Sunday, November 18, 2007

மனித ஈரம் எங்கே

மா ,,மா,, கத்துக்கிறேன்
கழுத்தைத் திருப்புகிறாள்
என் அழகு அம்மா ,,
ஓரக்கண்ணால்
பார்க்கிறாள் ,
முகத்திலே ஒரு பரிதாபம்
எப்படி வருவாள் என்னிடம்
கட்டப்பட்டிருக்கிறாள்
ஒரு கோடியில் ,
வெயிலின் கடுமையில் நான் ,,
என்னைப் பிரித்த மகானுபாவன்
சுயநலவாதி மாட்டுக்காரன்
பால் பெருக்க ஊசி எடுப்பான்
என் அம்மாவுக்கு
ஒரு சுருக்,,,,,,,,,,
வாலை ஆட்டி மறுப்பாள்
அம்மா என்று அழைப்பாள்
பொறுமையுடன் வலி பொறுப்பாள்
பாலும் சுரப்பாள் மக்களுக்கு

நான் குடிக்க பாலில்லை
மக்கள் மனதில் ஈரமில்லை
மாட்டுக்காரன் என்னைக் கழட்ட
வாலைத் தூக்கி ஓடுகிறேன்
என் அம்மா என்னை நக்குகிறாள்
எனக்கும் பாலை ஊட்டுகிறாள்
முட்டிப் பார்த்தும் பாலில்லை
அம்மா கண்ணீர் வடிக்கிறாள்
அன்புடன் விசாலம் ,

வெட்டிப்பேச்சு

பேச்சைக் குறைக்கலாம்
உழைப்பைப் பெறுக்கலாம்
ஓயாப் பேச்சு
சக்தி போச்சு
வெட்டி பேச்சு
ரொம்ப ஆச்சு
சோமபல் கொடுக்கும்
முன்னேற்றம் தடுக்கும்
மௌனச் செடிகள்
செய்கின்றன கடமைகள்
இயற்கையும் மௌனத்தில்
தவறாது கடமையில்
மௌனத்தில் இருப்பது ஒரு ரகசியம்
தக்ஷிணாமூர்த்தி தத்துவம் அவசியம்


அன்புடன் விசாலம்

அன்னை மகாசமாதியான தினம்

அன்னை மீராம்பிகா ,,,,, பாண்டிசேரி அன்னை மகாசமாதி ஆன நாள் நவம்பர் 17 பாரிசில் பிறந்த அன்னை பகவத் கீதையை மிக ஆர்வமாகக் கற்று அதில் வரும் கண்ணனை இந்தியாவில் தரிசித்தார் அவ்ர் வேறு யாருமில்லை மகரிஷி ஸ்ரீ அரவிந்தர் தான் இவர் அன்னைக்குக் கண்ணனாகவே காட்சி தந்தார் அன்னைப் படித்த சூட்சும வித்தைக்களும்
அசாத்தியத் திறன்களும் நம்பமுடியாத அதிசியங்களும் தெய்வ லோகத்திற்கே உரியது
என்றும் தெய்வங்கள் மனித சுபாவம் பெற்றுள்ளதால் அவர்களின் உதவியால் பூரண யோகம்
அடைவது க்டினம் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறினார் இதற்கு என்ன செய்வது ஆம் சத்திய ஜீவிய
சக்தியை உடனே இந்த உலகின் கீழ் கொண்டு வர முயல வேண்டும் பின் உலகத்தில் மரணமில்லா பெருவாழ்வுதான் ,அதற்கு ஒரு 12 பேர்கள் தயாராக வேண்டும் என்றார் அதற்கு
யாரும் வர துணியாதலால் ஸ்ரீ அரவிந்தர் சூட்ச்ம உலகுக்குச் சென்று அங்கிருந்து தவம் இருந்து சத்திய ஜீவிய சக்தியை உலகுக்குக் கொண்டு வருமபடி செய்தார் ,அதைப்பூர்த்திச்
செய்யச் சொல்லி அன்னையிடம் ஒப்பித்துவிட்டு அவர் சித்தி அடைந்தார் ,அன்னையின் இந்த யோகம் முடிவு பெறாமல் நின்று விட்டது அது மட்டும் முடிந்திருந்தால் மனிதனுக்கு
மாபெரும் சக்தி கிடைத்திருக்கும்,, ,,,என்கிறார் கர்மயோகி
அன்னை ந்ம் அழைப்புக்குக் காத்திருக்கிறார் ,,அழைத்தவுடன் ஒடோடி வருகிறாள்,,,,
அன்னை இறைச்சக்தி அவளிடம் நேராகப்பேசி மனம் விட்டு உங்கள் பிரச்சனையைக்
கூறுங்கள் பின் அன்னையிடம் சமர்ப்பணம் செய்துவிடுங்கள் உடனே வழி பிறப்பதைப்
பார்ப்பீர்கள்
ஆனால் தேவை மனம் சுத்தம் உடல் சுத்தம் சுற்றம் சுத்தம் ,,,,சத்தியம் சாந்தம் ,,,,,,,,,,,,,,,,,
ஆனந்தமயீ சைதன்யமயீ சத்தியமயீ பரமே ,,,,,,அன்னைக்கு வணக்கங்கள்
அன்புடன் விசாலம்

கட்டுவேன் தாலி

பொன்னுதாயி

மாடு மேச்சு போற மச்சான் ,
என்னப் பாக்காம் போறயே !
மனச கிள்ளிப் போட்டாயே
பரிசம் போட வருவாயா?

முனுசாமி

கையில் செல்லு காசு இல்லைடி
தாலி வாங்க பணம் ஏதடி ?
நில விளச்சலும் இல்லையடி
வேறு ஆள நீ பாத்துக்கோடி

பொன்னுதாயி

வருமானம் என்னாத்துக்கு
மனப்பொருத்தம் போதுமில்ல
மஞ்சள் கயிறு கட்டு மச்சான்
தங்கத்தாலி தேவையில்ல

பத்து தேச்சு உழைக்கறேன்
கஞ்சி வச்சு அன்பு த்ரேன்
இட்லி வித்து காசு தரேன்
தாலி மட்டும் கட்டு மச்சான்

முனுசாமி

ஆ என் கண்ண துறந்துபுட்ட
உன் அன்ப காட்டிபுட்ட
எறுதுழுது வச்சிடுவோம்
ஒன்று சேர உழச்சிடுவோம்

பொன்னுதாயி

அப்படி வா வழிக்கு மச்சான்

கோயில்ல வந்து தாலிகட்டு
மாரியாத்தா கண் திறப்பா
கஞ்சி குடிக்க வழி செயவா

முனுசாமி

நெற்றி வேர்வ சிந்த உனக்கு
தாலி செஞ்சு கட்டுவேன்
உழைக்கும் சனம் வளரட்டும்
ஒத்துமையும் உயரட்டும்


அன்புடன் விசாலம்

Monday, November 12, 2007

சீரடி சாயி இரண்டாம் பாகம்

பாகம் 2
திரு ராமசந்திர படேல் என்பவர் மிகவும் நோய்வாய்ப்
பட்டிருந்தார் அவர் எப்போதும் சீரடி நாம ஸ்மரணையில் இருந்தார் கடைசிக்காலம் போல் நாடி துடிப்பு குறைய
ஆரம்பித்தது ஒரு நாள் இரவு ,தூக்கம் வராமல் கண்ணை மூடிக் கொண்டிருந்தார் அப்போது சீரடி பாபா தலைப் பக்கம் வந்து நின்றார் ,ராமசந்திரபடேல்
கேட்கிறார் "பாபா எனக்கு வலி தாங்க முடியவில்லை எனக்கு எப்போது மரணம் வரும்" ?
"நீ பிழைத்து விடுவாய் ,ஆனால் தாத்யா படேல் உடல் நலம் குன்றி விஜயதசமி அன்று மரணமடைவார் ,இதை
ஒருவரிடம் தெரிவிக்காதே முக்கியமாக தாத்யாபடேலுக்கு
தெரிவிக்காதே அவர் இதை நினைத்து நினைத்தே
பயத்தில் உடல் இன்னும் மோசமாகிவிடும்"
பாபா இதைச்சொல்லி விட்டு மறைந்து விட்டார் ,
சிலதினங்களுக்குள் தாத்யாபடேல் சுரத்தில் மிக மோசமான
நிலையை அடைந்தார்,விஜயதசமியும் நெருங்கியது
ஆனால் அவர் சதா சர்வ காலமும் பாபாவையே
நினைத்து அசைக்கமுடியாத நம்பிக்கையில் "பாபா என்னைக் காப்பாற்றி விடுவார் " என்று சொல்லி வந்தார்
அப்போது தான் ஒரு திடீர் திருப்பம் ,அன்பே தெய்வமாக வந்த பாபா
அவரின் உடல் நிலையைத் தான் பெற்றுக் கொண்டார்
அவரைப் பிழைக்க வைத்து விட்டார் தாத்யா படேலின்
நம்பிக்கை வீண் போகலாமா? பாபா தன் முடிவை விஜயதசமி
அன்று தீர்மானித்துக் கொண்டார் அதனால் பாபாவுக்கு
உடல் தளர்ச்சி ஏற்பட்டது,ஆனால் விஜயதசமி அன்று
மிகவும் சுறுசுறுப்பாக எழுந்து உடக்கார்ந்திருந்தார் எல்லோருமே பாபா நம்மிடையே பல வருடங்கள் இருப்பார் என்ற நம்பிக்கையில் இருந்தனர் ,மகிழ்ந்தனர் ஆனால் அவருக்குத் தெரிந்தது தன் முடிவு நெருங்கி விட்டது என்று,,,,,கடைசியாக பகதை ஸ்ரீ லட்சுமிபாய் சிண்டேயைக்
கூப்பிட்டார் பின் அவளுக்கு ரூபாய் ஒன்பது வழங்கினார்
பின் எல்லா சீடர்களையும் பகதர்களையும் அனுப்பி
விட்டார் திரு காகா சாஹேபிற்கும் பாபூ சாஹேப் பூட்டிக்கும்
அவரை விட்டுப் போக விருப்பமில்லை ஆனாலும் அவரது கட்டளைக்குக் கட்டுப்பட்டனர் மஸ்ஜித்திற்கு
சென்றனர் பாபாவின் வருகையை எதிர்ப்பார்த்துத்
தங்கினர்
பையாஜி மட்டும் அவருடன் இருந்தார் பாபாவின் முச்சு
வாங்க பையாஜியின் மேல சாய்ந்துக் கொண்டார்
பாகோஜி என்பவர் இதைப் பார்த்த மாத்திரத்தில் தண்ணீர்
எடுத்து ஒடோடி வந்தார் அவர் வாயில் தந்தார் ஆனால்
தண்ணீர் வெளியே வழிந்தது "ஓ தேவா" என்ற அலறல்
அவர் வாயிலிருந்து வந்தது "ஹா"என்றார் பாபா
பின் நிசப்தம் தான் ஒரு சலனமும் இல்லை ,அசைந்த
உயிர் சமாதி நிலையை அடைந்தது ஒரு வேப்பமரமே
அவரது மாளிகையாக இருந்தது அவர் உடையில்
பட்டும் பிதாமபரமும் இல்லை ஒரு கிழிந்த வேஷ்டியும்
ஒரு அழுக்குத் துண்டும் தான் அலங்கரித்தது அவர் உணவோ எல்லோரிடத்திலும் கேட்டு பின் அதை ஒன்றாக்கியக் கதம்பம்
எத்தனை எளிமையான வாழ்க்கை ,,,,,பாபா கோடானுகோடி மக்களுக்கு இன்று சொந்தம் அனபு
சிரததை பொறுமை என்ற கொள்கைகள் அவரின்
வேதவாக்கு
விஜயதசமி அன்று சாவடியிலிருந்து துவாரகாமாயிக்கு
பக்தர்கள் பாபாவை ஒரு பல்லக்கில் அலங்கரித்து
ஆர்ப்பாட்டத்துடன் வண்ணக்கலர் தூவி வாத்தியங்கள் டோல் முழங்க பல
நிகழ்ச்சிகளுடன் கதாகாலட்சேபத்துடன் அழைத்துச்
செல்வார்கள் பாபாவின் படம் தாங்கிய பல்லக்கை ஒரு அழகியக் குதிரை சுமந்து செல்லும் அதன் பேர் "ஷ்யாம்
சுந்தர் "பாபாவின் தலைக்கு மேல் பின்னல் வேலைகள்
செய்த வண்ணக்குடை ,,,,,,,,,
இந்த ஊர்வகத்தைப் பார்க்க பகதர்கள் கூட்டம் அலை மோதும்
அவர் சமாதியில் இருந்தாலும் இன்றும் அவர் உயிருடன்
இருக்கிறார் எல்லோரையும் அருள் பாலித்து வருகிறார்
நம்பினால் கேடபது கிடைக்கிறது மனம் அமைதி
அடைகிறது அவர் ஹிந்து கோவிலிலும் இருந்தார்
மஸ்ஜித்திலும் இருந்தார் ,ஹோமமும் செய்தார்
குர்ரானும் படித்தார் அவருக்கென்று தனி மதம் கிடையாது ,இன்றும் பலதரப்பட்ட மதத்தினர் அங்குத்
திரள் திரளாகச் சென்று அருள் பெற்று பயனடடவதைக்
நான் கண்கூடாகப் பார்க்கிறேன் என் வாழ்க்கையிலேயே
பல ஏற்றம் அவரால் ஏற்பட்டிருக்கிறது "சாயி ஸச்சரிதா"
படித்துப் பயன் அடையுங்கள் ஒரு வியாழனன்று
ஆரம்பித்து மறு புதனில் முடித்து பின் மறுதினம் ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும் ,ஒன்று மனதில் நேர்ந்து கொண்டும்
இதைச் செய்யலாம் அல்லது லோகத்தின் சுபீட்சத்திற்கும்
இதைப் படிக்கலாம் ,,,இதை என்னை எழுத வைத்த
சீரடி சாயிநாத்திற்கு நன்றியுடன் ப்லகோடி வண்க்கங்கள்
ஓம் சீரடி சாயி நாத்திற்கு ஜெய் ,,,,,,,,,
அன்புடன் விசாலம்

ஷீரடி சாயி

விஜயதசமி என்றால் எல்லோருக்கும் முதலில் நடக்கும் முத்தேவிகளின் ஆராதனையும் பின்
ஆயுதபூஜையும் உடனே ஞாபகம் வரும் ,நான் தினமும் ஷீரடியின் சாயி ஸச்சரிதா படிப்பேன்
அதில் "சாவடி ஊர்வலம் "என்ற பகுதி இரவு படுக்கும் முன் படிக்க அல்லது கண்முன் அந்தக்
காட்சியைக்காண மிகவும் நன்மைப் பயக்கும், ஷீரடியில் இன்றும் விஜயதசமி அன்று ஊர்வலம்
நடக்கிறது .சிறப்பு என்னவென்றால் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் மற்ற எல்லா மதப்
பிரிவுகளும் இதில் பங்கு ஏற்கின்றனர் ,ஒருவித சச்சரவுமில்லாமல் அமைதியாகச் சிறப்புடன்
நடைப்பெருகிறது அன்பும் பாசமும் கலந்த ஊர்வலம் ,பிரசாதமும் எல்லாவித உணவும் கலந்த ஒன்று ,சீரடிபாபா ஒரு ஜோலிப்பையில் எல்லோரும் கொடுக்கும் உணவைச்
சேகரித்து பின் அதைக்கலந்து எல்லோருக்கும் வினோகித்து பின் காக்கை குருவி நாய் பூனை
போன்றவைகளுக்கும் போட்டு பின் அவர் சாப்பிடுவாராம்
இதே விஜயதசமி அன்றுதான் அவர் சித்தி அடைந்தார் அவர் வாழ்ந்த வாழ்க்கை மிக எளிமை
ஆன ஒன்று .ஷீரடிக்குள்முதன் முதலாக அவர் நுழைந்தப்போது அவர் சீதனம் ஒரு செங்கலும் இரண்டு சாக்குகளும்தான்,"சாயி"என்றால் கூட வாழும் இறைவன் "என்று பொருள்
கொள்ளலாம் அவரின் ஒரே மந்திரம் "அல்லா மாலிக் ,பல கோடி மக்கள் இன்று அந்தப் பக்கிரி பாபாவைன் பொற்கமலங்களைப்பற்றி அமைதி காணுகிறார்கள்

பாபா தான் படுக்கப் போகும் போது தான் கொண்டு வந்தச் செங்கலை ஒரு பழைய
துணியில் சுற்றி அதில் தலை வைத்துக் கொள்வார்.அவருக்கு உதவ ஒரு குட்டிப்
பையன் ,,பாபாகூடவே இருந்து அவர் படுக்கப் போகும் முன் தூசியும் தட்டிக் அந்த இடத்தைக் கூட்டுவான் ,அவர் இறக்கும் சில தினங்களுக்கு முன் அவன் தான் கூட்டும்
போது குப்பை செங்கலில் விழ்க்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் செங்கலை ஒரு
துணியில் சுற்றத் தூக்கினான ஆனால் அது கைத்தவறி கீழே விழுந்து இரண்டாகி விட்டது
மிகவும் வருந்தி அழ ஆரம்பித்தான் பாபா வெளியில் போயிருந்தவர் உள்ளே வந்தார் ,
செங்கல் உடைந்ததைக் கண்டார் ,அந்தச் செங்கலில் தலை வைக்க புதுப்புது
சிந்தனைகளும் ஞானமும் பூககளாக மலருவது அவருக்குத்தான் தெரியும் அது உடைந்தது
அவருக்கு தன் ஆயுள் முடியும் தருணம் வந்து விட்டது என்று புரிந்தது
அந்த மரணமும் அவர் தன் பக்தனின் ஆயுள் முடிவைக் காப்பாற்ற தான் அதை ஏற்றுக் கொண்டு விட்டார் ,,,,,,,,,,,,,,,,போலோ சச்சிதானந்த சத்குரு சாயி ம்ஹராஜ் கி ஜெய்

நாளை முடியும் ,,,,,,,,,

செக்கு மாடு

என் நண்பர் காளையின் கஷ்டத்தைச்சொல்லி கவிதை எழுதியிருந்தார் ,நான் அவருக்கு" நானும் இதுபோல் ஒருகவிதை எழுதி இருக்கிறேன்" என்று எழுதியிருந்தேன் அவரும் அதைப் படிக்க ஆர்வம் காட்டினார் ,அந்த மடல் எத்தனைத் தேடியும் கிடைக்கவில்லை
ஆகையால் தனியாக எழுதுகிறேன் ,இனி எல்லா கவிதைகளும் "ஆனந்தமயி,,,, விசாலம்
பக்கம் "என்று இடுகிறேன்

"செக்கு மாடு "

ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறேன்
ஓயாமல் சலிக்காமல் இயங்குகிறேன்,
உழைக்கும் இயந்திரமும் நானேதான் ,
அந்தச்செக்கு மாடும் நானேதான் ,
மணிகணக்காய் சுற்றுகிறேன்
புண்ணாக்காய் ஆகிறேன்
ஒரு பழமொழியும் என் பேரில்
வாழ்க்கைப் போவது சோர்வில்

வண்டியையும் இழுக்கிறேன்
நடைத்தளர்ந்துப் போக
என் வாலும் முறுக்கப்படுகிறது
ஒரே வேகம்
ஓடித்தான் ஆகவேண்டும்
கொஞ்சம் குறைய
சாட்டையடியும்
வாங்கத்தான் வேண்டும்
அறிய மாட்டான்
இந்த மானிடன்
தார்க்குச்சியால் குத்துவான்
வலியில் பிச்சுக்கொண்டு ஓட,
அவன் ரசிப்பான்
வாயில் நுறைத் தள்ளியும்
சுமக்கத்தான் வேண்டும்
ஈவு இரக்கமில்லா ஜன்மம்
செக்கு மாடு ஆனது என் கருமம் ,
மனித நேயம் எங்கே ?
கருணை மனம் எங்கே ?


அன்புடன் விசாலம்

தீபாவளி மருந்து

தீபாவளி அன்று பட்சணங்களுக்கு பிறகு கொடுக்கப்படும் தீபாவளி லேகியம்
ஆஹா அருமை அதன் மணமும் அதன் பலனும் சொல்ல அளவில்லை
அந்த மருந்துக்காக ஒரு கவிதை

மருந்து அது அருமருந்து,
தீபாவளியில் ஒரு தனி மருந்து ,
ஆயுர்வேதக் கடைச் சரக்காம்,
அதற்கென்று ஒரு தனி சிறப்பாம்
சுக்கு மிளகு திப்பிலியாம்
ஆயுர்வேத மூவேந்தர்களாம் ,
ஓமமும் கூடச் சேர்ந்துவிடும்
அம்மியில் எல்லாம் அரைந்துவிடும்
உருளியில் கிளற பட்டுவிடும்
வெல்லமும் சேர்ந்து கலந்துவிடும்
வெண்ணெய் சேர்ந்து பள்பளக்கும்
கிளறக் கிளற மணம் பரப்பும்
ஆஹா அருமை லேகியம் தயார்
நெய்யும் மேலே வருவதைப்பார்
தீபாவளி லேகியம் நம் கைவசம்
ஏன் கவலை பட்சணம் உன்வசம்
தேன் கலர் லேகியம் அமிருதம் தான்
லேகியத்துடன் தீபாவளி குதூகலம்தான்

அன்புடன் விசாலம்
Reply
Reply

காசி ஸ்னானம்

அன்பர்களே தீபாவளியின் போது 'கங்கா ஸ்னானம் ஆச்சா?" என்று கேட்பது வழக்கம் அன்று காலை 4 முதல் 5 வரை கங்கை நீர் வந்து நம்மைப் பவித்திரமாக்குகிறது
நாம் மானசீகமாகக் காசி போய் தங்க அன்னபூர்ணியைத் தரிசித்து பலன் பெறலாம் இந்தச்ஸ்லோகம் படித்தால் அதன் பலன் அவசியம் உண்டு என்று முன்னோர்கள் சொல்கிறறர்கள் இது 1920 வது வருடத்தின் ஸ்லோக புத்தகம் என் பாட்டியினுடையது.....


மானசீகக் காசி யாத்திரை

1 ஸத்குருவின் கிருபையினால் காசி யாத்ரர மகிமை
சங்கிரமாய் சொல்லுகிறேன் சாதுக்கள் மகிழ

2புத்தியினால் நிச்சியிக்கும் சிருஷ்டிகளெல்லாம்
போத மயமாயிருக்கும் பூர்ணவடிவாய்

3 தேசாந்திரங்கிடந்து சோஷிக்குமாற்போல்
தசேந்திரியங்களையும் படிய அடக்கி

4ஆதார கங்கைஎன்று உத்சாகமாய் சொல்லும்
ஆனந்தஸ்வரூபந்தன்னில் நிரஞ்சனமாய்

5அஹங்கார முதலான அந்தக் கரணத்தின்
அஹந்தை மமதை என்ற வரியை விட்டு

6 காமக்குரோதப் பகவரை கிட்டவொட்டடமல்
விவேகமென்னும் சத்வாசனையுடனிருந்தே

7 ஸ்தூல ஸ்தூக்ஷ்மாய் இருக்கும் ரரஜ்ஜியம் விட்டு
ஏகாக்கிர சிந்ததயெனும் வாகனமேறி

8 ஏக போகமாயிருக்கும் காசிதனிலிறங்கி
ஹிருதயசுத்தியாகவே தியானம் பண்ணி

9 ஈஷணாத்ர பங்களென்னும் வாசனைப் போக்கி
இந்திரியங்கள் பதினாலு முள்ளேயடிக்கி

10 இடைப் பிங்களை என்று இரண்டு நாடியை
யமுனை கங்கையாகப் பாவித்து என்னுளே

11 சுஷும்னா என்ற நாடியைத்தானே
ஸ்ரஸ்வதியாம் மந்தர்வாகினியும் கூட

12 திருவேணி சங்கமத்தின் தீர்த்தங்களாடி
திருதாபமறற்தொரு வெண்பட்டுடத்தி

13 நிஷ்களங்கமாய் இருக்கும் ஜபதபம் செய்து
நித்தியாமந்தமாய் இருக்கும் கோவில்புகுந்து

14 பக்தியுடனம்மை மகிழ் விசுவநாதரைப்
பிரதி தினம் தரிசித்து உள்ளே இருந்தேன்

15 அறிவெனும் விசாலாட்சி அம்மனுமப்போ
ஆகாமியசஞ்சி தங்கள் இரண்டு மறுத்தாள்

16 தாரக பிரும்மஎன்ற விசுவநாதரும்
சந்தோஷமாக கங்கா ஸ்னானம் பண்ணென்றார்

17 அத்புதமாய் விசுவநாதர் கிருபைனாலே
ஆனந்த கங்கா ஸ்னானம் பண்ணியபிரகு

18 பக்தியுடன் பிரரகையில் ஸ்னானம் செய்து
பரிபூர்ணமாக மணிகர்ணை ஆடி

19 கங்கையுடன் யமுனை ஸ்ரச்வதி முதலாம்
கீர்த்தியுள்ள அறுபத்தினாலு தீர்த்தங்களாடி

20 சப்த சன்மம் ஈடேற வட விருஷத்தின் கீழ்
நித்திய திருப்தியாக வெகு பிண்டமும் போட்டு

21 தத்துவங்கள் தொண்ணுத்தாறு கயாவாளிக்கும்
சந்தோஷமாக வெகு திருப்திகள் பண்ணி

22 நித்தியா நித்யவஸ்து காவடி கட்டி
நிரந்த்ரபிரும்மமெனும் கங்கையைத் தூக்கி

23 சத்சங்கமெனும் சோபதிகளோடு
சிரவணமனனமெனும் மார்க்கமும் தாண்டி

24ஜனன மரணமற்ற ராமேச்வரத்தில்
ஸ்தீரீபோகமாகவங்கே வந்திருந்து

25 அக்கியானத்தினால் வந்தத் துக்கங்கள் தீர
ஆனந்தச்சாகரத்தில் ஸ்னானமும் பண்ணி

26 ஆதியந்தமற்றிருக்கும் இராமநாதர்க்கு
அறிவென்லுங்கங்கை கொண்டபிஷேகம் பண்ணி

27 ஜ்யோதிர்மயமாய் இருக்கும் இராமநாதரை
சித்தத்துக்குள்ளே வைத்து தரிசனம் பண்ணி

28 அகண்ட பரிபூரணமாய் அசஞ்சலமாய்
ஆனந்த பிரம்மந்தன்னில் ஐக்கியாமானேன் ...........

ஓம் பிரம்மார்ப்பிதம் ,,,,,,,,,



அன்புடன் விசாலம்

மாரியாத்தா

என் ராசா மவனே
வாபுள்ளே
நல்லாத்தான் இருக்கியா?
எம்புட்டு கன்னம் ஒட்டிப்போச்சு
கவல என்ன சொல்லு புள்ளே!
சண்ட போட்டு வந்துகினியா
சரக்கு போட்டு வந்துகினியா?

"தாயி உன் கன்னமில்ல
ஒட்டிப்போச்சு
அட உன் கண்ணிலே
உள்ளே போச்சு
அவ பேச்ச கேட்டனில்ல
இங்கிட்டு துக்கி இல்ல போட்டேன் உன்னை
ஒத்த்க்குடிசைலே நீ மட்டும்

தாயி பிடி பிடியா சோறு ஊட்டுகினே
கவளச் சோறுக்கு உனை ஏங்க வச்சேனே
ஒரு துரோகி மடிலே அவளப் பாத்தேன்
அந்த ராட்சசி எனக்கு வேணாம் தாயி
உன் மடிலே தல வச்சுகிறேன் தாயி
என் உயிர் போணும் தாயி

"வேணாம் என் தங்க ராசா
கூட நாலு பெத்துவச்சிருக்கே
அப்பன் கடமை செய்யவேணும்
ஒங்குடுமபம் தழக்க வேணும்
உனக்கு வேணும் பெண்சாதி
உன் சந்தோஸம் தான் என் சந்தோஸம்
இத நீ என்னிக்கும் நினக்க வேணும்

"எப்படி தாயி
இத்தன அன்பு"


"அட ராசாபுள்ளே நீ ஒண்ணு
எல்லா மனசிலே கடவுள் பாரு
என்ன கஸ்டம் எனக்கு இங்கிட்டு "


" தாயி மாரியாத்தா நீதானே
இங்கிட்டு கோயிலில் குந்திப்புட்டேன்
வேறு கோயில் இல்ல தாயி "


அன்புடன் விசாலம்