Monday, April 30, 2007

மே தினம்-எல்லாமே இனிப்புத்தான்!


முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே ஒரு அன்புப் பிணைப்பு, விசுவாசம், நேர்மை முதலியவைகள் இருத்தல் மிக அவசியம்.முதலாளிகளும் தொழிலாளிகளின் குடும்பத்தைத் தம் குடும்பமாகவே பார்த்தல் வேண்டும். அவர்களுக்கு மிக இன்றியமையாத வீடு, குழந்தைகளுக்குக் கல்வி ஆரோக்கியமான சூழ்நிலை, மருந்துகள்
வாங்க வசதி, ஓய்வு பெற்றவருக்கு ஒய்வூதியம், மருத்துவம் விடுமுறை, விடுதி, முதலியவைகளை ஏற்படுத்தி,வருடம் இரு முறை அவர்களுடன் கலந்து சுற்றுலா சென்று , ஜாதி பேதம் அந்தஸ்து பார்க்காமல் அவர்களுடன் கேளிக்கைகளில் பங்கு கொண்டு ஒரே குடும்பமாக பார்த்தால் தொழிலின் வளர்ச்சிப் பெருகும். அது பெருகினால் நாட்டின்
பொருளாதாரம் பெருகும். இந்த விஷயத்தில் சக்தி மசாலா கம்பெனி, ராம்கோ நிறுவனங்கள், விகேயென் நிறுவனம் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்றவர்களைப் பாராட்ட வேண்டும், அவர்கள் தொழிலுடன் சேர்ந்து நாட்டிற்கு தொண்டும் செய்கிறார்கள்.
வாழ்க தொழிலாளர் தினம்!ஒரு கவிதை தொழிலாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்


உழைக்கும் வர்க்கம் வியர்வை சிந்த
தனி நிர்வாகம் அவர்களை மேலும் உந்த,
வேலையில் ஒரே கட்டுப்பாடு,
தினக் கூலியிலும் குறைபாடு,
அடிமையாக்கி அவர்களை மிரட்ட,
சிக்கல்கள் அங்கு பின்னிக் கொள்ள,
போராட்டங்கள் தலை தூக்க,
இரு வர்க்கத்தின் உறவுக் குன்ற,
வந்தது முடிவில் கதவடைப்பு,
ஒரு பெரிய அடி ஏழை வயிற்றில்,
குழந்தைகளோ நடுத் தெருவில்,
இத்தகைய நிகழ்ச்சி...
பொருளாதார வீழ்ச்சி...
வாழ்வுக்கொரு தாழ்ச்சி...
உரிமைகளை நிலை நாட்ட...
வன்முறைகள் தலை தூக்க...
ஒரு பெரிய பூட்டு கதவில் சிரிக்க...
மனதிலே அழுகிறான்...
நேர்மை உழைப்பாளி...


வளரும் தொழிற்சாலை
நல்லிணக்கத்தால்,
உயரும் அது
நல்லுறவுகளால்,
தவறுக்கு தேவை ஒரு மன்னிப்பு,
மெமோ நோட்டீஸ் புறக்கணிப்பு
இணக்கம் குறைவதில்லை,
இயக்கம் நிற்பதில்லை,
உருவாக்கம் பன்மடங்கு பெருக...
ஆர்வம் அங்கு போட்டி இட...
வளர்ச்சிக்கு அன்பு உரம் போட்டு...
ஆரோக்கியப் போட்டி வளர்க்க...
மனம் நிறைந்த தொழிலாளி...
மனம் ஒன்றிச் செயல்பட...
உற்பத்தி பெருகும்,
பொருளாதாரம் சீர்படும்,
தேவை தொழிலாளிக்கு...தொழிலில் அக்கறை!
வேண்டும் முதலாளிக்கு... அவர்களின் அக்கறை!
இரண்டும் நிலைத்தால்
சிரிதளவும் கசப்பல்ல
எல்லாமே இனிப்புத்தான்


வாழ்க தொழிளாளர்களின் தினம்!
தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள்!
அன்புடன் விசாலம்

Sunday, April 29, 2007

சித்திரா பௌர்ணமி..!


சித்திரா குப்தம் மஹா பிராஜ்னம்
லோகாகி பத்ரதாரிணம்
சித்ர ரத்னாம்பர தாரம் .
மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்,

எந்தக் காரியாலயத்திலும் அல்லது கம்பெனிகளிலும் கணக்கு சரி பார்க்க ஒருஆடிட்டர் தேவைப்படுகிறார். இவர் வரவு சிலவு சரியாக இருக்கிறதா என்று பார்த்து சரியாக இல்லை என்றால் அதற்குத் தகுந்தாற்போல் தண்டனையும் கிடைக்கிறது. அபராதமோ அல்லது கோர்ட்டுக்கோ போகவேண்டி இருக்கும். அதே போல யமலோகத்திற்கும் ஒரு ஆடிட்டர் தேவைதானே... எத்தனைக் கோடி மக்களுக்கு பாப புண்ணியக் கணக்கு எழுத வேண்டும்? அதற்குத் தகுந்தாற்போல் வாழ்க்கையும் அமையும். யமலோக ஆபீஸில் ஆடிட்டர் சித்திர புத்திரன். இந்தச் சித்திர புத்திரன் பற்றி இரண்டு விதமான புராணங்கள்...
உலகத்திற்கெல்லாம் ஈசன் சிவபெருமான் ஒருதடவை ஏடும் எழுத்தும் கொண்டு கணக்கு எழுத ஒரு தேவதையைப் படைக்க எண்ணினார். அதன்படி ஒரு சித்திரம் வரைந்து அதற்கு உயிரூட்ட ஒரு தேவதைத் தோன்றினாள். அவளிடமிருந்து ஒரு அழகான புத்திரன் வர சித்திரத்திலிருந்து வந்ததால் சித்திரப் புத்திரன் என்று அழைக்கப்படலானான். இதே சித்திரப்புத்திரன் மீண்டும் ஒருமுறை சிவனருளால் காமதேனுவிற்குப் பிறந்து இதே பெயர் பெற்றார். இவனுக்கு எல்லோருடைய பாப புண்ணியக் கணக்குகளை எழுதும் வேலையைச் சிவபெருமான் கொடுக்க அதைப் பாரபட்சமில்லாமல் இவர் செய்து வருகிறார். குப்த் என்றால் ரகசியம்... நமது பாப
புண்ணியங்களின் ரிகார்ட் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. இவர் யமதர்ம ராஜா முன்னிலையில் பூத உடலைவிட்டு வரும் மனிதர்களின் பாப புண்ணியங்களைத் தன் ஏட்டிலிருந்து ஒப்பிக்கிறார். அதற்குத் தகுந்தாற்போல் விளைவும் ஏற்படுகிறது. கேது கிரஹத்திற்கு சித்திரபுத்திரன் அதிதேவதை.
இன்னொரு புராணம்... ஒருசமயம் நீளாதேவி ஒரு அப்ஸரஸ் சூரியனின் அழகில் காதல் கொண்டு தன்னை இழந்தாள். அதனால் சூரியப்பிரகாசம் கொண்ட மிகுந்த அறிவாளியாக ஒரு குழந்தை சித்திரை மாதம் சித்திரா நட்சத்திரத்தில் பௌர்ணமி அன்று பிறந்தது. சிறந்த கல்விமானாக விளங்கி பிரும்மாவிற்கு சிருஷ்டி வேலையில் உதவ ஆரம்பித்து.
கொஞ்சம் கொஞ்சமாக தானே அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தார் இதனால் தேவர்களுக்கு பயம் ஏற்பட்டு "எங்கே பிரும்மாவின் வேலையையும் இவர் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது? "என்று தயங்கி சூரியனிடம் முறையிட்டனர். சூரியன் தந்தை ஆனதால் சித்திர புத்திரனிடம் நயமாகப் பேசி இதைவிடச் சிறந்த வேலை ம்க்களின் பாப புண்ணியக் கணக்கு எழுதுவது என்றுச் சொல்லி அந்த வேலையைச் செய்யுமாறு கூறினார். அதை ஏற்றுக்கொண்டு சித்திரபுத்திரன் அந்தவேலையை இப்போதும் செய்துவருகிறார்.
இந்த நாளில் விரதம் எடுத்து பூஜை செய்பவர் அத்ற்கென்று தனிக்கோலம் போட்டு, தெற்குப் பக்கம் மூடி உள்ளே சூரிய சந்திரரின் படம் வரைந்து, நடுவில் சித்திரபுத்திரனின் படம் வரைந்து, ஒரு கையில் எழுத்தாணியும் மற்றொரு கையில் ஏடும் வரைந்து
வழிபடுவாரகள். உப்பு இல்லாத உண்வு உண்டு பின் ஒரு மாணவனுக்கு பள்ளி நோட்டு புத்தகமும் பேனாவும் தானம் செய்வார்கள்.
இந்தப் புராண்ங்களை ஒரு பக்கம் ஒதுக்கினாலும் 'நமக்கு மேலும் ஒருவனடா அவன் நாலும் தெரிந்த கலைஞனடா' என்றபடி நாம்ம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நன்மையோ தீமையோ விளைவுகள் உண்டு. இதைத்தான் 'விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமோ?' என்பார்கள் ஆகையால் எப்போதும் ஒரு விழிப்புணர்வோடு நல்லெண்ணங்களோடு அன்பு உள்ளத்துடன் கடமைகளைச் செய்து வந்தால் புண்ணியமே சேரும்.
இந்தியாவில் தெந்நாட்டில் காஞ்சியில் நெல்லுக்கார வீதியில் இவர் ஒரு கோவிலில் இருக்கிறார். சித்திரா பௌர்ணமி அன்று இவருக்குத் தனி பூஜை உண்டு.
"சித்திரைப் பருவந்தன்னில் உதித்த நற் சித்ரகுப்தன்,
அத்தின அவனை உன்னி அர்ர்சனைக் கடன்களாற்றில்,
சித்தியும் பெறுவர் பாரந்தீருமே எமந்தன்னூரில்
இத்திறன் அறிந்தேயன்னோன் இரங்குவான் அரங்கள் சொற்றே"


அன்புடன் விசாலம்

அம்மா என்றழைக்காத உயிரில்லையே...
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

(அம்மா)

அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

(அம்மா)

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

(அம்மா)


பாடல் இயற்றியவர் :வாலி
பாடியவர்:k.j.யேசுதாஸ்

“ஸ்வீட் சாப்பிடாதே...!”

பம்பாயில் நான் இருக்கும் போது, நான் ஒரு நாடகக் குழுவில் இருந்தேன். எல்லோரும் அதில் பெண்கள்தான். அநேகமாக ஒரு ஆணின் வேஷம் எனக்குத்தான் இருக்கும். என் உடல் வாகைப் பார்த்து கொடுத்தார்களோ என்னமோ? ஆனால் அதில் எனக்கு ஒரு திருப்தி,
ரொம்ப நாளாக் pants shirts போட ஆசை இருந்தது ஆனால் வீட்டில் கேட்க பயம். அவர்கள் குழந்தைகள் நலத்திற்காக சற்று கண்டிப்பாக் இருந்தவர்கள் நல்ல விதைத்தால் தானே நல்ல பயிர். பெற்றோர் சொல் மீறாத பெண் நான். ஆகையால் அதை அப்படியே விட்டு விட்டேன். நல்ல வேளையாக நாடகத்தில் ஆண்கள் வேஷ்த்தில் நான் என்ற போது மனத்தில் ஒரு மகிழ்ச்சி! எங்கள் நாடகம் சுமார் 2 மணி நேரம் செல்லும்.
கூட்டம் நிறைய வரவேண்டுமே! என்று பெரிய நாடக கம்பெனி குழுவை வரவழைத்து 5 நாடகங்களுக்குள் ஒரு நாடகமாக எங்கள் நாடகம் திணிக்கப்படும் 6 நாடகத்தின் சீசன் டிக்கெட் விற்கப்படும்.
ஒரு சமயம் மறைந்த திரு.சஹஸ்ரநாமம் குழு பாரதி கலா மன்றத்தில் நாடகம் அரங்கேற்ற வந்திருந்தது மூன்று நாடகங்கள் முடிந்தவுடனே எங்கள் யாவருக்கும் நிலா சாப்பாடு! ஏற்பாடு செய்திருந்தார்கள். விருந்து சாப்பாடு ஆனதால் நிறைய ஐட்டம் இருந்தது. அப்பொது என் அருகில் பிரமிளா என்ற் தேவிகா நடிகை உட்கார்ந்திருந்தார். நடிகர் முத்துராமன்
வி.கோபாலகிருஷ்ணன் போன்றவரும் இருந்தனர் நிலா சாப்பாடு தரையில் ஜமக்காளம் விரித்து நடந்தது. எல்லோரும் நாடகத்தைப் பற்றி தமாஷாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திருமதி.தேவிகாவிற்கு சாப்பிட எது வந்தாலும் "கொஞ்சமாக சாப்பிடு ஸ்வீட் சாப்பிடாதே! என்று சஹஸ்ரநாமம் அவர்கள் சொல்லி வந்தார். நான் வியந்து அவரிடம்
"ஏன் இப்படி சொல்லுகிறீகள் பாவம்! தேவிகா நன்றாக சாப்பிடட்டுமே" என்றேன், அதற்கு அவர் "விசாலம் நாளை 'போலீஸ்காரன் மகள்' நாடகம் அதில் தேவிகா மயங்கி விழும் போது நான் தான் அவளைத் தூக்க வேண்டும். எடை கூடினால் எப்படித் தூக்குவது?" என்றார். எல்லொரும் சிரித்தனர். பல வருடங்கள் ஆனாலும் நடிகர் சஹஸ்ரநாமத்தின் நடிப்பும் அவர் நல்ல மனதும் பசுமையாக இன்றும் இருக்கிறது . நாடகம் போது சிறு தவறுகள் ஏற்படும். நடக்கும் தெரு காட்சியில் நாற்காலி தங்கிவிடும். சில சமயம் பூந்தொட்டி எடுக்க மறந்து விடும். அப்போது வசனத்தில் இல்லாததை நாமே அதற்கு பொருத்தமான வசனத்தை நுழைத்து பார்க்கிற்வர்களுக்கு தெரியாதபடி
சாமர்த்தியமாக நடந்த்துக் கொள்ள வேண்டும்.நாடகக் கலை மிக சிறந்த
கலை அதற்கு முன்னளவு வரவேற்பு இல்லை. நாடகம் முன்பு போல் வளர அன்னையின் அருள் கிடைக்கட்டும்.

விசாலம்
.


ஒரு மரத்தின் நிழலில் யோகம்


இது என் கதை! இந்தப்புகைப் படத்தில் இருப்பதும் நான் தான், ரகு அமர்ந்திருக்கும் இடம் லோதி பூங்கா. தில்லியில் மிகப் பிரசித்தமான பூங்காவனம்.சிறுவர்கள்.காதலர்கள் கிழவர்கள்,தம்பதிகள்,என்று எல்லோரும் மன மகிழும் இடம்.இந்தக் கதையின் கதாநாயகன் இப்போது எண்பது வயதுக்கிழவன். அது நான் தான். வெள்ளைத் தாடியுடன் சமூக சேவை செய்து வருகிறேன். இப்போதும் என் மாணவர்களுக்காக காத்து இருக்கிறேன். தனிமையிலும் இனிமை காணுகிறேன். சமயவெறியை ஒழிக்க முயலுகிறேன். என்னை மசூதியிலும். குருத்வாராவிலும், கோவில்களிலும் காணலாம். எம்மதமும் சம்மதமே.. எனக்கும் குடும்பம் இருந்தது, நானும் காதலித்தேன். அந்தப்பழைய மறக்கமுடியாத சம்பவங்கள் தினமும் என் கண்முன்னே வருகிறது. சொல்கிறேன்.. கேளுங்கள்.
என் தந்தையை இழந்து நான் தில்லிக்கு ஒடி வந்தேன். மொழி தெரியாத ஊர் துணிச்சலுடன் வந்து இறங்கி ஒரு அறையில் இருக்கும் போது ஒரு சீக்கியக் குடும்பம் எனக்கு அடைக்கலம் கொடுத்தது. அப்போதுதான் என் அவளைச் சந்தித்தேன். அவள்பெயர் பஜன்கௌர், அவள் வீட்டில் வாடகைக்கு இடமும் அளித்து, சாப்பாடும் தந்து, வேலையும் வாங்கிக் கொடுத்தாள். நாட்கள் ஓடின. அவள் எனக்கு இந்தி கற்றுக்கொடுத்தாள். நான் அவளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க. எங்கள் காதல் வளர்ந்தது. இந்த மரம் எங்கள் காதலை வாழ்த்தியது. எங்கள் பெயர்களை இந்த மரத்தில் செதுக்கியும் வைத்தோம். எங்கள் கல்யாணமும் நிச்சயமானது. நானும் அவளும் சுவர்க்கத்தில் மிதந்தோம். என் அவள் கராச்சியிலிருக்கும்
தன் தாத்தாவிடம் ஆசீர்வாதங்கள் வாங்கி வர தன் ஆசையை

என்னிடம் தெரிவித்தாள் நானும் அவள் தங்கையுடன் அவளை
அனுப்பி வைத்தேன். என் கண்முன்னே அந்த பயங்கர நாள் ஞாபகம் வருகிறது… கராச்சியில் ஒரு சிறு வீடு, ஒரே இருள். ஊரே அடங்கிப் போயிருந்தது. இந்து- முஸ்லிம் இடையே மனக்கசப்பு, ஒரு சலசலப்பு இருந்த நேரம். அழுது வடிந்து இருக்கும் அந்த வீட்டின் வாசல் கதவு தட்டப்பட்டது. "ஸர்தார்ஜி ஜல்தீ கோலோ கோன் ஹெய்" என்று ஒரு வயதான் முதியவர் கதவைத்திறந்தார். பழைய கால கதவு… "கிரீச்" என்னும் சப்தம் ஒரு பீதியை உண்டு பண்ணியது."அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பது போல் எந்த ஒரு சப்தமும் முகம்மதியர் கூட்டம் வந்து விட்டதோ என்ற பயத்தை உண்டு பண்ணியது. "நான் தான் அப்துல்"என்றபதில் கிழவருக்கு ஒரு தெம்பைக் கொடுத்தது. என் அன்பு பஜனின் தாத்தாதான் அவர். அப்துல் தான் எவ்வளவு உதவுகிறான் "இந்து முஸ்லிம் பாயி பாய்" என்பது அவனுக்குத்தான் மிகப் பொருந்தும் சிறு வயதில் அனாதையாகத் தெருவில் மயங்கிக் கிடந்த அப்துலை ஸர்தார் கிஸன்சிங் வளர்த்தார். தன் இரு பேத்திகளும் அவனைத் தங்கள் தம்பியாக நினைத்து கையில் ராக்கி கட்டினர். அன்றைய தினத்திலிருந்து ஸ்ர்தார்ஜிக்கு அவன் தான் வலது கை. இந்து முஸ்லிம் மதவெறியில் நிம்மதி குலைந்தது. நிம்மதியாக வாழ்ந்த குடும்பத்தில் இடி விழுந்தது. அடுத்த மாதம் திருமணம் எப்படி என் பேத்திகள் தில்லி போகப் போகிறார்கள் என்று கலங்கினார். தாத்தா.. "பாயாஜி... அவசரமான, கவலைக்கிடமான தகவல்... எப்படிச் சொல்வேன்? நேற்று அடுத்தத் தெருவில் ஒரு கூட்டம் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை நாசம் செய்து பெண்களின் கற்பையும் அழித்துவிட்டனராம் எந்த நேரமும் நம் வீட்டிற்குள் வரலாம்" கேட்டுக்கொண்ட பெரியவரின் கண் கலங்கியது. "கவலை வேண்டாம் நான் இருக்கிறேன் அப்துல், நாளை இரவுக்குள்ளொரு டெம்போ ஏற்பாடு செய்து அவர்களூக்கு பர்தா அணிவித்து அழைத்துப் போகிறேன். ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்" பாசத்துடன் அவன் சொன்னது அவருக்கு தெம்பைத்தந்தது. பஜன்கௌர் காதல் கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள். "சிவப்பு புடவையில் நான் உங்கள் கைப்பிடிக்க
நீங்கள் கனிவாக என்னைப் பார்க்க,அந்த நாளுக்கு ஆசையுடன்…
காலடிச் சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தாள். பாசமுள்ள தாத்தா நின்றார். "காதல் கடிதமா? எழுது... எழுது நாளை அப்துல் உங்களை அழைத்துப் போவான். பர்தா அணிந்து தயாராக இருங்கள். யாருக்கும் சந்தேகம்
வராமல் நடந்து கொள்ளுங்கள்…" ஆகட்டும் தாத்தா. மனதிற்குள் மகிழ்சி பொங்க உறங்கப் போனாள் மறு நாள். இரவு பத்து மணியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது அந்தக் குடும்பம்.
டிக் டிக் என்ற கடிகாரம் ஒசையைத்தவிர வேறு ஒன்று கேட்கவில்லை. அந்த நிமிடமும் வந்தது,
கதவு திறக்கப்பட்டது, அப்துல் ரகசியமாக இரண்டு பர்தாக்களைக் கொடுத்தான். வாசலில் வண்டியும் இருந்தது. அப்துல் முகத்தில் ஒரு பெருமிதம் தன் இந்து சகோதரிகளைக் காப்பாற்றுகிறோம் என்ற பெருமை. ஆனால் அந்தப் பெருமை ஒரு நாலு நிமிடங்கள்தான் நீடித்தது. தப...தப... என்று ஒரு கூட்டம் ஓடி வரும் சத்தம் கேட்டது. அப்துல் உள்ளே வ்ந்து கதவை மூடிக்கொள்வதற்குள் ஒரு நான்கு முகமதியர்கள் ஓடி வந்தனர். கதவை வேகத்துடன் உதைத்தனர். அப்துலை ஒரு தள்ளு தள்ளினர், அவன் கீழே விழுந்தான். கிழவர் வேகமாக உள்ளறைக்குப் போனார், பேத்திகளைப் பார்த்தார். கற்பு.. கற்பை தன் எதிரிலேயே பேத்திகள் இழ்ப்பதா? கற்பழிக்கும் காட்சி தன் முன்னே ஒடியது தன் கத்தியை எடுத்தார் "சதக்" ஒரே குத்து…. ரகு தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு பஜன் கௌர் கீழே சாய்ந்தாள். ரத்தம் மணப் பெண்ணின் புடவைப்போல அவளை அலங்கரித்தது. தங்கைப் பார்த்தாள். தன் கற்பு பறிக்கப் படுமோ என்று பயந்தாள். "சதக்"கீழே இருந்த கத்தியால் தன்னையே குத்திக் கொண்டாள். தாத்தா இந்தக் காட்சியை காணமுடியாமல் பேத்திகள் மேல் சாய்ந்தார். ஒரு திருப்தியுடன். கற்பைக் காப்பாற்றிய நிம்மதி அவர் முகத்தில் தெரிந்தது.
"என்ன அப்துல்என் ஆசை பஜன் எங்கே?அழைத்து வரவில்லையா?”" மௌனமாக் கண்ணீருடன் பஜனிடமிருந்த அந்த கீதையின் சாரத்தைக் காட்டினான். "எதைக் கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்க்கு?"
என் கதை முடிந்தது. சமூக சேவை அவள் நினைப்பில் செய்கிறேன் மனம் நிறைகிறது. இப்போது இந்த மரம் தான் என் சமூகச் சேவையின் கூடம் மரத்தின் நிழலில் தான் யோகம். அவளும் என்னுடன் இருக்கிறாள்.


வாழ்க வளமுடன்...
விசாலம்

ஸ்ரீ அரவிந்தரின் "சாவித்திரி"

ஸ்ரீ அரவிந்தரின் "சாவித்திரி" ஒரு பொக்கிஷம்! விலை மதிப்பில்லாத ஒரு படைப்பு இந்தக் காவியத்தைப் படித்தால் பாமர மக்களுக்கு ஒன்றும் புரிவதில்லை மிகவும் கடினமான ஆங்கிலத்தில் உள்ளது ஆனால் இதப் படிக்க படிக்க தானாகவே மனம் தெளிவாவதைக் காண்கிறோம். இதை வீட்டில் வைத்துக் கொண்டிருந்தாலே போதுமானது, பல பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கும். வீட்டில் சுபீட்சம் உண்டாகும். எனக்கு தெரிந்த ஒருவர் திடீரென்று ரத்தக் கொதிப்பு அதிகமாகி அவர் ஆபீஸில் ஒரு பக்கம் கை கால் இழுத்துவிட்ட நிலை.. அவரால் வாயால் பேசவும் முடியவில்லை அவரை நர்சிங் ஹோம் அழைத்து போனார்கள், அங்கு டாக்டர்கள் அவரைப் பரிசீலனம் செய்து குறைந்தது ஒரு 6 மாதம் ஆகும்ஒரு சுமார் நிலமைக்கு வர என்றனர். அவர் அன்னையின் பக்தர், ஒரு நான்கு நாடகள் ஆனதும் அவர் தன் மனைவியை சாவித்திரி புத்தகம் கொண்டுவரச் சொன்னார். அன்னையிடம் வேண்டினார் "நான் என்னால் முடிந்தவரை சாவித்திரியிலிருந்து சில சொற்களாவது எழுதுவேன், அதற்கு நீதான் வலிமைத் தரவேண்டும் உனக்கே சமர்ப்பணம்" என்றார்.முதலில் ஒரு தாளில் கட்டை விரல் கூடப் பிடிக்க முடியாத நிலை. முதல் எழுத்தே ஒரு கிறுக்கலாக வந்து ஒரு வயது பாப்பா கிறுக்கலாக இருந்தது பின் கண்ணீர் விட்டு அன்னையப்பிரார்த்தித்தார். அன்று இரவு அன்னை வெள்ளை உடையில் கட்டில் அருகில் அமரக் கண்டார், அன்னையின் கை இவரின் கைகளைதடவியது போல் இருந்தது பின் ஒரு நிமிடத்திற்குஒரு பேரொளி தெரிய பின் மறைந்தது... மறு நாள் காலை... திரும்ப அவர் எழுத நினைத்து பேனாவைக் கையில் பிடிக்க ஒரு சொல் அவரால் எழுத முடிந்ததுஇதே போல் அவர் தொடர்ந்து ஒருபத்து நாடகள் செய்ய... 15 வது நாள் டாக்டர் வந்து பார்த்து இது நிச்சியம் ஒரு தெய்வ சக்தி தான், நான் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லி அவரை டிஸ்சார்ஜும் செய்து விட்டார். அவர் அன்னையின் ஒரு பிறந்த நாள் அன்று இந்தச் சாவித்திரியின் காவியத்தின் சக்தியைப் பற்றி பேசினார்.ஸ்ரீ அரவிந்தர் "சத்தியவான் சாவித்திரி கதையை ஒரு வேத ரகசியம் பொதிந்தக் கதையாக உணர்ந்தார். அவரின் கணிப்பில் "ஜீவனின் ஆன்மீக சத்தியம் தாங்கி வரும் ஆனமா" என்கிறார், தூமத்சேனா சத்யவானின் தந்தை பார்வை இழந்தவர் அதன் காரணமாகஇராஜ்ஜியத்தையும் இழந்தவர். அதாவது உடல் ஒளியை இழந்தால் வரிசையாக எல்லாத் தனமைகளையும் இழக்கிறது அதாவது உள்ளிருக்கும் ஒளியைப் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. பார்வை இழந்தது என்பது நமது அஞ்ஞானம் என்று சொல்லலாம்.அஸ்வபதி சாவித்திரியின் தகப்பனார்.அவர்தான் தவத்தின் சக்தி. ஆன்மீகக் கனலாக எழுந்து பல சாதனைகள் புரிகிறது. அரவிந்தர் கண்ணில் பூலோகமும் சொர்க்கலோகமும் ஒன்றே பூலோகத்திலிருந்தே சொர்க்கலோகத்தை உண்டு செய்யலாம் என்கிறார் அவர்.ஸ்ரீ அரவிந்தரின் சாவித்திரி ஒளியின் தெய்வம், காலனை இருளின் தெயவமாகச் சித்திரிக்கிறார். இவர்களின் உரையாடல் 100 பக்கங்களுக்கு மேல் 3 புத்தகங்கள் கொண்டது, இங்கு சாவித்திரி வரன் கேட்காமல் அந்தக் காலனையே ஒழித்து காரிருளை அழித்துஉலகத்துக்கு பேரொளி காட்டுகிறாள் அதாவது அஞ்ஞானத்தை வென்றது. மனிதன் உயர்ந்த வாழ்க்கை எட்ட சத்ய ஜீவியத்தை அடையவேண்டும். காலன் என்ற இருள் அழிய "கேள்... கேள்... கேள்... கேள்..." என்ற அசரீரி வர அன்னை சாந்தம், ஒருமை, சக்தி, சந்தோஷம்... தனக்கில்லாமல் உலகத்திற்காக கேட்கிறாள். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் சாவித்திரியின் ஒரு பக்கத்தைப் பிரியுங்கள் அதில் வரும் ஒரு சொல்உங்களுக்கு வழிகாட்டி பிரச்சனையைத் தீர்க்கும் வீட்டில் வைத்து பூஜிக்க வேண்டிய ஒரு காவியம். என் அனுபவத்தில் சொல்கிறேன்ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய,ஆனந்தமயீ... சைதன்யமயீ... சத்யமயீ பரமே..!அன்புடன் விசாலம

Saturday, April 28, 2007

காற்றினிலே வரும் கீதம்....திரைப்படம்: மீரா
வெளிவந்த வருடம்: 1945
பாடகி: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
இசையமைப்பாளர்: எஸ்.வி.வெங்கட்ராமன்
இயற்றியவர்: கல்கி
குழலில் இசைத்தவர்: சிக்கில் மாலா சந்திரசேகர்


காற்றினிலே..... வரும் கீதம்..... காற்றினிலே....

காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

துணை வண்டுடன் சோலை குயிலும்
மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாராகணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீலநிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
காற்றினிலே வரும் கீதம்


http://www.youtube.com/watch?v=PCiqqFVY4Xw

photos-5

photos-4
photos-3
photos-2photos
photos