Friday, August 31, 2007

எல்லா குருவிற்கும் என் சிரம் கவிழ்த்து வணங்குகிறேன். குரு பிரும்மா குரு விஷ்ணு குரு தேவோ
மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரப்பிரும்மா தஸ்மை ஸ்ரீ குருவே நம:

பதிநிலை பசுநிலை பாசநிலையெலாம்
மதியுறத் தெரிந்துள வயங்கு சத்குருவே
சிவரக சிவமெலாந் தெரிவித் தெனக்கே,
தவ நிலைக் காட்டிய ஞான சத் குருவே ,
எல்லா நிலைகளுமேற்றிச் சித்தெலாம் .
வல்லா னென வெனை வைத்த சற்குருவே .

அருட்பெருஞ்சோதி அகவலில் திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் குருவைப் பற்றி நன்கு விளக்கி
இருக்கிறார் ,சத்குரு உண்மையான குரு என்றும் குரு என்பவர் அக்ஞான இருளைப் போக்குபவர் என்றும்
ஞானத்தை வழங்குபவர் என்றும் கூறுகிறார்

ஸ்ரீ சத்ய சாயி நம் முன்னால் எட்டு குருவை வைக்கிறார்
போத குரு சாஸ்திரங்களைப் போத்ப்பவர்
வேத குரு ----வாழ்க்கையின் உண்மையான உள் அர்த்தத்தை நமக்கு உணர்த்துபவர்
நிஷித்த குரு ---உரிமைகளையும் கடமைகளையும் நமக்கு போதிப்பவர்
காம்ய குரு -- மிகவும் உயர்ந்த செயலால் பூலோகம் சுவர்க்க லோகம் இரண்டிலும் ஆனந்தத்தை அடைய
வழி காட்டுபவர்
வாசக குரு --யோகக்கிரியைகளைத் தந்து ஆன்மீக வாழ்க்கைக்கு நம்மைத் தயார் செய்பவர்
சூசக குரு -- ஐம்புலன்களையும் அடக்கக் கற்றுக்கொடுத்து ஆன்மாவை உணர வைப்பவர்
காரணகுரு ஜீவா ஆத்மா இரண்டின் சேர்க்கைக்கு வழி காட்டுபவர்
விஹித குரு சந்தேகங்களைப் போக்கி மனதைத் தூய்மைச் செய்பவர்

இந்த எட்டு குருவிலும் மிக முக்கியமாகக் கருதப்படுபவர் காரண குரு .இவர்தான் நம் ஆழ்மனத்தில் புகுந்து இறைச்சக்தியை வெளிப்படுத்த உதவுபவர் ,

குரு எப்படி இருப்பார்?

தாடியுடன் கமண்டலத்துடன் புலித்தோல் ஜடாமுடி யுடன் இருப்பாரா ?இதெல்லாம் தேவையா ?
இல்லை அவர் சிறு பையனாகவும் வரலாம் , கடவுளாகவும் இருக்கலாம் மகனாகவும் இருக்கலாம் இயற்கையாகவும் இருக்கலாம் எந்த வயதும் இருக்கலாம் எப்போது வேண்டுமனாலும் வரலாம் .
ஊத்துக்காடு வெங்கட கிருஷ்ணர் அவர்களுக்கு கிருஷ்ணர் மேல் பாட்டு பல பாட ஆசை ..ஆனால் அவருக்கு கற்றுக் கொடுக்க ஒருவரும் வராததால் கிருஷ்ண்ரிடமே முறையிட மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபல ஸ்வாமியின் மேல் பாட கண்ணனே குருவானார் ,தத்தாத்ரேயருக்கு இயற்கையே குருவாக இருந்தது
குரு சத் குருவைத் தேடி நாம் அலைய வேண்டியதில்லை.நாம் அறிவை விட்டு ஆன்மாவை அடைய
முற்பட்டால் குரு நம்மைத் தகுந்த நேரத்தில் தேடி வருவார் ,
திருவருள் பெற குருவருள் வேண்டும் ,,நாம் ஒரு பெரிய பெயர் பெற்றஸ்தலத்திற்கு போகிறோம் .ஊர் புதியது
அந்த பிரம்மாண்டமான கோவிலில் எது முதலில் பார்க்க வேண்டும் எப்படி எல்லாம் போகவேண்டும்
என்பதற்கு ஒரு கைட் என்ற வழிக்காட்டி இருப்பான் ,அந்த வழிக்காட்டியின் துணையினால் நாம் ஒருவித்மான
பிரச்சனையும் இல்லாமல் முடிக்கிறோம் .இந்த வேலைதான் குருவினுடையது.நம் வாழ்க்கை என்ற
பயணத்தில் எந்தெந்த இடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் எப்படி கடைசியில் கர்ப்பக்கிரஹமான
ஆன்மாவைக் கண் டு அதன் இறைச்சக்தியை அனுப்விக்க முடியும் என்று விவரித்து பாதைக் காட்டுபவர்
குரு.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

அன்புடன் விசாலம்

ஒரு செல் பேசுகிறது

"ஹலோ... ஹலோ...
நான் தான் செல்
எப்போதும் உங்கள் கையில்
அட்க்கம் உங்கள் பையில்,
சீமான்களிடமும் நான்,
ஏழைகளிடமும் நான்,
வித்தியாசம் இல்லை,
சாதி பேதமும் இல்லை,
அவசரத்திற்கு மட்டும்...
என்று நான் வந்தேன்,
ஆனால் மலிவு விலையில்...
இன்று மலிந்து போகிறேன்,
நன்மை காணவே வந்தேன்
தீமைகளைக் காண்கிறேன்,
எங்கும் காதல்...
காதல் வளர
"இன்கமிங்ஸ் " இலவசம்,
கேடகவே பரவசம்,
கிளம்பும் பல நிறுவனங்கள்
கூடவே போட்டிகள்,
கத்திரிக்காய் வியபாரம்,
போல் ஆனது விவகாரம்


கோவிலில் குருக்கள்,
கூடவே மலர்ந்த பூக்கள்,
மந்திரங்கள் பாதி வாயில்,
நடு நடுவே பேசுவது செல்லில்,
கடவுளும் காத்திருக்கிறார்,
பொறுமையுடன் நிற்கிறார்,
மேடையில் ஒரு சங்கீதம்...
தன்னை மறந்து வந்த கீதம்
மாமேதை வித்துவான் பாட
இங்கு ஒருவர் செல்லும் பாட,
பாடகருக்கு வந்தது கோபம்,
கச்சேரி முடிந்து எழுந்தது தாபம்

வாகனத்தில் ஒரு ஓட்டம்
ஆனால் என் மேல் அதிக கவனம்,
காதலில் மறந்து பேசுவது மனம்
இது தவறாமல் நடப்பது தினம்,
சாலை விதிகள் கண்ணின்று மறைவு,
காதல் பேச்சில் மனமும் நிறைவு,
அதோ ஒருவன் தன்னை மறக்க
எஸ்,எம் எஸ் ஜோக்கில் தானே சிரிக்க
வேகமாய் வந்த பைக்கும் மோத
நானும் அவனுடன் ஒன்றாக் விழ,
ஸெல்போன் காதலன் மடிகிறான்,
அவனுடன் நானும் மடிகிறேன்
அமுதமும் விஷம் அளவுக்கு மீறினால்,
வேண்டாம் இந்தப் பரிட்சை
ஆபத்து செல்லினால்...

அன்புடன் விசாலம்.


,,

மந்தனே காக்க

இன்று சனிப்பெயர்ச்சி ,சப்தமி திதியில் அசுவனி நட்சதிரம் நிறைந்த நன்னாளில் சித்த யோகத்தில் சனி பகவான் செவ்வாய் ஹோரையில் பஞ்சபட்சி வல்லூரின் வலிமை நிறைந்த
வேளையில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசித்துள்ளார் அதாவது ஆயில்ய நட்சத்திரத்திலிருந்து மகம் நட்சத்திரம் வந்துள்ளார்

" சனி பகவான் நவகிரஹ மந்திரம்

நீலாஞ்சன ஸமானாபம் ரவிபுத்ரம் யமகிரஜம்
சாயா மர்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்வரம்

மைப்போன்று கருமை சூரிய்னின் புத்திரன் எமனின் தமையன் சூர்யனுக்கும் சாயாதேவிக்கும்
பிறந்தவன் மந்த கதியில் செல்பவன் ,,,,,,நான் இவரை நம்ஸ்கரிக்கிறேன்

சனி காயத்ரி

ஓம் காகத் த்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: பிரசோதயாத்

கொடியில் காகம் கரத்தில் உடைவாள் ஏந்தியவரை வண்க்குகிறேன்

எங்களுக்கு அறிவு என்ற ஒளியை அருள்வாயாக

சனிக்கு உகந்த மலர்கள் நீலமலர் ஊமத்த்ம்பூ வன்னி இலை தும்பை , கொன்றை நீல சங்கு
மலர் ,,,
எள் தீபம் மிகவும் நல்லது சக்தி வாய்ந்தது சனியின் தான்யம் எள் ...கறுப்பு எள் முன்னோர்க்கு திதி செய்யும் போதும் உதவுகிறது ஆகையினால் இந்த எள் ஒரு கறுப்பு
துணியில் முடிக்கப்பட்டு தீபம் ஏற்ற ந்ம் முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்கும் .

சனி பகவானை சனீஸ்வரன் என்கிறோம் நவகிரஹங்களில் இவர் ஒருவருக்குத்தான்
ஈச்வரப் பட்டம் ,மூன்று பேருக்குத்தான் ஈஸ்வரப் பட்டம் கிடைத்துள்ளது ஒன்று
பரமேஸ்வரன் பின் இலங்கேஸ்வரன் ,,முன்றாவதாக சனீச்வரன் .இதிலிருந்தே அவரின் சிறப்பு தெரிகிறது ,கலிகாலம் என்பது சனிபகவானின் காலம் .ஒருவரை அரச்னாக்குவதும்
ஆண்டியாக்குவதும் அவர் கையில் உள்ளது.நம் கர்ம விதிப்படி அவர் செயல்படுகிறார்

சனிபகவானைப் பற்றி சொல்லும் நேரம் திருநள்ளாறு தான் ஞாபக்ம் வருகிறது ,அங்கு உள்ள
நளதீர்த்தத்தில் முங்கி எழுந்து பின் அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரைத் தரிசித்துப்
பின் தான் சனி பகவானைத் தரிசிக்கவேண்டும் சனிப் பெயர்ச்சியின் போது அவ்ர் தங்க காகத்தின் மீது அமர்ந்து பவனி வருவது க்ண்கொள்ளாக் காட்சி ,திருநள்ளாறு
எனபது நளன் வந்து தன் கலியைத்தீர்க்க தீர்த்தத்தில் குளித்து பின்சனியைப் பூஜித்து தன்
தோஷத்தைப் போக்கிக் கொண்டார் ,இதற்கு அதிபுரி என்ற பெயரும் உண்டு அதாவது
பிரும்மா இங்கு வந்து பூசித்தாராம் ,சனிப் பெயற்சியைக் காட்டும் முக்கிய அம்சம்
கற்பூர ஆரத்தி ,,,இன்று 12 ,,19 க்கு இந்த ஆரத்திக் காட்டப்பட்டது அத்துடன் மந்திரங்களும்

தேவாரங்களும் ஓதப்பட்டன இன்று நளனின் கதையைப் படிக்க மிகவும் விசேஷம் என்கிறார்கள்

இந்தச் சிம்மச்சனியால் உலகெங்கும் மக்களது உரிமைகள் பாதுகாக்கப்படும் ஈழப்பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று ஒரு ஜோசியர் கூறியிருக்கிறார்.
மகிழ்ச்சியான விஷயம் தான் நாட்டின் நலத்திற்காகவும் மக்களின் நலத்திற்காகவும் சனீஸ்வரரின் அருளைப் பிரார்த்தித்துப் பெருவோமாகுக ..

"காக்கவே சனியே காக்க
காக்கவே காக மூர்த்தி
கருதநற்பொருளே காக்க
காக்கை வாகனனே காக்க "

அன்புடன் விசாலம்

உட்லே ஒரு தேர்

நம் உடலே ஒரு தேர் ,
நடுவிலே இறைவன் ,
தேர் இழுப்பது போல்,
நமக்கு ஆசாபாசங்கள்,
தேர்த்திருவிழாவில்
இயல்,இசை ,நடனம்
வாழ்க்கையில் மகிழும் தருணம்
நாலு வீதிகளில் தேரின் வலம்
நாலு பகுதி வாழ்க்கையில் வலம்
முடிவில் இறைவன் ஆலய நுழைவு ,
நிலையாத உடலின் அழிவு
ஆன்மா வந்த இடத்தில் சேர்வு ,,,

அன்புடன் விசாலம்

விதி

நான் பறவைகள் செடிகள் மிருகங்களுடன் பேசுவேன் , ,,,,அவைகளின் மொழி அந்தக்கால
கதைகளில் வரும் ராஜகுமாரிப் போல் தெரியுமா என்றால் நிச்சியம் தெரியாது,ஆனால் தமிழில் தான் பேசுவேன் ,ஆனால் அவைகள் என் உணர்வைப் புரிந்துக்
கொள்வதை உணறுகிறேன் ,ஒரு தடவை ஒரு துளசிச்செடி நட்டேன் அதனிடம் தினமும்
தண்ணீர் விடும் போது "அழகாக வளர்ந்திருக்கிறாய் நீ,, துளசம்மா .ரொமப நன்றி என்று அதைத் தடவி விட்டேன் ,அந்தச்செடி மிகவும் பூரிப்பாக ,வேகமாக வளர்ந்தது,என் அடுத்த
வீட்டில் அவர்கள் வைத்த துளசி அதிகமாக வளரவில்லை ,அவர்கள் என்னைக் கூப்பிட
அதனுடன் பேசினேன் ,அங்கும் பலன் தெரிந்தது இதே போல் ஒரு அணில் தினமும்
வரும் .அதற்கு பெயர் அனில்குமார் ,,"வந்துட்டாயா இன்று என்ன லேட்டு ?என்று
கேட்டு பழங்களின் துண்டு வைக்க அது சாப்பிட்டு விட்டு நன்றியுடன் என்னைப் பார்க்கும் பின் போய்விடும் , இதே போல ஒரு பல்லி இருந்தது ,வாழும் பல்லி என்றும் சொல்லலாம்
சுமீத் மிக்சி பின் இருக்கும் ,என்க்கு பல்லியைக் கண்டால் பயம் இல்லை , ஏதாவது அரைக்க மிக்சியிடம் போகும் போது "ஏ வெள்ளபல்லி நகரு ,,எனக்கு "அரைக்கணும் "
அது என் சொல்லைக் கேட்பது போல் நகர்ந்து சுவர் மேல் ஏறி விடும் ,மிக்சியின் அசங்கலில் அது நகர்ந்திருக்கலாம் ,ஆனால் என் மனம் நான் அதனுடன் பேசியதால் தான்
நகர்ந்து விட்டது என்று பெருமிதம் அடையும் ,நான் அந்த மாதிரி பேசும் போது
என் கணவர்"என்ன யாரோட பேசற ? தனக்குத்தானேயா ?அப்போ கீழ்பாக்க்த்திலே
எப்போ சேக்கலாம்?,,இப்படி ஒரு கிண்டல்,,,,,,,

வந்தது அந்தத் தினம் ,,,,அடுத்தவீடு காலியானதால் அந்த வீட்டுப்பூச்சிகள் பறந்து என் வீட்டை முற்றுகை இட்டன ஒன்று இரண்டு கரப்புக்கள் அடைக்கலம் புகுந்தன .அதனால் நான் பணிப்பெண்னிடம் பூச்சி மருந்து அடிக்கும்படிச்சொன்னேன் ,என்க்குத்தான் கரப்பு என்றாலே ரொம்ப அலர்ஜி ,,அவள் மருந்து அடிக்க ஆரம்பிக்கப் போகும் போது
நான் "இரு இரு என் வெள்ளைப் பல்லியிடம் பேசி விடுகிறேன் ,,,ஏ ப்ல்லி மருந்து அடிக்கப்
போறா சமத்தா மேலே போ,செத்துகித்து வைக்காதே ,,,,,,,,,,,,,,
அதுவும் சுவர் மேல் ஏறி போனது,,,ஆனால் உள்ளே ஒரு பளீச் என்ற கீறல் ,,,,,,,
அந்தப்பல்லி செத்து விடும் என்பது தான் அது ,,சே சே இருக்காது ,அதுதான் மேலே போய்விட்டதே என்று மனதைச் சமாதானம் செய்துக் கொண்டேன் ,வேலை எல்லாம் முடிந்து சுமார் ஒரு மணிக்கு "ஓ வெண்ணெய் காய்ச்ச மறந்தேனே " என்று எண்ணி
ஒரு கிலோ வெண்ணெயை அடுப்பில் வைத்தேன் ,வெண்ணெய் நன்கு உருக ஆரம்பித்தது,
அந்த நேரத்தில் விஷம் பட்ட ஒரு பூச்சியை வெற்றிகரமாக கவ்வியது அவ்வளவுதான் நிலைத்தடுமாறி பொத்தென்று நேராக நீச்சல் குளத்தில் டைவ் அடிப்பதுப் போல் வெண்ணெய்க்குள் விழுந்தது ,விழுந்தவுடன் சூடு தாங்காமல் திமிங்கிலம் மாதிரி
ஒரு அரை அடி உயரம் மேலே குதித்து திரும்பவும் அதனுள்ளேயே விழுந்தது ,எல்லாம் ஒரு அரை நிமிடத்திற்குள் நடந்து விட்டது ,,விதியை மதியால் வெல்லலாம் என்று அதை நான் காப்பாற்ற நினைத்தும் விதி அதன் உயிரை எடுத்து விட்டது ,என் பளிசென்ற ஒரு கீறல் எப்படி உண்மையானது? ,,,சட்டென்று அடுப்பை அணத்தேன் உள்ளே ஒரு சலனமும் இல்லை ,மனம் அழுதது ,,,கனத்தது ,எல்லாவற்றுக்கும்
ஒரு ஆரமபம் ,,,,,உண்டு ஒரு முடிவு உண்டு ,,இதுதானே வாழ்க்கை ,,,,,,,

அன்புடன் விசாலம்

,

மூன்று மார்க்கங்கள்

த்வைதம் விசிஷ்டாத்வைதம் அத்வைதம் ,,,இந்த மூன்று மார்க்கங்களும் கடவுளை அடையும்
வழிகள் தான் ,இம்மூன்றும் அடிப்படையில் ஒன்றுதான் ,இதை சாயிராம் மிகவும் எளிதாக
நமக்குச் சொல்கிறார்
அதாவது கரும்பு ,,த்வைத்துக்கு ஒப்பானது ,,இதிலிருந்து எடுக்கப்படும் சாறுதான்
விசிஷ்டாத்வைதம் ம்

கரும்புச்சாறு சக்கை முழுவதும் நீக்கப்பட்டது , இனிப்பானது ,,ஆனால் சிறிது நேரத்திற்கு
மேல் சேமித்து வைக்க முடியாது ,
சர்க்கரை சேகரித்த கரும்பின் சாற்றைப் பக்குவப்டுத்தி அதில் அமலங்களைச் சேர்த்து
பின் வருவது சர்க்கரை இதை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சேர்த்து வைக்கலாம் பலவித பானங்களிலும் உணவுகளிலும் தேவையான அளவு சேர்க்கலாம் iஇதுவே அத்வைத
தத்துவம்
த்வைதம் கரும்பு ,,,விசிஷ்டாத்வைதம் ,,,, சாறு அத்வைதம் சர்க்கரை .......

அன்புடன் விசாலம் ,,,,,

வரலட்சுமி விரதம்

ஆடி அல்லது ஆவணி மாதம் சுக்ல பக்ஷம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்
விரதம் ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம் ,கலசம் வைத்து அதில் மஞ்சள் பூசி அம்மன் முகம் வரைந்து
கலசத்திற்குள் அரிசி பருப்பு ,எலுமிச்சம்பழம் வெற்றிலைப்பாக்கு ,மஞ்சள் ஒரூருபாய் காசு
போட்டு பின் மாவிலை வைத்து ,,அதற்கு மேல் தேங்காய் வைக்க வேண்டும் அம்மனின் முகம் வெள்ளியில் கிடைக்கும் ,அதை வாங்கி அந்தச் சொம்பில் பொருத்த வேண்டும்
பின் மாலைகளால் அலங்கரிக்க வேண்டும் அதில் வரலட்சுமியை ஆவாஹனம் செய்து
பின் பூஜை செய்யவேண்டும் பூஜை முடித்தப்பின் நோமபுக்கயிரைக் கட்டிக் கொள்ள வேண்டும் இந்த விரதத்திற்கு மோதகம் ,இட்லி ,வெல்லப்பாயச்ம் ,வடை நைவேத்தியம்
செய்யலாம் ,அம்மனை அன்புடன் ஆரத்தி எடுத்து அழைத்தால் ஒடோடியும் வருவாள்
"லக்ஷமி ராவே மா இண்டிக்கு,,,,,,,,ஸ்ரீ ராஜபுத்ரி வரலக்ஷமி ராவே மா இண்டிக்கு "

"பாற்கடலில் உதித்தவளே
பவள நிறத்தவளே ,
சீர் மேவும் சித்திரமே ,
சிங்கார நல்முத்தே
கார்மேகக் கருணை மனம்
கைகளோ வள்ளனமை
பார்வையிலே பலனுண்டு
பைங்கிளியே இலக்குமியே


முத்து நகை ரத்தினங்கள்
மூக்குத்தி புல்லாக்கு
சத்தமிடும் கங்கணங்கள்
சங்கீத மெட்டியுடன்
சித்திரை நிலவு முகம்
சிங்காரப் புன்சிரிப்பு
பத்தரைப் பசும் பொன்னே
பவனி வரும் இலக்குமியே
எண்ணுவோர் எண்ணி யாங்கு,
எய்திடச் செய்யும் அன்னை
தன்னையே தமறாக் காக்கும்
தகவுடைத் தாயைப் போற்றி
எண்ணுவோம் ,வணங்குவோம்
இன்னலம் பெற்றே உய்வோம்

பாரதியார் காணும் ஸ்ரீதேவி ,,,,,,

பொன்னரசி நரணனார் தேவி ,புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மெனி யழகுடையாள்,
அன்னையவள் வையமெல்லம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண் புகுந்து வாழ்வோமே ,,,,,
அப்பர் கண்ட இலக்குமி


செந்துவர் வாய்க்கருங் கணிமை
வெண்ணகைத் தேன்மொழிய
வந்து வலஞ்செய்து மா நடம் ஆட மலித்த செலவக்
கந்தமலி பொழில்சூழ் கடல்
நாகைக்கா ரோண மென்று
சிந்தை செய்வாரைப் பிரியாது
இருக்குந் திருமங்கையே


அன்புடன் விசாலம்

ராக்கியினால் தப்பினார்

சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது,அன்று ஒரு நாள் ரக்ஷா பந்தன் தினம் ,,,,,
திரு சந்திர சேகர் ஆஸாதை {Azad} சல்லடைப் போட்டு தேடிக்கொண்டிருகின்றனர்
ஆங்கிலேயச் சிப்பாய்கள் ,அவரும் டிமிக்கிக் கொடுத்து எல்லோருடையக் கண்களிலும்
படாமல் தப்பித்து கொண்டிருந்தார் ஒரு சமயம் அலஹாபாத்தில் ஒரு நண்பர் வீட்டில்
இருந்தார் எப்படியோ அது தெரிய வந்து அந்த வீட்டைச் சுற்றி போலீஸ் படை சுற்றிலும்
அமர்த்தப்படிருந்தது ,அங்கிருந்த திருமதி ஸ்ரீதேவி முட்சாதி தன்னை மிக அழகாக அலங்கரித்துக்கொண்டு நல்ல விலை உயர்ந்தப் புடவை உடுத்தி ஒரு பெரிய கூடையில்
பழங்கள் இனிப்புக்கள் நிரப்பி அதை திரு சந்திரசேகர் ஆஸாதிடம் கொடுத்து தூக்கி வருமாறு
செய்தாள்,அவரை வேலைக்காரனைப்போல் நடிக்கச் செய்தாள்,
"சீக்கிரம் சீக்கிரம் நாழி ஆக்காதே என் அண்ணா ராக்கிக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பார்
இப்போதே நான் ரொம்ப லேட்,,நீ வேறு ஆடி அசைந்து வருகிறாய் ,உம் நட நட "என்று அவரைப் பார்த்துக் கோபித்துக் கொள்வதுப்போல் நடித்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகாக
வழியை விட்டார் அப்போது அந்த அம்மணி ஆஸாதின் கூடையிலிருந்து ஒரு லட்டுவை எடுத்து "பாயி சாஹேப் கொஞ்சம் ஸ்வீட் சாப்பிடு "என்று திசையைத் திருப்பினாள் ,,,பின் என்ன? வேகமாகப் போய் காரில் அம்ர்ந்துக் கொண்டனர் ,,,இன்ஸ்பெகடரை முட்டாளாக்கி விட்டு தப்பித்துச் சென்றனர் ,பின் எல்லா போலீசும் உள்ளே போய் பார்க்க ஒருவரும் அங்கு இல்லை ,,ராக்கியினால் அவர் உயிர் தப்பியது ,இந்த ராக்கி தினம் ஆஸாதுக்கு
தப்பி ஓட சுதந்திரம் கிடைத்தது ,,,

அன்புடன் விசாலம்

ஒணம் வர, ஓடப் போட்டி

ஆகஸ்டு மாதம் வந்தாலே கேரளத்தில் ஓடங்கள் கப்பல்கள் எல்லாம் ,, பழுதுகள் சரியாக்கப்பட்டு , புதுசாக்கப்பட்டு ,வர்ணங்கள் பூசப்பட்டு தயாராகி விடும் எதற்கு இந்த அலங்காரங்கள் என்றால் " வெள்ளம் களி"அதாவது போட் ரேஸுக்குத்தான் ,ஓணம் வர இந்த
போட் ரேஸும் கூட வந்து அமர்க்களப் படும் இதைச் சுந்தன் வள்ளம்"என்றும் சொல்வார்கள்
ஏன் என்றால் பாம்பு போல் இருக்கும் .இதன் நீளம் சுமார் 60 மீட்டர் நீளம் ,,இதில் சுமார்
100 பேர் துருப்புடன் ஓட்ட அமரலாம் ..நடுவில் ஒரு சின்ன மேடை உண்டு ,அதில் பாடுபவர்கள், வாத்தியம் கொட்டுபவர்கள் அமருவார்கள்,இந்தப் பாடலுக்கு வஞ்சிப்பாட்டு எனப்பெயர் "செம்மீன் "படத்தில் மிக அழகாக இந்தக்காட்சியைப் படம் பிடித்திருக்கிறார்கள்.
"தையரே தையா தையாரே தையா தை தை ,,,,தைதைதை ,,,என்ரு ரிதமுடன் பாட அந்தக்
காட்சி மிக அழகு ,இயற்கைச் சூழலில் இந்தக் காட்சிக்காண பல வெளியூர்களிலிருந்தும்
வருவார்கள்,மிக முக்கியமான ரேஸ் "நேஹ்ரு டிராபி ரேஸ், இது ஆலப்புழாவில் புன்னமடை
ஏரியில் நடக்கும் .ஆலப்புழா இந்தியாவின் வெனிஸ் என்று பெயர் வாங்கியுள்ளது
பண்டித் நேஹ்ருஜி ஒருமுறை இதைப் பார்க்க வந்து மனம் மகிழ்ந்து போனார் {1952 ல் }
திரும்ப தில்லி போன பின் ஒரு வெள்ளி டிராபி பெரிய நீள பாம்பு போல ஜயித்தவ்ருக்கு
அனுப்பி வைத்தார் அதிலிருந்து அவர் பெயரில் இந்த ஓடப் போட்டி நடக்கிறது இது சுமார்
மூன்று மணி நேரம் வரைச் செல்லும் ,டிக்க்ட் முதலிலேயே வாங்க வேண்டும் ,ப்ல ஆயிரம் மக்கள் டூரிஸ்டுகள் கூடி இருப்பார்கள் இந்த ஓடப் போட்டி "உத்திரட்டாதி வள்ளம்
களி" ஆரன்முலா என்ற இடத்தில் கடைசியில் நடந்து நிறைவு பெறும் ,இந்தக் கண்
கொள்ளாக் காட்சியைக் காண ஆலப்புழா செல்வோம் வாருங்கள்
ஓணம் வாழ்த்துக்கள்
அன்புடன் விசாலம

நான் உன்னைக் காதலிக்கிறேன்

உன்னருகில் வந்தாலே
இன்பம் எனக்கு,
மின்சாரம் பாய்கிறது,
நீ ஒளியுடன் மின்னுகிறாய்
பல ரகசியங்க்ள் உன்னிடம்
யார் கேட்பினும் வாய் திறவாய் ,
உன் தேடலில்,
பல புதுமை என்க்கு
பலர் என்னைப் பார்த்தாலும்.
நான் உன்னையே ரசிக்கிறேன் ,
யாரும் நம்மைப் பிரிப்பதில்லை,
காதலில் ஒரு தடையும் இருப்பதில்லை,
உணவு நேரம் போகிறது ,
உறங்கும் நேரம் மறக்கிறது,
உன் அழகை நான் ரசிக்க
கேட்பதெல்லாம் நீ கொடுக்க,
உன் இசையில் நான் மூழ்கிறேன் ,
ஆனால் இருளில் நான் தவிக்கிறேன்
நாட்டியம் ஆடும் விரல்களுக்கு
பல கதவுகள் திறக்கிறாய்
புதிதாய் க்ற்றும் கொடுக்கிறாய் ,
சங்கேதச் சொல்லால் செயல் புரியும் நீ
என்னைக் கவர்ந்தக் கண்மணி நீ
டென்சன் நீக்கும் கணிப்பொறி நீ
என் அருமைக் கணினி நீ


அன்புடன் விசாலம்
,

திடீர்க் கொடிகள்

நேற்று காலியான இடம் ,
இன்று திடீர்க் குடிசைகள் ,
தோன்றியது கூடவே ஒரு கொடி ,
கழிந்தது ஒரு வாரம் ,
முளைத்தன பல கொடிகள்
என்ன மந்திரமோ,
இது என்ன மாயமோ?
சிவப்பு ,கறுப்பு பச்சை.,
எனப் பல ரகங்கள் ,
எப்படி வந்தன?
எங்கிருந்து வந்தன?
பல எழுத்தைக் கொண்ட கட்சிகள்
நினைவிலும் நிற்கவில்லை
திடீரென்று வீர முழக்கம் ,
உடனே கிளம்பும் எதிர் முழக்கம் ,
ஆரம்பிக்கும் அங்கு அடிதடி
பறந்து வரும் சோடா புட்டி
எத்தனைக் கொடிகள்,
எத்தனைக் கட்சி
பறந்து போகும் எந்தக் கட்சி ?
நாளைக் கொடிகள் மாறலாம் ,
பதவி மோகம் ,தலையும் மாறும் ,
ஒற்றுமையுடன் தேவை நல்லாளும் கட்சி ,
அதன் தவறைக்காட்ட எதிர்க்கட்சி