Tuesday, September 18, 2007

உறிஅடி

மும்பையில் ஜன்மாஷ்டமி மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது இதில்
வாலிபர்கள் தன் வீர விளையாட்டைக் காட்டிப் பரிசும் பெறுவார்கள் ,சாலையில் இரு புறமுள்ள பல மாடிக் கட்டடங்களில்நடுவில் கயிறின் உதவியால் ஒரு பெரிய மண்சட்டி
பூக்களுடன் வர்ண துணியுடன் மூடி நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் ,இந்த
விளையாட்டு வீரர்களை "ராமாக்கள் "என்பார்கள்,,""ஆலா ரே ஆலா ,,,,,,ராமா ஆலாரே
என்ற பாட்டு முழங்க தாரை தம்பட்டத்துடன் லேஜியம் ஆடி வருவார்கள்.இந்த லேஜியம்
மும்பயி ஸ்பெஷல் தான் ,வில்லுப் போல் வளைந்திருக்கும் ஒன்றில் ஜால்ராக்கள் கட்டப்
பட்டிருக்கும் அதை அவ்ர்கள் லாவகமாகக் குதித்து ஆடி வரும் அழகே அழகு ,அந்த
மண்சட்டியில் ப்ல ஆயிரம் ரூபாய்கள் வைக்கப் பட்டிருக்கும் ..இந்த ராமாக்கள் மனிதன் மேல்
மனிதன் ஏறி கோபுரமாக அமைத்து அந்த மண்சட்டியை உடைத்து பணமுடிப்பைப் பெற்றுக்
கொள்ள வேண்டும் அவர்கள் அதை எடுக்க விடாமல் பலர் வாளி நிறைய தண்ணீர்
நிரப்பி அவர்கள் மேல் வீசுவார்கள் சிலர் எண்ணெயும் தடவுவார்கள் ,இது கண்ணன்
ஆயர்பாடியில் உறியிலிருந்து சிறிவர்கள் உத்வியுடன் வெண்ணெய் திருடி உண்டது நினவு
படுத்தும் ,
இதே போல் தமிழ் நாட்டிலும் வரகூரில் நடைப் பெருகிரது இங்குதான் ஸ்ரீ நாராயணத்தீர்த்தர்
கிருஷ்ணனுக்கு என்று ஒரு ஆஸ்ரமம் அமைத்தார் ,கண்ணனை வழிப்பட்டார் ,இங்கு
ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி மிகச் சிறபாக நடைப் பெறுகிறது ஒரு இருபது அடி உயரமுள்ள
தூண் கோவில் வாசலுக்கு வரும் ,அதில் உச்சியில் சீடை முறுக்கு என்ற பல
பட்சண்ங்களை மூட்டையாகக் கட்டி வைப்பார்கள் பின் தொங்க விடுவார்கள் அந்த
மரத்தில் எண்ணெயைத் தடவி வைப்பார்கள் .அதில் ஏறினாலே வழுக்கும் ,இங்கும் இத அடையப் போட்டியுடன் வீர விளையாட்டு நடை பெறும் ,இதில் என்ன தத்துவம் இருக்கும்
என்றால் கடும் உழைப்பால் பல இன்னல்களைக் கடந்து பல தடவை முயற்சி செய்தப் பின்
வாழ்க்கையில் வெற்றி உண்டாகும் பின் வாழ்க்கையே இன்பம் தான்

மதுராவில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மலருடன் "கன்னையா கோ ஜய் போலோ " என்ற கோஷத்துடன் வெள்ளிக் காசுகள் தங்கக் காசுகள் வீசி அர்ச்சனைச் செய்கிறார்கள்ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு புதுமையுடன் கண்ணன் பிறக்கிறான் அவன் அருள் எல்லோரும் பெற பிரார்த்திப்போம்

அன்புடன் விசாலம்

மெழுகுவர்த்தி

எனக்குப் போதித்த எல்லா ஆசிரியர்களுக்கும் கைகள் குவித்து தலை வணங்குகிறேன் என் அன்னை , என் தந்தைக்கு முதல் வணக்கம் அவர்கள் தான் என் முதல் ஆசிரியர்கள்,
ஆசிரியர் ஒரு உதாரணப் புருஷராக இருத்தல் மிக அவசியம், எதைப் போதிக்கிறாறோ
அதைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்துக் காட்டுதல் மிக அவசியம்..சொலவதொன்று
செய்வதொன்று என்று இருத்தல் சரியாகாது,மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர்
சேமிக்கும் தொட்டியில் நல்லத் தண்ணீர் இருந்தால் நாம் குழாயைத் திறக்க நமக்கும்
சுத்தத் தண்ணீர் கிடைக்கும் .ஆனால் அந்தத் தொட்டியில் கலங்கலாக அழுக்குநீர்
இருந்தால் குழாய்த் திறக்க நமக்கும் அதுவேதானே வரும் ? ஆகையால் மாணவர்களிடம் ப
பாசமாக அன்புடன் பழகி அவர்களுடன் ஒன்றிப் போக நல்ல பலன் கிடைக்கும் ,அந்த நேரத
நேரத்தில் அவர்கள் மனதில் நல்ல விதைகளை விதைத்தால் பின் பெரிய மரமாகி நல்ல ப
பழங்களைக்கொடுப்பது நிச்சியம். .

ஆசிரியர் ஒரு குயவன் ,
பச்சைமண் பானையாகுகிறது
அவரே நாட்டின் அஸ்திவாரம்,
மாணவன் அவரின் சாரம் .
அன்பின் போதனை
அவரது சாதனை
நற்சிந்தனைகளின் ஊட்டம்
இலட்சியங்களின் ஏற்றம்
தேவை இன்று பல "அப்துல் கலாம்"
என் மதிப்புக்குரிய " சலாம் " ,
ஆசிரியர் ஒரு மெழுகுவர்த்தி ,
கரைந்து போகிறார் ஆனால்
ஒளியைத் தருகிறார்


அன்புடன் விசாலம்

ரொசகுல்லா

ரசகுல்லா என்றாலே கொல்கத்தாவின் நினைவு தான் வரும் ,அங்குக் கிடைக்கும் ரசகுல்லா
வாயில் போட்டுக் கொண்டவுடனேயே அப்படியா கரைந்துப் போகும் மேலும் கடைசிவரை
அந்த இனிப்பு நிலைத்து இருக்கும் ,பனீரால் {paneer} செய்வது ,பனீர் என்பது பாலை
முறித்துப்பின் அதை ஒரு மெல்லியக் காட்டன் துணியில் வடிக்கட்டி அதை அப்படியே
முடிந்து ஒரு சுகாதாரமான இடத்தில் தொங்கவிட்டு விட வேண்டும் பின் எல்லா நீரும்
வடிந்தப்பின் மீதி கெட்டியாக வருவது இந்தப் பனீர் இது எதற்கு சொல்ல வருகிறேன் என்
என்றால் ரச்குல்லா சாப்பிட கண் பார்வை நன்கு தெளிவாகிறது ,தவிர மிகவும் இளமையாக இருக்கலாம் ,
இப்போது கொல்கத்தாவில் ஜாதவ்புர் என்னும் இடத்தில் ஹெர்பல் ரசகுல்லா
கண்டுப்பிடித்திருக்கிறார்கள் ,இதில் கேரட் அதிகம் சேர்த்து கேரட் ரசகுல்லா ஆகிறது
இதற்கு இப்போது ரொம்ப டிமேண்ட் ,,,ஆனால் இரண்டு கடைகளில் தான் கிடைக்கிறது ,
இது மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டால் வெளியூரிலும் அனுப்பலாம் ,இதில் கேரடோன்
என்ற சக்தியும் antioxident {தமிழில் என்ன?}இருப்பதால் உடலுக்கு ஊட்டமும்,, உடலில்
தாங்கும் சக்தியையும் தருகிறது,,immunity ,,,, நம் உடலுக்கு வயது ஏற ஏற தாங்கும்
சக்தி குறைகிறது அநத நேரத்தில் அதிக சக்திக் கொடுக்கும் பதார்ததங்கள் வேண்டும் ஆனால் அதில் கொழுப்பும் இருக்கக் கூடாது ,ஆகையால் ரசகுல்லா தின்பதற்கு
ஆலோசனை சொல்கிறார் திரு உத்பல் ராய் சௌதரி ,இவர் உணவு டெக்னாலஜியில்
தலைமை வகிக்கிறார் ,இவர் சொல்கிறார் " இந்த ஹெர்பல் ரசகுல்லா கேன்சர் வராமல் தடுக்கிறது ,அதிக கொலஸ்டரலைக் கட்டுப்ப்டுத்துகிறது தெம்பிலாமல் இருப்பவர்களுக்கு
சக்தி அளிக்கிறது" ,,,,,, வாருங்கள் நாம் கொல்கத்தா போகலாம் ரசகுல்லா வாங்க,,,,,,

அன்புடன் விசாலம்

நான் இன்று அப்பாவானேன்

பல வருடங்கள் எதிர்ப்பார்ப்பு ,
பின் ஒன்பது மாதம் பாரம் சுமப்பு ,
இன்று அவள் வலியில் துடிப்பு,
என் மார்ப்பு "படபட"வென்றடிப்பு
ஆஸ்பத்திரி அறையில் அவள்,
மாமியார் மெச்சும் மருமகள்,
என் மனம் குவிய
வேதனை என்னைக் கவிய
வேண்டாத எண்ணங்கள் ஓட
மனமும் ஊஞ்சலாக ஆட ,
எங்கும் பரபரப்பு
உள்ளத்தில் ஒரு சலசலப்பு
நர்சுகளின் ஓட்டம்
மேலும் கொடுத்தது வாட்டம்
டாக்டர்கள் உள்ளே வெளியே நடக்க
ஓவ்வொரு நிமிடமும் யுகமாய்க் கடக்க
இதுவரை நினையாத கடவுள்
இன்று ஏனோ என் முன் ,,,,,
கைக்கூப்பி வேண்டியது உள்ளம்
அதோ கேட்குது "குவகுவா "சத்தம்
பிரார்த்தனைப் பலித்தது தொழுவேன் நித்தம் ,
அவள் வலியில் துடித்தது என் இதயம்
என் செல்ல மகள் பூமியில் உதயம் ,
மறு ஜனமம் எடுத்த என் அன்பு மனைவி
அவளே என் வாழ்க்கைத் த்லைவி


அன்புடன் விசாலம்

Friday, September 7, 2007

oh Flower

oh flower !

Thou are the symbol of beauty ,
Thou dance with joy as if in a party
Thou are the model of innocence,
Thou produce beautiful fragrance ,
Thou are the product of delicacy ,
Thou are available in lots of vancy ,
Thou fill our heart with pleasure ,
One should admire you in leisure ,
Thou are the feast for our eyes ,
Thou are with us with lots of ties ,
Thou are offered in temples,
In all religious places in amples.
Thou start with our birth,
and send us with our death ,,,,,,,,,

ammamma vishalam ,

நானும் ஒரு பெண்

உன் "கலகல" வென்ற சிரிப்பில் .,
புதுப்புது பூக்கள் உதிரும் ,
உன் மென்மை இதழ்கள் என்னுடன் சேர ,
தேனும் அமுது போல் சுரப்பது ஏன் ?
உன் கைகள் என்னுடன் பின்ன,
ஒரு வெப்ப அலை ஓடுவதென்ன?
என் தோளும் உன் தோளும் உரச ,
உன் கண்களில் ஒரு ஒளி பிறப்பதேன்?

அலைப்போல் கூந்தலை நானும் வருட ,
நீ அலைகளைப் பார்த்து ரசிப்பதேன் ?
வானத்திலே ஊர்ந்துச் செல்லும்
நிலவுப் போல நீ மிதப்பதேன் ?
முரட்டுக்கையால் உன்னைப்பிடிக்க
அதிலும் இன்பம் காண்பதேன் ?
என் தொடுதல் உனக்குப் பிடித்தும்
பிடிகாத பாவனை செய்வது ஏன்?
போதை ஏறி நம் கைகள் அழுந்த,
அலைஅலையாய் உணர்ச்சி பெருகுவதேன்?
சிவந்த உடையில் தேவதையாய் நீ
என்னை மோகினிப் போல் கவர்ந்தது ஏன்?
ஒருமித்த மனதின் காதல் விளையாட்டு
அதிலேயே இன்பம் காண்பதேன்?
குளிர்ந்த நிலவுப்போல் வந்தாய் நீ
வெப்பம் ஏறி வெட்கப் படுவது ஏன்?
"எய்ட்ஸ்"நோய் என்று தெரிந்தும் ,
உன் வாழ்வைப் பயணம் வைத்ததேன் ?
நிலவும் உன்னை ரசிப்பதேன் ?
கடலலையும் உன் பாதம் தொடுவதேன்?

உன் வாழ்வை ஏன் பணயம் வைத்தாய்?

உன் "கலகல" வென்ற சிரிப்பில் .,
புதுப்புது பூக்கள் உதிரும் ,
உன் மென்மை இதழ்கள் என்னுடன் சேர ,
தேனும் அமுது போல் சுரப்பது ஏன் ?
உன் கைகள் என்னுடன் பின்ன,
ஒரு வெப்ப அலை ஓடுவதென்ன?
என் தோளும் உன் தோளும் உரச ,
உன் கண்களில் ஒரு ஒளி பிறப்பதேன்?

அலப்போல் கூந்தலை நானும் வருட ,
நீ அலைகளைப் பார்த்து ரசிப்பதேன் ?
வானத்திலே ஊர்ந்துச் செல்லும்
நிலவுப் போல நீ மிதப்பதேன் ?
முரட்டுக்கையால் உன்னைப்பிடிக்க
அதிலும் இன்பம் காண்பதேன் ?
என் தொடுதல் உனக்குப் பிடித்தும்
பிடிகாத பாவனை செய்வது ஏன்?
போதை ஏறி நம் கைகள் அழுந்த,
அலைஅலையாய் உணர்ச்சி பெருகுவதேன்?
சிவந்த உடையில் தேவதையாய் நீ
என்னை மோகினிப் போல் கவர்ந்தது ஏன்?
ஒருமித்த மனதின் காதல் விளையாட்டு
அதிலேயே இன்பம் காண்பதேன்?
குளிர்ந்த நிலவுப்போல் வந்தாய் நீ
வெப்பம் ஏறி வெட்கப் படுவது ஏன்?
"எய்ட்ஸ்"நோய் என்று தெரிந்தும் ,
உன் வாழ்வைப் பயணம் வைத்ததேன் ?
நிலவும் உன்னை ரசிப்பதேன் ?
கடலலையும் உன் பாதம் தொடுவதேன்?

ஒரு கரு பேசுகிறது

அம்மா ,உனக்கு முக்கியம்,
உன் அழகு ,
அழகுப் போட்டியில்
நம்பர் ஒன் ஆயிற்றே!
நான் வந்தால்
உனக்கென்ன கஷ்டம் ?
உன் சுதந்திரத்திற்கு ,
என்னை அழித்தாய் ,
உன மார்பின் அழகு
குலைந்து விடுமா?
தாய்மை விரும்பாத
தாயும் உண்டோ?
இரண்டு மாத கர்ப்ப அறையில்
நான் கடந்து தவிக்க ,
என்னை நீ கொன்றது ஏன் ?
உன் அழகுப் போட்டிக்கு ,
நான் என்ன முட்டுக்கட்டையா?
உன் அழகு மங்கிவிடும் .
என்ற பயமோ?

ஐந்து வருடங்கள் ஓடின
நீ என்ன சாதித்தாய்?
கோவில் கோவிலாய் போகிறாய் ,
ஜோசியரைப் பார்க்கிறாய் .
பரிகாரம் செய்கிறாய் .
மழலைச்செலவம் வேண்டுமென,
லட்சுமி போல் நான்
பிறக்க இருந்தேனே ,
என்னை அழித்து
இப்போது ஏன் அழுகிறாய்?


அன்புடன் விசாலம்

தாமரை இலைத் தண்ணீர்

தாமரை இலைத் தண்ணீர் போல் ,,,,,,,,,


இந்தப் புகைப்படம் நானேதான் ,
தனிமையில் இனிமைக் காணும் நான் ,
என் முன்னே நிழற்படங்கள்
பழைய நினைவுச் சித்திரங்கள் ,
அழகான ஒரு வீடு,அன்பு மகனுக்கு,

பார்த்துப் பார்த்து இழைத்தேன் ,
அவன் ருசியில் பிணைத்தேன் ,
ஒவ்வொரு அறையும் பேசும் ,
என் மகனின் வாசனை வீசும்
சுவற்றில் பல விசிறிகள்
"ஜாக்கி சேனனின் போஸ்டர்கள்
கூடவே டென்னிஸ் வீரர்கள்
அழகிய கிரிக்கெட் மன்னர்கள்,
மனம் பிடித்து வசித்தோம் ,
ஒரு வருடம் இனித்தோம் ,

மேலே மேலே படிப்பு ,
ஹாஸ்டலில் இருப்பு ,
அவன் அறை எப்போதும் காலி தான் ,
எல்லாமே ஒரே போலிதான் ,
பல பொருட்களில்,அவன் நினைவு ,
எப்போதும் அவன் கனவு ,
கிடைத்தது வேலை அயல் நாட்டில் ,
தனித்திருந்தேன் நான் நம் நாட்டில்
முதலில் வந்தன அன்பு கடிதங்கள் ,
கூடவே வந்தது திருமணப்படங்கள்
அவன் அறை என்னைப் பார்த்து சிரித்தது
என் ஏக்கத்தை அது ரசித்தது ,
வ்ருடங்கள் உருண்டன ,
கண்ணீரும் பெருகின
கீதைக் கண்களைத் திறந்தது
தாமரை இலைப் போல்
ஞானம் பிறந்தது
மாயை உணர்ந்தது ,
பற்றுடன் பற்றற்றவளானேன்
கடமைச் செய்யும் தாயானேன் ,
எங்கிருந்தாலும் வாழ்க
உன் நினைவில் நான் மலர்வேன்,


அன்புடன் விசாலம்

,

வதந்தி

என் பெயர் வதந்தி ,
எண்ணுள்ளே ஒரு தீ ,
ஒரு சிறு பொறி போதும் ,
உடனே பற்றிக் கொள்வேன் ,
பல இடங்களில் பரவி விடுவேன் ,
எல்லைத்தாண்டியும் போய் விடுவேன் ,
காது மூக்கு வைத்து திரிப்பதில் ,
எனக்கு நிகர் நானேதான் ,
நல்லெண்ணதுடன் ஒரு பெண்,
கூடவே ஒரு ஆண்,
பார்த்து விட்டால் போதும் ,
பெண்ணைக் காதலி ஆக்கி விடுவேன்
வரம்பு மீறி பேசியும் விடுவேன் ,
எல்லாம் தலைக்கீழாக மாற்ற முடியும் ,
என்னால் எதையும் திரிக்க முடியும் ,
ஆஸ்பத்திரியில் ஒரு தலவர்
திடீரென்று இறந்து விடுவார் ,
மறு நாள் பிழைத்தும் கொள்வார் ,
பத்து சவரன் கொள்ளைப் போனால்
ஐம்பது சவரன் ஆக்கிவிடுவேன்
பிள்ளையார் பால் குடித்தது,
உலகம் முழுவதும் பரவியது ,
தெரிந்ததா இப்போது என் சக்தி ,
கொடுங்கள் எனக்கு முக்தி ,

அது என்ன ரகசியம்

அது என்ன ரகசியம்?

மூங்கிலே உன் அழகுதான் என்ன?
வளைந்து கொடுக்கும் தன்மை தான் என்ன?
மழையோ ,புயலோ,
இடியோ மின்னலோ,
தாங்கி நிற்கிறாய்,
எப்படி இது உன்னால் மட்டும்?
ஏற்றத் தாழ்வு என் வாழ்வில் ,
வளைந்து கொடுக்க
கற்றுக் கொடு,
எனக்கும் நீ அந்த ரகசியம் ,,,,,,,,,,,
நீ உடைவதில்லை
சூராவளியிலும் சாய்கிறாய் ,
கீழ் மண்ணைத் தொடுகிறாய் ,
திரும்பி எழுந்து நிற்கிறாய்,
எப்படி இது உன்னால் மட்டும் ?
வாழ்க்கை சுமை,,பாரம்
நான் அதனால் சாய்கிறேன் ,
அதில் நிமிர்ந்து நிற்க
கற்றுக்கொடு ,,
எனக்கும் நீ அந்த ரகசியம் ,,,,,,,,,,
சுனாமி வந்தாலென்ன?
பெரிய வெள்ளம் அடித்தால் என்ன?
தைரியமாக எதிர்க்கிறாய்,
அதனுடன் ஒட்டிப் போகிறாய்,
எப்படி இது உன்னால் மட்டும் ?
சமசார சாகர வெள்ளம்
அதில் மூழ்கும் நான்
அதில் எதிர்நீச்சல் போட
கற்றுக்கொடு ,
எனக்கும் நீ அந்த ரகசியம் ,,,,,,,,,
எந்தச் சந்தர்ப்பத்திலும்
நீ உடைவதில்லை ,
சிரித்தபடி ஊஞ்சல் ஆடுகிறாய்,
சமநிலை தத்துவமாய்
துக்கத்திலும் ,சுகத்திலும் ,
எப்படி இது உன்னால் மட்டும் ?
என் சோக வாழ்க்கை ,
சிரித்தபடி வெல்ல
ஒரே நிலையில் ஏற்க
கற்றுக்கொடு எனக்கும் நீ
எனக்கும் நீ அந்த ரகசியம் ,,,,,

,
அன்புடன் விசாலம்

படிக்க ஆசைதான் ஆனல்,,,,

முகமூடியுடன் என் அம்மா,
அவள் முந்தானைக்குள் நான் சும்மா,
நாளை என் கல்யாணம் ,
கையிலே மெஹந்தி மணம் ,
என் அவருடன் ஒரு பாட்டு ,
மணல்வீடுடன் விளையாட்டு ,
அழகு நகரம் ராஜஸ்தான் ,
ஒரு குடிலின் அரசி நான்
அழகான பெயர் " ஸோனா"
தமிழில் அது "பொன்னா"
பெயரில் தான் பொன் ,
இல்லைஉடலில் குந்துமணி பொன் ,
இருப்பது குக்கிராமம் ,
வசிப்பது வறுமையில் ,
படிக்க ஆசை இங்கே,
சிற்ந்த பள்ளி எங்கே?
தூர செல்ல வசதி இல்லை,
சேர்ந்து படிக்கப் பணமும் இல்லை ,

ஆனால் ,,,,,,
கூடி வாழும் பண்பு உண்டு ,
தியாகம் செய்யும் மனமும் உண்டு
பகிர்ந்து உண்ணும் பண்பும் உண்டு,
போதும் என்ற மனமும் உண்டு ,
சாணம் தட்டும் வேலையும் உண்டு ,
பட்டினியாகப் படுப்பதும் உண்டு ,
வரண்டப் பாலைவனத்தில் ,
தண்ணீருக்கு அலைவதும் உண்டு ,
உதவிப் புரிய மனித நேயம் உண்டு ,
ஏழு வயதில் திருமணமும் உண்டு ,
கலவிக் கற்கும் தாகம் உண்டு ,
யார் உதவுவார் என்னைக் கண்டு ,,

இறைவன் ஒரு த்பால்காரன் ,
கடிதம் அளிப்பது
அவன் வேலை ,
நல்ல செய்தியா,
அவன் பார்ப்பதில்லை,
கெட்ட செய்தியா ?
கவலையில்லை,
பாராட்டுவதுமில்லை,
நிந்திப்பதும் இல்லை,
தபால் கொடுப்பது
அவன் கடமை ,
அதை அனுபவிப்பது
நாம் மட்டும் தான்,
அவரவர் வினை அவரவர் அறுக்க,
இறைவன் எங்கே நடுவில் வருவார்?

அன்புடன் விசாலம்

இறைவன் ஒரு தபால்காரன்

இறைவன் ஒரு த்பால்காரன் ,
கடிதம் அளிப்பது
அவன் வேலை ,
நல்ல செய்தியா,
அவன் பார்ப்பதில்லை,
கெட்ட செய்தியா ?
கவலையில்லை,
பாராட்டுவதுமில்லை,
நிந்திப்பதும் இல்லை,
தபால் கொடுப்பது
அவன் கடமை ,
அதை அனுபவிப்பது
நாம் மட்டும் தான்,
அவரவர் வினை அவரவர் அறுக்க,
இறைவன் எங்கே நடுவில் வருவார்?

அன்புடன் விசாலம்

கடவுளின் படைப்பு

கடவுளின் படைப்பு ,,
அன்பு குழந்தைகளே நம் பெரியவர்கள் நமக்கு எப்போதும் நன்மைக்காகவே சில அறிவுரைகள் வழங்குவார்கள் அதுவும் தாய் என்றால் கேட்கவே வேண்டாம் எப்போதும்
குழந்தைகளின் நலத்தையே சிந்திப்பாள்,,இது பற்றி ஒரு கலைமானின் கதைச்
சொல்கிறேன் ,,,,,,

ஒரு காட்டில் ஒரு கலைமானின் குடும்பம் வசித்து வந்தது ,,அதன் குட்டிகளும் இருந்தன,
அந்த அம்மா கலைமான் தன் குட்டிகளிடம் ஒரு நாள் சொல்லியது "குழந்தைகளே,,நீங்கள்
தனியாக ஒரு இடமும் செல்லக் கூடாது புலி சிங்கம் போன்ற மிருகம் பாய்ந்து உங்களைக்
கொன்று விடும் .ஆகையால் எப்போதும் சேர்ந்தே இருங்கள்",,
எல்லாக் குட்டிகளும் தலையைச் சம்மதத்துடன் ஆட்டியது ,ஒரு நாள் ஒரு குட்டி வெளியே போய் பார்க்க ஆவல் கொண்டு தன் இருப்பிடத்தை விட்டு ஆனந்தமாய் சுற்றியது ,,இதைக் கூர்மையாக இரு கொடூரமான் பளபளக்கும் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன ,,,ஆம் ,,அது புலியினுடையது தான் ,,சமயம் பார்த்து அது மேல் பாய
கழுத்தைக் கவ்வி இழுத்துக்கொண்டு போய்விட்டது ,,முடிந்து விட்டது அதன் கதை ,
தாய் கலை மான் தன் குட்டி வராமல் இருந்ததைப் பார்த்து வருத்தம் கொண்டது ,,,ஆனால் அது என்ன செய்ய முடியும்,,,,,?
ஒரு வாரம் சென்றது இப்போது இன்னொரு மான் கலைமான் குட்டி தானும் கொஞ்சம் தூரம் ஒடிப் பார்க்கலாம் என்று நினைத்து வீட்டை வீட்டு வெகு தூரம் வந்து விட்டது தன் இஷ்டப்படி திரிந்தது பின் ஆய்ந்து ஓய்ந்து களைத்தது ,ஏதாவது ஏரி கண்ணில்
தென் படுகிறதா என்று தேடியது ,,சிறிது நேரம் அலைந்தப் பின் ஒரு ஏரி பார்த்தது
அங்கு வேகமாக்ப் போய் குனிந்து நீரைப் பார்த்தது நல்ல பளிங்குப் போல் இருந்த
தண்ணீரில் அதன் முகம் தெரிந்தது ,"ஆஹா என்ன அழகு முகம் என்க்கு ,,,,
என் கொம்பு அதை விட அழகுதான் ,,,,,"என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது
பின் அதன் கால்களையும் அது நீரில் கண்டது " சீ சீ என்ன அசிங்கம் ..குச்சி போல்
கால்கள்,,என்ன கடவுள் ,,,,,இப்படி இந்தக் கால்களைப் படைத்திருக்கிறார்,,,?அழகாக்வே
இல்லையே ,,,,என்று கடவுளை நிந்தித்தது ,,,,
உடனே தட தட வென்ற சத்தம் கேட்க பல வேடர்கள் ஓடி வருவதையும் பார்த்தது ,
எடுத்ததே ஒரு ஓட்டம் அதற்கு உதவியது அதன் கால்கள்,,,,,,எந்தக் கால்களை அது குச்சிப்போல் என்று இகழந்ததோ அந்தக் கால்களால் வேகமாக ஓடி அவர்களிடமிருந்து
வெகு தூரம் வந்து விட்டது ,,நல்ல வேளை ,,பிழைத்தோம் என்று எண்ணி இருக்கும் தருவாயில் ,,அதன் கொம்புகள் ஒரு புதரில் மாட்டிக் கொண்டது ,,எத்தனைத் தடவை முயன்றும் வெளியே எடுக்க முடியவில்லை " நான் அழகு என்று நினைத்தக் கொம்புகள்:
என்னை மாட்டிவிட்டனவே ,,,அசிங்கம் என்று எண்ணிய காலகள் என்னைத் தப்ப வைத்தும் கொம்பால் நான் மாட்டி கொண்டேனே,,,,.கடவுளின் படைப்பைப் பார்த்து
இகழ்ந்தேனே ,,,என்று நினைக்கும் தருவாயில் வேடர்கள் வந்து அம்பு எய்தி அதைக்
கொன்று விட்டனர் ,,,,,,,,
தாய்ப் பேச்சைக் கேட்க வேண்டும் ,,,கடவுளின் படைப்பை இகழக் கூடாது,,,,,,,,

அன்புடன் அம்மம்மா விசாலம்

பாவாஜி

திருப்பதி ஏழுமலையான் மீது அளவிலாத பக்தி கொண்டு ,,,அந்தப் பெருமானே பக்தியில்
மகிழ்ந்து தரிசனமும் தந்திருக்கிறார் ஒரு பக்தருக்கு,,,அவர் பெயர் பாபாஜி ,வடநாட்டில் இருந்தவர் ,சிறு வயதிலிருந்தே பாலாஜியின் படத்தை வைத்து பூஜை செய்து அதிலே
லயித்து தன்னை மறந்து போய்விடுவார். பல நாட்களாக அவருக்கு திருப்பதி போக
ஆசை இருந்தது ,சந்தர்ப்பம் கிடைக்கவில்லை ,,பலதடவை அவரிடம் முறையிட்டு கடைசியில் ஒரு வாய்ப்பும் கிட்டியது ,அங்கு கோவிந்தாவைப் பார்த்து பின் திருப்பதியைவிட்டு நகர மனமில்லாமல் அங்கேயே ஒரு சின்ன இடத்தில் குடி வந்து விட்டார் ,அங்கு பூஜை அறையில் ஒரு பெரிய பாலாஜியின் படம்வைத்து அத்னுடன் தொழனுடன் பேசுவது போல் பேசுவார் பூஜை செய்து பிரசாதம் தருவார் ,ஒரு நாள்
அவர் பாலாஜியிடம் :அப்பா ந்ண்பா ,,இன்று என்னுடன் தாயம் விளையாட வாயேன் ,
உன்னுடன் விளையாட ஆசையாய் இருக்கிறது, நீ எதிரில் வரவில்லை என்றாலும்
நீயும் விளையாடுவதுப் போல் எண்ணி நான் விளையாடுகிறேன் "என்று தாயக்க்ட்டை
உருட்டலானார் ,திடீரென்று ஒரு குரல் கேட்டது,,,"நண்பா பக்தா நான் இதோ விளையாட
வந்துவிட்டேன் "
"பாலாஜி ..நீயா ! நிஜம்தானா அல்லது கனவா? ஆஹா என்ன பாக்கியம் செய்தேன் உன் தரிசனம் கிடைதிருக்கிறதே என்னால் நம்பவேமுடியவில்லையே!
"ஆடுவோமா? இது பகவானின் குரல்
ஆட்டம் தொடங்கியது இருவரும் ஆட திடீரென்று பகவான் "அப்பா பகதா ! நான் தோற்று
விட்டேன் உன்க்கு வேண்டும் வரம் தருகிறேன் ,,,,
"பகவானே எனக்கு உங்கள் தரிசனம் கிடைத்தால் போதும் "என்றார்
ஒரே ஒளி வெள்ளத்துடன் சங்கு சகரதாரியாக நெற்றியில் திரும்ண் , காதில்
குண்டலத்துடன் அருமையான காட்சி கொடுத்தார் ,அநதப் பாவாஜி மெய்மறந்து நிறகையிலே பகவான் தன் கழுத்திலிருந்த
வைரமாலையைக் கழட்டிப் போட்டுவிட்டு மறைந்து விடுகிறார் பாவாஜி அந்த வைர
மாலையைப் பார்த்து பதறிப் போனார் ,ஐயோ இது என்ன சோதனை ,,,ஆட்டத்த்ல்
தோல்வி அடைந்ததற்கு இது என்ன பரிசா ?இதைவைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்?சரி கோவிலுக்குப் போய் கொடுத்து விடுகிறேன் " என்று நேரே கோவில் பக்கம் ஓடினார்,இதற்குள் கோவிலில் ஸ்வாமியின் இரத்தின மாலைக் காணாமல் ஒரே அமளி ,,ஏற்பட்டது பெரிய அதிகாரியெல்லாம்
வந்துவிட்டனர் அந்த நேரம் பார்த்து பாவாஜி அங்கு நுழைந்தார் ,கையில் வைர
மாலையுடன் ,,,
"பிடியுங்கள் பிடியுங்கள் இவன் தான் திருடன் என்று இவரைப் பிடித்துக்கொண்டனர்
பாவாஜி சொன்னார் "நான் திருடனில்லை என்னுடன் பாலாஜி தாயம் விளையாடித்தோற்று
இதைப் போட்டுவிட்டு போய்விட்டார் ,அதைக் கொடுக்கவே நான் இங்கு வந்தேன்"
எல்லோரும் சிரித்தனர் "ஆண்டவன் வந்தாராம் ,தாயம் விளையாடினராம் ,,பேஷ் நல்லக்கதை,,,இது,,,,
ஆனாலும் பலதடவை சத்தியம் செய்து இதைச் சொல்ல அவருக்கு ஒரு பரீட்சை வைத்தனர் " நிலவறையில் ஒரு வண்டிக் க்ரும்பை வைப்போம் அதை இரவுக்குள்
எல்லாம் திங்க வேண்டும் " இதுதான் நீ குற்றம் செய்யவில்லை என்ற அத்தாட்சி
"நான் ஒரு வண்டி கரும்பை எப்படி த்ங்கமுடியும்?பாலாஜி காப்பாற்றப்பா,,,,,,,கதறினார்
பாவாஜி வண்டி நிறைய கரும்புகள் வந்து அறையில் நிரப்பப்பட்டன
திருப்பதி ஆண்டவர் யானை உருவில் வந்தார் கரும்பெல்லாம் சில நொடிகளிலேயே காலியானது ,,பொழுதுவிடிந்ததும் அந்த அறைக்கதவை அதிகாரிகள் திறக்க அழகான யானை வெளியில் வர எல்லோரும் வியப்படைந்து வாயடைத்து போய் நின்றுவிட்ட்னர்
பின் பாவாஜியின் காலில் விழுந்து "நீங்கள் பரம பக்தன் இதை நன்கு உணர்ந்து
கொண்டோம் இன்று முதல் திருப்பதிக்கு நீங்கள் தான் தலைமை அதிகாரி "என்றனர்
அன்றிலிருந்து அங்கேயே தொண்டில் ஈடுபட்டு பின் சித்தி அடைந்தி விட்டார்
இவருக்கு திருப்பதி கோவிலின் தெற்கு பக்கத்தில் " பாவாஜி மண்டபம் " இருக்கிறது
அன்பு குழந்தைகளே கடவுள் உண்மையான பக்திக்கு தானே நேரில் வ்ருகிறார்
இல்லையா ?

அன்புடன் அம்ம்ம்மா

தாய்ப்பால்

குவா குவா"என்று அழுதேன்,
தாய்ப்பாலுக்கு ,,,
கவனிக்கவில்லை,தாய்,
ங்கா ..இங்கா ,,," என்று
குரலை மாற்றினேன் ,
வந்தாள் என் தாய் ,
கைக்காலகளை உதைத்தேன்
மகிழ்ச்சியில் ,,தூக்குவாளா?
என்னை ,,உதட்டில் ஒரு
புன்னகை நெளிய
"கிளு கிளு" என்று சிரித்தேன்,
ஆனால் அவள்
தூக்கவில்லை ,,,,,,
"ஆபீஸ் கிளம்பும் நேரம்
எப்படித்தான் தெரியறதோ'?
ஒரு முணுமுணுப்பு ,,
ஒரு சலிப்பு,,,,,,
அலுத்துக் கொண்டாள்,
என் பொறுமை போனது,,
வீல் வீல் "என்று அழுகை ,,
வாயில் அடைத்தாள் "நிப்பிளை"
நாக்கால் சுழட்டி தள்ளினேன் ,
முகம் சுளுக்கினாள்,
"என்ன நாக்கு நீளம்
ஆறு மாதத்தில் !"
பால் புட்டியை
வாயில் அடைத்தாள்,
"அம்மா உன் பாலுக்கெல்லவா
நான் அழுகிறேன் ,
பால் புட்டியில் ஏது பாசம் ?
ஏது பந்தம்?
முலைப்பாலுக்கு
ஈடேது இணையேது?
உன் அனபை எனக்கு
ஊட்டம்மா ,
முலைப்பால
கொடு அம்மா ,,,,,,,,,

அன்புடன் விசாலம்

பாரதி கண்ட கோவை {நிலாச்சாரலில் பிரசுரமானது}

ஒரு நாள்,,மஹா கவி பாரதியார் திருவல்லிக்கேணி ரோட்டில் நடந்துக் கொண்டிருக்க
ஒரு அருமையான அவர் இயற்றியப் பாடல் ஒன்று காற்றினில் மிதந்து வந்தது
"ஜயபேரிகைக் கொட்டடா,,,,,,," ,,ஒரு இனிமையானக் குரல் அவரை இழுத்தது ,,மெய்
மறந்து நின்றார் ,அவர் ,,,அப்போது அவர் சுதேசமித்திரனின் துணை ஆசிரியராக இருந்தார்
போகும் போது திரு வெங்கடாசாரியாரின் வீட்டுத் தெரு வழியாக்கத்தான் போவார் ,
ஆம் அந்தப்பாடலைப் பாடியவர் ஒரு சிறு பெண்,,பெயர் கோதை நாயகி,பாரதியாரின் வீட்டிலும் அவரது இரு பெண்கள் { தங்கம்மாள் சகுந்தலா} இருந்தனர்,கோதைப்பாடியப்
பாட்டில் மயங்கி கோதை வீடு நுழைந்து அந்தப்பெண்ணை வாழ்த்தினார்,அன்றையத்
தினத்திலிருந்து பாரதியார் தாம் புனைந்தப் பாடல்களைத் தருவதும் கோதை அதைப்
பாடிக்காட்டுவதும் வழக்கமாயிற்று ,ஒரு நாள் கோதையை பாரதி தன் வீடு அழைத்தார்,
கோதை மிகச் சங்கோசத்துடன் தலையைக் குனிந்துக் கொண்டாள் ஆனால் பிற்காலத்தில்
அவர் ஒரு பெரிய நாடக ஆசிரியர் எழுத்தாளர் சுதந்திர போராட்டத்தில் பங்குக் கொண்டவர் என்று பல திசைகளில் முன் நிலையில் நின்றவர், நம் மனதில் அவர்ப்
பெயர் பதிந்து விட்டது அவர்தான் திருமதி வை,மு கோதை நாயகி அம்மாள்,,,

பாரதியாரைப் போலவே ஆவேசமாக வீரமாகப் பாடும் ஒருவர் இருந்தார் ,அவர் பெயர்
திரு சங்கு சுப்பிரமண்யம்"சுதந்திரச்சங்கு" என்றப் பத்திரிக்கையை நடத்தி வந்ததால்
அவரை எல்லோரும்" சங்கு சுப்பிரமணியம்" என்று அழைத்தனர் ,பாரதியாரின் பாடல்களை
அந்தக்காலத்தில் பரப்பிய புகழ் திருமதி கோதை நாயகிக்கும் சங்கு சுபிரமண்யத்திற்கும்
சேரும் ,, ,,,கோதைக்கு சுமார் பத்து வருடம் இருக்கும் அப்போதே அவருக்கு பாலவிவாஹம் நடந்து விட்டது அவரது கண்வர் திரு பார்த்தசாரதி அவரை இசைக்
கச்சேரிக்கு அழைத்துச் செல்வார் அந்தக்காலத்தில் வைதீகக் குடும்பத்தில் இருக்கும்
பெண்கள் வீட்டை விட்டு வெளியே கச்சேரி போன்றவைகளுக்குப் போகமாட்டார்கள்
ஆனால் கோதைநாயகியின் கணவர் இளமையிலேயே புரட்சி ,, சீர்த்திருத்தம் என்ற
முற்போக்குக் கொண்டிருந்தவர் ,அவர் தன் ம்னைவியை நன்கு பாட வைத்தார் ,ஒரு
நாள் மேடைக் கச்சேரியில் தன்னை மறந்து அவர் "மருவேறேதிக் கெவரையா ராமா"
என்று பாட முதல் வரிசையில் உட்க்கார்ந்திருந்த ஒரு வித்துவான் அகமகிழ்ந்து
உள்ளே வந்து வாழ்த்திவிட்டுப் போனார் , அவர் தான் பாலக்காடு அனந்தராம பாகவதர்
பின்னால் கோதையின் குருவானார் திருமதி கோதை நாயகியின் இசைப் பயண்ம் இப்படித்தான் ஆரம்பித்தது ,
கவிக்குயில் சரோஜினி தேவி அவர்கள் அடிக்கடி கோதை வீட்டுக்குச் செல்வாராம்
அவரைச் செல்லமாக அணைத்துக்கொண்டு அவர் விரும்பும் பாடல்களெல்லாம்
கேட்டு அக ம்கிழ்வாராம் அவர் மிகவும் விரும்பியப் பாடல் "பாரத சமுதாயம் வாழ்கவே
,,,"வந்தே மாதரம் என்போம் ,,,,,,,,,,,,,"சென்னை வானொலி நிலயம் 1938ல் தொடங்கப்பட்டது ..அதன் திறப்பு விழாவில் திரு ராஜாஜி அவர்கனின் முன்னிலையில்
பாடியப் பெருமை திருமதி வை மு கோதை நாயகிக்குக் கிடைத்தது,ஆண்டுதோரும்
பாரதியாரின் நினைவு நாளில் கோதைநாயகியின் பாட்டு வானொலியில் நிச்சியம்
ஒலிக்கும் ,இதன் நடுவே " அன்பின் சிகரம் "என்ற நாடகம் எழுதி அவரே நடித்தார் ,
டைரைக்டரும் அவரே,,,, அவர் அறிவு மேலும் மேலும் வளர்ந்தது ,,அவர் மாமியார்
ஆந்திர நாட்டில் நெல்லூரைச் சேர்ந்தவராக இருந்ததால் அவருக்குத் தெலுங்கு கற்றுக்
கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது அதையும் கற்றுக்கொண்டார் .அந்தக்காலத்தில்
"கன்னையா கம்பெனி "என்று ஒரு நாடகக் கம்பெனி இருந்தது ,அதில் தான் திருமதி
கேபி சுந்தராம்பபள் திரு கிட்டப்பா போன்றவர் இருந்து நடித்தனர் ,,திரு,பார்த்தசாரதி
தன் மனனவியை பல நாடகங்களுக்கும் அழைத்துச் சென்றதின் பலனாக
கோதைக்கு கற்பனாசக்தி ஊற்றுப்போல் பெருக்கெடுத்தது,அவரின் முதல் நாடகம்
"இந்திரமோகனா "வெளிவந்து அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது,,,

இவரைப் பற்றிச் சொன்னால் எழுதி கொண்டே போகலாம்,,,
இயல் ,இசை ,நாடகம் என்று எல்லா இடத்திலும் முதல் இடம் பெற்றார்
தேசத் தொண்டிலும் ஈடுப்பட்டு ஒளிவீசினார்,,
கதரையே உடையாகக் கொண்டாள்,
விடுதலைப்போரில் பங்குப்பெற்றுச் சிறையும் சென்றாள்,
இன்னிசைக் க்லைஞர் ,,,
மேடைப்பேச்சினால் நாட்டின் விடுதலை உணர்வு வீசியப் பெண்மணி,,
பெண்கள் விடுதலைப் பற்றி முழக்கம் செய்து அதன்படி நடத்தியும் காட்டினாள்,
"வைஷ்ணவ ஜனதோ "வுக்கு தமிழ் உருவம் தந்தாள்,
மாதப்பத்திரிக்கை "நந்தவன்ம் தொடங்கியப் புதுமைப் பெண்,,
"கலா ரத்னம் "என்றப்பட்டம் பெற்றவர்,,


பெண்கள் வெளியே வருவதே தவறு என்ற காலக்கட்டத்தில் சமூகக் கட்டுப்பாட்டை
தவிர்த்து,,,உடைத்து தான் நன்கு படித்து வெள்யில் வந்து மேடை ஏறி
நாடகங்களில் நடித்து இசைக்கச்சேரிகளும் செய்து தமிழ்ப்பெண்மணிகளிலேயே ஒரு
சிறந்த இரதனமாக விள்ங்கினார்ர் திருமதி வை,மு கோ ,,,
இவரது நாவல் எளிமையுடன் மனதைத் தொடும் ,,இலக்கண்த்திற்கு முக்கியத்வம்
இல்லை ,எலலா நாவல்களும் ஆத்மாவைத் தொடும் ,,சொற்களில் ஒரு ஆழம் இருக்கும் ,
நிரம்பச் சுவை,, இருக்கும் காதல் இருக்கும் ஆன்மீகமும் இருக்கும் நாவலை ஒரு முறை
எடுத்துவிட்டால் கீழே வைக்கத்தோன்றாது அவ்வளவு விறுவிருப்பு,,,
அவருடைய் ஒரே மகன் வை மு ஸ்ரீன்வாசன் திடீரென்று காலமாக அந்தத் துயரம் தாங்காமல் ஜெகன் மோஹினி பத்திரிக்கையை நடத்த இயலாமல் அதை விட்டு
வந்தார் ஆனாலும் உள்ளேத் துயரம் அழுத்த உடல் நிலைக் குன்றிப்போனார் ,
1960ஆண்டு இந்த பேரொளி அணைந்து விட்டது ,,,,இருபது வயதில் கையில் எடுத்தப்
பேனா கடைசிவரையிலும் துணைத் தந்தது ,
தேசிய நாயகி ,,இன்னிசை நாயகி , நாடக நாயகி நாவல் நாயகி எழுத்துலக நாயகி
தெய்வ நாயகி ஆகி நம் அனைவர் மனத்திலும் நிறைந்திருக்கிறாள்,,,,,,,,,,


அன்புடன் விசாலம்

தந்தையின் பாசம்

நாம் தாயின் தன் மக்கள் மீது வைத்திருக்கும் பாசம் பற்றி நிறைய உணர்ந்திருக்கிறோம்
ஆனால் ஒரு தந்தை தன் மகனின் மீது வைத்தப் பாசம் ,,,,,?ஆம் மகன் உடல் நிலை சரியில்லாமல் போக,,,, பல வைத்தியர்கள் வரவழைக்கப் பட்டார்கள்..,அவனுக்கு
வைத்தியம் செய்தார்கள் ,,தந்தை மிகவும் தவித்தார் ,,,ஆனாலும் ஒன்றும் பலனில்லமல்
போக அந்தத் தந்தை துடிதுடித்துப் போனார் ,,,ஆசை மகன் பிழைப்பானா ?.அன்பு மகனை
உயிருடன் பார்ப்பேனா என்றெல்லாம் வருந்தி என்ன செய்வது என்று குறுக்கும்நெடுக்குமாக
நடக்கக் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார் வைத்தியர்களை எல்லாம் போகச் சொல்லிவிட்டு தன் மகன் படுக்கையின் அருகில் முழங்காலிட்டு முகம் குனிந்து
விழுந்து ஒ அல்லா மாலிக் என்று அழுதார்,, அல்லாவை அழைத்தார் ,"அல்லா
எனக்கு அந்த நோய் வரட்டும் என் மகனை எனக்கு திரும்பக் கொடு உனக்கு ஒரு உயிர்தான் வேண்டும் என்றால் என் உயிரை எடுத்துக்கொள்..என் மகனுக்குப் பதிலாக்
நான் வரத் தயாராக இருக்கிறேன் அவன் வாழட்டும் என்று பிரார்த்தனை மனம் உருகிச்
செய்தார் ,சில நாட்களில் அந்தத் தந்தை முகலாய மன்னர் பாபர் நோய்வாய்ப் பட்டார்.
படுத்தப் படுக்கையானார் பின் இறந்தும் போனார் ,,அந்த மகன் ஹுமாயூன் ,,,,,,
அவர் இறந்ததும் அவரைக் காபூலுக்கு எடுத்துச் சென்று அவர் வேண்டுகோளின்படி
அந்த இடத்தில் புதைத்தார்கள் அங்கே இன்றும் பாபரின் சமாதி இருக்கிறது

அன்புடன் விசாலம்

சுதந்திர நாள்

அன்பு குழந்தைகளே , ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் இல்லையா?,,,ஆஹா கையில்
வண்ண வண்ண பலூன்களுடன் சின்ன மூவர்ணக் கொடியுடன் ,மகிழ்ச்சியுடன் வலம் வருவதை
நான் பார்க்கிறேன் ,தவிர பட்டங்கள் ஆகாயத்திலும் பல பறக்கும் அதை ஒருவர்க்கொருவர்
வெட்டிவிட்டு உத்சாகத்துடன் மகிழ்வதும் கற்பனைச் செய்கிறேன் சுதந்திரம் என்பது ஒவ்வொருவருக்கும் வேண்டும் ஆனால் அந்தச் சுதந்திரம் வரம்பை மீறாமல் இருக்க வேண்டும்
"என்க்கு சுதந்திரம் உண்டு அதனால் வாழைப்பழத்தோலை எங்கு வேண்டுமானாலும் போடுவேன்" என்றோ ,பேச்சு சுதந்திரம் உண்டு என்று எல்லோரிடமும் எப்படி வேண்டுமானாலும் பேசமுடியுமா?எல்லாவிததிலும் ஒரு கண்ணியம் கட்டுப்பாட்டைக் கடைப் பிடிக்க வேண்டும்
அதுதான் உண்மையான சுதந்திரம் ,இந்தத் சுதந்திர தினத்தன்று "ஹையா ஒரு நாள் பள்ளி
லீவு ,,கொட்டம் அடிக்கலாம் என்று இல்லாமல் சுதந்திரம் வாங்கித் தந்தத் தலைவர்கள்
பற்றியும் தேசத் தொண்டர்கள் பற்றியும் படிக்கலாம் அல்லது பெற்றோரைக் கேட்டுத்
தெரிந்துக் கொள்ளலாம் , ஒரு ,நல்ல விதமாகப் பொழுது போக்க வேண்டும் , பெற்றோர்களுக்கு
முடிந்த உதவியைச் செய்யலாமே ,,,கப்பல் ஓட்டியத் தமிழன் ,,கட்டப் பொம்மன் போன்ற படங்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து பார்க்கலாம் ,அவரிடம் சந்தேகங்களையும் கேட்கலாம்
படங்கள் வரையும் ஆர்வம் இருந்தால் மூவர்ணக் கொடி வரைந்து நண்பர்களுக்குக்
கொடுக்கலாம் ,,,பட்டம் வீட்டிலேயே த்யார் செய்யலாம் ,,,,என்ன குழந்தைகளே ரெடியா ,,,,,

அன்புடன் அம்மம்மா

கோவத்தின் முடிவு

கோபம் எத்தனை ஆபத்தானது .அது வந்தால் உடலில் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது நரம்புகள் புடைத்துக் கொள்கின்றன .கண்கள் சிவக்கின்றன,மூளையில் சிந்திக்கும் சக்தியும் குறைகிறது என்ன செய்கிறோம் என்று புரியாத நிலை ஏற்படுகிறது ,நரம்புகள் புடைத்துக் கொள்கின்றன ,இத்தனையும் சேர இரசாயன மாற்றம்
ஏற்பட்டு உடல் நோய் மிக எளிதாக வந்துவிடுகிறது ,மனமும் உடலும் ஒன்றுகொன்று பின்னியுள்ளது
மனம் நன்றாக இருந்தால் தானே உடலும் நலமாக இருக்கும் .
ஒரு உண்மைச் சம்பவம் பார்க்கலாம் ,,,,,,,,

மஞ்சுநாத் என்ற பையன் தன் பென்சிலைக் காணாமல் தேடினான் ,அவனுக்கு பத்து வயது ,அவன் நண்பர்களின்
வயது பன்னிரண்டு..அவர்கள் கோவிந்தச்செட்டிப் பாளையத்தில் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர் அவர்கள்
பெற்றோர்கள் தினக்கூலி செய்து சம்பாதித்து வந்தனர் .அவர்கள் இருந்த இடம் பார்ப்பானா அக்கிரஹாரம்
மஞ்சுநாத தன் பென்சிலைத் தன் நண்பன் எடுத்திருக்கலாம் என்று சந்தேகித்து அவனிடம் திருப்பித்தரும்படி கேட்டான் .அவன் தான் எடுக்கவில்லை என்று சொல்லியும் நம்பாமல் இருந்ததால் அடிதடியில்
ஆரம்பித்தது .இது லன்ச் நேரத்தில் நடந்தது .பின் பள்ளி முடிந்ததும்
திரும்பவும் இந்தச் சண்டை சூடு பிடித்தது ஒரு மாணவன் தரையில் நிறைய தண்ணீர் ஊற்றினான் ,அதில் வழுக்கி மஞ்சு நாத் கீழே விழுந்தான்
இதில் மஞ்சுநாத்தின் கோபம் அதிகமாகியது அதற்குள் மற்றொரு மாணவன்
தன் நண்பனுடன் சேர்ந்து கீழே கிடந்த ஒரு பிளாஸ்டிக் wire எடுத்து
மஞ்சுநாத்தின் கழுத்தில் மாட்டி இழுக்க அவன் மூச்சு முட்டித் திணறி
கண்கள் பிதுங்க கீழே மயங்கி விழுந்தான் இறந்தும் போனான் .மஞ்சுநாத்தின்
சகோதரன் இதைப் பர்த்து ஓடி தன் சகோதரனைக் காப்பாற்ற முயன்று வீடு
தூக்கிச் செல்ல ஒன்றும் பலனில்லை ,,அவன் கழுத்தை நெருக்கினவன்
"நான் என்ன செய்தேன் என்றே எனக்குத் தெரியவில்லை எனக்கு ரொம்ப
கோவம் வந்தது அதுதான் எனக்குத் தெரியும் என்கிறான் போலீஸ் அவனை
304 not to intention to kill என்ற பிரிவில் எழுதி observation home க்கு அனுப்பி வைத்திருக்கிறது ........

அன்புடன் விசாலம்

நம் உடலே ஒரு தேர்

நம் உடலே ஒரு தேர் ,
நடுவிலே இறைவன் ,
தேர் இழுப்பது போல்,
நமக்கு ஆசாபாசங்கள்,
தேர்த்திருவிழாவில்
இயல்,இசை ,நடனம்
வாழ்க்கையில் மகிழும் தருணம்
நாலு வீதிகளில் தேரின் வலம்
நாலு பகுதி வாழ்க்கையில் வலம்
முடிவில் இறைவன் ஆலய நுழைவு ,
நிலையாத உடலின் அழிவு
ஆன்மா வந்த இடத்தில் சேர்வு ,,,

அன்புடன் விசாலம்

பண்டரிபுரம்

ஆடி மாதம் { ஜுலை 17-ஆகஸ்டு 17 வரை} வரும் ஏகாதசி மஹராஷ்டரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள் ,காவடிப் போல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து
விட்டு வருவார்கள் ,பண்டரிபுரம் வரை பொடி நடைதான் ,நடு நடுவே சில பிரபுக்கள் அவர்களுக்கு
வயிற்றுக்கு உணவும் பெரிய பந்தல் போட்டு படைப்பார்கள் சிறுவர்களும் இதில் கூட்டம்
கூட்டமாகப் போவார்கள் அவர்கள் வாயில் " பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா "
என்றும் விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல் என்றும் விடாமல் நாமஜபம் வந்துக் கொண்டிருக்கும் அந்த நாமம் கேட்டாலே உடலெல்லாம் புல்லரிக்கும்
இப்போது அந்த விட்டல் எப்படி வந்தார் என்ற கதையைப் பார்ப்போம்

லோக தண்டம் என்ற காட்டில் ஜன்னு முனிவர் வாழ்ந்து வந்தார் அவர் மனைவியின் பெயர்
சாத்தகி ,அவ்ருக்கு பலவருடங்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான் அவன் பிறந்தும் ஏன் பிறந்தான் என்று அவர்களுக்கு ஆகிவிட்டது அவன் பெயர் புண்டரீகன் .எதைப் பார்த்தாலும் அழிப்பான் துன்புறுத்துவான் நாய் மேல் கல் வீசுவான் ,முயலின் காதைத் திருகுவான் .இப்படி முரடாகவே வளர்ந்து பெற்றோர் பேச்சைக் கேட்காமல் பதிலுக்கு
எதிர்த்துப் பேசவும் துணிந்தான் ,அவனுக்கு திருமணம் செய்தால் வழிக்கு வருவான் என்று
எண்ணி புண்டரீகனுக்கு அவன் தந்தை ஒரு நல்லப் பெண்ணாகப் பார்த்து திருமணம்
செய்து வைத்தார்.ஆனாலும் அவன் செயலில் மாறுதல் இல்லை ,வீட்டில் மனைவி இருக்கும் போதே வெளியிலேயே இன்பம் தேடினான் ,அவன் தந்தை மனம் ஒடிந்து
வருந்தி அவனுக்குப் புத்தி கூறினார் ,அதற்கு அவன் "அப்பா நான் என் இஷ்டப்படி தான்
இருப்பேன் ,இந்த வீட்டில் எனக்கு சுதந்திரமில்லை ஆகையால் நான் இந்த வீட்டை விட்டுப்
போகிறேன் ,," என்று கத்தி தன் மனைவியுடன் வீட்டைவிட்டு வெளியேறினான் ,அவன்
பெற்றோர் மனமுடைந்துப் போனார்கள் பலநாடகள் பிறகு அவர்கள் ஒரு குழுவுடன்
காசி யாத்திரைக்குக் கிளம்பினார்கள் ஒரே மகன் தனக்கு இருந்தும் இப்படி விதி ஆகி விட்டதே என்று வருந்தி எல்லாம் கடவுளுக்கே அர்ப்பணம் செய்து விட்டார்கள்.

இதே நேரத்தில் தன் தந்தை தாய் காசிக்குக் கிளம்பியதை அறிந்து புண்டரீகனும் ஒரு குதிரையின் மேல் தன் மனைவியுடன் கிளம்பினான் ,வழியில் மனைவி தன் மாமனார் மாமியார் தள்ளாமல்
காலில் செறுப்புமில்லாமல் நடந்து வருவதைக் கவனித்து தன்
கணவரிடம் அவர்களுக்கு உதவும்படிக் கூறினாள் .ஆனால் அவன் "வாயை மூடிக்கொண்டு வா அவர்கள் கிழங்கள் வந்தால் நம்க்குத்தான் கஷ்டம் " என்றான் இரக்கமில்லாமல் ,,
அங்கு ஒரு சத்திரம் தென்பட்டது அங்குப் போய் சிறிது நேரம் களைப்பாறிவிட்டுச செல்லலாம் என்று அங்கு மனைவியுடன் போனான் .அதனருகில் ஒரு முனிவரின் ஆஸ்ரமம் இருந்தது ,
அங்கு குக்கூடக முனிவர் என்று ஒருவர் இருந்தார்,
பொழுது போகாமல் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தான் ஒரு முனிவர்
தென்பட்டார் ,உடனே அவரிடம் போய் " காசி ஷேத்திரம்.எங்கு உள்ளது ?
என்று கேட்டான் "காசியா ?எனக்குத் தெரியாதே ",,,,,,,,
"இது கூடத் தெரியாமல் நீங்கள் என்ன முனிவர்?
"காசி என்ற இடத்திற்கு நல்ல பண்புள்ளவர்கள் தான் போக வேண்டும் ..
நீ போகவேண்டும் என்கிறாயே ,,,"
இதைக் கேட்டு கோபம் கொண்டு திரும்பவும் தன் இடத்திற்கு வந்து விட்டான்
இரவு நேரம் ,,,,தூக்கம் வராமல் வெளியில் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மூன்று பெண்கள் நுழைந்தனர் ,மூன்று பேரும் மிகவும் கருப்பாகவும் அழுக்குடன் கோரமாகவும் இருந்தனர் ,,அந்த ஆஸ்ரமத்தில்
நுழைந்தௌ அவர்கள் பல வேலைகள் செய்தனர் ஒருவள் வீடு கூட்டினாள்
மற்றொருவள் வீடு துப்புறத் துடைத்து அழகான கோலம் இட்டாள்.பின்
அந்த முனிவரின் பாதத்தை நீரால் கழுவி துடைத்து வணங்கினாள்,பின் அவர்கள் வெளியே வந்தனர் , என்ன ஆச்சரியம் மூன்று பேர்களும் மிகவும் அழகாக லட்சணமாக சுந்தரிகளாக வந்தனர் , "இது என்ன மாயை! போகும்
போது சகிக்க முடியாமல் இருந்தார்கள் .இப்போது எப்படி இது?
வியந்து புண்டரீகன் அவர்களிடம் ஓடினான் "சுந்தரிகளே ,நீங்கள் யார்?
சொல்லுங்கள் " என்றுக் கேட்டபடி ஒருவளது கையைப் பற்றினான் ,
அவள் மிகவும் கோபம் கொண்டு கையை உதறி பின் சொன்னாள்.
"நாங்கள் கங்கை யமனை ,ஸரஸ்வதி நதிகள், தினமும் பலர் குளிப்பதால் பாபம்
சேர்ந்து அந்தப் பாபத்தைக் கழுவ இங்கு வந்து சேவைச் செய்கிறோம் இந்தக்
குக்கூட முனிவருக்குச் சேவைச் செய்து எங்கள் பாபத்தைப் போக்கிக்
கொள்கிறோம் பாபம் எங்களிடம் சேர அவலட்சண்மாக மாறுவோம் இங்கு தினமும் வந்து அதைப் போக்கிக் கொள்கிறோம் போன ஜன்மப்
புண்ணியத்தினால் தான் நீ எங்களைப் பார்த்திருக்கிறாய் ,இனியாவதும்
திருந்தி பெற்ரோருக்கு சேவைச் செய்,,நீ இத்தனை நாடகள் செய்தப்
பாபத்தைப் போக்கிக் கொள் உன் துர்குண்த்தை மாற்றிக் கொள் ,தாய் தந்தைதான் உனக்குத் தெய்வம் அவர்களை வணங்கு"
புண்டரீகன் எதோ மந்திரச் சக்திக்குக் கட்டுப்பட்டது போல் மனம் மாறினான்
தான் செய்தத் தவறுகளுக்கு வருந்தினான் ,பின் கங்கா தேவியிடம் கேட்டான்
"இந்த முனிவர் யார்? இவரைத் தொழுதால் எப்படி பாவங்கள் விலகுகின்றன ?
" அப்பா புண்டரீகா ,இவர் கோவில் போனதில்லை ,யாகம் செய்ததில்லை
தான தருமம் செய்ததில்லை ,ஆனால் விடாமல் பெற்றோருக்குப்
பணிவிடைச் செய்து வருகிறார் அவர்களே அவரின் தெயவம் ,பாபம்
செய்தவர்கள் இவர் பாதத்தைத் தொட்டாலே போதும் .பாபங்கள் கரைந்துப்
போகும் "
" தாயே நான் பெற்றோருக்கு பல அநீதிகளை இழைத்து விட்டேன் , இப்போது
திருந்தி விட்டேன் இதோ இப்போதே போகிறேன் அவ்ருக்கு மனம் உவந்து
சேவைச் செய்வேன் ,"
திரும்பி வந்து படுத்தப்பின் காலையில் குக்கூட முனிவரைத் தரிசித்து அவர் பாதங்களைக் கழுவி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு பல சேவைகள் செய்தான்
ஆசியும் பெற்றான் பின் பெற்றோரைத் தேடி கண்ணிரால் பாதங்களைக்
கழுவினான் அதன் பின் அவன் உலகமே அவன் தாய் தந்தை தான்
வேறு ஒரு சிந்தனையும் இல்லை , இதெல்ல்லாம் பார்த்த கிருஷ்ணர் அவன்
சேவைக்கு மெச்சி அவனைப் பார்க்க பூலோகத்திற்கு வந்தார் , அவன் வீட்டு
வாசலில் வந்து கதவைத் தட்டினார் ,"புண்டரீகா புண்டரீகா ,,,,,
" யார் ,,,,யாராயிருந்தாலும் அங்கேயே நில்லுங்கள் ,நான் பெற்றோரின்
சேவையில் ஈடு பட்டுள்ளேன் " என்று ஒரு செங்கலைக் கதவைத்திறந்து வீசிப்
போட்டான் ,அந்த மாயக் கண்ணன் பக்தனுக்காக அந்தச் செங்கல் மேல் நின்று
இரண்டு கைகளும் இடுப்பில் வைத்துக் கொண்டார் ,, அப்படியே நின்றிருந்தார் ,
வெகு நேரம் கழித்து புண்டரீகன் கதவைத் திறந்தான் பார்த்தான்
கண்ணனை ,,தன்னை மறந்தான் ,அப்படியே சாஷ்டாங்கமாக வணங்கினான்.
"இந்தப் பாபச் செயலுக்கு மன்னியுங்கள் தங்களுக்குப் போய் செங்களைப்
போட்டு அதில் நிற்கவும் சொன்னேனே "

புண்டரீகா உன் சேவைக்கு மெச்சினேன் ,எதாவது வரன் கேள் "
"உங்கள் அருள் இருந்தாலே போதுமானது ஸ்வாமி'
புண்டரீகா உன் சேவையினால் புகழ் பெற்ற இந்த இடம் இனி பண்டரிபுரம் என்று நிலைக்கட்டும் நீ இங்கிருந்து எல்லோருக்கும் ஆசி வழங்கி வருவாய்
உன்னை எல்லோரும் "விட்டல் "என்றும் அழைத்து என்னையே உன்னிடம்
காண்பார்கள் "என்றார்

ஆடிமாதம் இந்த விட்டல் வந்ததால் ஏகாதசி அன்று மிகச் சிறப்பாக விரதம்
இருந்து மராட்டியர்கள் கொண்டாடுகிறார்கள்


என்ன குழந்தைகளே ,பெரியவர்களின் சேவைக்கு ரெடிதானே ,,,,,,,,,,

அன்புடன் அம்மம்மா

காயத்ரி மந்திரம்

கம்பீரமாக உள்ளே நுழைகிறார் அவர்,,காவி கலரில் உடை , கழுத்தில் உத்திராட்ச மாலை ஆட
ஓம் என்ற பிரணவ மந்திரம் ஒலிக்க தொடர்ந்து அந்த இடம் புனித கங்கை நீரால் தெளித்து
சுத்தம் செய்ய அந்த இடமே தூய்மையானது ,,இதில் என்ன வியப்பு? ஆம் மிகவும்
வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இது நடந்தது அமெரிக்காவில் ,,,,ஜூலை 13
வெள்ளிக்கிழமை சரித்திரத்திலேயே முதல் தடவையாக நடந்த சம்பவம் இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமைத்தரும் விஷயம் யூ எஸ் சனேட்டில் ஓம் என்ற ஒலியுடன் ஆரம்பித்து பின் காயத்திரி மந்திரமும் ,,,அதைத் தொடர்ந்து அருமையாக வந்தது,
இதுக்கெல்லாம் யார் காரணம் ?ஒரு அமெரிக்க இந்தியன் திரு ராஜன் ஜெட் {Reno Naveda}
1789 க்கு பிறகு இதுதான் முதல் தடவையாக ஒரு ஹிந்து பிரார்த்தனை நடந்தது ,ஸனேடர்
திர்ரு ராபர்ட் கெஸே {Perilvania } செட்டை {Zedஐ} அறிமுகப்படுத்தினார் ,பின் ஹேர்ரி என்பவர் ஹிந்து பிரார்த்தனைக்கு நன்றியைத் தெரிவித்தார் அவர் திரு காந்திஜியின் பகதர்
என்றும் கூறினார் காயத்திரி மந்திரம் வரும் போது ஒரு சிலர் ரகளைச் செய்ய முற்பட்டன்ராம்
ஆனால் அவர்களைப் பாதுக்காப்பாளர்கள் அப்புறப்படுத்தி விட்டனராம் திரு zed தன்
பிரர்த்தனையில் தைத்ரீய உபநிஷத் பின் பிரஹதாரண்யக உபநிஷத் பின் பகவத் கீதையின்
மூன்றாம் அத்தியாயம் படித்து பின் நாட்டு சேவை மக்களின் சேவை எப்போதும்
மனதில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார் ,அவர் மேல் இருந்த அங்கவஸ்திரம் மஞ்சள்
சிவப்பு கலந்தக் கலரில் " ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" என்று எழுதியிருந்தது ,,,

ஆஹா நான் இதை ந்யூஸ் பேபரில் படித்த போது மிகவும் பெருமை அடைந்தேன் ,,,,
வாழ்க பாரத்ததின் கலாச்சாரம்


அன்புடன் விசாலம்

ஸ்ரீ அர்விந்த மஹரிஷி

ஆகஸ்டு 15 என்னும் போது என் மனம் உடனே சுதந்திர இந்தியாவுடன் மகரிஷி
ஸ்ரீ அரவிந்தரிடம் செல்கிறது ,கீதையின் நாயகன் ஸ்ரீ கிருஷ்ணரை அலிப்பூர் சிறையில்
கண்டுக் களித்தார் அவர் .. ஆகஸ்டு 15ல் அவர் அவதரித்த தினம் வருகிறது ,அவரின்
அருளைப் பெறுவோம் ,,,,,,,,,, அவர் அருளைப் பற்றி கூறியது ,,

அருள் என்பது ஒருவர் கண்டு பிடிப்பு அல்ல ஆன்மீக அனுபவத்தின் வாஸ்துவமான ஒன்று
அது ,
வைணவத்திலும் வருகிறது ,சைவத்திலும் வருகிறது சாகிதத்திலும் வருகிறது

கிருஸ்துவத்திலும் வருகிறது அது உபநிடத்தைப் போல் மிக தொன்ம்மியானது
தெய்வ அருள் ஒவ்வொரு நிமிடத்திலும் செயல்படவே காத்திருக்கிறது ஆனால் ஒருவன்
அறியாமை நியதியிலிருந்து வெளியே வந்து ஒளியின் நியதியில் வளரும் போது தான் அது
வெளிப்படுகிறது .ஓர் அற்புதமான ஆட்கொள்ளுதல் போல் அது அடிக்கடி நிகழ்ந்த போதிலும் அது ஏதோ திட்டமில்லாமல் நிகழும் தான் தோன்றி இயக்கம் அல்ல ,சாதகனின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இறுதி விடுதலைக்கு அவனை அழைத்துச்
செல்லும் பேரொளி அது ,,,,,,,,,,

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய

அன்புடன் விசாலம்

கணபதி பப்பா மோரியா

மூஷக வாஹன மோதக ஹஸ்தா சாமர கர்ணா
விளம்பித சூத்ர வாமன ரூபா மஹேஸ்வர புத்ர
விக்ன வினாயக பாத நமஸ்தே ,,,,,,,,,

இந்த ஸ்லோகம் பிள்ளையார் சதுர்த்தி அன்று விசேஷமாகச் சொல்வார்கள் தினமுமே இதைச் சொல்ல வேண்டும்
இதன் பொருள் ,,ஒ வினாயகா தடங்களைக் களைபவரே மூஞ்ஜுரை வாகனமாக வைத்திருப்பவரே கையில் குழக்கட்டை ஏந்தி இருப்பவரே ,குள்ளமாக இருப்பவரே அகலமான
காதைக் கொண்டிருப்பவரே மஹேஸ்வரரின் புத்திரரே
பெரியத் தும்பிக்கை உடையவரே உங்கள் பாதங்களை
நமஸ்கரிக்கிறோம்
கணபதியின் பிறந்த் நாள் ஆவணிமாதம் சதுர்த்தி அன்று
வரும் ,அவருடைய மந்திரம்,,ஓம் கங்கணபதயே நம:
"ஓம் ஸ்ரீ கணேசாய நம: என்றும் பூஜிப்பார்கள்

கணபதியின் காயத்ரி
"தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்திப் பிரஜோதயாத் "

கணபதியையே எல்லா பூஜைகளுக்கும் முதலில் ஆரமப
பூஜையாகச் செய்கிறோம் விகனமில்லாமல் முடித்து
வைக்க வேண்டிக்கொள்கிறோம் அவர் எலியை
வாகனமாக வைத்திருப்பது நமது அஹங்காரத்தை அட்க்குவது ,அவரது பெரிய யானைத் தலை அறிவை
வெளிப்படுத்துகிறது எந்தக் கடவுள் உருவத்திற்கும்
இல்லாத ஒரு தனிப் பெருமை கண்பதியிடம் உள்ளது
அவரது உருவத்தை உற்று நோக்கினால் "ஓம் "
என்ற பிரணவம் நமக்குத் தென்படும் , தும்பிக்கையுடன்
சேர்த்துப் பார்க்க வேண்டும் வைணவர்கள் அவரைத்
தும்பிக்கை ஆழ்வார் என்று சொல்வார்கள்

ஒரு வேடிக்கையானப் புராணக்கதை பார்க்கலாம்

கணபதிக்கு மோதகம் என்றால் மிகவும் பிடிக்கும் ,
ஒரு பிறந்த நாளின் போது அவருடைய பகதர்கள்
எல்லோரும் மோதகம் படைக்க அவரும் அவைகளைத்
தின்று விட்டார் தம் வாகனத்தில் அமர்ந்து இரவில்
ஒரு சுற்று வலம் வந்தார் ,இருட்டில் அந்த எலி தடுக்கித்
தடுமாறியது ,அந்தப் பக்கம் ஒரு பாம்பு ஓடியது எலி அந்தப் பாம்பைப் பார்த்து பயந்தது ,,எலி அப்படியே
கீழே சாய கணபதியும் அப்படியே சரிந்து கீழே விழுந்தார் ,வயிறு திறந்து குழக்கட்டைகள் வெளியே வர
அவைகள்: கீழே விழாதபடி உள்ளே அழுத்தி அந்தப்
பாம்பைப் பிடித்து தன் இடுப்பில் பெல்ட்டு போல்
கட்டிக்கொண்டார் இதை எல்லாம் வானத்திலிருந
சந்திரன் பார்த்து பின் சிரித்தான் ,இதில் கோபம்
அடைந்த அவர் தன் ஒரு தந்தத்தை ஒடித்து அவரைத்
தாக்கினார் சாபமும் " யார் சதுர்த்தி அன்று சந்தரனைப் பார்க்கிறாரோ அவர் புகழ் மங்கும் " சந்திரன் மன்னிப்புக்
கேட்டவுடன் "கங்கணபதயே நம; என்று சொல்பவர்களுக்கு
எப்போதும் க்ஷேமம் உண்டாகும் என்று ஆசிவழங்கினார் ,,குழந்தைகளே நீங்களும் கணபதியைத்
தொழுது அவர் ஆசி பெறுங்கள்அன்புடன் அம்மம்மா
,

வீர இளைஞன்

குதிராம் போஸ் என்ற வீரச் சிறுவன் நம் நாட்டிற்கென்று நம் நாட்டின் சுதந்திரத்திற்காக
உயிரையும் கொடுத்தான் அவன் பெங்கால் மாகாணத்தைச் சேர்ந்தவன் ,மிட்னாபுர் என்ற
கிராமத்தில் பிறந்தான் .சின்ன வயதிலிருந்தே கீதையைப் படித்து அதன்படி நடக்க முயலுவான் அதன் கொள்கைகளை விரும்பினான் ,ஆங்கிலேயரை நம் நாட்டில் அறவே
வெறுத்தான் ஆங்கிலேய ஆட்சியை முறியடிக்க தானும் ஏதவது வழியில் உதவ வேண்டும் என்ற ஆசை அவனைப் பற்றிக் கொண்டது ,அவனுக்கு வயது அப்போது பதினாறுதான்
ஒரு இயக்கம் ஜுகந்தர் என்ற பெயரில் நடந்து வந்தது அதில் இவனும் சேர்ந்த்துக்கொண்டான் ,
ஆங்கிலேய ஆட்சியை மறைமுகமாக எதிர்த்தான் ,ஆங்கிலேயரின் போலீஸ் ஸ்டேஷன் மற்ற
முக்கிய இடங்களில் குண்டு ஒருவருக்கும் சந்தேகம் வராதபடி வைப்பதில் அதி சமர்த்தன் ,
தன் வேஷம் மாற்றிக்கொண்டு காரியத்தைக் கச்சிதமாக முடித்து விடுவான் ,மூன்று வருடங்கள்
இந்த இயக்கத்தில் இருந்தான் , ஒரு சமயம் அவனுடைய தலைவர் அவனுக்கு இது போல ஒரு காரியம் ஒப்புவித்தார்.அது என்னவென்றால் ஒரு பெரிய ஆங்கிலேய அதிகாரியையும் அவ்ருடன் கல்கத்தாவின் மேஜிஸ்ட்ரேட் ஐயும் அவர் கோச்சு வண்டியில் வரும் போது பாம்
எறிந்து அழிக்க வேண்டும் ,,,குதிராம் மிகவும் மகிழ்ச்சியுடன் நாட்டின் நன்மைக்காக
அதைச் செய்ய விரும்பினான் ஒரு இடத்தில் மாறுவேஷத்துடன் நின்று இருந்தான்
அப்போது கோச்சு வண்டி வர டமால் என்று பாம் வெடிக்க கோச்சும் வெடித்தது ஆனால்
நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று ஆனது ,அந்தக் கோச்சு வண்டியில் இரு ஆங்கிலேயப்
பெண்மணிகள் இருந்தனர் .அவர்கள் குண்டினால் எரிந்துப் போனார்கள்,,போஸ் ஓடுவதற்குள்
பிடிப்பட்டான் அப்போது அவனுக்கு 19 வயதுதான் .அச்சம் என்பது அறவே இல்லை ,
அவனுக்குத் தூக்குத்தண்டனைத் தரப்பட்டது ,தூக்குமேடைக்கு அழைத்துச்சென்றனர் ,சிரித்த
முகத்துடன் சென்றான் "ஜெய் ஹிந்த ,,என்ற வார்த்தை அவனிட்மிருந்து கடைசியாக
வந்தது ,,,,,,,,,அவன் உயிர் பிரிந்தது ,,,,,

அன்புடன் அம்மம்மா

கற்காலம்

நாம் என்ன கற்காலம் போய்விட்டோமோ என்று இருந்தது இந்தச்சம்பவம் ,ஒரு தங்கச்
சங்கிலியை ஒரு மாதுவின் கழுத்திலிருந்து அறுத்துப் பிடுங்கிக் கொண்டு ஓடினான் பகல்பூரைச்சேர்ந்த ஒரு திருடன் ,பெயர் சலிம் ஔரங்கசீப் நிச்சியமாக இது பீஹாராகத்
தான் இருக்கவேண்டும் ,கிரிமினலுக்கு பெயர் போன மாகாணம் ,இந்தச் செய்கை நடந்த்தவுடன் அந்தப் பெண்மணி "திருடன் திருடன் "என்று குரல் கொடுத்தாள் பலர் அவன் பின்னாடி ஓடி அவன் காலரைப் பிடித்து இழுத்து வந்தனர் அவ்வளவுதான் மாறி மாறி உதையும் அடியும் நிற்காமல் பொழிந்தன ,அதிலேயே அவன் சாகும் நிலையை எட்டிவிட்டான் ,சினிமாவில் வருவது போல் கடைசியாக போலீஸ் வந்தனர் அவர்கள்
பங்குக்கு பெல்ட்டைகழட்டிக் கொண்டு அதனால் அடித்தனர் ,அதனாலும் திருப்தி
அடையாமல் அவன் கைகளைக் க்ட்டிவிட்டு அவனைத் தன் மோட்டர் பைக்கில் கட்டி
எல் பி ச்ங் ,,,ராமசந்திர ராய் இருவரும் 20 வயதே ஆன அந்தப் பையனை இழுத்துச்
சென்றனர் அவ்ன் உடல் கீழே தேய்ந்து சிறிது நேரத்தில் மயக்கம் ஆனான் ,இப்போது
மிகவும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறான் ,முன்பே இதுப்போல்
பகல்புர் ப்ளைண்டிங் கேஸ் அதாவது மொத்தமாக பல விசாரணைக் கைதிகளின்
கண்களில் ரசாயனம் கொட்டி குருடாக்கினார்கள்{1980} நாட்டைக் காக்கும் மக்களை
ரட்சிக்கும் போலீஸே இது போல் செய்தால் ,,இதற்கு என்ன சொல்வது ?
கற்கால மனிதர்கள் திரும்ப வந்து விட்டார்களோ ?
மனம் மிகவும் வருந்துகிறது ,,,,

அன்புடன் விசாலம்

Reply

Thursday, September 6, 2007

ஓடப்போட்டி

ஆகஸ்டு மாதம் வந்தாலே கேரளத்தில் ஓடங்கள் கப்பல்கள் எல்லாம் ,, பழுதுகள் சரியாக்கப்பட்டு , புதுசாக்கப்பட்டு ,வர்ணங்கள் பூசப்பட்டு தயாராகி விடும் எதற்கு இந்த அலங்காரங்கள் என்றால் " வெள்ளம் களி"அதாவது போட் ரேஸுக்குத்தான் ,ஓணம் வர இந்த
போட் ரேஸும் கூட வந்து அமர்க்களப் படும் இதைச் சுந்தன் வள்ளம்"என்றும் சொல்வார்கள்
ஏன் என்றால் பாம்பு போல் இருக்கும் .இதன் நீளம் சுமார் 60 மீட்டர் நீளம் ,,இதில் சுமார்
100 பேர் துருப்புடன் ஓட்ட அமரலாம் ..நடுவில் ஒரு சின்ன மேடை உண்டு ,அதில் பாடுபவர்கள், வாத்தியம் கொட்டுபவர்கள் அமருவார்கள்,இந்தப் பாடலுக்கு வஞ்சிப்பாட்டு எனப்பெயர் "செம்மீன் "படத்தில் மிக அழகாக இந்தக்காட்சியைப் படம் பிடித்திருக்கிறார்கள்.
"தையரே தையா தையாரே தையா தை தை ,,,,தைதைதை ,,,என்ரு ரிதமுடன் பாட அந்தக்
காட்சி மிக அழகு ,இயற்கைச் சூழலில் இந்தக் காட்சிக்காண பல வெளியூர்களிலிருந்தும்
வருவார்கள்,மிக முக்கியமான ரேஸ் "நேஹ்ரு டிராபி ரேஸ், இது ஆலப்புழாவில் புன்னமடை
ஏரியில் நடக்கும் .ஆலப்புழா இந்தியாவின் வெனிஸ் என்று பெயர் வாங்கியுள்ளது
பண்டித் நேஹ்ருஜி ஒருமுறை இதைப் பார்க்க வந்து மனம் மகிழ்ந்து போனார் {1952 ல் }
திரும்ப தில்லி போன பின் ஒரு வெள்ளி டிராபி பெரிய நீள பாம்பு போல ஜயித்தவ்ருக்கு
அனுப்பி வைத்தார் அதிலிருந்து அவர் பெயரில் இந்த ஓடப் போட்டி நடக்கிறது இது சுமார்
மூன்று மணி நேரம் வரைச் செல்லும் ,டிக்க்ட் முதலிலேயே வாங்க வேண்டும் ,ப்ல ஆயிரம் மக்கள் டூரிஸ்டுகள் கூடி இருப்பார்கள் இந்த ஓடப் போட்டி "உத்திரட்டாதி வள்ளம்
களி" ஆரன்முலா என்ற இடத்தில் கடைசியில் நடந்து நிறைவு பெறும் ,இந்தக் கண்
கொள்ளாக் காட்சியைக் காண ஆலப்புழா செல்வோம் வாருங்கள்
ஓணம் வாழ்த்துக்கள்
அன்புடன் விசாலம்

நான் உன்னைக் காதலிக்கிறேன்

உன்னருகில் வந்தாலே
இன்பம் எனக்கு,
மின்சாரம் பாய்கிறது,
நீ ஒளியுடன் மின்னுகிறாய்
பல ரகசியங்க்ள் உன்னிடம்
யார் கேட்பினும் வாய் திறவாய் ,
உன் தேடலில்,
பல புதுமை என்க்கு
பலர் என்னைப் பார்த்தாலும்.
நான் உன்னையே ரசிக்கிறேன் ,
யாரும் நம்மைப் பிரிப்பதில்லை,
காதலில் ஒரு தடையும் இருப்பதில்லை,
உணவு நேரம் போகிறது ,
உறங்கும் நேரம் மறக்கிறது,
உன் அழகை நான் ரசிக்க
கேட்பதெல்லாம் நீ கொடுக்க,
உன் இசையில் நான் மூழ்கிறேன் ,
ஆனால் இருளில் நான் தவிக்கிறேன்
நாட்டியம் ஆடும் விரல்களுக்கு
பல கதவுகள் திறக்கிறாய்
புதிதாய் க்ற்றும் கொடுக்கிறாய் ,
சங்கேதச் சொல்லால் செயல் புரியும் நீ
என்னைக் கவர்ந்தக் கண்மணி நீ
டென்சன் நீக்கும் கணிப்பொறி நீ
என் அருமைக் கணினி நீ


அன்புடன் விசாலம்
,

,

இன்சொல்

இன்சொல் ஒரு இனிய சொத்து .
கொடுக்கக் கொடுக்க கொட்டும் முத்து,
முகத்திற்குத் தேவை ஒரு புன்னகை,
வாழ்வின் மகிழ்ச்சி வளரத் தேவை,
இனியச் சொல் நட்பை வளர்க்கும் ,
இன்னாச்சொல் உறவை முறிக்கும்
இனியவன் என்ற நற்பெயர் வாங்கலாம்
அவப்பெயர் கொடுக்கும் வன்சொல் தவிர்க்கலாம்
இன் சொல்லில் உலகம் மயங்கும்
வன் சொல்லில் வரவே தயங்கும்
இனியப்பழம் நம்முன் இருக்க
எட்டிக்காயின் மேல் ஏன் விருப்பம்,,,,

அன்புடன் விசாலம்

நான் அப்பாவானேன்

பல வருடங்கள் எதிர்ப்பார்ப்பு ,
பின் ஒன்பது மாதம் பாரம் சுமப்பு ,
இன்று அவள் வலியில் துடிப்பு,
என் மார்ப்பு "படபட"வென்றடிப்பு
ஆஸ்பத்திரி அறையில் அவள்,
மாமியார் மெச்சும் மறுமகள்,
என் மனம் குவிய
வேதனை என்னைக் கவிய
வேண்டாத எண்ணங்கள் ஓட
மனமும் ஊஞ்சலாக ஆட ,
எங்கும் பரபரப்பு
உள்ளத்தில் ஒரு சலசலப்பு
நர்சுகளின் ஓட்டம்
மேலும் கொடுத்தது வாட்டம்
டாக்டர்கள் உள்ளே வெளியே நடக்க
ஓவ்வொரு நிமிடமும் யுகமாய்க் கடக்க
இதுவரை நினையாத கடவுள்
இன்று ஏனோ என் முன் ,,,,,
கைக்கூப்பி வேண்டியது உள்ளம்
அதோ கேட்குது "குவகுவா "சத்தம்
பிரார்த்தனைப் பலித்தது தொழுவேன் நித்தம் ,
அவள் வலியில் துடித்தது என் இதயம்
என் செல்ல மகள் பூமியில் உதயம் ,
மறு ஜனமம் எடுத்த என் அன்பு மனைவி
அவளே என் வாழ்க்கைத் த்லைவி


அன்புடன் விசாலம்

மெழுகுவர்த்தி

எனக்குப் போதித்த எல்லா ஆசிரியர்களுக்கும் கைகள் குவித்து தலை வணங்குகிறேன் என் அன்னை , என் தந்தைக்கு முதல் வணக்கம் அவர்கள் தான் என் முதல் ஆசிரியர்கள்,
ஆசிரியர் ஒரு உதாரணப் புருஷராக இருத்தல் மிக அவசியம், எதைப் போதிக்கிறாறோ
அதைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்துக் காட்டுதல் மிக அவசியம்..சொலவதொன்று
செய்வதொன்று என்று இருத்தல் சரியாகாது,மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர்
சேமிக்கும் தொட்டியில் நல்லத் தண்ணீர் இருந்தால் நாம் குழாயைத் திறக்க நமக்கும்
சுத்தத் தண்ணீர் கிடைக்கும் .ஆனால் அந்தத் தொட்டியில் கலங்கலாக அழுக்குநீர்
இருந்தால் குழாய்த் திறக்க நமக்கும் அதுவேதானே வரும் ? ஆகையால் மாணவர்களிடம் ப
பாசமாக அன்புடன் பழகி அவர்களுடன் ஒன்றிப் போக நல்ல பலன் கிடைக்கும் ,அந்த நேரத
நேரத்தில் அவர்கள் மனதில் நல்ல விதைகளை விதைத்தால் பின் பெரிய மரமாகி நல்ல ப
பழங்களைக்கொடுப்பது நிச்சியம். .

ஆசிரியர் ஒரு குயவன் ,
பச்சைமண் பானையாகுகிறது
அவரே நாட்டின் அஸ்திவாரம்,
மாணவன் அவரின் சாரம் .
அன்பின் போதனை
அவரது சாதனை
நற்சிந்தனைகளின் ஊட்டம்
இலட்சியங்களின் ஏற்றம்
தேவை இன்று பல "அப்துல் கலாம்"
என் மதிப்புக்குரிய " சலாம் " ,
ஆசிரியர் ஒரு மெழுகுவர்த்தி ,
கரைந்து போகிறார் ஆனால்
ஒளியைத் தருகிறார்


அன்புடன் விசாலம்

கோவிந்தா ஆலா ரே

மும்பையில் ஜன்மாஷ்டமி மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது இதில்
வாலிபர்கள் தன் வீர விளையாட்டைக் காட்டிப் பரிசும் பெறுவார்கள் ,சாலையில் இரு புறமுள்ள பல மாடிக் கட்டடங்களில்நடுவில் கயிற்றின் உதவியால் ஒரு பெரிய மண்சட்டி
பூக்களுடன் வர்ண துணியுடன் மூடி நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் ,இந்த
விளையாட்டு வீரர்களை "ராமாக்கள் "என்பார்கள்,,""ஆலா ரே ஆலா ,,,,,,ராமா ஆலாரே
என்ற பாட்டு முழங்க தாரை தம்பட்டத்துடன் லேஜியம் ஆடி வருவார்கள்.இந்த லேஜியம்
மும்பயி ஸ்பெஷல் தான் ,வில்லுப் போல் வளைந்திருக்கும் ஒன்றில் ஜால்ராக்கள் கட்டப்
பட்டிருக்கும் அதை அவ்ர்கள் லாவகமாகக் குதித்து ஆடி வரும் அழகே அழகு ,அந்த
மண்சட்டியில் ப்ல ஆயிரம் ரூபாய்கள் வைக்கப் பட்டிருக்கும் ..இந்த ராமாக்கள் மனிதன் மேல்
மனிதன் ஏறி கோபுரமாக அமைத்து அந்த மண்சட்டியை உடைத்து பணமுடிப்பைப் பெற்றுக்
கொள்ள வேண்டும் அவர்கள் அதை எடுக்க விடாமல் பலர் வாளி நிறைய தண்ணீர்
நிரப்பி அவர்கள் மேல் வீசுவார்கள் சிலர் எண்ணெயும் தடவுவார்கள் ,இது கண்ணன்
ஆயர்பாடியில் உறியிலிருந்து சிறிவர்கள் உத்வியுடன் வெண்ணெய் திருடி உண்டது நினவு
படுத்தும் ,
இதே போல் தமிழ் நாட்டிலும் வரகூரில் நடைப் பெருகிரது இங்குதான் ஸ்ரீ நாராயணத்தீர்த்தர்
கிருஷ்ணனுக்கு என்று ஒரு ஆஸ்ரமம் அமைத்தார் ,கண்ணனை வழிப்பட்டார் ,இங்கு
ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி மிகச் சிறபாக நடைப் பெறுகிறது ஒரு இருபது அடி உயரமுள்ள
தூண் கோவில் வாசலுக்கு வரும் ,அதில் உச்சியில் சீடை முறுக்கு என்ற பல
பட்சண்ங்களை மூட்டையாகக் கட்டி வைப்பார்கள் பின் தொங்க விடுவார்கள் அந்த
மரத்தில் எண்ணெயைத் தடவி வைப்பார்கள் .அதில் ஏறினாலே வழுக்கும் ,இங்கும் இத அடையப் போட்டியுடன் வீர விளையாட்டு நடை பெறும் ,இதில் என்ன தத்துவம் இருக்கும்
என்றால் கடும் உழைப்பால் பல இன்னல்களைக் கடந்து பல தடவை முயற்சி செய்தப் பின்
வாழ்க்கையில் வெற்றி உண்டாகும் பின் வாழ்க்கையே இன்பம் தான்

ம்துராவில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மலருடன் "கன்னையா கோ ஜய் போலோ " என்ற கோஷத்துடன் வெள்ளிக் காசுகள் தங்கக் காசுகள் வீசி அர்ச்சனைச் செய்கிறார்கள்
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு புதுமையுடன் கண்ணன் பிறக்கிறான்
அவன் அருள் எல்லோரும் பெற பிரார்த்திப்போம்

அன்புடன் விசாலம்

Monday, September 3, 2007

திடீர்க் கொடிகள்

நேற்று காலியான இடம் ,
இன்று திடீர்க் குடிசைகள் ,
தோன்றியது கூடவே ஒரு கொடி ,
கழிந்தது ஒரு வாரம் ,
முளைத்தன பல கொடிகள்
என்ன மந்திரமோ,
இது என்ன மாயமோ?
சிவப்பு ,கறுப்பு பச்சை.,
எனப் பல ரகங்கள் ,
எப்படி வந்தன?
எங்கிருந்து வந்தன?
பல எழுத்தைக் கொண்ட கட்சிகள்
நினைவிலும் நிற்கவில்லை
திடீரென்று வீர முழக்கம் ,
உடனே கிளம்பும் எதிர் முழக்கம் ,
ஆரம்பிக்கும் அங்கு அடிதடி
பறந்து வரும் சோடா புட்டி
எத்தனைக் கொடிகள்,
எத்தனைக் கட்சி
பறந்து போகும் எந்தக் கட்சி ?
நாளைக் கொடிகள் மாறலாம் ,
பதவி மோகம் ,தலையும் மாறும் ,
ஒற்றுமையுடன் தேவை நல்லாளும் கட்சி ,
அதன் தவறைக்காட்ட எதிர்க்கட்சிஅன்புடன் விசாலம்

லிம்காவில் ரிகார்ட்

அப்பப்பா ,,,இந்த விக்ஞானத்தின் முன்னேற்றம் தான் என்ன ?மிகவும் அதிக அளவு நம் நாடு அதுவும் தமிழ்நாடு முன்னேறி விட்டது என்பது மிகப் பெருமையாக இருக்கிறது ,என்
பெருமையுடன் திரு அலகப்பன் பிருந்தா தம்பதியர் மிகப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும்
காணுகின்றனர் ,அந்த பிருந்தாவிற்கு வயது 55 ஆகிறது, பல காலம் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் இருந்து பின் அவருக்கு மாதவிலக்கும் நின்ற பின்னரும் கடவுள் போல்
ஜயராணி காமராஜ் வந்தார் ,பெண்ணின் கர்ப்பப்பை நல்ல ஆரோக்கியமாக இருப்பதைக்
குறிப்பிட்டு பின் ICSI process மூலம் சினை முட்டைக்களைச் செலுத்தி வெற்றி கண்டிருக்கிறார்,ஒரு குழந்தைக்குப்பதில் போனஸ்போல் இரட்டைக்குழந்தைப் பிறந்துள்ளன,
திருமதி பிருந்தாவிற்கு சர்க்கரை நோயும் ஹைபர் டென்சனும் இருந்தும் அதெல்லாம் இல்லாத சமயம் பார்த்து ஊசி மூலம் கருத்தரிக்க உதவி இருக்கிறர் அந்த டாக்டர் ஜெயராணி
28 வருடம் பிறகு மகவுகளை ஈன்ற முதல் பெண்மணி லிம்கா ரிகார்டுல் வந்து விட்டார்
ஒரு வங்கியில் வேலைச் செய்த பிருந்தா கொஞ்சம் மாதம் முன் தான் வேலையிலிருந்து
விலகினாள்{voluntary retirement} இனி குழந்தைகளைக் கொஞ்சவே நேரம் சரியாக இருக்கும்
பல வருடங்கள் தவ்ம் இருந்து பெற்ற மகன்கள், திருமதி பிருந்தாவிற்கும்
அவர் கணவருக்கும் என் வாழ்த்துக்கள் அத்துடன் அந்த டாக்டரம்மாவிற்கு என் பராட்டுக்கள்
அன்புடன் விசாலம்
,,,,

மும்பையில் ராமாக்கள்

மும்பையில் ஜன்மாஷ்டமி மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது இதில்
வாலிபர்கள் தன் வீர விளையாட்டைக் காட்டிப் பரிசும் பெறுவார்கள் ,சாலையில் இரு புறமுள்ள பல மாடிக் கட்டடங்களில்நடுவில் கயிறின் உதவியால் ஒரு பெரிய மண்சட்டி
பூக்களுடன் வர்ண துணியுடன் மூடி நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் ,இந்த
விளையாட்டு வீரர்களை "ராமாக்கள் "என்பார்கள்,,""ஆலா ரே ஆலா ,,,,,,ராமா ஆலாரே
என்ற பாட்டு முழங்க தாரை தம்பட்டத்துடன் லேஜியம் ஆடி வருவார்கள்.இந்த லேஜியம்
மும்பயி ஸ்பெஷல் தான் ,வில்லுப் போல் வளைந்திருக்கும் ஒன்றில் ஜால்ராக்கள் கட்டப்
பட்டிருக்கும் அதை அவ்ர்கள் லாவகமாகக் குதித்து ஆடி வரும் அழகே அழகு ,அந்த
மண்சட்டியில் ப்ல ஆயிரம் ரூபாய்கள் வைக்கப் பட்டிருக்கும் ..இந்த ராமாக்கள் மனிதன் மேல்
மனிதன் ஏறி கோபுரமாக அமைத்து அந்த மண்சட்டியை உடைத்து பணமுடிப்பைப் பெற்றுக்
கொள்ள வேண்டும் அவர்கள் அதை எடுக்க விடாமல் பலர் வாளி நிறைய தண்ணீர்
நிரப்பி அவர்கள் மேல் வீசுவார்கள் சிலர் எண்ணெயும் தடவுவார்கள் ,இது கண்ணன்
ஆயர்பாடியில் உறியிலிருந்து சிறிவர்கள் உத்வியுடன் வெண்ணெய் திருடி உண்டது நினவு
படுத்தும் ,
இதே போல் தமிழ் நாட்டிலும் வரகூரில் நடைப் பெருகிரது இங்குதான் ஸ்ரீ நாராயணத்தீர்த்தர்
கிருஷ்ணனுக்கு என்று ஒரு ஆஸ்ரமம் அமைத்தார் ,கண்ணனை வழிப்பட்டார் ,இங்கு
ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி மிகச் சிறபாக நடைப் பெறுகிறது ஒரு இருபது அடி உயரமுள்ள
தூண் கோவில் வாசலுக்கு வரும் ,அதில் உச்சியில் சீடை முறுக்கு என்ற பல
பட்சண்ங்களை மூட்டையாகக் கட்டி வைப்பார்கள் பின் தொங்க விடுவார்கள் அந்த
மரத்தில் எண்ணெயைத் தடவி வைப்பார்கள் .அதில் ஏறினாலே வழுக்கும் ,இங்கும் இதை அடையப் போட்டியுடன் வீர விளையாட்டு நடை பெறும் ,இதில் என்ன தத்துவம் இருக்கும்
என்றால் கடும் உழைப்பால் பல இன்னல்களைக் கடந்து பல தடவை முயற்சி செய்தப் பின்
வாழ்க்கையில் வெற்றி உண்டாகும் பின் வாழ்க்கையே இன்பம் தான்

ம்துராவில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மலருடன் "கன்னையா கோ ஜய் போலோ " என்ற கோஷத்துடன் வெள்ளிக் காசுகள் தங்கக் காசுகள் வீசி அர்ச்சனைச் செய்கிறார்கள்
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு புதுமையுடன் கண்ணன் பிறக்கிறான்
அவன் அருள் எல்லோரும் பெற பிரார்த்திப்போம்

அன்புடன் விசாலம்