஸ்வரனையும் மஹாவிஷ்ணுவையும் கண்டு வணங்கி தங்கள் பிரச்சனையைக்கூறினர் .இதனால் கோபம் கொண்டனர் .அந்தக்கோபத்தின் தாக்கத்தினால் ,சக்தியால் நெற்றியிலிருந்து ஒரு அக்னிப்பிழம்பாய் ஒரு பேரொளி தோன்றியது.பின் அந்த ஒளி ஒரு பெண்ணின் உருவம் கொண்டது .அங்கிருந்த
தேவர்களும் ,பின் இந்திரன் வருணன் .வாயு சூரியன் ,குபேரன் .பூமி பிரும்மா
சந்தியா எல்லோரும் அந்த உருவத்தைப் படைத்தனர் .உருவம் வந்தப்பின்
அதற்குச் சக்தி வேண்டுமே !
சிவபெருமான் தன் திருசூலத்திலிருந்து வேறொரு சூலம் உண்டாக்கிக்கொடுத்தார்
அக்னி ஈட்டியைக்கொடுத்தார். விஷ்ணுவோ தன் சக்கரத்திலிருந்து மற்றொரு
சக்கரம் கொடுத்தார் வாயு வில் அம்பு . இந்திரன் வஜ்ஜிராயுதம் , வருணன் பாசக்கயிறு, காலதேவன் வாள் கேடயம் , . யமன் காலதண்டம், ஆதிசேஷன்
நாகபரணம் , ஹிமவான் சிம்மவாஹனம் , . என்று பல பொருடகள் அந்த்த்தேவிக்கு வந்து சேர அளக்கமுடியாத சக்தி சேர அகிலாண்டகோடிபிரம்மாண்ட நாயகியாய் மகிஷனை வதம் செய்ய புறப்பட்டாள்,
அண்டம் நடுநடுங்க மகிஷன் தேவியைக்கண்டான் .இருவரின் போர் தேவிபாகவதத்தில் மிகச்சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது முடிவில் அவன் துணைகளையெல்லாம் பறிக்கொடுத்து
தனியாக நின்றான் .தேவி உக்கரமாக அவனைத்தூக்கி வீசி அவனைக்கீழே
வீழ்த்தி தன் பாதத்தை அவன் மேல் இருத்தி நின்றாள் .
பின் மகிஷாசுரமர்த்தினி ஆனாள்.
இந்த மகிஷன் தான் தவம் இருந்த போது பெண்களின் பலவீனத்தை எடைப்போட்டு
பெண்ணைத்தவிர பிறரால் தனக்கு மரணம் நேரக்கூடாது என்ற வரத்தைக்கேட்டான்
இதனால் பெண்வடிவமாக வநதாள் அன்னை . மகிஷனும் தன் உருவங்களை
பல உருவங்களாக மாற்றிக்கொண்டான் யானையானான் ,.சிங்கமானான், பாம்பானான் ஆனால் தேவியோ எல்லாவற்றையும் அழித்து வெற்றிவாடைச்சூட்டிக்கொண்டாள்.
இந்த நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், .அடுத்து மூன்றுநாட்கள் திருமகளுக்கும் கடைசி மூன்று நாட்கள் கலைமகளுக்கும்
பூஜை நடக்கும்
மூன்றுசக்திகளின் அருள் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்
நவராத்திரி வாழ்த்துகள்
Posted by
Meerambikai
at
2:23 AM
0
comments
Sunday, September 26, 2010
சாம்பலை உடம்பில் பூசி .........
அந்தக்காலத்தில் இருந்த வீரத்தாய்மார்களை இப்போது காணமுடிவதில்லைபள்ளியில் மாணவனைக்கொஞ்சம் கோபித்துக்கொண்டால் போதும் ஆசிரியருடன் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள் பெற்றோர்கள் செல்லம் அதிகம் கொடுக்கிறார்களோ ? அல்லது அவர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் தங்கள் செல்வங்களுடன் சேர்ந்து இருக்க முடியாத சூழ்நிலையினால்குழந்தைகள் கேட்டது எல்லாம் வாங்கித் தருகின்றனரோ ? தில்லியில் லோகமான்ய திலக் ஜயந்தி ஆகஸ்டு ஒன்றாம் தேதி விமரிசையாக நடக்கும் எல்லா மராட்டியர்களும் அதில் பங்கு ஏற்பார்கள் . அத்துடன் சில மந்திரிகளும் வருவார்கள் நாங்களும் சில மாணவ மாணவிகளை அழைத்துக்கொண்டு காலை 8 மணிக்கு லோகமானயதிலக் அவர்களின் சிலைக்க்குப்போய்மாலை அணிவித்து வணக்கத்துடன் மரியாதை செலுத்துவோம் .குழந்தைகளுக்கு தேசபக்தி வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ஆனால் ஒருதடவை மிகவும் வெப்பத்துடன் புழுக்கமும் சேர்ந்துஒரு மாணவன் மயக்கமுற்று கீழே சாய்ந்தான் . அவனை ஓடிப்போய் தாங்கிபின் எலக்ட்ரால் கொடுத்து கொஞ்சம் பிஸ்கட்டுகளும் கொடுக்க அவன்பழைய நிலமைக்கு வந்தான் ஆனாலும் அவன் வீட்டில் இது தெரிய அவனது தாய் "நல்லதேசபக்தி கத்துக்கொடுப்பது ! அந்த திலக்ஜியைப்பற்றித்தெரிந்துகொண்டால் இந்தியா சரியாகிவிடுமா ! எல்லாம் நேரமும் வேஸ்ட் என் குழந்தை மயக்கம் போட்டுவிழுந்தானாம் "என்று கனனாபின்னா என்று பள்ளிக்கு வந்து திட்டினாள் அவள் குழந்தை என்று சொன்னது ஒன்பதாவது படிக்கும் மாணவன் தான் எத்தனை வயதானாலும் தாய்க்கு தன் குஞ்சு பொன்குஞ்சுதானே!. அந்தத்தாய் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர் என்று எனக்கு தெரியுமாதலால் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது தமிழ் நாட்டிலும் தேசப்பற்று மிகுந்துதேசத்திற்காகத் தியாகம் செய்த திருப்பூர் குமரன் .கப்பலோட்டிய தமிழன்திரு வ உ சிதமபரனார் ஆங்கிலேயரை விரட்டிய கட்டபொம்மன் ,,,,,இதுபோல் எத்தனைப்பேர் இருந்தார்கள் , ஆனாலும் சர்தார்ஜி பஞ்சாபிகள் போல் வீரம் தீரம் ஊட்டி வளர்க்கும் தாய் தமிழ்நாட்டில் அத்தனை இல்லையோ என தோன்றுகிறது தீபாவள்யின் போது சர்தார்ஜியின் இரண்டு வயது குழந்தையின்கையில் பட்டாசு இருக்கும் நம்மைப்போல் பார்ப்பவர்களுக்கு மனம் திக்திக் என்று இருக்கும் ஆனால் சர்தார்ஜி குடும்பம் கவலையே படாது. தெருவைத்தாண்டிப்போகும் போதும் தமிழ் அன்னை "கையைப்பிடிச்சுக்கோடா செல்லம் "என்றுஅந்தப்பையனின் கையைப்பிடித்து அழைத்துபோவதைப்பார்த்திருக்கிறேன்ஆனால் பஞ்சாபி குழந்தை கையைப்பிடித்தாலே உதறிவிடும் அத்துடன் அந்தக்குழந்தையின் பெற்றோர்களும் மிகவும் கோழையாக வளர்க்க விரும்பமாட்டார்கள் இதை நினைக்கும் போது எனக்கு ஒரு வீரத்தாயின்கதை ஞாபகம் வருகிறது அந்த வீரத்தாய் தன் மகனின் அஸ்தியை என்ன செய்தாள் தெரியுமா?
ஒருவன் இறந்து விட்டால் அவனுடைய சாம்பல் நல்ல நதியில் தூவப் படுகிறது .சிலர் காசிக்குச் சென்று கங்கையில் கறைப்பார்கள்,அன்னை இந்திரா காந்தி அவர்களின் அஸ்தி இமயமலையிலும் கூட ஹெலிக்காப்டரில் எடுத்துச் சென்று மேலிருந்து தூவினார்கள்,ஆனால் ஒருவனது சாம்பலை அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு இளம் தாயும் தங்கள் வயிற்றில் அந்தச்சாம்பலைபூசிக்கொண்டார்கள், ஏன் என்றால் தங்களுக்கும் இது போல் ஒரு மகன் பிறக்க வேண்டும் என்பதால் தான் ஆம் அந்த வீர மகன் ,எல்லோராலும் போற்றப்பட்ட மகன் , நாட்டுக்காக தன் உயிரையே கொடுத்தத் தியாகி ,இள்ஞ்சிங்கம் ஸர்தார் பகத் சிங் தான் , 1931ல் மார்ச் 23ந்தேதிபகத் சிங்கைதூக்கிலிட்டு,பின் வெள்ளையர்கள் அவனை எரித்தச் சாம்பலை அவன் தாயிற்கு அனுப்பி வைத்தனர் ,அந்த வீரத்தாயைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் ,தூக்குத்தண்டனையிலிருந்து தப்ப பாவம் அந்தத் தந்தை மனம் சோர்ந்துப்போய் ஒரு கருணை மனு கொடுத்தால் மகனைக் காப்பாற்றலாம் என்று வக்கீல் சொல்லக் கேட்டு ஒரு மனு பத்திரம் வாங்கியும் வந்தார் ,தன் மனைவியைக் கூப்பிட்டார் , "பகத்சிங்கின் தாயே நமக்கு நம் மகன் வேண்டாமா?இந்தக் கருணை மனுவில் ஒரு கையெழுத்துப் போடு நான் போட்டுவிட்டேன் ,நீதான் பாக்கி" என்று அந்தப் பத்திரத்தைக் கொடுத்தார் ,அந்தத் தாய் அதை வாங்கிப்பொருமையாகப்படித்தார்., பின் சுக்குக் சுக்காகக் கிழித்துப்போட்டார் பத்திரத்தை ,,,,,,"மானமில்லையா எனக்கு ? வெள்ளையினிடம் போய் உயிர்ப்பிச்சை கேட்க வேண்டுமா? என் மகன் வெள்ளையனுக்கு எதிராக நின்று ஜயித்து வெள்ளையனை வீழ்த்தினான் என்ற பெருமையிலே அவன் சாவதை நான் விரும்புவேனேத்தவிர கருணை மனுவைப் பெற்று உயிர் வாழ்வதை நான் விரும்ப மாட்டேன் . அவன் கோழையில்லை வீரன், என் மகன் வீரன் . அவன் புகழோடு மடிவதைப் பார்த்தாலும் பார்ப்பேன் வெள்ளையன் தயவில் உயிருடன் அலைவதை ஒருக்காலும் விரும்ப மாட்டேன் " ஆஹா இப்படி ஒரு தாயா ? இரண்டு கரங்களையும் கூப்பி வணங்க தோன்றுகிறது அல்லவா?
Posted by
Meerambikai
at
3:20 AM
0
comments
முடியிலும் கண்ணன் நாமம்
திரௌபதியின் சபதம் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் தனக்குக் கௌரவர்கள் செய்த கொடுமைகளை அவளால் தான் மறக்க முடியுமா?
துகிலை உருவும் துச்சாசனன். அதைப்பார்த்து ரசித்து எக்காளமிடும்
சில கௌரவர்கள் ........அங்கு விதுரர் பீஷ்மர் துரோணர் போன்ற மஹான்கள் இருந்தும் ஒன்றும் செய்யமுடியாத நிலை......... அழிவுக்காலம் வந்துவிட்டால் இப்படித்தான் எதாவது நடக்குமோ!
கடைசி வரைப்போரடிய திரௌபதி தன்னால் இனி முடியாது என்ற நிலை வந்ததும் 'கண்ணா காப்பாற்று"
என்று கதற பின் வருகிறான் கண்ணன். சேலை உருவ உருவ வளர்ந்து திரௌபதியின் மானமும் காப்பற்றப்பட்டது . அப்போது அவள் கண்ணனுக்கு நன்றி தெரிவித்தப்பின்
தன் சபதத்தையும் சபை நடுவே சொல்லுகிறாள்
.பாரதியின் பாஞ்சாலி சபதம் படிக்கப்படிக்க திகட்டாது ,
அதில் அவர் இதை வர்ணிக்கிறார் ,
""தேவி திரௌபதி சொல்வாள்--ஓம்
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்
பாவி துச்சாசனன் செந்நீர் - அந்தப்
பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம் ,
மேவி இரண்டுங்கலந்து - குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக்குழல் முடிப்பேன் யான் -இது
செய்யுமுன்னே முடியே" என்றுரைத்தாள்
தன் முடியை பிரித்தபடி வைத்திருக்க பாரதப்போர் முடிந்து தன் சபதத்தை எப்போது நிறைவேற்றப்
போகிறோம் என்று காத்திருக்கிறாள் அவள் .தலைக்குளிக்காமல ஒரே சிக்குப்பிடித்திருந்தது
பாரதப்போர் முடிந்தது ஆவேசத்துடன் ஓடி வந்து தன் சபதத்தை நிரைவேற்றுகிறாள் திரௌபதி
துச்சாசனனனின் இரத்தம் அவள் கூந்தலில் தடவப்பட்டிருந்தது
இதைக்குறித்து ஒருகதை கேள்விப்பட்டேன்
கண்ணனுக்கும் திரௌபதி ஒருதடவை துணியைக்கொடுத்து காப்பாற்றினாளாம்
ஒரு முறை ஆற்றில் நண்பர்களுடன் நீச்சலடித்து விளயாடிக்கொண்டிருக்க வேடிக்கைக்காக
சில குறும்பு நண்பர்கள் கண்ணனின் உடையையும் கௌபீனத்துடன் பறித்து வைத்துக்கொண்டனர்,
எத்தனை நேரம்தான் நீரில் இருப்பது ? அந்தநேரம் அங்கு வந்த திரௌபதி தன் புடவைத்தலைபை
கிழித்து மானம் காத்து உதவினாளாம் இது காதில் விழுந்த செய்தி
சத்தியபாமாவும் ருக்மிணியும் அந்தத் திரௌபதியின் கண்ணன் பக்தியைக்காண அவளிடம் சென்றனர்
திரௌபதி தலையில் இருக்கும் சிக்கையும் இரத்தத்தையும் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தாள்.
அவளுக்கு உதவ இருவரும் அவளை நெருங்கி தாங்களும் அவள் முடியைச்சரிசெய்தனர்
அப்போது ஒரு அதிசயம் நடந்தது ஒவ்வொரு முடியிலிருந்தும் ஒரு ஒலி எழுந்தது அந்த ஒலி என்ன தெரியுமா? அதுதான் " கிருஷணா கிருஷ்ணா!"
பக்தி என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும்
Posted by
Meerambikai
at
3:06 AM
0
comments

