Sunday, November 9, 2008

கதிர்காமம்

முருக வழிபாட்டுக்கு புகழ் பெற்ற ஸ்தலம் கதிர்காமம் இலங்கையில் உள்ளது முருகன் , வள்ளிக்கிழங்கு
அருகில் நம்பிராஜனால் கண்டெடுத்து பின் வளர்க்கப்பட்ட வள்ளி மேல் காதல் கொண்டு அவளை அடைய
கிழவர் வேஷ்ம் போட்டு தன் அண்ணன் கணபதியை உதவிக்கு கூப்பிட்டு பின் வள்ளியை மணம் புரிந்தார்,
"வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்றே"
இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் நாகூர் போல் இங்கு இந்துக்களும் வருகின்றனர் ,முஸ்லிம்களும்
வருகின்றனர், தவிர புத்த பெருமான் இங்கு வந்து தியானத்தில் அமர்ந்திருந்தார்..சிங்கள அரசன்
போரில் வெற்றி பெரும் ஆற்றலை கொடுக்கும்படி கதிரை ஆண்டவரிடம் வேண்டிகொண்டாராம் அப்படி ஜயித்தால் கதிரை ஆண்டவர் ஆலயம் கட்டுவதாகவும் வேண்டி அதை நிறைவேற்றியும் வைத்தார்.
இங்கு ஜாதி மத்க் கோட்பாடு கிடையாது இங்கு ஆடித்திருநாள் மிக கோலாகலத்துடன் நடத்தப்படும்,காவடிகளுடன் அலகு குத்திக்கொண்டு தன்னை மறந்த நிலையில் பரவசமடைகிறார்கள், இங்கு ஊர்வலத்தில் எண்ணெய்
தீவட்டி கிடையாது எல்லோரும் புது மண்சட்டி வாங்கி அதில் விபூதி நிறப்பி பின் கற்பூரம் கொளுத்தி வெளிச்சம் தருகிறார்கள், ஊர்வலம் போவது மிக மிக அழகு
முற்காலத்தில் இங்கு வரவேண்டும் என்றால் கனவில் உத்தரவு வர வேண்டுமாம் இப்போது அப்படியில்லை
யார் வேண்டுமானாலும் போகலாம்
கதிரை மலையின் மேல் உச்சியில் வேல் இருக்கிறது மக்கள் அங்கும் போய் வழிப்பட்டு கற்பூரம்
கொளுத்தி கும்பிடுவார்கள் இம்மலைக்கு அருகில் விபூதி மலை என்று உள்ள்து இங்கிருந்துதான்
கதிர்காமத்திற்கு தெவையான விபூதி தயார் செய்யப் படுகிற்து கதிர்காமம் அடைந்தால் குளுமையான மாணிக்க கங்கை ஓடுகிறதுஇது தேவர்கள் முனிவர்கள் தேவகணங்கள்
மனதார முருகனை தண்ணீருக்காக் வேண்டிக் கொண்டதால் வீரபாகு முருகனின் ஆணைப் பெற்று
வரவழைக்கப்பட்டதாம் .
எல்லோரும் ஒரு குலம் என்ற நோக்குடன் ஜாதி மத பேதமின்றி எல்லோருமே வண்ங்கும் இந்த இடத்தை
மானசீகமாக பிராத்தனை செய்வோம்

Friday, November 7, 2008

விவேக சிந்தாமணி 2

இரண்டாம் பாகம் ,,,இந்த நான் என்பதற்கு சாதி இல்லை பேதமில்லை மொழி நாடு குணம் குறைஎன்று ஒன்றும் இல்லைநாம் உலகத்தில் நடக்கும் நாடகத்தில் ஒரு வேஷம்எடுத்துக்க்கொண்டிருக்க்கிறோம் ,அந்த வேஷம் போட்டுக்கொள்ள நிச்சியம் ஒருஉடல் தேவை ,இப்போது நாம் ஒரு நடிகன் மேடையில் அந்த வேஷத்துடன்நடிக்கிறோம் ,பின் நாடகம் முடிந்ததும் வேஷமும்கலைந்துவிடுகிறது இதே போல்தான் உலகப்பற்று,,,,,,,,முதலில் பற்றினால் ஒரு வேஷம் போடுகிறோம் ,அது ஒரு நாள் கலையத்தான்போகிறது , குருவின் தயவால் அவரின் உதவியால் இந்த வேஷம் கலைக்கப்பட்டுபின் ஆன்மாவை உணர்கிறோம் ,எல்லா வேதாந்தத்திலும் ஆரம்பத்தில் கயிறு ,பாம்புஉதாரணம் வரும் ,இருளில் ஒருவன் நடக்கிறான் மொரு சாதாரணதாம்புக்கயிற்றைக் கண்டு பாம்பு எனநம்பி அலறுகிறான் பின் வெளிச்சத்தில் பார்த்தவுடன் அது கயிறாகஇருக்கிறது ,அதாவது ஞானஒளி வந்தவுடன் அவனுக்கு இது புரிகிறது , தெளிவுபிறக்கிறது ,அறியாமை என்ற இருளில் அவன் கயிறைப்பாம்பாக நினைக்கிறான் இதுதான் அவன் மாயையில்சூழ்ந்திருப்பது ,,,,,,,எப்போது ஒருவனுக்கு பற்று அகல்கிறதோ அப்போதுஞானமும் பிறக்கிறது அந்த ஞானம் பிறந்து விட்டால் என்றுமே ஆனந்தம் தான்துக்கம் அவனை அண்டுவதேயில்லை ,துக்கம் சுகம் ஏழை பணக்காரன் வெயில் குளிர் எல்லாமே அவனுக்குச் சமம் தான்"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்போருள்மெய்ப்பொருள் காண்பது அறிது "என்கிறார் திருவள்ளுவர் ,எந்தப்பொருளையும் அதன் உண்மைக்குணங்களை நன்கு உணர்ந்து பின் தான்செயல்படவேண்டும்உலகம் மாயையால் கவரப்பட்டிருக்கிறது அந்த மயக்கத்தில் நாம் விழாமல்பொருள்களின் உண்மையைப் புரிந்து வழ்ந்தால் அத்வே ஞான வாழ்வாகும்.ஒருபெரிய நீரோடையில் பனிக்கட்டி விழுகிறது.. அது மிதந்தபடி பல நாட்கள்அப்படியே இருப்பதில்லை .மெள்ள நீரில் கரைந்து அத்துடன் சேர்ந்து கலந்தும்விடுகிறதுசங்கரர் சொல்கிறார் ." ஒரு கையளவு நீரை எடுத்து இதுதான் கரைந்த பனிக்கட்டி நீர் என்று சொல்லமுடியுமா? ஆன்மா பனிக்கட்டி என்றால் பிரம்மம் ஒரு கடல்,,பனிக்கட்டிப்போல் ஆன்மா பிரும்மத்துடன்கல்க்கிறது இதுவே "அஹம் பிரும்மாம்மி " நானே பிரும்மம் ,,,,,,,,,,

விவேக சிந்தாமணி

விவேக சூடாமணி என்பது ஆத்மாவின் தத்துவங்களைச் சொல்லும்நூல் ,இதை எழுதியவர் ஆதி சங்கரர் , இது அவரது முதல் ஆன்மீக நூல்.இதில்அவர் பாமர மக்களுக்கும் புரியும்படி மிகஎளிதாக எழுதியிருக்கிறார்,இதைப் படிக்கப்படிக்க ஆன்மீக வழிஎளிதாக அடைய முடியும் விவேகம் என்பதை இரண்டு விதமாகப்பிரயோகிக்கலாம் "அந்த மனுசன் ரொம்ப விவேகமான மனுசன் தான்" என்றும்"அவனுக்கு சின்ன வயதிலேயே விவேகம் வந்து விட்டது என்றும் கூறக்கேட்டிருக்கிறோம் இந்த அர்த்தத்தில் விவேகம் என்றால் அறிவு ,ஆன்மீகத்தில் விவேகம் என்பதற்கு உலகத்தில் இருந்தும் காணமுடியாதஇறைவனைப்பற்றி உண்மைகளைத் தெரிந்துக்கொண்டு அதைப்பற்றிச் சிந்தித்துமேலும் பல உண்மைகளை அறிவது எனலாம் எது தவறு எது சரியானது என்றுசிந்திப்பதும் விவேகம் தான்சூடாமணிஎன்பது நம் எல்லோருக்கும் தெரியும், சிதாப்பிராட்டிஅந்த அனுமனிடம் தன்னுடைய சூடாமணியைத் தான் உயிருடன்இருப்பதைத்தெரிவிக்க ஒரு அடையாளமாகக் கொடுத்துஅனுப்பினார் ,இதற்கே 500க்கும் மேல் ஸ்லோகங்கள் உண்டுஎன நினைக்கிறேன்,பலர் இதற்கு பாஷ்யமும் எழுதியுள்ளனர்.இன்னும் ராஜஸ்தானிலும் குஜராத்திலும் இந்தச் சூடாமணி அணியும் வழக்கம்உள்ளது இது பலரககற்களால் ஆனது நவரத்தினங்களால் செய்யப்படும் ஒரு அணிகலன்,இதைதலையில் வகிட்டிலிருந்து ஆரம்பித்து நெற்றி அரம்பத்தில் படும்படியாகஅணிவார்கள் தலையில் தான் கடைசி சக்க்ராவான ஸ்ஹஸ்ராரா இருப்பதால் அதுமுக்கியமாக இருந்திருக்குமோஎன நினக்கிறேன்சூடாமணி தலையில் எப்படி பிரகாசிக்கமோ அதுபோல் விவேகச்சுடர்சூடாமணியைப்போல் பிராகாசிக்கிறதுஅதில் கூறிய கருத்துக்கள் ,,தெய்வத்தின் அருள் இருக்க ஒருவன் சத்சங்கத்தில் இருப்பான்சத்சங்கத்தில் இருக்க அவனுக்கு நல்ல குருவும் கிடைப்பார் , ஒரு நல்லகுரு கிடைக்க நல்ல எண்ணங்கள் உருவாகும் ,குரு எப்படி இருக்க வேண்டும்?அவர் நல்லெண்ணங்கள் மட்டும் கொண்டிருக்க வேண்டும் சொல்லிக்கொடுப்பதைக்கடைப்பிடிக்க வேண்டும் பாபச்செயலகள் செய்யாதிருத்தல் வேண்டும் .வேதங்களைக் கற்று ஓதி அதன் வழிநடக்கவும் வேண்டும் தீயஎண்ணங்கள் வரவிடாமலும் அப்படி வந்துவிட்டால்அதைச்சுட்டெரித்து மனதைவிட்டே நீக்க வேண்டும்இரக்க சுபாவம் மனித நேயம் கருணை நல்வழி இவைகளுக்குவழிகாட்ட வேண்டும்.துக்கம் சுகம் இரண்டையும் சமநிலையாகப்பாவிக்கவேண்டும் பிறர் சேவை செய்யவேண்டும் தன் நலமில்லாமல் இருக்கவேண்டும் பற்றை ஒதுக்குப்வராக இருக்க வேண்டும் இதே போல் மஹான்கள்இப்பவும் இருக்கிறார்கள்{ஆனால் நம்க்கு பக்குவம் போதாமல் அவர்களைக் கண்டுக்கொள்ள முடிவதில்லை ,போலி சாமியார்களினால் நம்பிக்கைகுறைந்து போகிறது என நினக்கிறேன் }அடுத்த நிமிடம் நம் வாழ்வில் நட்ப்பது என்ன்வென்று தெரியாதுஆகையால் நல்லகாரியத்தை இப்போதே செய்து விடு ஆசை யாரை விட்டது?ஆசைப்படலாம்,ஆனால் அதிக அளவு அதாவது பேராசைப்படாதே ." பேராசைபெருநஷ்டம்"ஆசைகள் ஓரளவு அந்தந்த காலங்களில் அனுபவித்தபின்னர் அதையும்விவேகத்தால் வராமல் பார்த்துக்கொள் ,வந்து விட்டால் தடைசெய்துவிடு நான் என்றச்சொல்லைக் கவனித்து அந்த நான் யார்?என்று சிந்தித்தல் வேண்டும் .கைவலி என்கிறோம் கை என்பதுநானா ,,,கால் வலி என்கிறோம் கால் என்பது நானா? கால் என்பது நானாகஇருந்தால் "நான் வலி "என்று ஏன் சொல்வதில்லை?"நான் தூங்கிவிட்டேன்என்பதில் தூங்கியது யார் ?என் கண்ணா அல்லது நானா ? இவைகளெல்லாம் சிந்திக்கச் சிந்திக்க நம்க்குவிடைக்கிடைக்கும் ,எல்லா விஷயங்களுக்கும்"நான் யார்?"என்ற கேள்வி கேட்க ஒரு நாள் ஞானம் வெளிப்படும்என்று விவேக சிந்தாமணி சொல்கிறதுஇந்த ஞானம் ஆரம்பத்தில் கொடுப்பது நல்ல குருதான் அவர்ஆசியுடன் கடவுள் சித்தமும் இருந்தால் தான் இந்த நிலை கிடைக்கும் .

Friday, September 12, 2008

பாசம் என்ன விலை?

இன்று காணும் சூழ்நிலை ,
கூட்டுக்குடும்பம் பிரிநிலை
"பாசம் எங்கே?" என்ற நிலை ,
பணமே வாழ்க்கை ஆன நிலை .
தம்பதிகள் மட்டும் என்ற நிலை
பெற்றவருக்கு வந்தது அவல நிலை ,
அத்தை எங்கே மாமா எங்கே?
காணாதப் போகும் பந்துக்கள் எங்கே ?

கண்டேன் ஒரு சம்பவம்
அடுக்கு மாடிக்கட்டிடம்
ஏழாம்மாடியில் குடும்பம்
காட்டுவது மிக டம்பம்
காலை எழுந்தால் ஓட்டம் ,
பணம் சேர்க்கும் நாட்டம்
அடுத்த வீட்டில் யார்?
தெரியாத நிலை ,,,
முன் வீட்டில் யார் ?
பழகாத நிலை ,,,,,,
பேச நேரமும் இல்லை ,
நேரமிருக்க மனமுமில்லை

ஒரு நாள்,,,,,,,
கீழ மாடியில் ஒரு கூட்டம்
கேட்டது அழுகை ஓலம்
விபத்தில் ஏற்ப்பட்ட மரணமாம்
வேலைக்காரி தந்த விவரம்
எட்டிப்பார்த்தான் அவன் ,
கூட நின்றாள் அவள்,
ஆபீஸ் போகும் பரபரப்பு,
முகத்திலே ஒரு சிடுசிடுப்பு,
"செத்தவன் யாரோ?
நாம் யாரோ?"
அலங்காரம் தொடர்ந்தது ,
பீம் பீம் "காரும் நகர்ந்தது
காற்றினிலே ஓலம் கலந்தது ,
,

ஆவணி மாதம் வராக ஜயந்தி வருகிறது
வராக அவதாரம் பத்து அவதாரங்களில் மூன்றாவதாக எடுத்த அவதாரம் ,யார் இந்த
வராகப்பெருமாள் ,சாட்சாத் மகாவிஷ்ணுதான் ,,,இவர் ஏன் வராக அதாவது தமிழில் காட்டுப்
பன்றி உருவம் எடுக்கவேண்டும் ?
இது உலகை உய்விக்க எடுத்த அவதாரம் இதன் புராணக்கதை என்னவென்றால் வைக்குண்டத்தைக் காக்கும் காவற்காப்போன் இருவர் இருந்தனர் பெயர் ஜய விஜய ,
இவர்கள் ஒரு தவறுக்கு சனகாதி முனிவர்களின் சாபத்துக்கு ஆளானார்கள் அதன்படி கச்யபர்
முனிவருக்கு மைந்தர்களாகப் பிறந்தனர் அவர்களே இரண்யகசிபு ,இரண்யாக்ஷன்
இவர்கள் பிறப்பின் போது பல அப சகுனங்கள் தோன்றியதாம்
பிரம்மாவை நோக்கி தவமிருக்க ஆரம்பித்தான் ஹிரண்யாக்ஷன் கடும் தவத்தினால் பிரும்மா மகிழ்ச்சிக்கொண்டு வரம் கேட்கும்படி சொன்னார் அவனும் பன்றியை மிகக் கேவலமாக
நினைத்து அதை விலக்கி பின் தனக்கு எவராலும் மரணம் வரக்கூடாது என்று கேட்டான்
அவரும் தந்து விட்டார் அதன் பின் அவனது அட்டகாசம் அதிகரித்தது அவன் பூமியை
எடுத்துக்கொண்டு கடலுக்குள் ஒளித்து வைத்தான்
பூமிதேவி அந்த அரக்கனிடம் அகப்பட்டு வேதனைகள் அனுபவித்தாள் பின் தன்
சுவாமி மஹாவிஷ்ணுவினிடம் முறையிட்டு தன்னைக் காப்பாற்றும்படிவேண்டிக்
கொண்டாள் இதே நேரத்தில் பல ரிஷிகளும் முனிவர்களும் பூமாதேவியைக்
காப்பாற்ற பிரார்த்தனைச் செய்யத்தொடங்கினர் இதே போல் தேவலோகத்திலும்
விஷ்ணுவை வேண்டிக்கொண்டனர் விஷ்ணுவும் மனம் இறங்கினார்
பிரும்மாவின் மூலம் வராகமாகி அவதரித்தார்
பிரும்மாவின் யோகநிஷ்டையால் தன் நாசியிலிருந்து கட்டைவிரல் அளவு வெளிப்பட்ட வராகம்
நிமிஷத்திற்குள் மிகப் பெரிதாக வளர்ந்து மலைப்போல் ஆனது இதன் நடுவில் இரண்யாக்ஷன்
வருணனைப் போருக்கு அழைத்தான் வருணன் வராக மூர்த்தியுடன் போர் செய்யும்படி
சொன்னார் இரண்யனும் அதனுடன் சண்டை இட அவர் அவனைச் சம்ஹாரம் செய்து பின் தன் மூக்கினால் பூமிதேவியைத் தூக்கியபடி மீட்டு மேலே கொண்டுவந்தார்
எல்லோரும் மகிழ்ந்தனர்
இந்த வராக மூர்த்தியின் கோயில் திருக்கூடலூரில் இருக்கிறது இதை "ஆடுதுரைப்பெருமாள்
கோயில் "என்றும் சொல்கிறார்கள் இவர் கேட்டதெல்லாம் வழங்குவார் கல்வி நோயற்ற
வாழ்வு , செல்வம் என பல வழங்கும் இவரது ஜயந்தியை நாமும் கொண்டாடலாமே ,,,,,,

மஹாளயம்

அன்பு குழந்தைகளே நம் நாட்டுக் கலாசாரம் என்று வருகையில் மாஹாளய தினங்கள்
பற்றியும் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் இல்லையா? அதைப்பற்றித்தான் இப்போது
சொல்லப்போகிறேன் ,பிறப்பு என்றால் கூடவே இறப்பு என்ற சொல்லும் வந்துவிடும் இறப்பு
என்பது இல்லை என்றால் இந்தப் பூமியின் பாரம் மிக அதிகமாகி அதனால் பல பக்கவிளைவு
தான் உண்டாகும் இறந்துப்போனவர்களை நாம் பித்ருக்கள் என்று சொல்கிறோம் இந்த மூதாதையர்கள் மாதப்பிறப்பு ,அமாவாசை, மஹாளயதினங்கள் போன்ற நாட்களில் பூலோகத்திற்கு சூக்ஷம ரூபத்தில் வருகிறார்கள் ,அவர்களை நாம் பார்க்க முடியாது ,ஆனால்
அவர்கள் நம்மைப் பார்த்து மகிழ்ந்து நாம் தானம் செய்வதைப் பெற்றுக்கொண்டு நல்லாசிகள்
வழங்குவார்கள்.நம் குடும்பத்தை மனதார ஆசீர்வதிப்பார்கள்.
உங்களில் சிலர் உங்கள் அப்பாவோ அல்லது தாத்தாவோ வாத்தியார் முன்னிலையில்
அமர்ந்துத் தர்ப்பணம் செய்வதைப் பார்த்திருப்பீர்கள் அவர்கள் முக்கியமாக வைத்துக்கொள்வது
கறுப்பு எள்,தர்ப்பை ,அரிசி{மஞ்சள் கலக்காத அக்ஷ்தை} வெற்றிலை ,பாக்கு .தண்ணீர் ,,,,,,,
பஞ்சாத்திரம் உத்த்ரணி ,,,
நம் வாழ்க்கையில் தெய்வத்தின் அனுக்கிரஹம் எத்தனைத் தேவையோ அத்தனைத்தேவை
சந்ததிகளை ஆசீர்வதிக்கும் பித்துக்களின் ஆசிகள் ,வீட்டில் தர்ப்பணம் செய்யும் போது
மந்திரங்கலின் மூலம் உபயோகப்படுத்தும் பொருட்களின் சக்தியின் மூலம் இறந்துபோன
முன்னோர்கள் வந்து கொடுக்கும் தானங்களை சூக்ஷம ரூபத்தில் பெற்று மனபூர்வமாக ஆசிகள்
வழங்குகின்றனர் இந்த நாட்களில் அன்னதானம் தக்ஷிணைத் தானம் தான்யம் தானம்
வாழைக்காய், அரிசிதானம் கொடுக்கும் வழ்க்கம் உண்டு .இதன் பலன்கள் நம்க்கு அவசியம்
கிடைக்கும்
இந்த மஹாளய நாட்கள் ஆவணி மாதம் பௌர்ணமிக்கு மறு நாள் பிரதமையிலிருந்து
ஆரம்பிக்கும் சம்ஸ்கிருதத்தில் பிரதமை என்பது ஒன்றைக்குறிக்கும் அதாவது முதல்
நாள் பின் த்விதியை என்று அமாவாசை வரை முடியும் இது 15 நாட்கள் ,இந்த அமாவாசையில் தான் கொலு பொம்மை வைக்க ஆரம்பிப்பார்கள் இவைகளை திதிகள்
என்பார்கள் இந்தத் திதிகளில் எதாவது ஒருதிதியில்தான் இறந்து போனவரின் திதியும் வரும் ,அந்தத் திதியை ஞாபகம் வைத்துக்கொண்டு அன்று மூதாதையர்கள் மற்ற பல

இறந்தவர்களை நினைவுக்கூறி தகுந்த சடங்குகளால் அவர்களைத் திருப்தி செய்கிறார்கள்
நாம் ஏன் அவர்களை நினைக்க வேண்டும்? ஆம ஒருவர் பிறந்த் தினத்திலிருந்து இறந்தவரை எத்தனை நல்லக்காரியம் செய்திருப்பார்கள் ,எத்தனைத் தியாகம் செய்திருப்பார்கள் ,எத்தனைச் சாதனைகள்.எத்தனை வீரச்செயலகள் எத்தனைச் சோதனைகளைச் சந்தித்திருப்பார்கள் ,,,,,,,அவர்களை நினைத்துப் பார்க்கும் கடமையும்
மகன்கள் மகள் பந்துக்களுக்கு உண்டல்லவா? அவர்கள் இறந்தாலும் அவர்கள்
ஆசியில் நாம் நல்வாழ்வு வாழ்கிறோம் .
சிலர் இது போல் செய்ய விருப்பமில்லாமல் இருந்தாலும் அவர்கள் ஏழைகளுக்கு அல்லது
தேவைப்படுபவர்களுக்கு அன்னதானமோ ,துணிகள் தானமோ அல்லது வேறு வித்த்தில்
தானம் செய்து இதை நிறைவேற்றுகிறார்கள்
நம் மூதாதையர்கள் சூக்ஷ்ம ரூபத்தில் வரும் நாட்கள் கிரஹண புண்யகாலம் ஆடி அமாவாசை
தை அமாவாசை ஆடி மாதப்பிறப்பு தைமாதப்பிறப்பு பின் மாஹாளய நாட்கள்,,,,,

சிலர் நதிதீரத்திலும் சென்று தர்ப்பணம் செய்வார்கள்
இதற்கு வடக்கில் சிறந்த இடங்கள் வடக்கில் காசி ஹரித்வார் ரிஷிகேஷ் விஷ்ணுப்பிராயக் ருத்ரப்பிரயாக் ,புஷ்கர்

தெற்கில் திருச்சி காவேரி,ஸ்ரீரங்கம் கும்பகோணம் திலதர்ப்பணபுரி கோதாவரி தீரம்
ராமேஸ்வரம் கன்னியாகுமாரி முதலியவைகள்

அன்புடன் விசாலம்

தோன்றினும் புகழுடன் தோன்றுக

இசை மேதை திருமதி அருணா சாயிராம்

இவர் நமது இசையை மேல்நாடுகளுக்கும் எடுத்துச் சென்று புகழ் மாலைச் சூட்டி வந்திருக்கிறார் என்று தெரிவிப்பதில் மிகப் பெருமை அடைகிறேன் {singer Aruna has been honoured with a spl congressional proclamation issued by the U.S.House of representatives } அந்த இடத்தில் நம் நாட்டுத்
தேசிய கீதம் இசைக்க அதே போல் அவர்கள் நாட்டு தேசிய கீதம் இசைக்க அவளை
மரியாதைச் செய்தது எனக்கு மிகப் பெருமை ,,,,,,அருணா சாயிராமுடன் அவர் சிறு குழந்தையாய் இருந்ததிலிருந்தே பழக்கம் ,அவர் தாயார் திருமதி ராஜலட்சுமி தந்தை
திரு சேதுராமன் என் குடும்பத்தில் ஒருவராக இருந்தனர் அந்தப் பெற்றொர்கள் அருணா
பெரிய பாடகியாய் வர கனவு கண்டனர்,அவர்கள் இப்போது இருந்திருந்தால் எத்தனை மகிழ்ச்சி
அடைந்திருப்பார்கள்? அவர்கள் எங்கிருந்தாலும் ஆசிகள் வழங்குக் கொண்டிருப்பார்கள்
திருமதி அருணா நடனமும் படித்தார் . அவளுடன் நான் பல வருடங்கள் கூட இருந்திருக்கிறேன் பள்ளிக்குப் போகும் வயது ,அப்போதே பாட்டும் சாதகம் செய்ய
அவளது பெற்றோர்கள் மிகவும் உதவினர் ,
தனக்கென ஒரு பாணி வகுத்துக் கொண்டு எந்தப் பாட்டு பாடினாலும் அதில் ஒரு விருத்தம் போல் சேர்த்து பின் பாடல் பாடும் அழகே தனி . ,கச்சேரியில் முதல் பாதி நேரம் ராக ஆலாபனை, கற்பனை ஸ்வரங்கள் ராகம் தானம் பல்லவி என்று முடித்து பின் பாமர
மக்களுக்கும் புரியும்படி நாட்டுப்பாடல்கள் காவடிச் சிந்து திருப்பாவை துக்காராம் ஞானேஸ்வர்
போன்ற்வர்கள் பாடிய அபங் மராட்டியில் ,,என்று கச்சேரி களைக் கட்டும் ஒவ்வொரு பாடலிலும் அதன் பாவத்தைக் காணலாம் முருகன் நேரே வருவார் குழலூதும் கண்ணன் என்ன ,,,,,திருப்பதி வெங்கடாசல்பதி என்ன! காமாட்சி என்ன! என்று பலரையும் நமக்கு நேரே
நிறுத்தி விடுகிறார் நாம் உணர்ச்சி மேலிட்டு அழுதும் விடுகிறோம் இது எல்லாவற்றுக்கும்
காரணம் கடும் உழைப்பு ,சுருதி சுத்தத்துடன் பல மணி நேரங்கள் அப்பியாசம் ,அதில் லயித்து ஒரு யோகம் போல் ஒன்றிவிடுதல் ,,,,,,,,,இத்தனை இருந்தும் கர்வம் இல்லாமல்
எல்லோரிடமும் இனிமையாகப் பேசும் குணம் தன் மாமியார் அவர்களிடம் அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் பண்பு என்று பல நற்குணங்கள் அவரிடம் இருக்கின்றன

அவர் கணவர் திரு சாயி ராமும் எனக்கு நன்குப் பழக்கப்பட்டவர் அவரது ஒத்துழைப்பும் இவர் மேலே முன்னேற வழி வகுத்தது அவருடைய பாட்டு காளிங்க நர்தன தில்லானா,,,, ஊத்துக்காடு பாடல் இன்றும் காதில் ஒலிக்கிறது அவருடைய ஒவ்வொரு பாடலும் முத்துக்கள் ,,,, அருணா ,,,,நான் உங்கள் உயர்வைக் கண்டு மிகப்பெருமை அடைகிறேன்,நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்க வளமுடன்
,

ஓணம்

ஆகஸ்டு கடைசி வாரத்திலிருந்தே கேரளா களைக்கட்ட ஆரம்பித்து விடுகிறது எங்கு
பார்த்தாலும் ஒரே கூட்டம் நகைக் கடைகளிலோ கேட்கவே வேண்டாம் தவிர ஓணத்தின்
புடவையும் 300லிருந்து ஆரம்பித்து பல ஆயிரம் வரை ,,,எங்கும் மகிழ்ச்சி எங்கும் உல்லாசம் ,,
இது எல்லாம் எதற்கு? அவர்களது மன்னன் திரு மஹாபலி சக்கிரவர்த்தி அல்லவோ
வரப்போகிறார் !
திருவோண நட்சத்திர நாளில் வந்து ஒவ்வொரு பிரஜையையும் ஆசிர்வதித்துப் போகிறார்
அவரை வரவேற்க ஒவ்வொரு வீட்டு வாசலிலும் புஷ்பங்களால் அழகானக் கோலம்
போடப்பட்டிருக்கிறது ,எந்தக் கோலம் சிறந்தது என்றுச்சொல்ல முடியாதபடி அத்தனை அழகுடன் நம்மை மயக்குகிறது அவர் வருவதால் யானைகளின் ஊர்வலம் அந்த யானைகளுக்கும் பளபளவென உடை அதில் சரிகை வேலைப்பாடு ,,தவிர வித்விதமாக வாண
வேடிக்கை ,எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு வித்வித்மாக பிரசாதம் அந்தச் சாப்பாட்டை
சத்தி {saddhi } கூறுகின்றனர் ஓலன் காலன் எரிச்சேரி கூட்டான் பாலபாயசம் சக்கைப்பாயசம்
என்று பல வகைகள் அவர்கள் போடும் வாழை இலையின் அளவைப் பார்த்தாலே வயிறு
ரொம்பிவிடும் அந்த இலையின் முழுவதிலும் பலவிதமான ஐட்டங்கள் ஓ சொல்ல மறந்தேனே
நேந்தரம் பழம் இல்லாமலா,,,,,,,,அதுவும் இலையில் பலரூபங்களில் பறிமாறப்படுகின்றன ,
இதன் புராணம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று மஹாவிஷ்ணு வாமன்ராக வந்து மூன்று அடிகள் யாசித்தார் அதை திரு மஹாபலி கொடுக்க சம்மதித்த்வுடன் விண்ணையும் மண்ணையும்
இரண்டு அடிகளாக அளந்து பின் மூன்றாவது அடி எங்கே வைப்பது என்று கேடக மஹாபலி
தன் தலையைக் காட்ட அவரும் தன்பாதத்தை அவர் தலை மீது வைக்க அவன் கீழே அழுத்தப்பட்டு விடுகிறான் எல்லா மக்களும் அவருக்காக வருந்தி அழ மஹாபலியும் தன் பிரஜைகளைப் பார்க்க வருடத்தில் ஒரு நாள் அனுமதி வேண்டி
நிற்க ஸ்ரீ மஹாவிஷ்ணுவும் ஆசிகள் வழ்ங்குகிறார் திருவோண நட்சத்திரத்தில் அவர்
தன் மக்களைப் பார்க்க வருவதாக ஒரு ஐதீகம்
கேரளா சர்க்கார் இந்த வாரத்தைச் சுற்றுலா வாரமாக வைத்து விடுகிறது ஆகையால் வெளி
நாட்டவர்கள் கூடுகின்றனர் அவர்களுக்கு மிகவும் பிடித்த படகு போட்டி அல்லவா இருக்கிறது
அதுவும் கேரளா "வள்ளம் களியையும் கதக்களியையு
ம் பார்க்க நாம் நம்மையே மறந்து
விடுவோம் அத்தனை உல்லாசம் ,,பாம்பு போல் வளைந்தப் படகில் வரிசையாக மக்கள் உடக்கார்ந்து ஒரே மாதிரி துடுப்பு செலுத்தி அத்துடன் பாடலும் ரிதத்துடன் ஓட்ட ,,பார்க்க
வேண்டிய காட்சி தான் சிலர் புலி வேஷம் போட்டுக் கொண்டு தெருவில் நடனமும் ஆடுகின்றனர்

ஒணத்திற்கு நல் வாழ்த்துகள்

உலக நல்லெண்ணங்கள் நாள்

உலக நல்லெண்ணங்கள் நாள்,,,ஆஹா கேட்கவே எத்தனை அருமையாக இருக்கிறது இந்த நாளில் ஒரு வெறுப்பு இருக்காது ஒரு வசவு இருக்காது கோபம் தாபம் எல்லாவற்றையும் மூட்டைக்
கட்டி வைத்து விட்டு மனதை நல்லெண்ணங்களாலே நிரப்புவோமாக , ஒரு குழுவில் நாம் செய்யும் பிரர்த்தனைக்கே எத்தனைச் சக்தி! இதை நாம் எல்லோரும் கண்கூடாகப் பார்க்கிறோம் ஒவ்வொருவருடைய நல்லெண்ணங்களும் அவர்களது வாழ்த்தலும் நம்மைச் சுற்றிப்பரவி பிரபந்தத்தில் கலந்து அதனால் நல்ல வைப்ரேஷன் ஏற்பட்டு அதனுடைய நற்பலன்களையும்
நாம் காண்கிறோம் இதே போல் உலகமுழுவதும் இன்று பாசிடிவ எண்ணங்கள் உதயமாக அதனுடைய சக்தி எத்தனை வலுவு மிகுந்ததாக இருக்கும் ?இலங்கையில் நல்ல
அமைதியான வாழ்க்கைப் பிறந்தவிட்டதாக எண்ணுவோம் தீவிரவாதிகள் மனம் மாறி
நல்ல செயல் செய்வதாக எண்ணுவோம் உலகில் இருக்கும் எல்லா மக்களும் வசதியாகவும்
நிம்மதியாகவும் வாழுகிறார்கள் என்று எண்ணுவோம் இதேபோல் பல பிரச்சனைகளுக்கு
முடிவு வந்து வளமாக வாழ்வதாக எண்ணுவோம் தவறு இழைப்பவர்களை மன்னித்து அன்பைப் பரப்ப எண்ணுவோம் பெற்றோர்கள் குருமார்களுக்கு சேவை செய்ய எண்ணுவோம்
இதே போல் எத்தனை ந்ல்லெண்ணங்கள் உண்டோ அத்தனையும் உலகம் முழுவதும் எண்ண அதன் பலன் சொல்ல இயலாது ஆனால் எண்ணுவதிலும் போலித்தனம் இல்லாமல்
உணமையாக அடி மனத்திலிருந்து வர வேண்டும்
இதனால்தான் ஒருவருடைய பெயரும் பார்த்து நல்ல பொருள் வருவதாக வைக்கிறார்கள்
பலர் அவரை அழைக்க அது அவரைச் சுற்றி பரவி அவருக்கு நல்லது செய்கிறது சிலர் நல்ல பெயரை வைத்துப் பின் சுருக்கி விடுகிறார்கள் அதனால் கிடைக்கும் பலன் போய்
விடுகிறது சில பெயரில் இருக்கும் பொருளில் எதிமறை அலைகள் பரவி அது அவர்களுக்கு
துன்பமும் விளைவிக்கிறது "நேமாலஜி"இதிலிருந்து தான் பிறந்திருக்கும் என நினைக்கிறேன்

எண்ணங்களின் வலிமைக் குறித்து ஒரு புத்தகத்தில் படித்தேன்
ஒரு நோயாளி தன் நோயின் விஷத்தன்மை நீங்க தினமும் அந்த நோய் தன்னைவிட்டு
கறுப்பு கலரில் வெளியே செல்வதாகவும் அதனால் தான் திரும்ப உடல் நலம் பெற்றது
போல் வலிமையான எண்ணங்களை தினமும் கற்பனைச் செய்ய டாக்டர்களும் வியக்கும்படி
நன்கு தேறிவிட்டார், இதுவே தான் ஆல்பா தியானமும் சொ
ல்கிறது ந்ல்லெண்ணங்களை
விதைப்போம் நன்மைச் செய்வோம் நற்பலன்களைப் பெறுவோம்

உலக நல்லெண்ண்ங்கள் நாளுக்கு என் வாழ்த்துக்கள் அன்புடன் விசாலம்

Friday, February 8, 2008

காட்டு மிருகம் நாட்டில்

நான் தான் காவலன் முத்து,
சத்தியம் கடமை, நேர்மை,
எனக்குக் கிடைத்த முத்து
என் தந்தையின் இது வேதவாக்கு
அவர் மரணப்படுக்கையின் வாக்கு
"முத்துக்கண்ணா,,,,,,,,
நியாயத்திற்குச் செய்த போர்
அதில் கிடைத்த மெடலைப் பார்
லஞ்சம் பக்கம் திரும்பாதே,
பேராசையில் கையை நீட்டாதே "

ஓய்வு பெறும் வரை
வாழ்ந்தார் ஒரு சின்ன வீட்டில்
அவருடன் சேர்ந்தவர்கள்
வாழ்வது பங்களாவில்
"பிழைக்கத் தெரியாதவன்"
தட்டினார்கள் மட்டம் ,
நேர்மைக்கு ஒரு பாராட்டு,
அதுவே கிடைத்தப் பட்டம் ,
அவர் கொள்கையில் வாழ்ந்தேன்
அதிலே இன்பம் கண்டேன்
பிடித்தேன் ஒரு நாள்
கையும் களவுமாய்
ஒரு ரௌடியை ,
பலாத்காரம் செய்த குற்றம்
பெண்ணைக் கொன்ற குற்றம் ,
கண்ணால் பார்த்ததும் நானே,
அதன் சாட்சியும் நானே ,

அரசியல் நுழைந்தது ,
சாட்சிகள் மாற்றப்பட்டன
மந்திரியின் மகனாயிற்றே!
அடி வாங்கினேன்
துன்புறுத்தப்பட்டேன்
என் கொலைக்கும் திட்டம்
கேஸ் அனுமார் வால் போல் நீள்
பெயரளவுக்கு அவன் உள்ளே
சீக்கிரம் வெளி வருவான் ,,,,,,

ஆனால் என் வாழ்க்கை?
அன்பு மனைவி விபத்தில்
இன்று அவள் இல்லை ,
நான் ஒரு காட்டு இலாக்காவில்
மிருகங்களோ நாட்டில் ,!
உண்மை ஒரு நாள் வெல்லும்
என் தந்தை மனமும் வாழ்த்தும்

அன்புடன் விசாலம்