Saturday, March 31, 2007

புரட்டாசி மாதத்தில்...கோவிந்தா!



வந்து விட்டது புரட்டாசி மாதம். எங்கும் கோவிந்தா! என்ற ஒலி முழங்கும்.

அதுவும் இந்த மாதத்தின் சனிக்கிழமை மிகவும் விசேஷம்.

நான் திருப்பதி போனபோது அந்த கோவிந்தாவின் தரிசனம் சரியாக கிடைக்கவில்லை அப்போது அவரிடம் மனதுக்குள்
பாடிய பாட்டு இது

"உன் கமலக் கண்களைப்
பார்க்க வந்த எனக்கு
பெரிய நாமத்தைப் போட்டு
ஏன் மறைத்திருக்கிறாய்?
ஆவலுடன் தரிசிக்க வந்த என்னை
"சருகண்டி...சருகண்டி" என்று
ஏன் தள்ள வைக்கிறாய்?
உன்னையே பார்க்க
ஒரு வழி தேடி விட்டேன்
உன் கர்ப்பகிரஹப் படியாய்
என்னைப் படைக்குமப்பா
உன்னையே கண்டு களிக்கும்
அருள் கொடுத்தருளப்பா..!"


திருப்பதியில் ஏழுகொண்டலவாடா, கோவிந்தா, வெங்கட்ரமணா என்று பலவிதமான
பக்தி ஒலி கிளம்ப நாமும் நம்மையும் அறியாமல் அந்த முழக்கங்களில் சேர்ந்து கொள்கிறோம் உடல் சிலிர்க்கிறது கண்களிலிருந்து கண்ணீர் தன்னையும் அறியாமல்வருகிறது எல்லா இடங்களிலும் நவராத்திரியின் போது அம்பாளுக்கு விசேஷமாக பூஜை நடக்கும் ஆனால் திருப்பதியில் பெருமாளுக்குத்தான் பூஜை! 'திருவிழா' ஏனென்றால்
தன் மனைவியை மார்பிலேயே வைத்துகொண்டிருப்பவர் அல்லவோ எம்பெருமான்
"ஸ்ரீனிவாசா கோவிந்தா...

ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா...

புராண்புருஷா கோவிந்தா..!"

என்ற பாட்டு நம்மை ஈர்க்கிறது
பாலாஜியை குலதெய்வமாக வைத்திருக்கும் அனைவரும் இந்த சனிக்கிழமையன்று
சமாரார்தனை செய்வார்கள். என் பெற்றோர்களுக்கு இவர்தான் குல தெய்வம் ஆனதால் அந்த சூழ்நிலையிலேயே வளர்க்கப்பட்டேன் ஆகையால் மிகுந்த ஈடுபாடு உண்டு
வெங்கடாசலபதியின் படத்தை வைத்து அலங்கரித்து, ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து, மாவிளக்கும் ஏற்றி, எள்ளு அன்னம் பிரசாதம் வைத்து பின் கற்பூர ஆரத்தியுடன் பூஜை முடிவடையும்.
இங்கு ஒரு சின்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது என் பெரியப்பா சமாரார்தனையின் போது சமைக்கும் அரிசியில் கொஞ்சம் உஞ்சுவிருத்தி அதாவது வெளி மனிதர்களிடம்
பிட்சை ஏந்தி அந்த அரிசியையும் கலந்து அன்னம் செய்ய உதவுவார்கள்.

முதல் நாளே...
ஒரு நாலு பேர்களுக்கு சொல்லிவிடுவதால் அரிசியும் கிடைத்துவிடும்
என் பெரியப்பா குளித்து மஞ்சள் நனைத்த வேஷ்டியுடன் யாசிக்க போவார் வீடே பக்தி தூய்மை சுத்தம் என்று விளங்கும், ஒருதடவை எப்போதும் அரிசி கொடுப்பவர்கள் ஊருக்கு
போய் விட்டதால் பிட்சை கேட்காமலே சமைத்துவிட்டார்கள். கற்பூரம் காட்டும் நேரம் வந்தது ஒரு புது மனிதர் வந்தார் திடீரென்று அவர் மேல் அருள் வந்து..."எங்கேப்பா என் பிட்சை அரிசி?"அதில்லாமல் சமைத்து விட்டாயா? என்று கேட்க எல்லோரும் விக்கித்து நின்றோம்.
அந்த மனிதரோ புதியவர். அவருக்கு வீட்டில் நடந்த விஷயம் ஒன்றும் தெரியாது. அப்படி இருக்க எப்படி அவர் இதை சொல்லுகிறார்? அந்த சம்பவம் என்னால் மறக்க முடியவில்லை.
எல்லோரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டோம் பூஜை மேலே தொடர்ந்தது. அந்த இறை சக்தியை நான் பலதடவைகள் உணருகின்றேன்.


"ஓம் நமோ நாராயணாய!"

சிறு கவிதைகள்

*****
நான்கு மகன்களை
சுமை இல்லாமல் பெற்றாய்
இன்று நான்கு மகன்களுக்கும்
சுமை ஏன் ஆனாய்?
*****
கல்லறைக்குள் நான்,
மணவறைக்குள் நீ
புதைந்து போனது நானா?
இல்லை ரகசியமா?
*****
நீ வந்து போனாய்
மனம் புண்ணானது
ஈ போல் வந்து
உட்கார்ந்தாயோ?
*****
குருவிக்கூட்டைக்
கலைத்தேன்
பெண்சிசுவைக்
கலைத்தாயே!
*****

கற்பனையும்...நிஜமும்..!

அவள் பெயர் கமலி அவள் கணவர் பெயர் சபேசன் ஊர் கும்பகோணம் தற்போது இருப்பது சென்னையில்.
கமலி தன் கணவன் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று அடிக்கடி
கற்பனையில் லயித்துவிடுவாள் கற்பனையும் நிஜமும் ஒப்பிட்டு பார்ப்பாள் அவர்கள் வீட்டில்
சென்று நாமும் என்னவென்று பார்ப்போமே...

காட்சி:1
இருவரும் வெளியே கிளம்புகின்றனர்.

(கற்பனை)
"என்ன செல்லம் ! இன்னும் கிளம்பவில்லையா?
எந்த ஸாரீ வேண்டும் நான் எடுத்துக் கொடுக்கவா? பரவாயில்லை டயம் இருக்கு வா!"

(நடந்தது)
"என்னதான் பண்றே இன்னும்? கஷ்டம்...கஷ்டம்..! திருவாரூர் தேர் போல் அசைந்து அசைந்து வரத்துக்குள்ள... சிவசிவா ட்ரெஸ் செய்ய இத்தனை நேரமா?"
கமலி "அஞ்சு நிமிஷம் தானே ஆச்சு"
சபேசன் "வாயை மூடு எதுக்கெடுத்தாலும் ஒரு arguement"
கமலி முகம் வாட கிளம்புகிறாள். சபேசனுக்கு முதல் வெற்றி!

காட்சி:2
ஒரு புடவைக் கடைக்குள் இருவரும் போகிறார்கள்.
(கற்பனை)

"ஏன்னா இத பாருங்கோ! இந்தக் கலர் எடுக்கட்டுமா?"
சபேசன் "உன் உடம்புக்கு எல்லா கலரும் சூட் ஆகும் கமலி, இருந்தாலும் இந்த நீலக் கலர்
எடுத்துக்கோ" புடவையை கமலியின் தோளில் வைத்துப் பார்க்கிறான்

(நடந்தது )
"ஆமாம் பெரிய ஜோதிகா இந்தக் கலர், அந்தக்கலர்னு கேட்க அதான் பீரோ முழுக்க புடவையை அடுக்கி
இருக்கியே... மணிக்கணக்கா புடவையை பொறுக்க வேண்டியது
ஒரு மனுசன் கால் கடுக்க நிக்கறானே தெரியவில்லை சட்டுபுட்டுனு

முடிச்சுண்டு வா!
ஆமாம் இது என்ன வெலை 2000மா உங்கப்பன் பணமா? சரி சரி எடுத்துத் தொலை "
கமலி முகம் வாடியது சபேசனுக்கு வெற்றி!

காட்சி:3
"இத பாருங்கோ எனக்கு கொஞ்சம் தலைவலி
இந்த தட்ட மாத்திரம் சாப்ட எடுத்து வைக்கறேளா
(கற்பனை)

"எப்போலேர்ந்து இந்த தலவலி? கமலி ஏன் எங்கிட்ட சொல்லலே வெளிலேர்ந்து எதாவது வாங்கி
வந்துடறேன் சமக்காதே" கையில் தலைவலி பாம்
கொண்டு வருகிறான் அன்பாக தேய்த்து விடுகிறான் .

(நடந்தது)
"ஒண்ணுமில்லேனு நினச்சுக்கோ
வெளிலசுத்த தலவலி வராது மணிக்கணக்கா
டி வி சீரியல் பாரு தலவலி போயிடும்
நக்கலாக பேசி வெற்றி! கமலி முகம் வாடியது

காட்சி:4
கமலி டி விக்கு முன்னால் ராகம் சங்கீதம் ரசிக்கிறாள்
சபேசன் வருகிறான்
(கற்பனை)

"நீ ராகம் சங்கீதம் பார்க்கறாயா? பாரு எனக்காக
சேனலை மாத்தாதே நானும் உன்னோடு சேர்ந்து பாத்தால்
போச்சு அதுவும் ஒரு ஆனந்தம் தானே !"


(நடந்தது)
"கொண்டா ரிமோட்டை கையிலிருந்து பிடுங்குகிறான். கிரிக்கெட் மேட்சுக்கு மாத்துகிறான்.
"போ போ உள்ளே போய் வேலையைப் பாரு"

(காட்சி:5)
கமலியின் மாமா பெண்ணின் திருமணம்
கமலி:"கல்யாணத்துக்கு கிளம்பறேளா, பாவம் வயதான
மாமாவே வந்து கூப்பிட்டு போனார்"

(கற்பனை)
"ஆமாம் பாவம் வயதானவர் மாப்பிள்ளைனு இன்னிக்கும் மரியாதை நல்லதாக வாங்கி போய் கொடுதுட்டு வரலாம் கிளம்பு!"

(நடந்தது)
சபேசன்:"உங்க மாமாவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் எப்பவோ கல்யாணத்லே பாத்தது
நான் வரலை, நீபோய் பாத்துட்டு வா எனக்கு எதாவது
வயத்துக்கு பண்ணிட்டு போ"
கமலியின் முகம் வாடியது. சபேசனுக்கு வெற்றி!

காட்சி:6
தம்பூரா மீட்டி ராகத்தைப் பாட "ஆடாமல் அசையாமல்
வா கண்ணா" பாட்டு சுருதியுடன் கிளம்புகிறது.

(கற்பனை)
கண்ணை மூடிக்கொண்டு அருகில் அமருகிறான் "பாடு கமலி எனக்கு கண்ணன் வந்தது போல் இருக்கு! என்ன அழகு சாரீரம்? ரேடியோக்கு
அப்ளை செய் நிச்சயம் சான்ஸ் கிடைக்கும்"தோளை
செல்லமாக தட்டி விடுகிறான்.

(நடந்தது)
"கொஞ்சம் உன் பாட்டை நிறுத்தறயா?
பெரிய எம்.எஸ்.னு நினைப்பு முக்கியமான ஆபீஸ்
வேலை செய்யறேன் தெரியலை? accounts tally செய்யறேன்
disturb செய்யாதே கதவை சாத்தித் தொலை"
கமலி முகம் வாடியது. அவனுக்கு வெற்றி!

காட்சி:7
வெள்ளிக்கிழமை! லலிதா சஹஸ்ரநாமம் ஒலிக்கிறது.
கூட அவளும் பாடுகிறாள் கணவன் வெளியிலிருந்து
நுழைகிறான்,

(கற்பனை)
சபேசன்:"ஆஹா என்ன வாசனை ஊதுவத்தியா?
என்ன தெய்வீகம் இந்தா மல்லிகைப்பூ
அம்பாளுக்கு சார்த்தி நீயும் தலேல வச்சுக்கோ!"

(நடந்தது)
சபேசன்:"எனக்கு மேட்ச் பாக்கணும்
பேட்ஸ்மென் அவுட்டா இல்லயா? என்னன்னு தெரிலையே" சஹஸ்ரநாமம் பாதியில் நிறுத்தப் பட்டது
கமலி முகம் வாடியது. சபேசனுக்கு வெற்றி!

பின் குறிப்பு: இது சில உதாரணங்கள்தான் இது போல் நிறைய அடுக்கி கொண்டே போகலாம்
அன்னையே பெண்கள் உணர்வைப் புரிந்து கொள்ள
ஆண்களுக்கு அருள் புரிவாயே..!
இந்த விஷயத்தில் தற்கால இளைஞர்களை நான் மிகவும்
பாராட்டுகிறேன் அதை நாளை சொல்லுகிறேன்.

ஓணம் பண்டிகை!


கேரளாவின் மிக முக்கியமான பண்டிகை ஓணம் திருவோண நட்சத்திரத்தில் வருகிறது தீபாவளிப்
போல் மிகச் சிறப்பாக இதைக் கொண்டாடுவார்கள். விடிகாலையில் வாசலில் சாணம் இட்டு மெழுகி
பின் கோலமிட்டு பூவினாலேயே அலங்கரிப்பார்கள். நடுவில் பெரிய குத்துவிளக்கு வைத்து சுற்றி நின்று
கைக்கொட்டுக் களி என்ற நடனத்தை ஆடுவது கண்கொள்ளா காட்சியாகும் அவர்கள் எல்லோரும்
வெள்ளைக் கலர் முண்டும் மேலே அதே போல் ஒரு முண்டும் உடுத்திக் கொண்டு கையைத் தட்டி
தாளத்திற்கேற்ப அசைந்து ஆடுவது நம்மை வசீகரிக்கும், எல்லா பண்டிகைப் போல் புதிய உடைகள்
அணிந்து, நல்ல விருந்தும் வைப்பார்கள், அவியல் பால் பாயசம் முக்கியமாக இருக்கும் நேந்திரம் பழம்
நிச்சியமாக உண்டு தவிர பலவிதப் போட்டிகளும் நடக்கும். அதில் ஓடம் ஓட்டும் போட்டி மிகப் பிரமாதமாக இருக்கும், ஓடப்பாட்டு மிக இனிமையாகக் காதில் பாயும். "செம்மீன்" ஓடப்பாட்டு இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை.
இந்த ஓணப் பண்டிகையைக் கொண்டாடும் காரணமென்ன? புராணக் கதையைப் பார்க்கலாம் ஒரு எலி சிவன் கோவிலில் விளக்கு அணையும் தருணத்தில் அதன் திரியைத்தூண்டி விளக்கை எரியச் செய்தது.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல பல நாட்கள் செய்ததால் சிவனின் உள்ளம் குளிர்ந்து அந்த புண்ணிய
செயலின் காரணத்தால் அடுத்த ஜன்மத்தில் மூன்று உலகமும் ஆளும் வரம் தந்து விட்டார்.
அடுத்த பிறவியில் ப்ரஹ்லாதனின் மகன் வீரோசேனனுக்கும் அவன் மனைவி தேவிக்கும் ஆண்குழந்தை
{எலியின் மறு பிறப்பு }பிறந்தது அதற்கு பலி என்று பெயரிட்டனர். பலியின் குரு சுக்கிராச்சாரியார்,
பலி தன் குருவிடம் அளவு கடந்த பக்தி வைத்திருந்தான். அவரிடம் தான் மூவுலகத்திற்கும் தலைவன் ஆக
வேண்டும் என்று கூறினான் அந்த குரு மூலம் ஒரு யாகமும் செய்து. மூன்று உலகையும் ஜெயித்து
சக்கிரவர்த்தியும் ஆனான், அதனால் மஹாபலி என்ற பெயரும் பெற்றான்
தேவர்கள் அவனைக் கண்டு நடுங்கி தேவலோகத்தை விட்டு ஓடிவிட்டனர். அவர்கள் குரு பகவானிடம்
ஓடிப்போய் முறையிட்டனர். குருபகவான் "உங்களைக் காக்கும் திருமால் காசிப முனிவருக்கும் அதிதிக்கும்
பிறந்து குள்ளவடிவில் வாமனனாக அவதரிப்பார் என்றார்
எம்பெருமான் அதே போல் அவதரித்து வளர்ந்தார் வாமனருக்கு பூணல் போடும் தருணம் வந்தது
சூரியன் காயத்திரி சொல்லிகொடுக்க வானம் அழகிய குடைக் கொடுக்க

குபேரன் தங்க பிட்ஷைப் பாத்திரம்
கொடுக்க பூமாதேவி மான் தோல் கொடுக்க, மஹாபலி பிட்சைக் கேட்க நேரே மஹாபலியிடம்
சென்றார் மஹாபலி யாகம் செய்து கொண்டிருந்த்தார் குள்ள உருவத்துடன் மிக ஒளி பொருந்திய
பிரும்மசாரி குடைப் பிடித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து பரவசமாகி கேட்பதெல்லாம் கொடுக்கிறேன்
கேளுங்கள் என்று கூறினார். "நீதான் பிரஹ்லாதனின் பேரனாயிற்றே எனக்கு ஒன்றும் பெரிதாக வேண்டாம்
மூன்று அடி மண் கிடைத்தால் போதும் " என்றார். "மூன்றடி மண்ணா! அதற்கா வந்தீர்கள்!அது போதுமா?"
"போதுமப்பா அதுவும் என் காலால் மூன்றடி மண் போதும்.

ஆசைப் படக் கூடாது" என்றார்.
அப்போது சுக்ராசார்யார் "வந்திருப்பது மஹாவிஷ்ணு அவரால் உன் உயிர் போகப் போகிறது.
விச்வரூபம் எடுத்து ஒரு காலை உன் தலயில் வைத்து அழுத்தப் போகிறார்" என்றார்.
அதற்கு மஹாபலி "அந்த மஹா விஷ்ணுவிற்கு தானம் கொடுக்கும் பாக்கியம் கிடைத்தது சாதாரண
விஷயமில்லை நான் பெரும் பேறு பெற்றிருக்கிறேன்"என்றார்.
அப்போது தானம் கொடுக்க வைத்திருக்கும் கமண்டலத்தின் துவாரத்தை தன்னை வண்டாக மாற்றிக்கொண்டு
உள்ளே சென்று அடைத்துவிட்டார். வாமனர் அந்த துவாரத்தை ஒரு குச்சியால் குத்த சுக்கிராசார்யாருக்கு
ஒரு கண்குத்தப்பட்டு வீணானது , வாமனர் இப்போது விச்வரூபம் எடுத்தார். ஒர் அடி மண்ணுலகிலும்
ஓர் அடி விண்ணுலகிலும், வைத்துவிட்டார் , மூன்றாவது அடி எங்கே வைப்பது? விச்வரூப பாதத்திற்கு
நிலம் போதாதே ! அப்போது மஹாபலி " திரும்பவும் சின்ன வாமனராக மாறி உங்கள் திருப் பாதத்தால்
என் சிரசை அளந்து கொள்ளுங்கள்" என்று மண்டி போட்டு தலை குனிந்தான்
வாமனர் தலையில் பாதத்தை வைத்தவுடனே

பாதாள லோகத்தில் தள்ளப் பட்டான். விஷ்ணு தரிசனம் கொடுத்து
பின்னர் இந்திரப் பதவிக் கொடுப்பதாக கூறினார். அங்கு இருந்த குடிமக்கள் தங்களை விட்டு மஹாபலி போவதைப் பார்த்து வருந்தினர் அப்போது "வருடத்தில் ஒரு நாள் திருவோண நட்சத்திரத்தில் பாதாள

லோகத்திலிருந்து மேலேவந்து உங்களுக்கு தரிசனம்
கொடுப்பேன் என்று வாக்குறுதியும் கொடுத்தான். இந்த ஓனம் அன்று மஹாபலி வந்து ஆசி கொடுப்பதாக
ஐதீகம் இந்தக் கதையை குழந்தைகளுக்கும் சொல்லலாம்.

ஒணம் அன்று இதைப் படித்தல் மிகமிக
நலம் கொடுக்கும்
எந்தக் கதை எப்படி இருந்தாலும் ஓணக்களி, கதக்களி, ஒடப்போட்டி, கேரளத்து அழகு பெண்கள்,
பூக்களின் கோலம் என்பதை ரசிப்பதற்காவது கேரளா செல்லலாம். இயற்கையின் அழகே அழகு!
மஹாபலியின் ஆசிகளை நாமும் பெறுவோமாகுக ஹேப்பி ஓணம்..!


விசாலம்

அவளும்...பெண்தானே...

தில்லியில் என்னுடன் இருந்து வீட்டு வேலை செய்து கொடுத்த பணிப்பெண்ணிற்கு இதை சமர்ப்பிக்கிறேன்.

அவள் பறந்து போனாளே...
அவள் ஒரு பணிப்பெண்,
ஆனாலும் எனக்கு செல்லப் பெண்,
புனனகையுடன் வருவாள்
தன் வேலையில் ஈடுபடுவாள்
அவள் வாழ்க்கை ஒரு கேள்விகுறி,
அவள் வாழ்வும் ஒரு சோகக்குறி,
அவள் வயது முப்பது,
ஆனால் உடல் முதுமை ஏற்றது,
ஐந்து குழந்தைகளின் தாயானாள்,
குடிகாரப் புருஷன் கல்லானான்,
பொறுமை பூஷணத்தின் சிலை
தாங்கினாள் அவனின் துன்புறுத்தலை
குடிகாரன் அடியையும் தாங்கினாள்,
அவனின் உடலையும் தாங்கினாள்
வயிற்று வலியால் துடிதுடிப்பாள்
கணவன் காசுக்காக அடிஅடிப்பான்,
காமுகப் புருஷன் ஒரு பக்கம்
ஐந்து மக்கள் மறு பக்கம்,
உடம்பு ஓடாய் தேய்ந்தது
ஆடி ஓடி ஓய்ந்தது,
கடவுள் கண்டார் சிந்தனையுடன்
தன்னிடம் அழைத்தார் கருணையுடன்,
காதல் மணம் கொடுத்த பலன்
தனிக்கப்பட்டாள் அழிந்தது நலன்
வைத்தியத்திற்கு பணமில்லை
புருஷனை விடவும் மனமில்லை
தைரியமாக மரணம் ஏற்றாள்,
புற்று நோய் மூலம் யமனை அழைத்தாள்
அப்பா! விடுதலை சுதந்திரப் பறவை ஆனாய்,
புருஷனின் பயமுமில்லை
காமத்தின் கசப்புமில்லை
பிற யஜமானியின் திட்டும் இல்லை
குழந்தைகளின் அழுகையும் இல்லை
நன்றிகெட்ட உலகிலிருந்து விடுதலை பெற்றாய்
பெண்ணாகப் பார்த்தேனே என்னை விட்டா போனாய்?
என்னிடம் சொல்லாமல் எங்கே நீ பறந்தாய்?
என்றைக்கும் நீ என் மனதில் நிறைந்தாய்

விசாலம்

அம்மா, அப்பாவைக் காணோமே…..!

தமிழ் எவ்வளவு சிறப்பான மொழி? அதிலும் மிக சிறப்பு சொல்லான அப்பா, அம்மா, எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள்? மிகப் பழமையான மொழி தமிழ் மொழி அது தமிழ் நாட்டிலே பல ரூபம் எடுத்துள்ளதே; நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் பாம்பேயில்{மும்பை} வளர்ந்தது முழுவதும் மராட்டி பாரம்பரியத்தில். இருப்பினும் தமிழ் நம் தாய் மொழி என்று அதை விடாமல் கற்றுக் கொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்தது அன்றைய தினத்திலிருந்து இன்றுவரை மராட்டியர்கள் ஒருவர்கொருவர் பார்த்துக்கொள்ளும் போது மராட்டி மொழியில் தான் பேசிக் கொள்வார்கள் ஆங்கிலம் நடுவில் வராது “கஸ ஆஹே? என்று கேட்பார்கள் “சாங்லே ஆஹே என்று பதில் வரும் நாம் பேச "ஐ ஏம் ஃபைன் தேங்க்யூ" என்கிறோம் அவர்களுக்கு தேசப் பற்றும் மொழிப் பற்றும் மிக அதிகம் அழகாக அம்மாவை வாய் நிறைய"ஆயீ" என்று அழைப்பார்கள், அப்பாவை "வடீல்"அல்லது பாப்பூ என்பார்கள். என் திருமணம் ஆன பின் போன இடமோ தில்லி, அங்கும் எங்கு திரும்பினாலும் ஹிந்தி அல்லது பஞ்சாபிதான் அங்கும் அப்பாவை பிதாஜி,பாபூஜி என்றும் தாத்தாவை பாயாஜி என்றும் :அம்மாவை மா அல்லது மாஜி என்று மரியாதையாகக் அழைப்பதைப் பார்த்திருக்கிறேன். எல்லோருக்கும் ஒரு "ஜி" சேர்த்துத்தான் பேசுவார்கள் இதனால் குழந்தைகளும் மரியாதையாகப் பேசக் கற்றுக்கொள்கின்றன தற்போது சில வருடங்களாக சென்னையில் இருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஒருவரிடமிருந்தும் அம்மா என்றோ, அப்பா என்றோ கேட்கவில்லை எங்கு திரும்பினாலும் "மம்மி, டாடி"தான். பள்ளியிலும் ஆசிரியர்கள் "உன் 'மம்மி'யை அழைத்து வா"என்றோ "டாடி"யிடம் கையெழுத்து வாங்கி வா" என்றும் கூறுகின்றனர். இதை விட்டால் அங்கிள் அல்லது ஆன்டி. தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் சிறந்த சொல்லான தாயை அன்பொழுக "அம்மா என்று அழைத்தால் அதன் இன்பமே இன்பம் அதை விட்டு ஏன் ஆங்கிலத்தில் புகல வேண்டும்? ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் போது ஹாய்., டியர், என்றெல்லாம் வார்த்தைகள் வருகிறதே வடநாட்டில் ஒருவர்கொருவர் பார்த்துக் கொள்ளும் போது ராம்ராம் பாயி. என்றோ ஜய் சீதாராம் என்றோ ஜய் மாதா தி என்றோ கூறுவார்கள் சாய் பக்தர்கள் பார்க்கும் போது ‘சாயிராம் என்பார்கள் கிருஷ்ண ப்ரேமியை ஆதரிப்பவர்கள் ஜய் ராதே க்ருஷ்ணா என்றும் இஸ்கான் குழுவும் ஹரே கிருஷ்ணா என்றும் கூப்பிடும் போது நாம் மட்டும் ஏன் ஆங்கிலத்தில்? கடவுள் பெயர் சொல்லும் போது அதன் ஒலி அலைகள் நம்மைச் சுற்ற பதிவாகி நற்றலைகளால் சூழ்நிலை சுத்தமாகிறது அதை விட்டு "ஹாய" என்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இனியாவது வரும் சந்ததிகளுக்கு அழகான இனிமையான அம்மா, அப்பா, மாமா மாமி போன்ற சொற்களையும் தமிழ் மொழியில் பேசும் ஆர்வத்தையும் ஊட்ட வேண்டும் மம்மி டாடியை ஒளித்து வைத்திடுவோம். பல மொழிகள் கற்றுக் கொள்ள வேண்டும் மிகவும் வரவேற்கும் விஷயம்தான் ஆனால் தமிழ் மொழிக்குத்தான் முதல் இடம் தர வேண்டும் சில பெற்றோர்கள் "என் குழந்தைக்கு இங்கிலீஷ் தான் தெரியும் தமிழ் பேச வராது என்று பெருமையாக சொல்லுவார்கள் அப்போது என் மனம் வருந்துகிறது. பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் எங்கு சென்றாலும் தமிழ் கற்க உதவுங்கள் நம்மை பெற்ற தாயை உதறுவது நியாயமாகுமா? "தாய்க்குப்பின் ..தாய் மொழிக்குப்பின். பின் தாய் நாடுக்கு முதல் இடம் கொடுங்கள்." "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியைப் போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாரதி சொல்கிறார் தாய் மொழி வாழட்டும். தாய் மொழி வளரட்டும்.

விசாலம்

என் மகன் திரும்பி வருகிறான்

அப்பா மிகவும் பரபரப்பானார்.
உள்ளே,வெளியே சலியாமல் நடந்தார்,
கண்கள் தெருக் கோடியில் தேடின
மனம் ஆனந்தத்தால் ஆடின,
முகத்திலே ஒரு பூரிப்பு
உள்ளத்திலே ஒரு லயிப்பு
வீடெல்லாம் அலங்காரம்
எங்கு திரும்பினும் தோரணம்
பல வர்ண பலூன்கள்
அணைந்து மின்னும் பல்புகள்,
அவர் அன்பு மகன் வருகிறான்,
தனியே வருகிறான்
திரும்பி வருகிறான்
திருந்தி வருகிறான்
,தந்தை நெகிழ்ந்துபோனார்,
மூத்த செல்லப் பிள்ளை,
நுழைகிறான் உள்ளே,
ஒரு கேள்விக் குறி அவன் முகத்தில்
குடைந்து எடுத்தது அவன் தலையில்,
"என்னப்பா என் கல்யாணமா?
எனக்குத் தெரியாமல் ஒரு விஷயமா?"
புலம்பித் தவித்தான் மூத்த மகன்
"இல்லை கண்ணா நீயும் மகன்,
என் இளைய மகன் வீடு திரும்புகிறான்
உன் அருமைத் தம்பி வீடு திரும்புகிறான்
தவற்றை உணர்ந்து வீடு திரும்புகிறான்
முகம் வாடிப் போனான் மூத்த மகன்
"கிழித்த கோட்டை தாண்டாமல்
நீங்களே தெய்வம் என்ற எனக்கு,
ஒரு விழாவும் இல்லையாப்பா?
கெட்டு ப்போன தறுதலைப் பையன்,
ஜெயில் போய் மானம் இழந்தவன்,
பெண்கள் கூட்டத்தில் சீரழிந்தவன்
குடியும் சூதாட்டத்திலும் தன்னையே மறந்தவன்
அவ்னுக்கா திருவிழா?
தந்தை சொன்னார்,
"நல்ல கூட்டத்தில் நல்லவனாய் இருப்பது
சிரமம் ஒன்றும் இல்லையப்பா.
கெட்ட கூட்டத்திலிருந்து திருந்தி வருவது
ஒரு பெரிய விஷயம் அப்பா.
புலிகளின் கூட்டத்திலிருந்து ஒரு ஆடு
தப்பித்து வந்திருகிறதப்பா
பக்குவப்பட்டுவிட்டது அவன் மனம்,
பக்குவப்பட்ட மனதிலே கடவுள் நுழைவார் தினம்"
கொண்டது அந்த தெரு ஒரு விழாக் கோலம்,
வாசலை அலங்கரித்தது ஒரு வர்ணக் கோலம்


விசாலம்

Friday, March 30, 2007

உண்ணாவிரதம்

தன்னலமே இல்லாத உண்ணாவிரதம்,
வெற்றியை வகுத்துக் கொடுக்கும்,
அண்ணல் காந்தி நோத்த நோம்பு,
சாத்வீக குணம் ஒளிர்ந்த நோம்பு,
வெற்றி பாதையில் நடைபோட்டார்,
புகழ் வெற்றியும் தேடி வந்தது
ஆனால்
அண்ணல் போல் பலர்,
நோக்கும் உண்ணாநோம்பை
என்னவென்று சொல்வது?
எப்படிச் சொல்வது?
இது பெரிய இடத்து விவகாரம்
கண்டும் காணமல் செல்லப்பா.
"அண்ணாச்சி
தலைவர் இன்று உண்ணாவிரதம்"
"அப்படியா? கூப்பிடு
புகைப்படக்காரரை"
படங்களும் எடுக்கப்பட்டன,
மாலைகளும் போடப்பட்டன,
கோஷங்களும் எழுந்தன
அடிக்கடி சாத்துக்குடி ஜூஸும் போயிற்று.
அன்புத்தொண்டர்களின் சேவையாம்
வெற்றிகாண சின்ன நிலை எதனால் அப்பா?
"பெருங்காடு தீப்பற்றி எரிந்திட்டாலோ,
பெரும் வைர நிலக்கரி சுரங்கமாகும் ,
சருகான வைக்கல் போர் எரிந்திட்டாலோ.
சாம்பலின்றி வேறு என்ன கிடைக்கும்?"

இதுவா சுதந்திரம்?

கண்ணீர் விட்டு வளர்த்த செடி,
தழைத்து வளர்ந்து மரமானது,
பலரின் உயிர் தியாகமானது,
காந்தியின் அஹிம்சை பலனானது,
சுத்ந்திரத்தை அடைந்துவிட்டோம் ,
அடிமைத்தளையிலிருந்து விடுபட்டோம்,
இப்போது இருப்பது சுத்ந்திரமா?
இது பெயர்தான் சுதந்திரமா?
சுத்ந்திரத்தின் தப்பான உபயோகமா?
அளவுக்கு மிஞ்சின சுதந்திரமா?
தன்னடக்கம் சுதந்திரம்
நாட்டுத்தொண்டு சுதந்திரம்,
தேசப்பற்று சுதந்திரம்
ஏமாற்றாத பிழைப்பு சுதந்திரம்
நாட்டில் இவைகள் எங்கே போயின?
உண்மை அன்பு எங்கே மறைந்தன?
பழைய கண்ணியம் எங்கே?
அந்தக் கட்டுப்பாடு எங்கே?
வயதான கிழவர்,
கால் தேய நடக்கிறார்.
பென்சன் தொகைக்காக
அவர் காகிதம் வைத்த இடத்தில்,
மேலே நகர லஞ்சப்பணம் இல்லை,
சீட்டுக்கம்பெனியில் ஏமாற்றம்,
ஏழைகள் வயிற்றில் பெரிய அடி
நல்ல மதிப்பு பெற்ற இளைஞனுக்கு
லஞ்சம் கொடுக்க பணமில்லை,
கல்லூரியில் இடமில்லை,
நாற்பது மார்க் எடுத்தவன் ,
டாக்டர் பட்டம் பெறுகிறான்.
சுதந்திரத்தியாகிகள் குடிசையிலே,
கிடைத்த பதக்கத்தின் திருப்தியிலே,
சுதந்திரப்போரின் நினவினால்
வயிற்றின் பசியை நினப்பதில்லை
மேல் நாட்டு மோகம் நாட்டினிலே,
உடைக் குறைவு முன்னேற்றம் பெண்களிலே,
சுயநலத்திற்குத் தலைவர்கள்,
பொது நலத்தை மறந்தார்கள்,
கீழ்படியிலிருந்து மேல்வரை
ஊழல் லஞ்சம் பரவி இருக்க,
தைரியம் இல்லை தட்டிக் கேட்க,
பெற்றோர்கள் முதியோர் இல்லத்திலே.
அவர்களின் மக்கள் மேலை நாட்டினிலே
சுத்ந்திரம் இதுவா பாரினிலே
எல்லாம் போலி தேசத்தினிலே,
மனம் வெம்பிப் போகிறேன்,
தன்னலமற்றத் தியாகிகளைத் தேடுகிறேன்,
சுதந்திரத்தின் உண்மைப் பொருளை,
இனி யார்தான் புரிய வைப்பாரோ?


vishalam

காயத்திரியின் மகிமை





Om Bhur Bhuva Svaha
Tat Savitur Varenyam (um)
Bhargo Devasya Deemahi
Dhiyo Yo Nah Prachodayat

Om Shanti Shanti Shanti



ஆவணியாவட்டத்தின் மறு நாள் காயத்திரிஜபம் என்ற நாள் வருகிறது. அதாவது யக்ஞோபவீத தாரணம் செய்தபின் மறு நாள் இது வரும் அந்த நாளுக்கே ஒரு தனி சிறப்பு உண்டு. காயத்திரி ஜபம் அன்றுதான்
செய்ய வேண்டும் என்பதில்லை. தினமும் எப்போதும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம் அது மிகுந்த சக்தியான மந்திரம். ஆதவன் நம் கண்ணிற்குத் தெரியும் பிரும்மம். அந்த சூரியன் இல்லை என்றால் ஒரு புல் பூண்டு கூட இருக்காது. அப்படிப்பட்ட பிரும்மத்தை வழிபட்டு வாழ்க்கையில் மேன்மை பெற ராஜரிஷி விசுவாமித்திரர் என்னும் க்ஷத்திரியர் நமக்கெல்லாம் கண்டுப் பிடித்துத் தந்த வரப்பிரசாதம், இதை யாவரும் உருவேற்றலாம் இது ஜாதி மதத்திற்கு அப்பால் பட்டது வேதமே காயத்திரி.

"காயத்திரி பரமோ மந்த்ர:
நமாதூர் தைவதம் பரம்" என்கிறது சாஸ்திரம், ந மாதுர் …அதாவது தாயை விடச் சிறந்த தெய்வமில்லை
காயத்திரியை விட சிறந்த மந்திரமில்லை காயத்திரி தேவி உலகத்திற்கே பராசக்தி ஆவாள். வேதத்தில் வரும்
சத்வ, ரஜ, தமஸ் என்ற முக்குணங்களுக்கும் காரணமாகவும், பரமேஸ்வரியின் சக்தியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. உபநயனம் போது பிரும்ம உபதேசம் நடக்கும். அந்தப் பையன் தன் தந்தையின் காதில்
"ஓம்" என்ற ப்ரணவ மந்திரம் ஒதுவதை நாம் பார்த்திருக்கிறோம் பின் காயத்திரி மந்திரம் ஆரம்பிக்கிறது
இதில் ஓம் பூர்புவஸ்ஸுவ::என்று ஆரம்பம். இதில் மூன்று வேதமும் வருகிறது.
மனு அவர்கள் கூறுகிறார்
"த்ரீப்ய; ஏவது வேதேப்ய;
பாதம் பாத மதாது ஹத் " பிரும்மதேவன் வேதத்தின் சாரத்தைக்காண
எண்ணி பின் ரிக் வேதத்திலிருந்து பூ: என்பதையும் யஜுர் வேதத்திலிருந்து
புவ: என்பதையும் சாமவேதத்திலிருந்து ஸுவ: என்றும் கண்டு பிடித்தாராம்
அதன் பின்னரும் அதை மேலும் ஆராய்ந்தார் பிரணவம் என்ற
ஒங்காரம் ஒளிர்ந்தது. ஓம் என்பதை பிரித்தால் அ+உ+அம் என்று
வெளிப்படும். அது படைத்தல், காக்கல், அழித்தல் அதாவது பிரும்மா,
விஷ்ணு, சிவன் மூன்றையும் தன்னகத்தே கொண்டது.
காயத்திரி என்பதைப் பிரித்தால் காயந்தம்+த்ராயதே என்று வரும்
அதாவது ஜபிப்பவனைக் காப்பாற்றுகிறது,
நான் வேதங்களில், மந்திரங்களில் காயத்திரியாக இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ணபரமாத்மா.
நாரதர் சொல்லுகிறார்,"த்வமேவ சந்த்யா, காயத்ரி சாவித்ரி சரசஸ்வதி
பிரும்மாணி வைஷ்ணவி ரொஊத்தி, ரக்தஸ்வேதா ஸிதேதரா, என்று
புகழுகிறார்.
பின் சொல்லுகிறார் ஓ காயத்ரியே உன் புகழை என்ன என்று சொல்வது?
மஹான்கள் சரீரத்தில் நாடியாகவும் ஹ்ருதயத்தில் பிராண சக்தியாகவும் கண்டத்தில் ஸ்வப்ன நாயகியாகவும் பிந்து ஸ்தானத்தில்
இருப்பவளாகவும் மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாகாவும் பாதாதி
கேசம் வரை வியாபித்தவளாகவும் சிக மத்யத்தில் அமர்ந்த்திருப்பவளாகவும் சிகயின் நுனியில் மனோன்மணியாகவும்
எல்லா வஸ்துக்களிலும் நிறைந்து இருக்கும் சக்தியாகவும் ஆகிறாள்.
காலையில் காயத்ரியாகவும் உச்சிப்பொழுதில் சாவித்ரியாகவும்
மாலையில் சரஸ்வதியாகவும் இருக்கிறாள்..
ஒம் பூர்பவஸ்வ: ஒம் தத்சவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோன;ப்ரசோதயாத்…….இதுதான் காயத்ரி மந்திரம்
இதன் பொருள்— எல்லா பிராணிகளின் இதயத்தில் அந்தர்யாமியாய்
இருந்துகொண்டு புத்தியைத் தீட்டிக்கொடுப்பவளும் சூரியமண்டலத்தில் இருந்துகொண்டு வெளிச்சம் கொடுப்பதால் யாவரும் சேவிக்க
வேண்டியவளாகவும் விளங்குகின்ற காயத்ரியைத் தியானம் செய்கிறேன்
இனி அதன் மகிமையைப் பார்க்கலாம்
காயத்ரி ப்ரோச்யதே புதை” பாபங்களிலிருந்து காக்கிறது புத்தி தீர்க்கமாகிறது. சிறந்த சித்திகள் கிட்டுகின்றன.
“ந தத்ர ம்ரியதே பால;…. குழந்தைகள் அகால மரணம் அடைவதில்லை
சரவ பாபானி நச்யந்தி காயத்ரி ஜபதே ந்ருப; எல்லா பாபங்கள்யும்
போக்கி விடுகிறது.
இத்தனை சிறப்பு பெற்ற காயத்ரியை விடாமல் ஜபித்து வாழ்வை மேம்படுத்தலாமே பெண்களும் ஜபிக்கலாம். பேய் பிசாசு நம்மை அண்டாது. ஐந்து முகங்கள் பத்து கைகளுடன் சந்திரக் கலைத்தரித்த காயத்ரி
நம்மை எல்லாம் ரக்ஷிப்பாளாகுக

கண்ணன் பாட்டு



வரும் ஆகஸ்ட் 15 ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி, கீதையை நமக்குஅளித்த கண்ணன் அல்லவா?
ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே அர்ததஜாம நேரத்திலே அவதரித்தானே;
"பூபாரம் தீர்க்க பாரதப் போர் முடித்த சீலா
கோபால கிருஷ்ணா ஆதிமூலா பரிபாலா" என்ற பாட்டு ஞாபகம் வருகிறது
இப்போது குழந்தைகளுக்கு இந்தக் கவிதை, இதைப் பாட்டாகவும் பாடலாம், ராகம் மோகனம்


கண்ணன் எங்கள் கண்ணனாம்,
கார்மேக வண்ணனாம் ,
வெண்ணை உண்டக் கண்ணனாம்
மண்ணை உண்டக் கன்ணனாம்
குழலினாலே மாடுகள் கூடச் செய்தக் கண்ணனாம்,
கூட்டமாகக் கோபியர் கூட ஆடும் கண்ணனாம்,
மழைக்கு நல்ல குடையென மலைப்பிடித்தக் கண்ணனாம்,
பூதனையின் பால் உறிந்து மோக்ஷம் கொடுத்தக் கண்ணனாம்,
உரலிலே கட்டுப் பெற்றுதவிழ்ந்து வந்த கண்ணனாம்
உறியில் வெண்ணெய்க்கு குறி வைத்த திருட்டு மாயக் கண்ணனாம்
அன்னை யசோதைக்கு வாயைக் காட்டி அசர வைத்தக் கண்ணனாம்,
விஸ்வரூபம் பார்த்த அன்னையை மயங்க வைத்தக் கண்ணனாம்,
கோபிகளுடன் ராஸலீலை ஆடிவந்தக் கண்ணனாம்,
பகளாசுரனின் மூக்கை பிளந்து நற்கதி கொடுத்தக் கண்ணனாம்.
தேனுகாசுரனை சுழட்டி வீசி தூர எறிந்தக் கண்ணனாம்
கம்சன் அம்மான் மேலே ஏறி வதம் செய்தக் கண்ணனாம்,
தேவகி, வசுதேவரை, சிறை மீட்டியக் கண்ணனாம்
ஏழை நண்பன் குசேலனின் அவலை ருசித்து உண்டக் கண்ணனாம்
அபயம் என்ற திரோபதிக்கு சேலை தந்த கண்ணனாம்
அர்ஜுனனுக்கு சாரதியாய் தேரை ஓட்டியக் கண்ணனாம்
கீதையின் நாயகன் எங்கள் கண்ணனாம்,
ராதாவின் அன்பான கண்ணனாம்
விஷ்ணுவின் அவதாரக் கண்ணனாம்
அவன் ரக்ஷிப்பான் நம்மை எப்போதும்,கண்ணனாம்

இதைக் குழந்தைகளுடன் நாமும் சேர்ந்து பாடுவோம்


விசாலம்

அந்தக்காலம்...இந்தக்காலம்..!

மென்மையான மனம், மலர்ந்து
இருந்தது அந்தக்காலம்
அந்த மென் இதழ்கள்,
காய்ந்து போனது இந்தக்காலம்
தாமரை போன்ற இதயம்
இருந்தது அந்தக்காலம்,
அது முட்களால் சூழப்பட்டது
இந்தக்காலம்,
அன்பு பொங்கும் கூட்டுக்குடும்பம்
இருந்தது அந்தக்காலம்
இன்று அன்பில்லாத இருவர் குடும்பம்
ஆனது இந்தக்கால்ம்,
அன்பு சுனையுடன் இதயம்
இருந்தது அந்தக்காலம்
சுனைவற்றி காய்ந்து,
போனது இந்தக்காலம்,
கருணை பூக்கள் குலுங்கிப்
பூத்தது அந்தக்காலம்,
கள்ளிசெடிகள் சூழ்ந்து
நிற்பது இந்தக்காலம்
புருஷன் மனைவி பாசப்
பிணைப்பு அந்தக்காலம்
நிமிடம் ஆனால்
விவாகரத்து இந்தக்காலம்
ஆசிரியர் மதிப்பு ஓங்கி
நின்றது அந்தக்காலம்,
மாண்வன் ஓங்கி ஆசிரியர்
பணிவது இந்தக்காலம்
இயற்கையிலேயே பாடம்
படித்தது அந்தக்காலம்
இயந்திரம் போல் பாடம்,
ஒப்பிப்பது இந்தக்காலம்
லஞ்சம் என்றே பெயரே
கசந்தது அந்தக்காலம்
லஞ்சம் இல்லா வாழ்வு
இல்லை இந்தக்காலம்
பெற்றோர்கள் மேல் பாசம்
பொழிந்தது அந்தக்காலம்,
முதியோர் இல்லத்தில் அவர்களைப்
பார்ப்பது இந்தக்காலம்
கல்யாணங்களில் கூடி
ம்கிழ்வது அந்தக் காலம்
ஈ மெயிலில் மட்டும் வாழ்த்து
தெரிவிப்பது இந்தக்காலம்
மனம் ஏங்கி அழைப்பது
அந்தக்காலத்தை,,
யராவது மாற்றித்
தருவாரா இந்தக்காலத்தை?

மூன்று வரங்கள்



துக்கம் என்பது வந்ததும்,
துடிப்புடன் அவனை அழைக்கின்றோம்,
"கடவுளே என்னைக் காப்பாயா?
கண்ணீர்த்துளிகளைத் துடைப்பாயா?"
ஏழ்மை என்பது வந்ததும்,
ஏக்கத்துடனே அவனை அழைக்கின்றோம்,

"கந்தா உனக்கு கண்ணில்லையா?
காலம் கடந்தப் பின் வருவாயா?"
கண்ணைப் பணம் மறைத்ததும்,
கடவுளை நாமும் மறக்கின்றோம்,
உழைக்காமல் பணம் வந்துவிட்டால்,
பள்ளத்திலே நாமும் விழுகின்றோம்
தவறான பணம் கை வந்ததும்
மனச்சாட்சியும் நம்மை துரத்தும்,
அழிவுப் பாதையில் நம்மைத் தள்ளும்,
சத்தியம் வென்று, தண்டனை தரும்
பணத்தைப் பார்த்தே மகிழ்கின்றோம்
ஆசை பேராசையை வள்ர்க்கின்றோம்
கடவுளைப் பார்க்கவும் நேரமில்லை,
கடவுளை நினைக்கவும் தோன்றவில்லை,
கடவுளே எனக்கு மூன்று வரங்கள் தா,
கண்ணை மறைக்கும் பணம் வேண்டாம்,
அன்பு துக்கம் வேதனை என்ற மூன்று,
அருமைப் பொருள்களைத் தருவாயா?
இம்மூன்றில் உன்னை நினைப்பேன் நான்,
எப்போதும் விரும்பி அழைப்பேன் நான்
பண்புடன் உன்னைத் தொழுவேன் நான் ,
பரவசமாகிக் களிப்பேன் நான்...

விசாலம்

ஷெனாய் சக்கரவர்த்தி



உயர்திரு பிஸ்மில்லாகான் ! ஆம் ஷெனாய் வாசிப்பதில் மன்னர். அவர் ஷெனாய்க்கே உயிர் ஊட்டினார். ஷெனாய் என்பது ஒரு நாதஸ்வரம் போல் ஒரு சிறிய அளவில் இருக்கும் இதை அதிகமாக
திருமணங்களுக்கு மங்கள வாத்தியமாக வடக்கில் பயன் படுத்துவார்கள். அதைப் பயன் படுத்தி ஹிந்துஸ்தானி க்ளெஸிகல் பல வருடங்கள் அதிலேயே மூழ்கி பின் ஷெனாய் என்றால் அவர்
முகம்தான் நம் முன் நிற்கும் அளவிற்கு பிரபலமானார். உலகம் முழுவதும் அவர் வாசிக்காத நாடு இல்லை. அவர் வாங்காத அவார்டு இல்லை மிகப் பெரிய பாரத ரத்னா அவருக்கு கிடைத்திருக்கிறது,
தமிழ் நாட்டில் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும் பாரதரத்னா கிடைத்திருக்கிறது அவர் மறைந்த உயர்திரு

ஜி.என்.பாலசுப்பிரமண்யத்தின் நண்பரும் கூட.

பல கர்நாடிக் மேதைகளுடன் ஜுகல்பந்தியும் நடத்தியிருக்கிறார்,
இவர் மங்கள வாத்தியம் இல்லாமல் ஒரு தேசிய தினமும் ஆரம்பிக்காது குடியரசு தினம் துவக்கம் இவர் த்வனியில் தான் ஆரம்பிக்கும்
அவரைப் பார்த்து பேசி ஆசிகள் வாங்கிய நாளை நினைத்துப் பார்க்கிறேன். அதைப் பெரிய பாக்கியமாகவும் கருதுகிறேன்
சாசா நேஹ்ரு அவர்களின்

100 வது வருடக் கொண்டாட்டம் ஜவஹர்லால் நேஹ்ரு ஸ்டேடியத்தில்
நடை பெற்றது . உலகமுழுவதும் நேர் ஒலிபரப்பு செய்யப்பட்டது அப்போது அவர் மங்கள வாத்தியத்துடன்தான் ஆரம்பமாகியது அவர் பாடியவுடன் எங்கள் குழு தேச பக்திப்பாடல்கள் பாட அவர் மிகவும் பாராட்டினார்
அப்போது நான் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரிடம் போய் ஆசி பெற்றேன்.
அவர் ஒரு சின்னக் குழ்ந்தை போல் பேசுவார் கள்ளமில்லாமல் சிரிப்பார் அன்பைத்தவிர வேறு ஒன்றும் பார்க்கமுடியாது அவர் மால்கோஸ் {நமது ஹிந்தோள்ம் } நான்கு மணி நேரம்கூட களைப்பில்லாமல்
வாசிப்பார். அந்த தேவகானத்தில் நிச்சயமாக கடவுள் இருப்பார், தெரிவார்
இன்று அவர் நம்மிடையே இல்லை ஆகஸ்ட் 20 அன்று மறைந்துவிட்டார். அவர் பெயரில் அவர் ஞாபகார்த்தமாக மியூஸிக் அகேடமி கட்ட உள்ளார்கள் {லக்னோ} அவருடைய த்வனி கால
காலமாக தொடர்ந்து ஒலிக்கும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

ஆவணி மூலம்



நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம், ஏழரை சனி இருப்பவர்கள்
ஆஞ்சநேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல் பலவித
மான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போதுஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக
தீரும் அவருக்கு செய்பவகைகளில் சில,
வடைமாலை சாத்துதல்
செந்தூரக்காப்பு அணிவித்தல்
வெண்ணெய் காப்பு சாத்துதல்
ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
இந்த பரிகாரங்களை நான் பலருக்கு சொல்லி நன்மை நடந்ததை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்
வடைமாலை,,,,,அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும்
இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.
வெற்றிலைமாலை ,,,,,,,சீதையைத் தேடிதேடி பல இடங்களில் காணாது பின் அசோகவனத்தில்
அவரை சந்த்தித்தார், அப்போது சீதை அவருக்கு வெற்றிலைக் கொடி அணிவித்து அவரை வாழ்த்தினார். என்றும் சிரஞ்ஜீவியாய் இருக்கவும் வாழ்த்தினாள் வெற்றிலை வயிறு சம்பந்தமான
எல்லா தோஷங்களையும் போக்கும் பண்டைக் காலத்தில் சின்ன குழந்தைக்கும் வெற்றிலை சுரசம்
வாயு தொல்லை இல்லாமல் இருக்க கொடுப்பார்கள்
வெண்ணெய் சாத்துதல்,,,,,,,ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு
தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,
சிந்தூரக் காப்பு ,,,,,,சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை கேட்கிறாள். "என் அவர் நலமா?"
என்று அதற்கு அனுமான் "எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றதும்
மகிழ்ச்சி தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக் கொண்டாள்., இதைப் பார்த்த அனுமனுக்கு மிக மிக சந்தோஷம் தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும்
செம்மண் பூசிக் கொண்டாராம்
ராம் எழுதி மாலையாக அணிவித்தல் அனுமன் தன் இதயத்திலேயே ராமாவை வைத்திருக்கிறார்.
சில படங்களில் அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம்
ராமர் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்குவார். ராம நாமத்திற்கு அவ்வளவு மகிமை
வாலில் பொட்டு வைப்பது ,,,,,,அனுமனுக்கு சக்தி முழுவதும் தன் வாலில் தான். இராவணன் முன் தன் வாலையே
சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவண்னுக்கும் மேல் உயரமாக அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும்
வாலில் வைத்த நெருப்பினால்தான் அவருக்கு சூடு தெரியாமல் ஆனால் இலங்கையே எரிந்தது
ஆகையால் வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம்
சித்தியாகிறது என்ற நம்பிக்கை …நம்புகிறவர்களுக்கு பலிக்கிறது
ஆவணி மூலத்தன்று அனுமானை வழிபட்டு ஆசி பெறுவோமாக
விசாலம்

கணபதியே வாரும்



ஆற்றின் ஓட்டத்தில் ஓடிப்போகும் வைக்கோல் போல்
எங்கள் ஆணவம் அழிய வேண்டும் கணேசா,
சேற்றினிலே வளரும் செந்தாமரைப் போல்,
நற்பண்பு வளர வேண்டும் விக்னேசா
ஏழை எளியவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும்
மனம் அருள வேண்டும் வினாயகா,
பெற்றோர்களைத் தெய்வமாக மதிக்கும்
சிறந்த எண்ணமும் வேண்டும் விக்னராஜா,
அன்பு என்னும் கடலில் ஊறி அன்பை
வாரி வாரிவழங்க வேண்டும் கணபதியே,
கணபதி காயத்ரி
ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ,
தன்னோ தந்திப் ப்ரஜோதயாத்,

பிள்ளையாரின் தத்துவம்
மூன்று கண்களுடைய தேங்காயை உடைக்கிறோம் மும்மலங்களையும் உடைக்க வேண்டும் நம் ஆணவத்தை
உடைத்து எறிய வேண்டும். பெரிய தலை பெரிய வயிறு, பெரிய மலைபோல் சக்தியுடன் இருக்கிறார்
ப்ரணவஸ்வரூபி அவர் தம் தும்பிக்கையில் ஓம் என்று காட்டுகிறார் கையில் கொழுக்கட்டை அதில்
பூர்ணம், கடவுள் என்றும் பூர்ண ஸ்வரூபி….இதே போல் பலதத்துவம் அடங்கி இருக்கிறது
தோப்புக் கரணத்தின் புராணக் கதை ஒரு சமயம் மஹாவிஷ்ணு சக்கரத்துடன் சிவனை காணச்சென்றார்
அப்போது பிள்ளையார் அதை பிடுங்கி தன் வாயில் போட்டுக் கொண்டார். குழந்தை வாயிலிருந்து
பிடுங்குவது சிரமமான காரியம் என்று நினைத்து அதட்டி மிரட்டவும் முடியாமல் யோசித்து பின்
சிரிக்க வைக்க எண்ணி தன் காதுகளை கைகளால் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்து ஆடினாராம்
அதைப் பார்த்துவினாயகர் குலுங்க குலுங்க சிரிக்க விஷ்ணுவின் சக்கிரமும் வெளியே விழுந்தது.
புராணம் எப்படி இருந்தாலும் அது நல்ல தேகப் பயிற்சி, காதுகளின் கீழ்தான் தலையின் மெரிடியன்
புள்ளிகளும்காது மடலில் முதுகு எலும்பு புள்ளிகளும் இருக்கின்றன, அதைப் பிடித்தால் அக்கு ப்ரெஷர் ஏற்பட்டு உடல் கோளறுகள் நீங்குகின்றன தவிர மேலும் கீழும் உட்கார்ந்து எழ
நம் முதுகு எலும்புக்கு வலிமை ஏற்படுகிறது தோர்பி என்ரால் கைகள் கர்ணம் என்றால் காது.

இப்போது அருகம்புல்லின் மஹத்வம்
தூர்வை என்பது அருகம்புல் ஒரு சமயம் கணபதி அனலாசுரனை விழுங்க அவர் உடல் தகித்தது
எது செயதும் உஷ்ணம் குறையவே இல்லை. அப்போது பல முனிவர்கள் இருபத்திநாலு அருகம்புல்லை
நீரில் போட்டு பூஜித்து அவர் தலையில் அபிஷேகம் செய்ய அவர் உஷ்ணம் போனது, அவரை பூஜிப்பது மிக எளிது மஞசளைப் பிடித்தாலும் களிமண்ணைப் பிடித்தாலும் மாக்கல் வெள்ளெருக்கு வேர் என்று எதிலும் செய்துவிடலாம் பூஜைக்கும் புல் இலைகள் என்று எதிலும் பூஜிக்கலாம் இவர் மரத்தடியிலும் இருப்பார்
மலை உச்சியிலும் இருப்பார்,
இப்போது அவரது பதினாறு நாமாக்கள் பார்க்கலாம்

ஸுமுகஸ்சைக தந்தஸ்ச
கபிலோ கஜகர்ணக:
லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ வினாயக:
தூமகேதூர் கணாத்யக்ஷ, பாலசந்த்ரோ கஜானனா
வக்ரதுண்ட சூர்பகர்ண ஹேரம்ப ஸ்க்ந்தபூர்வஜா
சுமுகன் மங்கள முகம்
ஏகதந்தஸ்ச ஒற்றைக் கொம்பையுடையவன்
கபிலன் கபில நிறமுடையவன்
கஜக்ர்ணன் யானைக்காதை உடையவன்
லம்போதரன் பெரும் வயிறு உடையவன்,
விகடன், குள்ளத்தோற்றம் உடையவன்
விக்னராஜா சகல விக்னங்களையும் போக்கும் ராஜா
வினாயகா இடையூறுகளை நீக்கும் நாயகன்
கணாத்யக்ஷன் பூத கணங்களுக்கு தலைவன்
பால்சந்த்ரன் நெற்றியில் சந்திரன் உடையவன்
வ்க்ரதுண்டன் வளைந்த தும்பிக்கை உடையவன்
சூர்பகர்ணன் முறம் போன்ற காது உடையவன்
ஹேரம்பன் தம்மை வணங்கும் பக்தர்களுக்கு அருளுபவன்
ஸ்கந்த பூர்வஜா முருகனுக்கு அண்ணன்
இந்த பதினாறு நாமாக்கள் சொல்ல இன்னல்கள் அண்டாது கணபதியின் அருள் கிடைக்கும்
வினாயகர் அகவலும் படிக்க படிக்க மனதில் இருக்கும் அழுக்கு நீங்கி தூய்மை அடையும். அதைப் பின்னால் சொல்கிறேன்
ஓம் கங்கணபதயே நம:
வரும் பிள்ளையார் சதுர்த்தி அன்று முதல் கடவுளான கணபதியை வணங்குவோம்


விசாலம்

வரதட்சிணை என்ற பேய்….

வரதட்சிணை என்ற பேய் ,
என்னைத் துரத்தி துரத்தி வருகிறதே,
பேராசைப் பிடித்த அம்மாக்கள்,
சுயநலமிக்க கணவர்கள்,
அதைத் தட்டிக்கேட்காத அப்பாக்கள்,
ஆ,,,,என் கண் முன்னே சுழல சுழல,
சினிமாப் படம் போல் சுற்றிச் சுற்றி வருகிறதே.
முதல் காட்சி,
பெண் பார்க்கும் படலம் ,,,என்னைத்தான்,
ஒரு ஆணழகன் வந்தான் ,
கூடவே ஒரு கூட்டம் ,
பஜ்ஜி, சொஜ்ஜி தட்டுகளில்
சுடச் சுட காபி என் கையில்
பொம்மைப் போல் என் அலங்காரம்
இயந்திரம் போல் நமஸ்காரம் ,
என் அழகை ரசித்த பல கண்கள்
கேட்டதோ எண்பது பவுன் நகை
என் மனதில் எழுந்ததோ எரியும் புகை
சீர் என்ற பெயரில் பலவரிசை,
காட்டினார்கள் தன் கை வரிசை,
இடிந்து போனார் என் அப்பா,
ஒடிந்துப் போனது என் மனமும் தான்
காட்சி இரண்டு ஆரம்பம்,
வந்தான் அம்மாவுடன் ஒரு செல்லப் பிள்ளை,
சாவி முடுக்கிய பொம்மையானேன்,
ஒரு போலி புன்னகை என் முகத்தில்
இனிப்பு காரம் என் கையில்,
ஸ்ல்வார் கமீஸில் என் அலங்காரம்,
வணங்க மறுத்தது என் மனம்
சிலை போல் நின்றேன் ஒரு ஓரத்தில்,
மனம் அசை போட்டது,
நான் பாஸா, பெயிலா? தீர்வு என்ன?
"ரொம்பத்திமிர் இந்தப் பெண்"
முணுமுணுத்தாள் ஒரு மாது.
மனத்தில் பாரம் அழுத்தியது,
அதேபாட்டு அதே பல்லவி,
"வரதக்ஷிணை ஒன்றும் வேண்டாம்,
ஆனால் பிஸினஸ்க்குப் பணம் வேண்டும் "
முதல்வனைவிட மிஞ்சிவிட்டான் .
கேட்டும் விட்டான் பல லட்சங்கள்.
உடைந்து போனாயே அப்பா நீ,
எப்படி உதவி செய்வேன் நான்
மூன்றாவது காட்சி ஓடுகிறது
சகோதர சகோதரியுடன் வந்தது ஒரு குடும்பம்,
பழக்கூடையுடன் வாசனைக்கதம்பம்
சாந்தம் அன்புடன் ஒருத் தோற்றம்
திருமணச்சிலவுடன் சிறு ஏற்றம்
சாந்தம் அன்புடன் ஒரு தோற்றம்
அப்பாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி,
என் தோற்றத்தில் ஒரு கவர்ச்சி.
"உங்கள் வீட்டுப் பெண்,
எங்கள் வீட்டு செல்லம்,
சொன்னாள் என் வருங்கால அத்தை,
பின்னால் தெரிந்தது எனக்கு
நான் விழுந்தது ஒரு பள்ளம்,,
அம்மாவின் படத்திற்கு மாலையிட்டேன்
அவன் எனக்கு மாலையிட்டான்.
நான்காவது காட்சியின் க்ளைமேக்ஸ்,
நாலு மாதங்கள் ஒடிவிட்டன.
ஆபீஸ் தொலைவு ஒரு கார் தேவை,
தொடர்ந்தது நச்சரிப்பின் உச்சம்
முளையிட்டது வெறுப்பின் ஆரம்பம்
என் இன்பக்கதவு மூடியது
வாழ்க்கையில் மேகம் சூழ்ந்தது
"மாப்பிள்ளை கார் கேட்கிறார்"
நெஞ்சம் அழுதது குரல் கொடுத்தேன்
காரும் வந்தது ஒரு மாதத்தில்
ஆனால் ஏறி அமர பிடிக்கவில்லை
உயிர் போக மாடாய் உழைத்த
அந்த அப்பாவின் ரத்தமல்லவா?
என் வாழ்க்கையைக் காப்பாற்ற
ஒரு தியாகச்செம்மல் ஆகிவிட்டார்
முதல் வருட சீர் வரிசை
முதலைப் போல் விழுங்கியது
வாய் ஒடுக்கி வயிறு ஒடுக்கி
கடன் தொல்லையால் மனம் புழுங்கி
நடைபிணம் ஆனார் என் அப்பா.
பசுத்தோல் போர்த்திய புலி போல்
அமைந்துவிட்டது என் புகுந்த இடம்
"தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்"
என் அப்பா என் கண்முன் ஒரு ஏசு ஆனார்.
என் அப்பாவின் எலும்பை எண்ணுகிறேன் ,
மனத்திற்குள் புழுங்குகிறேன்,
என் நல் வாழ்க்கைக்காக
உன் வாழ்க்கைத் தியாகம் ஏனப்பா?
வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவத்திப்போல்,
என் வாழ்வு சிறக்க உருகினாயோ?
அப்பா வரதக்ஷினைப் பேய் என்னைத்
துரத்தித் துரத்தி வருகிறதே,,,,,,,,,,,


விசாலம்

மரத்தடியின் நிழலில்



தனிமையில் இருக்கும் பொழுதினிலே... என் தாயின் ஞாபகம் வருகிறதே,
காக்கை காட்டி சாதம் ஊட்டிய அன்னலட்சுமி அவள்தானே,
என் தாத்தா நட்ட மரம் இதுவல்லவா,
இதன் நிழலில் நான் ம்ட்டும் ஏன் தனித்திருக்கிறேன்?
என் தந்தை வந்து பந்தடித்தது இங்கல்லவா?
நானும் ரன்கள் பல அடித்து குவித்தேனே ,
எங்கள் ஸ்டம்பாக நின்றமரம் இது அல்லவா?
நாங்கள் கும்மாளம் போட்ட இடம் இதுவல்லவா?
வையகம் இருளும் பொழுதினிலே எனை,
வா என்று அழைத்தாள் என் காதலி.
மல்லிகையும் வாங்கிப் போனேன், காவியம் நூறு படைத்து விட்டோம்,
எங்கள் காதலுக்கு சாட்சியாக நின்றமரம் இதுவல்லவா?
காகம் ஏன் கறைகிறாய்? என் கண்களின் கண்ணீரைக் கூறவா,
வண்ணச்சேலைக்கட்டி அழகுடன் அன்ன நடை நடந்த அவள் எங்கே?
என் செல்லக் குழந்தைக்குப் பிடித்த இடம் இதுதானே,
கண்ணமூச்சி ஆடி உன்னைப்பிடித்தேனே,
ஆ என்னச் சொல்வேன், எப்படி சொல்வேன் பூகம்பத்தில் எல்லாம் இழந்தேனே,
நான் மட்டும் இப்போது ஒரு தனி மரம்
இந்த மரத்தடியில் என் குடும்பத்தைப் பார்க்கிறேன்.

விசாலம்



நாரயணீயம் பிறந்தது


"அழகு கேரளத்தில், மேல்புத்தூரில் பிறந்தாயே
நாரயணா என்னும் நாமத்தில் வளர்ந்தாயே !
குருவின் வாத நோயை ஏற்றாயே
நாராயணீயம் பாட்டுக்கள் உதிர்ந்தனவே,
சிறு வயது, கல்வியில் மனமில்லை.
நற்பழக்கங்களுக்கும் இடமில்லை,
தந்தை சொல்லியும் கேட்கவில்லை
தாயின் பாசமும் உணரவில்லை,
வீட்டை விட்டு ஓடி வந்தாய்...
அச்சுத பிஷாரடியைச் சந்தித்தாய்,
அவர் அன்பில் நீ மாறினாய்,
அவர் மகளையும் மணந்தாய்,
வெட்டிப் பொழுது போக்கினாய்,
மனைவி மனம் உடைத்தாய்,
"வேதம் கற்று வருமானம் தேடு,
மனம் திருந்தி புண்ணியம் தேடு"
தயக்கமாகச் சொன்னார் மாமனார்,
அவரிடமே வேதம் இவன் கேட்டான்
மாமனார் பாவம் வேதம் கற்றார்,
சீடரும் ஆனார் குருவும் ஆனார்,
இனிமையான வேதம்
தப்பாமல் பிறந்தது,
குரு அச்சுதரின் ஆனந்தம்
சிலகாலமே நீடித்தது,
காய்ச்சல் வந்தது
கட்டிகள் வந்தன.
வாத நோயும் வந்தது
படுக்கையிலும் தள்ளியது,
ஊரில் ஏச்சுப் பேச்சு,
அந்தணரில்லை அச்சுதர்,
வேதம் கற்றது பாவச்செயல்,
வேதம் ஓதுவது தவறான செயல்
அதுவே வியாதி,,,,,,,,
தன் குருவுக்கு இந்த நோயா?
நீ கதறினாய் கண்ணனிடம் ஓடினாய்,
"அந்த நோய் எனக்கு வரட்டும்
என் குருவும் நன்கு பிழைக்கட்டும்
உன் தவம் பலித்தது
கண்ணன் கண்திறந்தான்,
வந்தது உனக்கு அந்த நோய்,
அச்சுத குரு குணம் பெற்றார்,
தாங்க முடியாத நிலை
உன் உடல் அழுகின
கண்ணனிடம் அர்ப்பித்தாய்,
தியானத்தில் மூழ்கினாய்
உடல் நிலை மறந்தாய்
ஒருவர் சொல் கேட்டு
குருவாயூர் சென்றாய்,
கண்ணனிடம் கதறினாய்
கனவில் வந்தான்
மாயக் கண்ணன், கூறினான்
"மருந்து எழுத்தச்சனிடம்,
வாங்கி குண்மடைவாய்"
மீன் பிடிக்கும் எழுத்தச்சன்
வியப்புடன் உன்னைப் பார்த்தான்,
"முதல் மீனைத் தொட்டுக் கொண்டு
ஸ்ரீ குருவாயூரப்பனைப் பாடு,
யோசனையில் ஆழ்ந்தான்,
பட்டெனெப் புரிந்தது
மச்சாவதாரத்திலிருந்து பாடினாய்,
கவிதை அருவியாகக் கொட்டின,
ஒரு தசகம் முடிய
"அப்படியா கண்ணா?" என்பாய்
"ஆம்" என்று தலை அசைப்பான்
குருவாயூரப்பன் கண்திறந்து,
ரோகம் போக வரம் கேட்பாய்,
நூறு தசகம் முடிந்தன.
பாகவதமும் பிறந்தன,
நோயின் பூரண குணம்
குளிர்ந்தது அவன் மனம்
:நாராயணீயம்: பிறந்தது
நோய் போக்கும் சஞ்சீவி இது.

அன்புடன் விசாலம்

மொழி பிரச்சினை நட்பில் முடிந்தது.

நமக்கு பல மொழிகள் தெரிந்திருந்தால் மிகப் பலன்கள் உண்டு!

என்னுடையஅனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு சமயம்
எங்கள் பள்ளி மாணவ, மாணவியர் குழுவுடன் தில்லியிலிருந்து கன்யாகுமரி வரை அழைத்துச் சென்றோம் எல்லோரும் ஹிந்தி பஞ்சாபி பேசுபவர்கள்தான். ஆகையால் அங்கு நான் தான் ராணி . அவ்வளவு மரியாதை ஏன் என்றால்
தமிழ், மலையாளம் தெரிந்த ஒரே பெண்மணி நான் தான் தவிர தெலுங்கு
புரியும் ஆகையால் ஒவ்வொரு நிமிடமும் என் உதவி அவர்களுக்குத்
தேவைப் பட்டது.

60 பேருக்கு மேல் கலந்து கொண்டதால் முழு போகியையும்
புக் செய்து பேனரும் கட்டி கதவை அடைத்து வைத்தோம் உள்ளே
மாணவர்கள் கும்மாளம் போட அது எங்கள் வீடாகிவிட்டது நாங்களும்
சிறிது கண்டிப்புடன், முழு சுதந்திரம் கொடுத்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சி ரயில் விஜயவாடா வந்தது. சில மாணவர்கள் சில தின்பண்டங்கள் வாங்க கீழே இறங்கினார்கள். கதவு திறந்திருந்தது அப்போது ஒரு தெலுங்கு மாணவன் உள்ளே ஏறினான் கீழே நின்ற ஒரு பெண்ணையும் கூப்பிட்டான்

"இக்கட ரண்டி...இக்கட ரண்டி"
ஒரு வினாடிதான்,
திடீரென்று எங்கள் பள்ளி மாணவன் அந்தத் தெலுங்கு பையனைப் ப்டித்து, அவன் காலரையும் பிடித்து “மொத்து மொத்து” என்று மொத்தத்
தொடங்கினான் அந்த சத்தம் கேட்டு நாங்கள்{ஆசிரியர் குழு} நான் தான்
அங்கு அவர்களது வலது கை. அருகில் போனேன் கைகலப்பு
நின்றது. அந்த ஹீரோக்கள் வெற்றியுடன் என்னைப் பார்த்தனர்.
"ஏன் அவனை இப்படி மொத்துகிறாய்?"
"இல்லை மேடம் அவன் நம் பெண்களைப் பார்த்து ,,,,,,,,,,
"ஏன் நிறுத்திவிட்டாய்? மேலே சொல்லு!”
அவன் சொன்னான் "கெட்டவார்த்தைகள் சொன்னான்"
"என்ன சொன்னான்?அதைச் சொல்லு!"
"ரண்டி என்று

சொன்னான் நம் சகோதரிகளைப் பார்த்து அவன் சொன்னால் நான் சும்மா
விடுவேனா மேடம் ?"
அந்தத் தெலுங்கு பிள்ளை திரு திருஎன்று மொழி தெரியாமல் முழித்தான்
பின் என்னை பரிதாபமாகப் பார்த்தான் என்னைக் காப்பாற்றுங்கள் என்று
கூறாமல் கூறியது அவன் கண்கள். நான் கூறினேன்
"அட பைத்தியமே தெலுங்கில் ரண்டி என்றால் "வாருங்கள்" என்று அர்த்தம் இக்கட என்றால் இங்கே என்று அர்த்தம் அவன் தன் உறவினரை அப்படி அழைத்திருக்கிறான் என்றேன்,
"ஓ அப்படியா? மாப் கர்னாஜி ஸோ ஸாரி" அவனை அப்படியே அணைத்துக் கொண்டார்கள்.
ஆமாம் ஹிந்தியில் ரண்டி என்றால் என்ன? வேச்யா என்று பொருள்
கெட்ட அர்த்தத்தில் உபயோகிப்பார்கள் இதை அந்த தெலுங்கு மாணவனுக்கும் விளக்கினேன். அவன் தன் அழுகையை
நிறுத்தி விட்டு விழுந்து விழுந்து சிரிக்கலானான். பின் என்ன? அந்தப் பையன் அரைகுரை ஆங்கிலத்தில் போடு போட நட்பு தொடர்ந்து சீட்டு கச்சேரியில் முடிந்தது.
அவன் இறங்கும் இடம் வந்ததும் கை குலுக்கி கீழே இறங்கி அவனை அனுப்பி வைத்த விதம் மனதைத் தொட்டது
மொழிதெரியாத பிரச்சினை எதில் கொண்டுவிட்டது பாருங்கள்
நல்ல வேளை நான் இருந்தேனோ அவன் பிழைத்தான் இல்லாவிட்டால் சினிமாவில் வரும் ஹீரோ வில்லன் சீன் தான்.
வேறொரு சம்பவம் சொல்கிறேன். ஒரு பாலக்காடு கல்யாணம் சாப்பிடும் சமயம் என் அருகில் ஒரு மலையாளி பெண் நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம்
அப்போது இருட்டிக் கொண்டு மழை ஆரம்பமாயிற்று
"ஓ தூற்றல் போடுகிறதே! என்று நான் இழுத்தேன்,,,
எந்தா இங்கன பறையுன்னது ஊணு கழிக்காம்போது"

ஒருமாதிரி முகம் மாற்றிக்கொண்டாள். அதன் அர்த்தம் தெரிந்த்து கொண்டபின் எனக்கே
ஒரு மாதிரித்தான் இருந்தது .
எல்லா மொழியையும் வரவேற்போம் விரும்பிக் கற்போம். ஆனால் தாய் மொழிக்குத்தான்
முதலிடம்.

வாழ்க தாய் மொழி..!

விசாலம்

Thursday, March 29, 2007

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

"ஹேப்பி வெட்டிங் டே அப்பா"
இது என் பெண்ணின் குரல்,
இனிமையான குரல்,
அணைத்துப் பிடித்தேன்,
"தேங்க் யூ.." என் செல்லமே என்றேன்
என் மனைவியைப் பார்த்தேன்.
கன்னம் சிவக்க என் சாந்தி சிரித்தாள்,
சாந்தமான குணம்,
வீட்டில் அவளால் சாந்தி.
பத்து வருடங்கள் முன்.
என் மனம் அசைபோட்டது.
இதே தேதி.
உள்ளே நுழைந்தேன்.
கட்டிலும்,மணக்கும் பூக்களும்
வா வா என்று அழைத்தன.
ஆனால் என் முகத்தில் சந்தோஷமில்லை,
ஆர்வமில்லை,சிரிப்பும் இல்லை,
இந்த நாள் இப்படியா?
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
வந்தாள் என் கனவுக்கன்னி,
அருமைக்காதலி,
இன்று என் மனைவி.
எங்கள் காதல் ஒரு புனிதக்காதல்,
நான்கு வருடங்கள் காத்தகாதல்
விரல் நுனிகூட படாத காதல்
இந்த நாள் வருமா என்று ஏங்கிய காதல்
ஆனால் இன்று,
இந்த நாள் ஏன் வந்தது ?
என் மனம் கனத்தது.
எதிர் காலம் இருட்டானது,
உள்ளேஇடி இடித்தது.
என் கனவுக்கன்னி சாந்தி அருகில் .
சற்று நேரம் மௌனம்
கடிகாரம் டிக்..டிக்..என்றசத்தம்
"எனக்கெல்லாம் தெரியும்"
மொழிந்தாள் அவள்
நான் அவள் கையில் முகம் புதைத்தேன்
கண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது
ஆண்கள் அழலாமா? நான் அழுதேன்
அவள் தடுக்கவில்லை.
"எப்படி இது………"
என் மேல் முழு நம்பிக்கை.
கிராமத்தில் வைரஸ் சுரம் வந்தது
ஒரு இஞ்சக்ஷன் ….முடிக்கவில்லை நான்
"எப்போது தெரிந்தது?"

என் சாந்தி கேட்டாள்
"ப்ளட் க்ரூப் டெஸ்ட்க்கு போன வாரம் போனேன்"
மேலே பேச முடியவில்லை,
விம்மினேன்.
என் தலையைக் கோதினாள் அவள்
உங்கள் நிழல் போல் நான் இருக்கிறேன்,
கவலை வேண்டாம்"
என்ன அன்பு, என்ன பாசம்
பிரமித்து போனேன்.


"மனப்பொருத்தம் தான் முக்கியம்.
இனி நாம் பிரும்மசாரி{ணி]
வாழ்க்கை என்றபடகை
அன்பு என்ற தோணியால்
அமைதியாக ஓட்டலாமே"
நான் சிலைபோல் ஆனேன்
அவள் எனக்கு பராசக்தி ஆனாள்.
"அப்போது நமக்கு குழந்தை?"
"காப்பகம் சென்று தத்து எடுத்து கொள்ளலாமே"
ஆமாம் என் எய்ட்ஸ்க்கு
அன்பு என்ற மருந்து தந்து,
எனக்கு உயிர் கொடுத்த சக்தி அவள்.
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
எனக்கு உயிர் கொடுத்த ரக்ஷகி அம்மா நீ
நான் என் நிலைக்கு வந்தேன் .
நன்றியுடன் அவள் கையைப் பிடித்தேன்.

அன்பினால் எய்ட்ஸ் யையும் குணப்படுத்தலாம்.


விசாலம்

the gift of Arunachala




Let us all remember the 125 birth anniversary of the lord Ramana maharishi welcoming rathayatra and also pledgetofollow his principles and preachings. i am oferingthis poem at his lotus feat with koti koti pranam.


A gift from Arunachala.





Thou are the sunwith valor andbrightness,
Thou are the full moon brigtining us with coolness.
Experiencing the death at the age of seventeen.
Overcoming the death and the victory was seen,
Researching what is ” i” asking ‘who am i” ,
Got enlightened ascending very high ,
Discarding the studies,deeply got into the meditation,
Thou were in the cave,for furthur realisation ,
The Gods grace showered the luminous light dazzeled,
The magic name Arunachala across your mind flash ,
Your flight from home to reach the distination ,
Thirsty to see the power with all perfection,

Threw away all thou had with only the cloth of loin.
With only thought the paramatma and atma to join,
The bliss from Arunachala was continuously blowing ,
Atman reveals itself the theme started showing
“Aham brmahsmi”shining up to the brim ,
In his preaching and principles let us all swim,
The name Venkatraman became maharishi ramana.
Thou are the embodiment of love and suguna,
The lord Arunachalas call made thou body fall,
That was the good friday saw the jyothis ball ,
Arose a magnificent light flashed and moved up
Mingling with Arunachala towards the north up.
r vishalam.

A house for sale

Here stands a house beautiful,
All liked it saying wonderful ,
Every part was built with out haste
planned for my son as his taste
every portion was built skillfully,
His room was decorated beautifully,
Brusely pictures were hung on one side
Tennis players were smiling on the other side
He liked that place ,for a month he stayed ,
situation was happy .till the life played
His super acheivement made us proud
As highly ambitious he went abroad ,
Waited eagerly for his arraival back,
Sitting on the bench alone in the park,
Years passed ,age increased ,
Tense increased stamina decreased ,
Knowing you are happy with settled life ,
losing interest to maintain the house big size ,
Like “Arjun” my mind was disturbed badly ,
but Geetha lectures lifted me up slowly ,
“follw the path of lotus leaf
do ur duty with unconditioned love”
Opened my eyes.,,,,good thoughts arose there.
“House for sale board was being hung there ,
Im sure many houses have the same tale ,
given to builder or a board for sale .
vishalam “

ஒரு ஆடு மனம் திறக்கிறது


ஆடி மாதம் வந்து விட்டால்,
அம்மன் கோவிலில் கொண்டாட்டம்,
எங்கள் வாழ்க்கை ஒரு பந்தாட்டம்,
எங்கள் இனத்திற்கு திண்டாட்டம்,
என் வயிற்றில் புளியைக் கரைக்க,
என் மகனை நான் தேடுகிறேன்,
இன்னும் எங்கே போனான் அவன் .
புல் மேய இவ்வளவு நேரமா?
திண்டாடிப் போனேன்
மனம் தவித்தேன்
ஓடி வந்தான் என் மகன்,
க்ழுத்தில் பூ மாலை நெற்றியில் மஞ்சள்,
கொம்பின் நடுவில் குங்குமம்
அழகாக மின்னினான் .

"அம்மா! எனக்கு பிறந்த நாளா?
ஏன் எனக்கு இந்த அலங்காரம்?"


மனதிற்குள் அழுதேன் அவனை நினைத்து


"மகனே உன் பிறந்த நாளில்லை இது
இன்று உன் மரண நாள்"
ஒன்றும் புரியாமல் அவன் விழித்தான்
நான் மே,,,மே,,, என்று அலறினேன்,
காந்தியை அழைத்தேன். கேட்டேன்
பார்த்தாயா? உன் அஹிம்சைக் கொள்கையை,
கீழே இறங்க முடியாமல் மேலிருந்தே வேதனைப்பட்டார்,
புத்தர், மகாவீரர், அன்னை தெரசா
என்று பலபேர் வந்து வந்து போனார்கள்.
என் கண் முன்னே.,
அவர்கள் பரப்பிய அஹிம்சை எங்கே?
ஜீவ காருண்ய தத்துவம் எங்கே ?
மனிதனின் சுய நலத்திற்கு
எங்கள் கழுத்தில் கத்தியா?
உங்கள் விரதம் நிறைவேற்ற
எங்கள் உயிர் தேவையா?
பலி கொடுக்கும் மக்களே
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
போன உயிர் திரும்புமா
அதைக் கொடுக்கத்தான் முடியுமா?

விசாலம்

வரலட்சுமியின் அருள்



வரலட்சுமி ஆம் வரங்களையெல்லாம் அள்ளி வீசும் அம்பாள் அவள்..இந்த நோம்பு வரும் வெள்ளியன்று வருகிறது. இந்த நோம்பை கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக விடாமல் நோற்று வருகிறேன்.அந்தப் பூஜைசெய்யும் போது ஏற்படும் ஆனந்தத்தை அளவிடமுடியாது. அவளை முறையுடன் சிரத்தையுடன் நம்பிக்கையுடன் வழிபட்டால் செல்வ செழிப்பு ஏற்படும் மனம் நிறைந்து இருந்தாலே செலவம்தானே,
பக்தியுடன் பூஜிப்பவர்களுக்கு அவள் வரங்களை அள்ளிக் கொடுப்பாள்.அருள் புரிவதில் அவளுக்கு நிகர்
அவளேதான்
ஆம் …இந்த லட்சுமி என்பவள் யார்? தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அடிக்கடி யுத்தம் நடந்துக்கொண்டே
இருந்தது அதில் இருவருக்கும் பெருத்த அளவில் செல்வங்களை இழந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டன.
அப்போது நாரதர் மூலமாக ஒரு வழி கண்டு பிடித்தனர், அதாவது தேவர்களும் அசுரர்களும் மந்தாகினி
மலையை மத்தாக்கி வாசுகியை கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தனர். அப்படிக் கடையும் போது ஜகஜ்ஜோதியாய்
தோன்றினாள் அவள்….மஹாலட்சுமி. அவளுடன் சந்திரனும் பின் அமிருதமும் தோன்றின. தேவர்கள் பூஜித்தார்கள். அவள் அங்கு இருந்த மஹாவிஷ்ணுவை மணந்தாள்,
இந்த நோம்பு ஆவணி மாதம் வரும் பூர்ணிமாவுக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப் படுகிறது
வாழை இலைப்போட்டு அதன் மேல் அரிசி பரப்பி பின் கலசம் வைத்து அம்மனின் அழகான முகம்
பொருத்தி அலங்காரங்கள் செய்து ஆரம்பிக்க வேண்டும் அப்போது அவள் ஆனந்த ஸ்வரூபமாய்
அழகு பிம்பமாக பலவித ஆபரணங்களுடன் ஜுவலிப்பாள். அந்த அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்
பிறகு கணபதி பூஜயுடன் ஆரம்பித்து 108 நாமாக்களுடன் அர்ச்சனை செய்துபின் தூபம், தீபம் கற்பூர ஆரத்தி என்று பூஜை முடிவடைகிறது . இந்திரன் அவளைப் பார்த்து பூஜை செய்த தோத்திரம் மிக மிக
சக்தி வாய்ந்தது கடன் இருக்காது, இழந்த பணம் திரும்ப கிடைக்கும், வறுமை இருக்காது நீங்கள் யாராவது
அதை விரும்பினால் எழுதி அனுப்புகிறேன் அதே போல் கனகதார தோத்திரம் ஆதி சங்கராசார்யார்
அவர்கள் ஒரு ஏழை குடிசை முன் பாட அவர் கூரையிலிருந்து தங்க காசுகள் கொட்டின.
பாரதியார் அவர்கள் வர்ணிக்கிறார்,

"பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
மின்னுகின்ற ரத்தினம் போல்
மேனி அழகுடையாள்,
அன்னையவள், வையமெல்லாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி.
பொன்னிரு பொற்றாளை
சரண் புகுந்து வாழ்வோமே"


பின்னர் ஒரு பாடலில் அவர் கூறுகிறார்

செல்வமெட்டுமெய்தி நின்னாற்
செம்மை ஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை- உலகில்
இல்லையாக வைப்பேன் ……….மலரின் மீதுதிருவே உன் மேல்மையல் பொங்கி நின்றேன்"
வையம் எல்லாம் ஆதரிக்கும் அந்த ஸ்ரீதேவியைப் போற்றுவோம் சிரத்தையுடன் பக்தியுடன் வழிபடுவோம்
அனைவரும் என் இல்லத்திற்கு வந்து அவள் அருளைப் பெறும்படி மனதார அழைக்கிறேன் -- விசாலம்

ஒரு விண்ணப்பம் யம ராஜனே

இந்தக் கவிதை ஒரு எதிர்மறை எண்ணங்களால் வந்தது இல்லை, என்க்கு இன்னும் நிறைய
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இன்னும் நிறைய சேவை செய்ய கடவுள்
சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் ,பின் ஏன் இதை எழுதினேன் ?

ஒரு நாள் ஒரு ஹாஸ்பிடல்
போயிருந்தேன் என் தோழியின் மாமியார் ரொம்ப மோசமான நிலையில் இருந்தாள் அந்தத் தோழி என்னிடம் "வீட்டிற்கும் ஹாஸ்பிடலுக்குமே நேரம் சரியாக இருக்கிறது என் கணவருக்கு இபோதுதான் வேலை உயர்வு கிடைத்திருக்கிறது, ஆகையால் லீவு எடுக்க
முடியவில்லை டென்சனில் ஓடாக தேய்ந்து போய்விட்டார் இந்தக் கிழவி கால் இழுத்து
கிடக்கிறாள் பாதி மயக்க நிலை ,,,20 நாளாக இதே வேலை அலுத்து போய்விட்டது ,,நீ ரெய்கி
கொடு ,,,,,என்று இழுத்தாள் ,அவள் எதற்கு ரேய்கி கொடுக்கச் சொல்கிறாள் என்று எனக்கு
புரிந்து விட்டது ,,,,,யாருக்காக பரிதாபப்படுவது? இதே போல பல அனுபவங்கள்,, எல்லாம் எழுதினால் உங்களுக்கு படிக்க நேரம் இராது ,, சரி கவிதையைப் படியுங்கள்,
ஒரு விண்ணப்பம் யமராஜனே,
மரணமே நான் உன்னை வரவேற்கிறேன்,
யமராஜனே என் கைகளை நீட்டி வரவேற்கிறேன்
கூடவே பிடி ஒரு விண்ணப்பம்,
வேண்டும் ஒரு கையொப்பம்,
பல நாட்கள் என்னைப் படுக்கையில் தள்ளாதே,
கோமா நிலையும் கொண்டு செல்லாதே,
முதல் நாள் ஆஸ்பத்திரி பரிவுடன் விசாரிப்பு,
பல நாட்கள் ஆனால் அதுவே மன சலிப்பு,
முதல் நாள் பழங்கள் ஹார்லிக்ஸ் வருகை,
போகப் போக உறவினர் வருவதும் நிற்கை,
மகனுக்கு வேலை பளு,,முகத்தில் டென்சன்,
தண்ணீர் போல் சிலவு, நடப்பது மௌனத்தில்,
குழந்தைகள் வருத்தத்தில், கவனக் குறைவு படிப்பில்,
உள்ளே வெளியே என்று அலையும் மருமகள்
என்று கஷ்டம் விடியும் என்று ஏங்கும் மகள்,
தேவைதானா இவைகள் எனக்கு ?
இப்போது புரிந்ததா உனக்கு ?
மரணமே உன்னை வரவேற்கிறேன்
கூடவே ஒரு விண்ணப்பம் தருகிறேன்,
பேசியபடியே என் உயிர் போகவேண்டும்.
கடவுள் நாமத்தில் நான் மரிக்க வேண்டும்
பிரார்த்தனையின் போது என்னை அழைத்து கொள்,
காலை நேரம் என்னை எடுத்துக் கொள்,
பள்ளி விடுமுறையாக இருக்கட்டும்
மழையும் கொட்டாமல் இருக்கட்டும்,
செத்தப் பின்னும் என் தலை உருள
சனிகிழமை என்னை அழைக்காதே
"சனிப் பிணம் தனிப்போகாது" என்று
இறந்த பின்னும் பெயர் கெடுக்காதே!
அஷ்டமி நவமியைத் தவிர்த்துவிடு,
விபத்தின் மரணைத்தை நிறுத்தி விடு,
போலீஸ் வரும் என்ற கவலை !
போஸ்ட்மார்ட்டம் என்ற தொல்லை
என் வாயில் ராம் ராம் சொல்ல விடு
புனித கங்கையை முழுங்க விடு
மரணமே உன்னை வரவேற்கிறேன்,
கூடவே ஒரு விண்ணப்பம் கொடுக்கிறேன் ,,
அன்புடன் விசாலம்

ரக்ஷா பந்தன்

எங்கு மேடைப் பேச்சு இருந்தாலும்,சிறு கூட்டமாக இருந்தாலும்
"என் அன்பு சகோதர சகோதரிகளே என்று அழைக்கிறோம்."
"India is my country .we r all brothers and sisters "
என்று பள்ளி அசெம்பிளியில் சத்தியப் பிரமாணம்
எடுக்கிறோம். ஆக சகோதர அன்பு என்பது அளவெடுக்க முடியாத ஒன்று அப்படிப்பட்ட அன்பை மேலும் வெளிப்படுத்தும் நாளாக வருகிறது,ராக்கி பண்டிகை வட நாடு முழுவதும் கொண்டாடும் இந்தப் பண்டிகை
மிகவும் அர்த்தம் உள்ள பண்டிகை..நான் பலவருடங்களாக அங்கேயே இருந்ததால் நானும் இதைக் கொண்டாடுகிறேன் நம்பிக்கையில் இருக்கும் என் பாசமுள்ள சகோதரர் எல்லோருக்கும் மானசீகமாக
ரக்ஷைக் கட்டுகிறேன் அன்னையின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க என் வாழ்த்துக்கள்
இந்த ராக்கி என்றால் என்ன? புராண கதை என்ன? பார்க்கலாம்
இது ஒரு அன்பு பந்தம் சகோதரன் சகோதரியைப் பாசத்தால் கட்டு போடும் ஒரு அன்பு பாலம் இது சிராவண
பூர்ணிமாவில் வருகிறது இதற்கு வயதோ ஜாதி பேதமோ கிடையாது சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய சுபீட்சத்திற்கு ப்ரார்த்தனையும் செய்கிறாள்,பதிலுக்கு அவளுக்கு நிறைய பரிசுகள்
கிடைக்கின்றன முன் காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்குக் போகும் முன் இரத்த திலகமிட்டு, கையில் ரக்ஷையும் கட்டி “வெற்றியுடன் திரும்பி வா”என்று வழி அனுப்பி வைப்பார்கள். இவர்களில் சிலர் முஸ்லிம்
பெண்ணையும் சகோதரியாக எற்றது உண்டு. மஹாபாரதக் காலத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் துருதிராஷ்டருக்கு
வரப் போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ரக்ஷை கட்டிக்க சொல்கிறார்
பலி சக்கிரவர்த்தி விஷ்ணுவின் பெரிய பக்தர்.விஷ்ணு பலியின் ராஜ்ஜியத்தைக் காக்க சத்தியம் கொடுத்ததால்
வைகுண்டத்தை விட்டு வந்தார் லட்சுமி தேவி விஷ்ணுவிடம் இருக்கப் பிரியப்பட்டு ஒரு பெண் வேஷம்
தரித்து பலையிடம் அடைக்கலம் புகுந்தாள் அப்போது பூர்ணிமா தினம் அன்றுஅவனை சகோதரனாக
பாவித்து ராக்கி கட்டி விட்டாள் இது வடக்கில் நம்பும் புராணக் கதை.
புராணங்கள் எப்படி இருந்தாலும் எல்லோரையும் சகோதர சகோதரியாக்ப் பார்க்கும் நல்லெண்ணம்
வந்துவிட்டால் AIDS என்ற பெயரே இருக்காதே .இல்லையா?
ராக்கி வாழ்த்துக்கள் ……….விசாலம்

இதயத்தில்...முள்!

அழகாக பிறந்தாள் என் மகள் ,
தாய்மை பூரிக்க பாலூட்டினேன்,
பிரசவ விடுமுறை முடிய ,
காரியாலயம் என்னை அழைத்தது
என் செல்லக்குட்டியின் அம்மா
இப்போது என்னைப் பெற்ற அம்மா,,
என் பால் ரவிக்கையை நனைக்க
அவள் நினைவில் கண்ணீர் பெருக,
அவளுக்காகத்தானே சேர்க்கும் பணம்,
ஆனது என் மனம் சமாதானம்
“பெண் என்றாலே நகை வேண்டும்
வரதக்ஷணைக்கு பணமும் வேண்டும்
“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்,
அவள் கண்கலங்காமல் பார்த்துக் கொள்,”
அவளின் தந்தை துபாயில் ,
ஆடுகிறது என் எண்ணங்கள் ஊஞ்சலில் ,
பகலெல்லாம் பாலூட்டி ,
நாளெல்லாம் சீராட்டி
பார்த்து பார்த்து சோறூட்டி
அவள் புகழைப் பாராட்டி
என் அன்னை இன்று
அவள் தாயானாள் ,
நடுவில் கணவரின் ஆசைத் தீர்க்க
ஒரு ஆறு மாதம் துபாய் போதல்
அவள் நினைப்பில் மனம் உருகி
ஓடி வந்தேன் ஆவலுடன்
என் செல்ல மகளை அள்ள
அலுப்பில்லாமல் இரு கை நீட்டி
"வா" என்று அவளை அழைக்க
"நீ வேண்டாம்..! இதுதான் என் அம்மா "
என்று முகம் திரும்பும் அவள்
என் இதயத்தில் குத்தினாள் முள்
"உன் அம்மா எங்கே ? என்று
நண்பர்கள் கேட்க
பிஞ்சு விரல் என் தாயைக் காட்ட
சாட்டையினால் விழுந்தது ஒரு அடி ,
என் அம்மா முகத்தில் பெருமிதம்
அதுவே அவளுக்கு சம்மதம்
என் தங்கத்திற்கு தங்கம் தேட
இழந்து விட்டேன் ஒருவைரத்தை
கூழோ கஞ்சியோ குடித்தால் போதும்
என் மகளின் அன்பு கிடைத்தால் போதும்..!

அன்புடன் விசாலம்

தியானம் 3

அடுத்ததாக நான் கற்றுக்கொண்டது ஈசா த்யானம். இது ஸ்ரீ ஜக்கிவாசுதேவ்ஜி என்பவரால்
நடத்தப்படுகிறது. ஈசா என்றால் ஒரு ஆளும் சக்தி எனலாம். அதற்கு உருவமில்லை.
ஆனால் கடவுள் தன்மை உண்டு. அதற்கு உருவம் கொடுத்தால் ஈச்வரன் ஆகிறான்.
ஜகதீசா என்றும் ஜகதீச்வரன் என்றும் நாம் கூப்பிடுகிறோம். ஈசா த்யானத்தில் நாம்
தீக்ஷை எடுத்து கொள்ள வேண்டும். அங்கு சூன்ய தியானம் கற்றுக் கொடுக்கிறார்கள்.
சூன்யம் என்றாலே ஏதும் அற்ற நிலை. அதை வேறு ஒன்றிடம் ஒப்பிடமுடியாது.
மனதை ஒருமைப்படுத்தி எண்ணங்கள் வந்தாலும் வலிய தடுக்காமல் ஓடவிட்டு பின் ஒரு எண்ணமும் இல்லாமல் இருக்கும் போது சூன்யதியானத்தில் ஈடுபடவேண்டும்.
எல்லா தியானத்திற்கும் முடிவு ஒன்றுதான். எப்படி பல நதிகளின் நீளம் திசைகள்
மாறி இருந்தாலும் முடிவில் கலப்பது கடலில்தான். சில நதிகள் சுலபமாக கலக்கிறது.
சிலமேடு பள்ளம் ஏறி வந்து பின் கலக்கிறது.
நாம் குண்டலினி தியானத்தை எடுத்துக் கொண்டால்... ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள உயிர் சக்தி குண்டலினி தான். அதைப் பாம்புடன் ஒப்பிடுகிறார்கள்.
பாம்பு அசையாமல் இருக்கும் போது நமக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் கொஞ்சம் நகர ஆரம்பிக்கும் போது
தான் பாம்பு இருப்பதே நினைவுக்கு வரும். அதே போல் குண்டலினி அசையும் போதுதான் நாம் அந்த சக்தியை
உணரமுடியும். அது நம் ஏழு சக்ரங்களைத் தாண்டி கடைசியில் ஸஹஸ்ராரா சக்ராவைத் தாண்டும்போது
தான் பேரானந்தம் கிடைக்கிறது. அந்த குண்டலினி சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக அசைய வைத்து
மேலே ஏற்றுவது ஒருவிதமான யோகம் வேதாத்திரி
மஹராஜ் "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்த நம் பாபங்கள்
விலகி தியானம் விரைவில் சித்திக்கும் என்கிறார். அங்கு குருவே குண்டலினியை எழுப்பி விடுகிறார்கள்
குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அவர்கள் பயிற்சியில்
ஸோஹம் என்ற சொல்லை ஜபித்து நம்மை தயார்
ஆக்குகிறார். ஸோஹம் என்றால் நான்தான் அது”
என்று அர்த்தம் என நினைக்கிறேன் அதாவது நான் தான்
ப்ரும்மம் “என்று சொல்லப்படுகிறது அதை சுதர்சனக்ரியாஎன்கிறர்கள். உள்மூச்சு,வெளிமூச்சு என்று மாறி மாறி விட்டுக்கொண்டே பயிற்சி செய்ய
வியாதிகளே அண்டுவதில்லை. இதை ஆத்ம க்யான யோகா என்கிறர்கள்.
ஆல்ஃபா த்யானம் மிக எளிமையான ஒன்று. அதை நடத்துபவர் டாக்டர் விஜயலக்ஷ்மி …கையில் ஆல்பா முத்திரை எடுத்து, தியானம் செய்ய வாழ்க்கையில் அடையாதது ஒன்றுமில்லை. தியானத்தின் போது பிரபஞ்சத்தின் சக்தியை
ஒளியை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை பரவவிட்டு நம்மை சுற்றி சக்தி காப்பு போட்டுகொண்டு தியானம் ஆரம்பிக்க வேண்டும்
ஆழ்மனசக்திதான் மிகப்பெரிய சக்தி. அதை உணர்ந்து அதை திறக்கும் வழிதான் ஆல்பா தியானம். அப்படி திறந்து விட்டால்
டால் வெற்றி, தெளிந்த சிந்தனை, நிம்மதி எல்லாம் கிடைக்கும்.
அடுத்தது பிரமிட் தியானம் நம் மூக்கை பிரமிட் போல பாவித்து
கைகளைக்கோர்த்து கால்களை ஒன்றன் மேல் வைத்து நம் மூச்சில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் உள்மூச்சு வெளிமூச்சு விடுவதை கவனமாக அனுபவித்து நம்மால் முடியும் வரை செய்யலாம் இதை
ந்டத்துபவர் டாக்டர் பத்ரிஜி .பிரமிட்குள் நிறைய விஷயங்
கள் உள்ளன பின்னால் அதை பற்றிச்சொல்லுகிறேன்
இதே போல் மஹெஷ் யோகி நடத்தும் தியானமும்
சிறப்பாக உள்ளது இன்னும் பல வகை தியானம் இருக்கின்றன. விபாசனா தியானம், காயத்திரி தியானம் சித்த சக்தியின் த்யானம் போன்றவைகள். எழத ஆரம்பித்தால் ப்ட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.
எல்லாவற்றிலும் சுலபமான தியானம் என்னவென்றால் நாமஸ்மரணம் கடவுக்காகவே பாடும் இசை.
மும்மூர்திகளான தியாகராஜர், தீக்ஷதர், ச்யாமா
சாஸ்திரிகள் தங்கள் பாட்டுக்களினாலேயே கடவுளை
கண்டனர். சங்கீதத்தையே தியானம் ஆக்கினார்கள்
மீராபாய் க்ருஷ்ண்ரிடமே கலந்து விட்டாள்
வள்ளலார் ஜோதியிலேயே சக்தியைக் கண்டார்.
முழு சமர்ப்பணத்துடன் செய்யும் தொழில், எல்லாவேலைகளிலும் கடவுளைக் காண்பது என்பது எல்லாமே த்யானம்தான்.
கவிஞர் பாரதி சொல்கிறார்
"எண்ண்மிட்டாலே போதும்…………..
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதைவுள்ளுவதே போதுமடா
காவித்துணி வேண்டா, கற்றை சடை வேண்டா
பாவித்தல் போதும் பரமனை எய்வதற்கு,
சிவமென்றேயுள்ளதெனச் சிந்தை செய்தால்
போதுமடா"
நித்தசிவ வெள்ளமென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை ஒன்றே
போறுமடா.”
பகவான் பாபா சொல்கிறார் " எப்போது நீ அதிக அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டாயோ, அதிக பேச்சைக் குறைத்துக்கொண்டாயோ, அதிக சேவையில் மனம் ஈடுபட்டதோ அப்போது உனக்கு த்யானம் நன்றாக வந்து விட்டது என்று பொருள் கொள்"
முடிவாக நான் சொல்வது

அன்பு உயர பண்பு உயரும்.

பண்பு உயர ஒழுக்கம் உயரும்

ஒழுக்கம் உயர,தியானம் வளரும்

தியானம் வளர ஒளி மிளிரும்,

ஒளி மிளிர வாழ்வு ஓங்கும் .

வாழ்வு ஓங்க.சாதனை ஓங்கும்

சாதனை ஓங்க இலட்சியப்பூர்த்தி………………

விசாலம்

தியானம் 2

ஆனந்தமயீ சைத்தன்யமயீ சத்யமயீ பரமே.
தியானம் தொடருகிறது. தியானம் ஆழ்மனதிலிருந்து வரும் சக்தியால் தன்னையே அறிதல்எனலாம்.

அதற்கென்று பலமணிகள் காட்டினிலே அல்லது தனிப்பட்ட இடத்திலே
உட்ககார்ந்து தியானம் செய்ய தேவையே இல்லை. அன்புடன் ஒரே சிந்தனையுடன்,
ஒரே சித்தத்துடன், ஒரே இலட்சியத்துடன் தியானித்தாலே போதும். அந்த நேரம் நம் ஒரே குறிக்கோள் கடவுள்தான். நினைப்பது அந்த சக்தியை. நம் மூச்சும் அதுவே, அன்பும் அதுவே,
வசிப்பதும் அதுவே, ஸர்வம் பிரும்ம மயம். இது நிச்சயமாக அறிவு சம்பந்தப்பட்டது இல்லை. இதை அறிவுடன் சம்பந்தப்படுத்தினால், சிதறிப்போகும். வாக்குவாதங்கள் வளரும்.
உள்ளே ஆழமாகப் போவதற்குபதில், சிதறிப்போகும்.இது முழுமையாக ஆத்மா சம்பந்தப்பட்டது.
இல்லறம். துறவறம் நமக்கு தெரிந்ததே. அன்னை கூறுகிறாள்... ”துறவறத்தின் சிறப்புக்கள் தியானம், தபஸ் போன்றவை. ஸன்யாசி யோகி, ரிஷி போன்றவர்களுக்கு இந்த சிறப்பு உண்டு. ஆனால் நாம் இல்லத்தில் இருந்துக்கொண்டே துறவறத்தின் உயர்வுகளை நாம்
கொண்டு வரலாம். அப்போது நம் வாழ்வு பூரணம் பெறுகிறது. அதைப் பெற ஆன்மா வாழ்விலிருந்து வெளி வந்து வாழ்வை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே பூரண யோகம்.
பகவான் அரவிந்தர் கூறுகிறார் "குணங்களைத் தூய்மை படுத்தினால் வாழ்வு தூய்மை
படுகிறது.தூய்மையான வாழ்வு அதன் ஆன்மாவுக்குவிடுதலை அளிக்கிறது.வாழ்வின்
ஆன்மா வெளி வ்ந்து பூலோக ஸ்வர்கம் ஆக்குகிறது "

"purified mind move to touch the purified spirit
purified life permits purified soul to emerge into life "

இதுவே தியானத்தின் தத்துவம்.. இவ்வளவு ஆழமாக போக.நாம் பக்குவம் ஆகாததால்
ஒருமுகமாக சமர்ப்பணத்துடன் கடவுளுடன் நேரில் பேசுவது போல் பேசினாலே நமக்கு
பலன் கிடைக்கும். நம் கண் எதிரே ஒரு மீரா, ஒரு ஆண்டாள், ஒரு நந்தனார் இவர்களைப் பார்க்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தெய்வமாகலாம். சிறிது முயற்சி,
சிறிது உழைப்பு,முழு நம்பிக்கை இருந்தால் உள்ளே ஒளிந்திருக்கும் தெய்வத்தன்மையை தேடி அதனுடன் ஒன்றி சைத்திய புருஷனை வெளிக்கொணரலாம்.
ஆனாலும் இந்தப் பக்குவத்தை அடையஒரு குரு தேவை.குரு கிடைப்பதும் நம் பூர்வ புண்யம்தான் தானே கற்று செய்வதைவிடஒரு குருவின் ஆசியுடன் செயவதுமிக சிறப்பு
ஆசீர்வாதத்திற்கு அவ்வளவு பலன். அவர் நம்மை தியானம் மூலம் உயர்துகிறார். தகுந்த
சமயத்தில் நம் ஆர்வத்திற்கேற்ப கடவுளே தகுந்த குருவை நமக்கு அனுப்பி வைக்கிறார்
நான் முதலில் கற்றுக்கொண்ட தியானம் ராமகிருஷ்ண மடம் டில்லியில். அங்கு தீக்ஷை
எடுத்து மூலமந்திரத்தை ஜபிக்க வேண்டும் குருவை நம் கண் முன்னால் நிறுத்திக் கொள்ளல் வேண்டும். அதன் பின் எடுத்த தியானம் தீப ஒளி தியானம் பகவான் பாபா
வினுடையது. மிகவும் எளிமையானது. சக்தியானது. விடிகாலையில் மனதை தூய்மை
யாக வைத்து ஒரு ஆசனத்தில் அமர்ந்து ஒரு சின்ன விளக்கு அல்லது மெழுகு வர்த்தி
ஏற்றி அன்புடனும் சிரத்தையுடனும் அந்த சுடரை ஒன்றி கவனித்து அந்த ஒளியை
இரு புருவத்திற்க்கு நடுவில் கொண்டு வந்து, பின் அதை நம் இதயத்திற்கு கொஞ்சம்
கொஞ்சமாக நகர்த்தி அன்பை ஒரு தாமரை மலர்போல் பாவித்து ஒவ்வொரு இதழாக
விரிய விட வேண்டும். இப்போது அந்த ஒளி பெரிதாக வளர்ந்து உடல் முழுவதும் பரவி
நம்மை அந்த தெய்வத்தன்மைக்கு அழைத்துப் போகிறது. தினம் ஒருமுறை இதை பழக
எண்ணங்கள் புனிதமாகி, மனிதனும் தெய்வ சக்தி பெறுகிறான்………….மேலும் வளரும்

தியானம்

ஒம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய .அன்னைக்கு சமர்ப்பணம்.

பாசிடிவ் ராமா என்னை தியானத்தைப்பற்றி எழுதும்படி அன்பு வேண்டுகோள் விடுத்தார் .

என் சிற்றறிவுக்கு எட்டியவரை முயற்சி செய்கிறேன். தியானத்தைப்பற்றி பல பெரியவர்கள்,பல வழிகளில் கற்றுக் கொடுக்கிறர்கள்.அதாவது சிதறிக்கிடக்கும் எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து.கடைசியில் எண்ண ஓட்டங்களே இல்லாமல், மனதை ஒருமைப் படுத்துவது தியானம். அப்போது நம் மூச்சு ஓட்டம் தான் ந்ம் கவனத்தில் வரும் ..நிறைய பயிற்சிக்குப்பின் அதுவும் மறையும். இந்த நிலையை

அடைந்தால் பேரானந்தம் கிடைக்கும் என்கிறார்கள், அதை அனுபவித்தவர்கள்.

இதற்கு முன்,

தியானம் செய்ய நம் உடலை அதற்கு தகுதி ஆக்கிக் கொள்ள வேண்டாமா?அழுக்கு உடல் மீது புது சட்டைப் போட்டுக் கொண்டால் உள்ளே அழுக்கு போய் விடுமா?

மனதில் இருக்கும் அழுக்கை அகற்றினால்தான் தியானம் செய்யும் தகுதி நமக்கு ஏற்படும்.

எல்லாவ்ற்றுக்கும் மனம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.சுத்தமனம்,அசுத்தமன்ம் என்று இரண்டு வகை பிரிக்கலாம். அசுத்த மனம் அதிகம் தத்தளிக்கிறது. இந்த தத்தளிக்கும் மனத்தை அடக்க உதவுவது தியானம். அலை பாயும் மனம் தியானத்திற்கு ஒவ்வாது.

அழுக்கன் மனத்தில் எண்ணங்களின் ஓட்டம் ஓடிக்கொண்டே இருக்கும்.

கலங்காத நீரில் நிலவின் பிரதிபிம்பம் நன்கு தெரியும். ஆனால் கலங்கிய குட்டையில்

இருட்டுதான் நிலவும்.”மனம் ஒரு குரங்கு ,மனித மனம் ஒரு குரங்கு”என்ற பாடல் நினைவுக்கு வருகிறது தாவிக்கொண்டே இருக்கும்.அதை நிறுத்த அன்பு என்ற கடிவாளம் தேவை.

தினசரி செய்யும் வேலையில் நாம் நம்மை தியானத்திற்கு

தயார் செய்து கொள்ளலாம். வீடு கூட்டும் போது நம் மனதிலிருக்கும் குப்பைகளையும் கூட்டிவிட்டோம் என்று

எண்ணுவோம். மிக்ஸியில் அரைக்கும் போது நமது

அகங்காரம்,பொறாமை,போன்ற தீய குணங்களையும்

பொடிப்பொடியாக அரைத்து விட்டதாக எண்ண வேண்டும்

ரொட்டி வட்டமாக இடும் போது நம் உள்ளிருக்கும் அன்பு

சிறு வட்டத்திலிருந்து பெரிதாக வளர்ந்து கொண்டே

போகிறது என்று எண்ணலாம். எந்த வேலை செய்தாலும்

கடவுளுக்கே என்று அர்ப்பணித்து சிரத்தையாக செய்தால்

அதனால் உண்டாகும் பலன்கள் பல. கோவில்களில் பிரசாதம் மணக்க பொங்கல்,புளியோதரை ருசி பார்க்காமல் செய்யப்படுகிறது. ஆனாலஅதன் ருசியோ தனிதான். ஏன் ? எம்பெருமான் பிரசாதம் என்று அன்பு உள்ளத்துடன் செய்யப்படுகிறது. அதை சாப்பிடும் நமக்கு ஒரு கெடுதலும் வருவதில்லை. ஆனால் நல்ல ஹோட்டலில் சாப்பிடும் போது சிலசமயம் வயிறு கெடுகிறது. ஏன்?.. சமைப்பவரின் எதிர் மறைவு எண்ணங்களால் வரும் அலைகள், செய்யும் பதிவாகி நம்மை வந்து அடைகிறதுஆகையால் எங்கும் அன்புதான் மூலகாரணம். அதை எல்லா காரியங்களுக்கும் பயன் படுத்தவேண்டும். எல்லோரையும் அன்புடன் பார்க்க

கடவுள் நமக்குத்தெரிவார். இந்த சூழ்நிலையை

வளர்த்தால் நாம் தியானம் செய்ய தகுதியாகிவிட்டோம்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று பேசுகிறோம். அந்த வேலையை கோவிலுக்கு நுழைந்து செய்வது போல்

செய்தால் அவர்களுக்கு தியானம் நன்கு வரும்.

காலையிலும் மாலையிலும் மன உளைச்சல் இல்லாமல் சஞ்சலமில்லாமல் அமைதியாக் இருக்க பழக்கிக் கொள்ள வேண்டும். மனதில் இருக்கும் சிந்தனை ஒட்டங்களை

சிறிது சிறிதாக குறைத்து மௌனத்தைக் கடைப்பிடிக்க

வேண்டும். காலை, மாலயில் நாம் செய்த நல்ல காரியங்களையும் கெட்ட காரியங்களையும் கணக்கிட்டு செய்யத்தகாத காரியங்களை படிப்படியாக குறைத்து

நம் வாழ்க்கையை உயரும்படி செய்தால் அல்லது இதனால் நம் வாழ்க்கை தரம் உயர்ந்தால் நாம் தியானம் செய்ய தகுதியாகிவிட்டோம் நமக்குள் ஒரு அரிச்சந்திரனோ, ஒரு புத்தரோ, ஒரு துகாராமோ குடிகொண்டிருக்கவேண்டும். நம் மனதில் தேளுக்கும்

ஓர் பாம்புக்கும் அதாவது சாத்தான் போன்ற

குணங்களுக்கும் இடம் கொடுத்தால் எங்கிருந்து தியானம் வரும்? சரி இப்போது நாம் தயார் ஆகி விட்டோம்

தியானத்திற்கு. …………………………

வளரும். விசாலம்

Saturday, March 24, 2007

ஸ்ரீ ஹனுமான் சாலீசா


ஸ்ரீ ராமருக்கு இதைச் சமர்பிக்கிறேன் ஸ்ரீ ராம நவமிக்குள் இதை முடிக்க ஒரு உத்தரவு
உள் மனதில் {intuition } எழுந்து அதை நிரூபிக்கும் வகையில் சனிக்கிழமையன்று என் தோழி
ஸ்ரீ ஹனுமான் சாலீசா புத்தகம் கொடுத்து அதின் அர்த்தமும் கேட்டாள்,,,,,அதனால் நான்
இதைப் பக்தி சிரத்தையுடன் உங்களுக்கு படைக்கிறேன் ஜய் போலோ ஹனுமான் கீ ,,,

ஸ்ரீ குரு சரந ஸரோஜ ரஜ நிஜ மனு முகுரு ஸுதாரி !
பர்ந உம் ரகுபர பிமல ஜஸு ஜோ தாயகு பல சாரி ,,

ஸ்ரீ குருவின் பாதாரவிந்தத்தில் இருக்கும் மகரந்த பொடிகளால் என் மனம் என்ற கண்ணாடியை தூய்மை ஆக்கி தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்தங்களைக் கொடுக்கும்
ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின் புகழை வர்ணிக்கிறேன்


2 புத்தி ஹீன தநு ஜனிகெ ஸுமிரௌம் பவன ,குமார் ,
பல புத்தி பித்யா தேஹூ மோஹிம் க்லேச பிகார,,


ஹே ! வாயு புத்திரனே என்னுடைய உடலும் புத்தியும் பலம் குன்றியவை இதை நீங்கள்
அறிவீர்கள் என்னுடைய எல்லா கவலைகளையும் விகாரங்களையும் அழித்து விடுங்கள் பிறப்பு இறப்பு என்பதே கிலேசங்கள் நான் தங்களைத் தியானிக்கிறேன்,,,,,,,

சௌபாயீ ,,,,,,,
1
ஜய ஹனுமான் ஞான் குன ஸாகர்
ஜய க்பீஸ திஹூம் லோக் உஜாகர்,,
2 ராம் தூத அதுலித பல தாமா ,
அஞ்சனி .புத்ர பவன ஸுத நாமா

ஹே அனுமான் தங்கள் ஞானம் குணம் ஆழ் கடலைபோல் ஆழம் காண்முடியாதது
ஹே வானரத் தலைவனே மூன்று லோகங்களிலும் தங்கள் புகழ் ஒளிர்கிறது

ராமதூதனே ஈடு இணையற்ற பலம் கொண்டவரே அஞ்சனைப் புத்திரனே வாயு புத்திரனே

3 மஹா பீர பிக்ரம பஜரங்கீ
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ
கஞ்சன பரந பிராஜ ஸுபே
காநன குண்டல் குஞ்சித கேஸா

ஹே மஹா வீரரே பாராக்கிரமரே வஜ்ரம் போன்ற உடல் பெற்றவரே துர்புத்துயை அகற்றி நற்புத்தியை பகதர்களுக்கு அளிக்கிறீர்கள் பொன் போன்ற உடல்
காதுகளில் சுருண்ட கேசம் இவைகளுடன் தங்கள்
அழகு மிளிர்கிறது

5ஹாத பஜ்ர ஔ த்வஜா பிராஜை
காந்தே மூஞ்ஜ ஜநேஊ ஸாஜை
6 ஸங்கர ஸுவன கேஸரிநந்தன
தேஜ ப்ரதாப மஹா ஜக வந்தன

கைகளில் வஜ்ராயுதமும் கொடியும் விளங்க
தோளில் தர்பத்தால் ஆன பூணல் அணிந்து இருக்கிறீர்கள்
சிவபெருமானின் அவதாரமே கேசரியின் மைந்தரே
உங்கள் தேஜஸும் பராக்கிரமும் சொல்லி முடியது உலகமே உங்களை வணங்குகிறது

7 பித்யாவாந குநீ அதி சாதுர
ராம காஜ கரிபே கோ ஆதுர
8 பிரபு சரித்ர ஸுநிபே கோ ரஸியா
ராம லஷண ஸீதா மந பஸியா

ஆழம காண முடியாத கலவிக் கடல் நற்குணங்கள்
நிறைந்தவர் திறமை மிக்கவர் ஸ்ரீ ராமனுக்கு சேவையே
முக்கியமாக கருதி அதில் நாட்டம் கொண்டவர்
ஸ்ரீ ராமனின் நற்குண்ங்களை கேட்டு மகிழ்ச்சி
அடைகிறீர்கள் ஸ்ரீராம் சீதா லஷ்மண் உங்கள் இதயத்தில் எப்போதும் குடி கொண்டுள்ளார்கள்,
அவரகள்து இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்

9 ஸூக்ஷம ரூப தரி லங்க ஸங்ஹாரெ
ராம சந்திர கே காஜ ஸம்வாரே
10 பீம ரூப தரி அஸுர ஸம்ஹாரே
ராமசந்திர கே காஜ் ஸ்ம்வாரே

உங்கள் சிறிய உருவத்தை சீதைக்கு காட்டினீர்கள்
பயங்கர உருவத்தில் இலங்கையை கொளுத்தினீரகள்
பயங்கர உருவத்தில் அரக்கர்களை அழித்து விட்டீர்கள்
ஸ்ரீ ராமரின் காரியங்களை பூர்த்தி செய்தீர்கள்

11 லாய ஸ்ஜீவன லகன ஜியாயே
ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே
12 ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ
தும மம ப்ரிய பரதஹி சம பாயீ

ல்க்குவனின் உயிரை சஞ்சீவனீ மலையைக் கொணர்ந்து
வந்து காத்து உயிர் ஊட்டினீர்கள் ரகுபதியும் மகிழ்ந்து
பரதன் போல் ஒரு தம்பி என்று மார்புடன் அணைத்து
கொண்டார்

13 ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவைம்
அஸ கஹீ ஸ்ரீபதி கண்ட லகாவைம்
14 ஸநகாதிக பிரும்ஹாதி முனீஸா
நாரத ஸாரத ஸஹித அஹீஸா

"உன் புகழை ஆயிரம் நாக்கு கொண்ட ஆதிசேஷ்னும் பாடிக்கொண்டிருக்கட்டும் என்று சொல்லி ஸ்ரீ ராம்
உங்களை மார்புடன் தழுவிக் கொண்டார்
ஸநகாதி தெவரும் பிரும்மா நாரதர் ஸரச்வதி
ஆதிசேஷன் இவர்கள் புகழ்ந்தாலும் உங்கள் பெருமைக்கு
எல்லை ஏது?

15 ஜம குபேர திக்பால ஜஹாம் தே
க்பி கோபித கஹி ஸ்கே கஹாம் தே
16 தும உபகார ஸுக்ரீவஹிம் கீந்ஹா
ராம மிலாய ராஜ பதா தீந்ஹா

மேலும் யமராஜன் குபேரன் திக்பாலகர்கள் கவிஞர்கள்
வித்வான்கள் பண்டிதர்கள் இவர்கள் எவ்வளவு
புகழ்ந்தாலும் உங்கல் பெருமைக்கு எல்லை ஏது ?
தாங்கள் சுக்கிர்ரீவனுக்கு செய்த உபகாரம் மிகப் பெரிது
ஸ்ரீராமருடன் உற்வாக்கினீர்கள் அவரை அரசனாக்கி
விட்டீர்கள்

17 தும்ஹரோ மந்த்ர பிபீஷ்ந மானா
ல்ங்கேஸ்வர பயே ஸப ஜக ஜானா
18ஜூக ஸஹஸ்ர ஜோஜந பர பானூ
லீல்யோ தாஹி மதுர பல பானூ

உங்கள் அறிவுரையை விபீஷ்ணர் கேட்டார் அதனால்
அவர் இலங்கையின் அரசன் ஆனார் எல்லா இடத்திலும்
புகழ் பரவியது பல்லாயிரம் யோஜனைக்கு அப்பால்
இருந்த சூரியனை இனிய பழம் என்று நினைத்து தாவி
பிடித்தீர்கள்

19 பிரபு முத்ரிகா மேலி முக மாஹீம்
ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீம்
20 துர்கம் காஜ் ஜகத் கே ஜேதே
சுகம அனுகிரஹ தும்ஹரே தேதே

பிரபு ஸ்ரீ ராம்சந்திரரின் கணையாழியை தன் திருவாயில் வைத்துக் கொண்டு கடலைத் தாண்டிவிடீர்கள் அனாயசமாக அதில் ஒரு வியப்பும் இல்லை

உலகத்தில் எவ்வள்வு கடினமான காரியமும் சுகமாக தங்கள்: கருணையினால் எளிதாக முடிகிறது