Monday, June 29, 2009

அன்பே தெய்வம்

June 24, 2009
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு ” நடத்தும் சிறுகதை போட்டி ,,,,……………………
….அன்பே தெய்வம் …
…………….
“ட்ரிங் டிரிங் ” … டெலிபோன் மணி ஒலித்தது ,”இந்தப்போன்

பால் காச்சும் போதுதான் வரும், இரு இரு வரேன்” என்று ஒரு குழந்தைப்போல் சொல்லிக்கொண்டு ராஜம் போனை எடுத்தாள். “ஹலோ ஹலோ யார் பேசறது “?

“நான் தான் சுப்பிரமண்யன்”

“”நமஸ்காரம் இருங்கோ. இதோ எங்காத்து மாமாவைக் கூப்படறேன்”………டெலிபோனைப்பொத்தியபடி, “ஏன்னா இந்தாங்கோ நம்ம சம்பந்தி…. கூப்பிடறார் உடனே வாங்கோ”என்று தன் கணவர் சிவராமனைக் கூப்பிட்டாள் . பாதி ஷவரம் செய்த முகத்துடன் அவரும் வந்தார் “ஹலோ நமஸ்காரம் சௌக்கியமா? எப்போ முகூர்த்தத்தை வச்சுக்கலாம் ?

“அதுதான் சொல்ல வந்தேன். இந்தச்சம்பந்ததம் நடக்காது மன்னிக்கணும் , நீங்கள் நிச்சியதார்த்தம் அன்று போட்ட பொருட்கள் எல்லாம் திருப்பித் தந்துவிடுகிறோம், வந்து எடுத்துங்கோ.

“ஏன் என்ன ஆச்சு ? எல்லாம் நன்னாத்தானே நடந்தது இப்ப என்ன திடீர்னு …”

மேலே ஒண்ணும் சொல்லறதுக்கில்லை வச்சுடறேன்”

ராஜம் கேட்டாள் “என்ன ஆச்சு ?ஏன் இப்படி இடிஞ்சுப்போய் நிக்கறேள் ?

“நம்ம சம்பந்தம் வேண்டாம்னு சொல்றா …. நம்ம பையனுக்கு என்ன குறைச்சல் …ராஜா மாதிரி இருக்கான் சி ஏ வேறு …….கை நிறைய சம்பளம் ….அவாளுக்கு என்ன….. கசக்கறதா?சரி, விடு இந்தப்பெண் இல்லேன்னா எத்தனையோ பெண்கள்……..”ராஜத்திற்கு மனம் உளைச்சல் கண்டது . ஓடிப்போய் தன் தங்கையிடம் போனில் தெரிவித்தாள் பின் திருவாரூரில் இருக்கும் தன் அப்பாவைக்கூப்பிட்டாள்

,ஹலோ ஹலோ ,யாரு அப்பாவா…..’

“ஆமாம் ராஜமா …என்ன மோஹனுக்கு முகூர்த்ததேதி பார்த்தாச்சா”?

அதுதாம்பா சொல்ல வந்தேன் கல்யாணம் நின்னுபோயிடுத்து ,என்னகாரணம்னு தெரிலை நீங்கள் தான் துப்பறியும் சாம்பு போல் கண்டுபிடிக்க வேண்டும் பெண்ணோட தாத்தாவும் திருவாரூர்தானே….”

சரி ராஜம் நான் விஜாரிச்சு பின் சொல்றேன் ,கவலப்படாதே”

.அப்பாடி… இப்போத்தான் ராஜத்திற்கு மூச்சு வந்தது. உள்ளே போனாள்.

,” அப்துல் தும் கஹான் ஹோ?’ {அப்துல் நீ எங்குஇருக்கிறாய் “? என்று இந்தியில் பேச அப்துல் “அபி ஆயா{இதோவந்துவிட்டேன் } என்று பதில் சொன்னான் “சாப்பிட்டாயா …. அப்துல் …..நம்ம மோஹன் கல்யாணம் நின்றுவிட்டது தெரிமா”?


தெரியும் மாஜி ” என்று அவனும் தமிழில் பேச முயன்றான் அவன் கண்கள் கலங்கின.

தில்லியில் ஜனக்புரி என்ற இடத்தில் தான் சிவராமன் குடும்பம் இருந்தது. இரு மகன்கள் …..மூத்தவன் மோஹன்…. தம்பி சுரேஷ் ,,,பின் யார் இந்த அப்துல் “? இது தெரிய பத்து வருடங்களுக்கு முன்னால் நாம் போக வேண்டும். எப்போதும் தனக்கென்று ஒரு ரிக்க்ஷா வாலாவை ராஜம் தன் சிறு பிரயாணத்திற்கு அமர்த்திக்கொள்வாள். ஒருநாள் அவனைக்கூப்பிடப் போன போது ஒரு ஐந்து வயது சிறுவன் அங்கு அழுதுக்கொண்டிருந்தான். அவன் தான் ரிக்க்ஷாக்காரன் சலீமின் குட்டித்தம்பி அப்துல் …..ராஜம் அவன் ஏன் அழுகிறான் என்று கேட்க அவனும் தன் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் இந்தக்குட்டி அப்துலைத் தான் பார்த்துக்கொள்வதாகவும் வேலைக்குப்போக மிக கஷ்டமாக இருப்பதாகவும் கூறினான் தவிர வறுமை வேறு …..ராஜம் இயல்பாகவே இளகிய மனம் படைத்தவள் ஆதலால் அவனிடம் “சலீம் நான் இவனை வளர்த்து படிக்க வைக்கிறேன் அனுப்புகிறாயா ?”என்று கேட்டாள் கரும்பு தின்னக்கூலியா ? உடனேயே அவனை அனுப்பி வைத்தான். அப்துல் வயிறு ஒடுங்கி ஒல்லிக்குச்சியாய் ராஜத்தைத் தொடர்ந்தான். அன்று வந்தவன் தான் அப்துல் “மாஜி மாஜி “என்று அன்பைக்கொட்டினான். ராஜமும் அவனைப்பள்ளிக்கு அனுப்பித்தாள் . தமிழ் கற்றுக்கொடுத்தாள் விதவிதமான உடையும் வாங்கிக்கொடுத்தாள். அவனும் வளர்ந்தான். வீட்டுவேலையும் செய்துபின் படிப்பிலும் கவனம் செலுத்தினான். மொத்தத்தில் ராஜத்தின் வலது கையானான் ராஜத்தின் பிள்ளைகள் ஒரு வேலையும் செய்யாமல் அப்துலை வேலை வாங்குவார்கள். இது ராஜத்திற்கு மிக வருத்தம் உண்டாக்கும். அப்துலுக்கு அந்த வீட்டில் தனிச்சலுகை என்று இரண்டாவது மகன் மனம் வெம்பினான் பொறாமை வேறு அவனை ஆட்கொண்டது ஒருநாள் ராஜம் தலைவலியால் துடித்தாள் .அவள் மகன் சுரேஷ் காலேஜிலிருந்து வந்தான் ,”அம்மா என்ன திங்க வச்சிருக்கே எடுத்துக்கொடு”

“சுரேஷ் கண்ணா எனக்குத் தலைவலிடா….. நீயாகவே உள்ளே போய் தோசை எடுத்துக்கோ”

அப்போது அப்துலும் அங்கு வந்தான்.

“மாஜி என்ன ஆச்சு ?உங்கல்கு ,,,,,தலவலியா? இதோ நானு வரேன் ” என்று தனக்குத்தெரிந்தத்தமிழில் பேசித் தலைவலி பாம் கொண்டு வந்து தடவினான் ,பின் உள்ளே போய் தோசையும் கொண்டு வந்து “மாஜி இந்தா.. வாயைக்காட்டு,, தோசை சாப்பிடு” என்று ஆசையாகச் சொன்னான். ராஜம் மனம் நெகிழ்ந்தாள் அப்படியே அவனை அணைத்துக்கொண்டாள். இதையெல்லாம் பார்த்த சுரேஷுக்குக் கோபம் கோபமாக வந்தது “இந்த அம்மா என்ன இத்தனை மாறி விட்டாள் எப்போ பாத்தாலும் அப்துலையே கொஞ்சறாளே”


“ஏண்டா சுரேஷ் என்ன செய்யறே “என்று கேட்டபடி மோகன் அங்கு வந்தான் “ஒன்றுமில்லை அண்ணா… இந்த அப்துல் அம்மாவை என்ன மக்கன்{வெண்ணெய்} வைத்தானோ நன்னா மயக்கி வைத்திருக்கிறான் .அன்று நான் கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில் அம்மா அவனுக்காக இராமயணம் சானல் மாற்றினாள்”

ஆமாம் என்னிடமும் அம்மா அன்னிக்கு சொன்னாள் “இந்த அப்துல் எனக்குக்கால் பிடிச்சு விடறான், பாத்திரமும் அலம்பித்தருகிறான், ரொம்ப அன்பாக பழகுகிறான் நீங்கள்வருவதும் தெரிவதில்லை ஆபீஸ் போவதும் தெரிவதில்லை. என்ன பிள்ளைகள்டா நீங்கள் என்றாள்” இப்படிச்சொல்லும்போதே ராஜம் அங்கு வர பேச்சு நின்றுவிட்டது இந்த நிலையில் தான் மூத்தவன் மோஹனுக்கு பெண் பார்த்து அவர்கள் போபாலிலிருந்து வருவதாகச்சொன்னார்கள் அவர்கள்தில்லிக்கு ஒரு கல்யாணத்திற்கு வருவதாகவும் அப்போது பிள்ளையும் பெண்ணும் பார்த்து விடட்டும் ,என்று தீர்மானிக்கப்பட்டது வாசலில் வண்டி வந்து நின்றது “அப்துல் வாசலில் அவர்கள் வந்துவிட்டார்கள் போய் அழைத்துவரலாம் என்று அப்துலையும் அழைத்து வந்தாள் “ஆமாம் யார் இந்தப்பிள்ளை ‘? என்று கேட்டாள் பெண் சுமதியின் தாய் “இவன் தான் அப்துல என் பிள்ளை என்று அவனை அணைத்துக்கொண்டாள் ராஜம். பெண்ணின் தாய் முகம் சுளித்தாள் .பின் ராஜம் அந்த அப்துல் கையில் டிபன் காபி எல்லாம் கொடுத்து அனுப்பினாள் ..பெண்ணின் அம்மா ஆசாரம் இல்லை என்றாலும் அப்துல் பூஜை அறை கிச்சன் என்று நுழைவது அவளுக்குப் பிடிக்கவில்லை. பெண் சுமதியும் மோஹனும் தனியாகப் பேசிக்கொண்டு பின் ஒகே சொல்லி விட்டார்கள் .நிச்சியதார்த்தம் மிக நன்றாக நடந்தது ……………
.”போஸ்ட் என்று தபால்காரன் ஒரு கடிதத்தைப்போட ராஜம் அதை எடுத்துப்படித்தாள். அவள் அப்பா எழுதியிருந்தார்.அதில் அப்துலால் கல்யாணம் நின்றுவிட்டதாகவும் இரு மகன்கள் ராஜாப்போல் இருக்க இந்த அப்துலை ஏன் வளர்க்க வேண்டும் இந்தப்பையனுக்கும் அந்தக்குடுமபத்திற்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் வந்துவிட்டது அவர்களுக்கு என்றும் எழுதியிருந்தார்.

அவசரம் அவசரமாகப்போனை அடித்தாள்தன் அப்பாவுக்கு…….

“அப்பா லெட்டர் வந்தது. என்ன இது இப்படி அபாண்டமாகப்பழி….
,,,”"நீ ஏன் அந்த அப்துல் பயலை வளைய வர விட்டாய் அதுதான்கல்யாணமே நின்று விட்டது இப்போ ..பார்த்தாயா ?அதன் விளைவை ……”

“என்ன அப்பா…நீங்க ! அம்மா அப்பா இல்லாத ஒரு பிள்ளையைவளர்ப்பது தப்பா”?


“அதுசரி ராஜம்…. இப்போ என்ன செய்யப்போறே “?

வேறு வரன் வராமலா போய்விடும்? கடவுள் விட்ட வழி “

பேச்சு முடிந்தது .

,காலம் உருண்டது. வேறு பெண் மோஹனுக்கு நிச்சியம் ஆயிற்று

“சுரேஷ் அந்த அப்துலை என் கல்யாணத்திற்கு அப்புறம் வரசொல்” என்றான் மோஹன் .

“அம்மா அந்த அப்துல் பயலை கிட்நேப் செய்து கல்யாணம் ஆனபின் கொண்டுவிடுகிறேன் “என்று கிண்டல் அடித்தான் சுரேஷ்மோஹனும் சுரேஷும் தமிழர்கள் ஆனாலும் இந்தியில் பேசிக்கொண்டார்கள். ஆனால் அப்துலோ தமிழ் நன்றாகப்பேசினான். கல்யாணம் ஆனவுடனேயே மோஹன் தனிக்குடித்தனம் போய் விட்டான். இரண்டாவது மகனோ பூனாவில் வேலை சேர்ந்து விட்டான். சிவராமனும் ராஜமும் தனித்து விடப்பட்டனர். ஆனால் பிளைக்குப்பிள்ளையாக அப்துல் இருந்து காலேஜையும் முடித்தான்வேலையும் தேடினான் .

கொரியர் சர்விசில் ஒரு நல்ல வேலைக்கிடைத்தது .
அன்று முதல் சம்பளத்தை வாங்கி வீடு வந்து “மா..ஜி ஆசீர்வாதம்செய்யுங்கோ “என்று அவள் காலிலும் சிவராமன் காலிலும் விழுந்தான் தன் சம்பளத்தை அவள் கையில் கொடுத்தான்.

அடுத்த வீட்டிலிருந்து ஒரு இந்திபஜன் கேட்டது

“பிரேம் ஈஸ்வர் ஹை ஈஸ்வர் பிரேம் ஹை” {அன்பே கடவுள் கடவுளே அன்பு },,,,,ராம் ரஹீம் புத்த கரீம் …..கோயீ பி நாம் ஜபோ ரெ மனுவா ஈஸ்வர் ஏக்ஹை {ராம் என்று சொன்னாலும் ரஹீம் புத்தர் கரீம் என்று எந்தப்பெயர் சொன்னாலும் எல்லாமே ஒன்றுதான் ஈஸ்வரன் ஒன்றுதான் ,,,,,,

ராஜம் அப்துலை அணைத்தாள் . சொந்த மகன்கள்

எங்கேயோ இருக்க இந்த வளர்ப்பு மகன்

அதுவும் பீஹாரைச்சேர்ந்த முஸ்லிம் இப்படி அன்பைப்பொழிகிறன் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது அங்கு அன்பே தெய்வமானது.
அன்புடன் விசாலம்

Wednesday, June 10, 2009

எல்லாமே நம்பிக்கைத்தான்

அதோபறக்கிறது மூவர்ணக்கொடி.
வணங்குகிறோம் அதன் புகழைப்பாடி
,பாரத நாட்டிற்கு ஒரு வணக்கம் ,
அங்கே தேசபக்தி மணக்கும் ,
தேசியக்கொடி ஏற்றம்
நம்முன் பாரத அன்னையின் தோற்றம்
,நம்பிக்கைக் கொடுப்பது அன்னையின் உணர்வு
எல்லாமே நம்பிக்கையால் ,,,,,,,,,
,அதோ தாத்தாவின் புகைப்படம்
அதன் முன் இனிப்பு சம்படம்
படையல் படைக்கும் உறவினர்கள்
ஆசிகள் வழங்கும் முன்னோர்கள்.
தாத்தாவைக்கும்பிடு,,எனும் தந்தை
கண் கலங்கி நிற்கும் அவர் சிந்தை
நம்பிக்கையில் தாத்தாவின் உணர்வு
எல்லாமே நம்பிக்கையால்,,,,
,மறைந்தத் தலைவர்கள் சிலையாக ஆட்சி
பிறந்த நாட்களில் மாலைகளுடன் காட்சி
கைக்கூப்பிக் கண் மூடி நினைக்கும் மக்கள்
ஆசிகளை வேண்டி நிற்கும் தொண் டர்கள்
தலைவர்கள் பேசிய பொன்மொழிகள்,
நம்பிக்கையில் தலைவரையே கண்ட உணர்வு
,எல்லாமே நம்பிக்கையால்,,,,,,,,,,
புகைப்படங்களில் தெய்வ உருவம் ,
கடவுளாகத் தோன்றும் அந்த ரூபம்
தீப வடிவில் தேவியின் தரிசனம்
பார்த்தால் பரவசம் ஆகும் சிலர் மனம் ,
கல்லிலும் கடவுளைக் காணும் மனிதன்
சிகரத்திலும் இறைவனை தரிசிக்கும் மனிதன்
நம்பிக்கையில் கடவுளைக் கண்ட உணர்வு
எல்லாமே நம்பிக்கையால் ,,,,,,,

யாதகிரி நரசிம்மர்

ஓம் வஜ்ர நகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷட்ராய தீமஹிதந்நோ நாரசிம்ஹ:ப்ரசோதயாத்....இது நரசிம்ம காயத்ரி இதை நரசிமஹ ஜயந்தி அன்று ஜபிக்க நோய்கள் விலகி எங்கும்ஜயம் தான்*நாம் யாதுகிரி குட்டாவிற்குப்போய் அங்கு இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரைப்பார்த்து ஆசிகள் பெறலாமா?ஹைதராபாத் லிருந்து சுமார் 69 கிமீதூரத்தில் வாரங்கல்லுக்கு அருகிலும் இந்தலக்ஷ்மிநரசிம்மர் கோயில் இருக்கிறது இது எதனால் விசேஷம் என்றால் இது பஞ்சநரசிம்மக்ஷேத்ரம் ,இங்கு ஒரு குகையில் யது என்ற ரிஷி தவம் இருந்தார் ,இவர்ரிஷிய சிங்கர் சாந்தாதேவி அவர்களது புத்திரர்.இவருக்கு மஹாவிஷ்ணு தரிசனம்தந்து அருள் புரிந்தார் ,ரிஷியும் தான் நரசிம்ஹ மூர்த்தியாக அவரைப்பார்க்கவிரும்பினார்,முதலில் ஜ்வால நரசிம்ஹராக வந்தார் பின்னர் உக்ர நரசிம்மராகத் தோன்றினார்அவர் மிக்வும் உக்ரமாகத் தோன்ற ரிஷியும் அந்தத் தோற்றம் வேண்டாமென்றுகேட்டுக்கொண்டார் ஆகையால் யோக நரசிம்மராகக் காட்சி அளித்தார் அதிலும் திருப்திபடாமல் போனதால் சாந்தமாக ல்க்ஷ்மி நரசிம்மராக தரிசனம் கொடுத்து அருள்புரிந்தார் ,ஆக மொத்தம் பஞ்ச நரசிம்மராகக் காட்சிக்கொடுத்தார் ,என்ன அத்புதம் !இங்குப் போனால் நவகிரஹ தோஷம் போய்விடுகிறது பில்லி சூன்யம் ஏவல் போன்றதும்மறைகின்றன , நாற்பது நாட்கள் தொடர்ந்து பூஜிக்க தீராத வியாதியும் தீருகிறதுஇவர்தான் அங்கு வைத்ய நரசிம்மர் ஆகிறார் ,இங்கு ஆஞ்சநேயரும் இருக்கிறார் தவிரஸ்ரீ ஆண்டாள் நான்கு ஆழ்வார்கள் ராமலிங்கேஸ்வர ஸ்வாமியும் எழுந்தருளிஅருள்பாலிக்கின்றனர் .கர்ப்பக்கிரஹத்தின் மேல் சிகரத்தில் தங்க சுதர்சனச்சக்கரம் உள்ளது முன்பெல்லாம்இந்தச்சக்கரம் பகதர்கள் வரும்போது அந்தப்பக்கம் திரும்பிஒரு காம்பஸ் போல்வழிக்காட்டுமாம்பல ரிஷிகள் இங்கு வந்து தியானம் செய்கிறார்கள் ,இதற்கு ரிஷி ஆராதனா க்ஷேத்ரம்என்றும் பெயர் ,இப்போதும் இங்கு பஞ்ச ராத்ர ஆகமம் நடக்கிறது.ஸ்ரீ வெங்கிபுரம்நரசிமசார்யாலு என்பவர் இந்த நரசிம்ஹரைப்பற்றி சுப்ரபாதம் பின் பலஸ்லோகங்கள் எழுதி இருக்கிறார்சுமார் முன்னூறு அடிக்குமேல் இருக்கும் இந்த பஞ்சநரசிம்மரையும் ரிஷி தவம்செய்த குகையும் பார்த்து ஆசி பெறலாமேஅன்புடன் விசாலம் *

அம்மாவென்று அழைக்காத உயிரிலில்லையே

மதர்ஸ் டே அதாவது அன்னையின் தினம் இது இந்தக்காலத்தில் நிச்சியமாகக் கொண்டாடப்படவேண்டிய ஒன்று ஏனென்றால்இந்தக்காலத்தில் அன்னையுடன் சேர்ந்து இருக்கும் வாய்ப்பு இளைஞர்களுக்குமிகவும் குறைவு. கல்விக்காகவும் உத்தியோகத்திற்காகவும் இவர்கள்பெற்றோர்களை விட்டு வெகு தூரம் போக வேண்டி இருக்கிறது. அவர்களுக்குஅன்னையை நினைக்க விரும்பினாலும் வேலையின் பளுவில், காதலில் மற்றபொழுதுபோக்குகளில், அவர்கள் மூழ்கி விடுவதால் அதன் முக்கியத்துவம் ஓரளவுமறைந்துதான் விடுகிறது ,வாரம் ஒரு தடவை போனில் விஜாரிப்பதோடு சரி அல்லது பணம் அனுப்புவதோடு சரி ,,,, முன் காலத்தில் இந்த நிலைமை இல்லை வேதக்காலத்திலேயே முதலில் அன்னைக்குத்தான் சிறந்த இடம் மாத்ரு தேவோ பவ என்று முதலில் அன்னைக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருந்தது முன் காலத்தில் அன்னைதினம் என்று தனித்தினம் தேவையில்லாமல் இருந்தது ஏனென்றால் காலையும் மாலையும் கூட்டுக்குடும்பத்தில் பெற்றோர்களை வணங்கிஆசியும்பெற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்தது தவிர அன்னையும் வீட்டில் இருந்து தன்மக்களின் நலத்தையே முக்கியமாகக்கொண்டு நல்லவளர்ப்பில் அவர்களைக் கொண்டு வந்தாள். பூணல் போட்டவுடன் முதலில் அன்னையைவணங்கி பவதி பிக்ஷாந்தேஹி என்று அந்த மகன் கேட்டு முதல் அரிசியையும்பருப்பையும் பிக்ஷையாக அன்னையிடமிருந்து வாங்கிக்கொண்டு ஆசி கோருகிறான் அன்னை பத்து மாதங்கள்: சுமந்து பல இன்னல்களுக்கு உடபட்டுஉள்ளிருக்கும் கருவையும் பொத்திப்பொத்திக் காப்பாற்றி அல்லல்பட்டுகுழந்தைப்பிறப்பு என்ற இன்பமான அவஸ்தையும் பட்டு அந்தக்குவா குவாசத்தத்தில் உலகையே மறக்கிறாள்,அன்று ஆரம்பிக்கும் தியாகம் அவள் உயிர் உள்ள வரையிலும்
தொடர்கிறது .கடைசியில் சந்தர்ப்ப வசமாக அவள் முதியோர் இல்லம் போகநேர்ந்தாலும் தன் மக்களை வெறுப்பதில்லை ஆனால்வாழ்த்துகிறாள்,அந்தப்புண்ணியவதியை நினைக்க ஒரு தினம் வேண்டாமா?நல்லவேளையாக் அன்னா ஜார்விஸ் என்பவர் இதை ஆரம்பித்துவைத்தார் அவரை மறக்கவே முடியாது எது இருந்தாலும் வெளி நாடுகளிலிருந்துவந்தால் அதற்கு தனி மவுசுதான் என்று இந்தியர்களின் எண்ணம் இது போல் தான்காதலர்தினமும் வந்ததுஆனால் அது கொடிக்கட்டிப் பறப்பதுப்போல் அன்னைதினம்இல்லை அது சிகரத்தைத் தொட்டுவிட்டது இந்த அன்னையின் தினம் அல்லவோசிகரத்தைத் தொடவேண்டும் ?தாய்க்கு என்ற ஒரு நாளை ஏற்படுத்தியஅன்னாஜார்விஸ் இதை உலகம் முழுவதும் மே மாதம் இரண்டாவதாக வரும் ஞாயிறுஎன்றுநிர்ணயித்து ஒப்புதலையும் பெற்றார் இந்த நாளில் அன்னைக்குத்தகுந்த மரியாதை அளித்து பரிசுகளும் கொடுத்து அன்று முழுவதும் அவர்கள்மகிழ்ச்சிகாக பாடு படவேண்டும் என்றும் சொன்னார் வெளி நாடுகளில் பதினாறுவயது முடிந்தவுடனேயேமகன் மகள் தனித்து வாழ்த்தொடங்கி விடுகின்றனர் ஆகையால்அன்னைக்கு என்று ஒரு தினம் அவர்களுக்கு மிகவும் தேவை ,ஆண்களே ! வருத்தப்படாதீர்கள் அப்பாதினமும் உண்டு ஆனாலும் அந்த அப்பாவைத்தந்ததும் ஒரு அன்னை தானே நேபாலில் இந்த அன்னை தினம் பல்லாண்டுகளுக்கு முன்பாகவேஇருந்ததாம் மாதா தீர்த்த ஔன்சி என்ற பெயராம் , இது வைகாசிஅமாவாசையன்று வருகிறது.மாதா என்றால் அன்னை தீர்த்த என்றால் தீர்த்தயாத்திரை அதாவது நேபாலின் பள்ளத்தாக்கில் புனித நீர் ஓடும் இடத்தில் இந்தயாத்திரை இந்த இடம் வரை நடந்தே வந்து அன்னையை வழிபடுகிறாகள்,பின்வீட்டில் இருக்கும் அன்னைக்க்குப் பரிசுகள் வழங்குகிறார்கள்,ஆசியும்பெறுகிறார்கள்.இதற்கு ஒரு புராணக்கதையும் உண்டு ,கண்ணன தேவகியைப்பிரிந்து பின் ஒருநாள் அவளைத்தேடி வருகிறான் தேவகியைப்பிரிந்த கண்ணனுக்கு பலவிதமான ஆபத்துக்கள் வந்தன,அன்னையைத்தேடித்தேடி பின் அவளை காட்மாண்டு பள்ளத்தாக்கில் ஒரு புனிதஆற்றில் காணுகிறான் தேவகி அன்னை ஸ்னானம் செய்துக்கொண்டிருக்கிறாள் பின்அன்னை கண்ணனை மிகுந்தப்பாசத்துடன் கட்டி அணைக்கிறாள், பின்இந்த இடத்தில் குளித்து அன்னையை நினைப்பவர்களுக்குஎன் பரிபூரண ஆசிகள் உண்டு என்றாளாம்.ஆனால் பின் வந்த சந்ததிகள் அவ்வளவாக இதைச் செய்வதில்லைஎன ஒரு நேபாலி குர்க்கா வருத்தப்பட்டுக்கொண்டான் ,\அன்னையைப்போல் ஒரு தெய்வம் உண்டோ ,,,,என்ற பாடலும்அம்மாவென்று அழைத்தாலே ,,,,,என்ற பாடலும் மனதில்ஞாபகம் வர நானும் மேல் லோகத்தில் இருக்கும் என் அன்னையை நினைத்து வணங்குகிறேன்

புத்தம் சரணம் கச்சாமி

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

புத்த பூர்ணிமா ,இந்த புத்தர் என்ற சித்தார்த்தர் பிறந்ததும் விசாகபௌர்ணமி

ஒளிப்பெற்றது விசாக பௌர்ணமி

மோக்ஷநிலை அடைந்ததும் விசாகபௌர்ணமி ,

மனதில் எழுந்தது வில்லுப்பாட்டுக்கேற்ற ஒரு கவிதை

சுத்தோதனின் உத்தம புத்திரன,

அருமை மகன் , அவன் சித்தார்த்தன் ,

கண்ணின் இமைப்போல் காக்கப்பட்டான்

உலகம் தெரியாது வளர்க்கப்பட்டான்

ஜோசியர் சொன்னதில் தந்தைக்குக்குழப்பம்''

பெரிய அரசனாவான் அல்லது யோகியாவான் ''

அரசகுமாரன் ஆக்கும் முயற்சி

கொடுக்கப்பட்டது பல பயிற்சி

தந்தையின் அதிக பராமரிப்பு

தாயின் அதிக ஆதரிப்பு ,கவசமான பெற்றோர்கள்

சூழ்ந்து காக்கும் ரக்ஷகர்கள்

அரண்மணைக்குள் பல வித்தைகள்

விதைக்கப்பட்டன பல கலைகள்

மனம் நிறையவில்லை

,எதிலும் சுவையில்லை

மனதில் தெளிவில்லை

ராஜபோகத்தில் ஈர்ப்புமில்லை

அவனுக்குத் தேவை ஒரு மாற்றம்

அதுவே மாப்பிள்ளைத் தோற்றம்

வந்தாள் கிளிப்போல் ஒரு கன்னி

''யசோதரா'' அவனையே எண்ணி,

ஒரு மகனையும் அளித்தாள்

ராஹுல் என்ற பெயரும் கொடுத்தாள்

ஒரு நாள்,

,அந்த நாள்

யசோதராவிற்கு சோதனை நாள்

உலகத்திற்கு நல்ல நாள்

வெளி வந்தான் சித்தார்த்தன்

தேரிலே பவனி வந்தான்

தேரோட்டியும் உதவினான்

அரண்மணை வெளியே வந்தான்

வாழ்க்கையில் அதுவே திருப்புமுனை

கௌதமபுத்தர் ஆன அரிய சுனை

கண்டான் அங்கு ஒரு தொண்டு கிழவன்

கூனல் முதுகு ,கையில் தடி காலில் நடுக்கம்

மனம் பதைபதைத்தான்சித்தார்த்தன்

இதுவா வாழ்க்கை ?தொடர்ந்தபிரயாணம்

கண்டான் அங்கு ஒரு நோயாளி
உடல் ஆடஉள்ளம் தாக்க

கண்கள் சொருக

மரமாக சாய

ஆ இது என்ன ?இப்ப்டியும் ஒரு பிறப்பா ?

இதுவா வாழ்க்கை ?

மேலும் தொடர்ந்தான்

வந்தது ஒரு சவம்

எங்கும் நிரம்பிய சோகம்

சிவமாய் இருந்த உடல்

இன்று ஏன் சவமானது ?ஒரே குழப்பம் !

மனதிலே கேள்விக்குறி1

விரகித்தியடைந்த மனம்கேட்டது ஒரு வினா

இதுவா வாழ்க்கை?வேண்டாம் வேண்டாம்

ஆடம்பரம் வேண்டாம்

ராஜ போகம் வேண்டாம்

வேண்டும் நிம்மதி

வேண்டும் அமைதி

வேண்டும் ஒரு தேடல்

பிறப்பின் காரணம் தேடல்

படைத்தவனைத்தேடல்

மனம் தத்தளித்தது

வீடு கசந்தது

நல்லிரவு

.மனைவி யசோதராமீது ஒருபார்வை

பிஞ்சு பாலகன் மீது ஒரு பார்வை

வைராக்கியம் புகுந்தது

எல்லாம் உதறினான்

உள்ளோளி தேடினான்

திரும்பிப்பாராமல்வேகமாய் நடைத் தொடர்ந்தது

தேடலும் தொடர்ந்தது

''கயாவில் சென்று நின்றது

தியானத்தில் நிலைத்தது

நீண்ட தியானம்

அரச மரத்தின் கீழ்தன்னை மறந்த நிலை

திடீரென்று ஒரு ஒளி

அவர் அனுபவித்த பரமானந்தநிலை

உள்ளே ஒளி தெரிந்தது

ஞானோதயம் பிறந்தது

''கௌதமபுத்தர் '' ஆனார்

எட்டடி பாதைகள்."பிறப்பு

புத்தமதத்தின் சிறப்பு

ஆயிரம் பிறையும் கண்டார்

''ஆசியாவின் ஒளி''யும் ஆனார்

வீடும் வாஸ்துவும்

வீடு என்பது சுவர்க்கமாக இருக்க வேண்டும்,அங்கு அமைதி நிலவுதல் மிக அவசியம் ,சிலர்
குடிசை வீட்டிலும் கூழோ கஞ்சியோ குடித்தாலும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் பின் அவர்களே பங்களா வாங்கும் நிலைக்கும் உயர்ந்து விடுகிறார்கள் சிலர் பெரிய வீட்டில் இருந்தாலும் மனக் கஷ்டம் வியாதியுடன் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக கழிக்கிறார்கள் ஒவ்வொருவரும் புது வீடு போகும் போது தானும் தங்கள் குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் போகிறார்கள் ஆனால் சிலருக்கு எண்ணம் பலிக்கிறது மற்றவர்களுக்கு ஏமாற்றம் தான் ,,,
இது ஏன் நட்க்கிறது ,வாஸ்து என்ற மனக்கலை சரியாக அமையாததால் தான் ,,
சந்தோஷம் குறையாமலும் சகல வளமும் பெற வழிக்கட்டியாக இருப்பது இந்தக்கலைதான் ,
கடவுள் நம்பிக்கையுடன் முதலில் ஒரு பிரார்த்தனைச்செய்து பின் மனை வாங்க
நன்மைதான் முதலில் விகனமிலாமல் இருக்க முதல் கடவுள் கணபதியைத் தொழ பின்
பூமிக்காரன் செவ்வாய்க்கு அதிபதி ஸ்ரீ முருகனையும் வேண்டிக்கொண்டு வீடு வாங்கும் வேடையில் இறங்க வேண்டும் எல்லாவற்றுக்கும் முதலாக அவரவர் குலதெய்வ வழிபாடும்
மிக முக்கியம் ,இப்போது வருவோம் மனை வாங்கும் கட்டத்திற்கு,,,,,,,,,மனை இல்லாமல்
வீடு கட்ட முடியாது அது குடிசையாக இருந்தாலும் சரி கோபுரமாக இருந்தாலும் சரி ,
மனை சாஸ்திரம் சரியாக அமைந்து விட்டால் அங்குக் கட்டும் வீடும் அதில் வசிக்கப் போகும் மனிதர்களும் ஒரு குறைவுமில்லாமல் பிரமாதமாக இருப்பார்கள்
சாஸ்திரத்திற்கு முரணாக அமைந்து விட்டால் எத்தனைக் கோடி சிலவு செய்து கட்டியும்
தொல்லகளும் துன்பங்களும் தான் பார்க்க முடியும் எந்த மனை வாங்கினாலும் அது சதுரமாக இருப்பது மிக அவசியம் சதுரத்தில் ஒரு பக்கம் கொஞ்சம் கோணலோ அல்லது நீண்டோ காணப்பட்டால் அதைச் சதுரமாக்கியப் பின் தான் கட்ட வேண்டும்
மனை கிழக்கு மேற்கு தெற்கு வடக்குஎன்று நாலு திசையில் அமையலாம் இருப்பதற்குள் முதல் இடம் பெறுவது கிழக்கு நோக்கிய மனை , அடுத்து வருவது
வடக்கு நோக்கியமனை மறற இரண்டும் சுமார் என்று தான் சொல்ல வேண்டும்
ஆனால் இந்தக்கிழக்கு நோக்கிய மனையும் நல்ல மனை என்ற விதிக்குள் வந்து தோஷமில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்

கிழக்கு திசை நோக்கிய மனை சிறந்த செல்வாக்கும் புகழும் அளிக்கும் கல்விகளில்
தேர்ச்சி நல்ல நண்பர்கள் நல்ல எண்ணங்கள் என்று மிகவும் சுபீட்சத்தைக் கொடுக்கும்,
ஆனால் இந்த கிழக்கு மனையானது தோஷமில்லாமல் இருக்க வேண்டும் அதாவது
கிழக்கு நோக்கிய மனையில் கிழக்கு பகுதி குறுகியோ அல்லது துண்டித்தோ இருக்கக்கூடாது ,தவிர அந்த மனை முன்பு ஒரு மயான பூமியாகவோ இருந்தாலும்
பிரச்சனை தான் அஸ்திவாரம் போடும் போது பார்க்கமால் எலும்புத்துண்டு அல்லது
மணடி ஓடு போல் தங்கினாலும் தோஷம் உண்டு என்று சொல்கிறார்கள்

வடக்கு மனை வியாபாரிகளுக்கு மிகவும் நல்லது ந்ல்ல வியாபாரம் நடக்கும் அதிக
லாபம் வரும் வசதியான் வாழ்க்கை ஆடம்பர பொருட்களின் சேர்க்கை நல்ல திருமண
வாழ்க்கை மக்கள் செல்வங்கள் கல்வி என்று பல ந்ற் பலன்கள் உண்டாகின்றன.
எப்போதும் பணம் இரட்டிப்பு ஆக்கும் சிந்தனையே மிகும் அதனால் இது பெரிய
வியாபாரிகளுக்கு ஏற்ற திசை சிலவுகள் வந்தாலும் அது சுபச்சிலவுகளாக இருக்கும்
வடக்கு திசையில் தான் குபேரன் இருக்கிறான் என்பார்கள் இதிலும் தோஷமில்லாமல்
பார்த்து வாங்க வேண்டும் வடகிழக்கு குறுகி இருக்கக் கூடாது அதே போல் வட மேற்கு நீண்டு இருத்தல் ஆகாது ,,,,,,,,,,,,,,,

விதியின் வலை

.வானம் இருண்டது .
,மேகம் திரண்டது ,
இடியுடன் மின்னல்,
மழையுடன் புயல்,
நூல் போல் இழை,
சோ என்ற மழை.
ஒரு அறையில் நான் தனிமையில்,
,பிரித்த ஒரு புத்தகம் என் கையில்,
திடீரென்றுஒரு பூச்சி என் தோளில்,
படபடப்பு அதன் இறக்கையில்,
மழையில் நனைந்த நேரம்,
அதன் உடலும் ஈரம்,
என் கை அதைத் தட்டியது.
சுவற்றின் மூலையில் விழுந்தது .
அதன் பக்கம் என் கவனம்,
பூச்சி சாதித்தது மௌனம் ..
ஒன்றிக்கவனித்தேன் அதனை,
அழகு பட்டாம்பூச்சிதனை,
சிருஷ்டியின் கைவண்ணம் என்ன?
அதில் கலந்த வண்ணம் தான் என்ன?
வானவில் போன்ற வண்ணங்கள்!
அதில் தீட்டியக்கோலங்கள்.
அது பறக்காதா? என்ற ஏக்கம் .
கூடவே வந்தது துக்கம்.
பிரார்த்தனையும் சேர்ந்தது.
திடீரென அது பறந்தது .
ஒரே வியப்பு,
ஒரே மலைப்பு.
சுற்றிச்சுற்றிப் பறநதது .
சுவற்றில் அது அமர்ந்தது .
.நீளவிளக்கின் பின் ஒரு வலை .
கண்டேன் முக்கோணத்தலை .
.நம் பல்லிதான் ,
அதன் யமன் தான்.
அதன் விதியை மாற்றினேன் .
கம்பால் சுவற்றைத் தட்டினேன் .
ஓடி ஒளிந்தது .
பூச்சியும் பறந்தது .
என் முகத்தில் வெற்றிப்புன்னகை .
விதியை வென்று சூடிய வாகை .
''டிக்'' என்ற ஒரு ஒலி கேட்டேன் .
கீழே விழுந்தப் பூச்சியும் கண்டேன் .
அதன் இறக்கைகள் என் மேல் ,
வண்ணக்கலவைகள் என் மேல் ,
சுழலும் விசிறி அதன் யமனானான் .
தன் கடமைச்செய்த தருமனானான்
வண்ணாத்திப்பூச்சியின் உடல்சுவரோரம் கிடைந்தது
விதி வென்று அங்கு சிரித்தது
அன்புடன் விசாலம்

இரு படகுகள்

நம்பிக்கை என்ற கடலைக்கண்டேன்,

வாழ்க்கை என்ற படகைக்கண்டேன் ,

மனம் என்ற பாய்மரம் கண்டேன்

,கடவுள் அன்பு காற்றாய்க்கண்டேன்

கருணைத் தென்றல் அங்கு வீசக்கண்டேன்

மனம் அங்கு விரியக்கண்டேன்

,அன்பெனும் துடுப்பைச்செலுத்தக்கண்டேன்

,தெய்வபலம் அங்கு புகுவதைக்கண்டேன்,

சோதனையில் சாதனை பெருகக்கண்டேன்

எதிர்நீச்சலில் மன உறுதி வலுக்கக்கண்டேன்

வாழ்க்கைக்கடலின் இன்பம் உணரக்கண்டேன்

இயற்கையில் தெய்வதரிசனம் அங்கு கண்டேன்

இரண்டாவது படகு ,,,,,,

அவநம்பிக்கை என்ற கடலைக்கண்டேன்

வாழ்க்கைப்படகு அங்கு மிதக்கக் கண்டேன்

மனம் என்ற பாய்மரம் இறுகக்கண்டேன்

வெறுப்பு என்ற துடுப்பு செலுத்தக்கண்டேன்

பேராசை,பொறாமை அலைகள் வீசக்கண்டேன்

குறுகிய மனத்தில் புயல் வீசக்கண்டேன்

சூராவளி ஒன்று அங்கு அடிக்கக்கண்டேன்

,வாழ்க்கைப்படகு தத்தளிப்பதைக்கண்டேன்

மன உறுதி அங்கு துவளக் கண்டேன்

மனச்சாட்சி அங்கு மடியக்கண்டேன்

இறைச்சக்தி அங்கு மறையக்கண்டேன்

ஒளி அடங்கி மன இருளில் ஒடுங்கக் கண்டேன்

வாழ்க்கைப்படகில் அங்கு துன்பத்தைக்கண்டேன்

கற்பகத்தரு

நிலவாக உன்னை நினைத்தாலோ,
காலை காணாமல் போய்விடுவாய்
மலராக உன்னை நினைத்தாலோ
ஒரு நாளில் நீ உதிர்ந்துவிடுவாய்,
வானவில்லாக உன்னை நினைத்தாலோ
கணநேரத்தில் நீ மறைந்து விடுவாய் ,
பனித்துளியாக உன்னை நினைத்தாலோ
வெயில் பட மறைந்து விடுவாய் ,
அலைகளாக உன்னை நினைத்தாலோ
காலை முத்தமிட்டு ஓடி விடுவாய் ,
மலையாக உன்னை நினத்தாலோ
கல்மனம் போல் நீ மாறிவிடுவாய்.
நீராக உன்னை நினைத்தாலோ
பனிக்கட்டிப்போல் உறைந்து விடுவாய் ,
உன்னை நான் ஒன்றும் நினைக்க்வில்லை
எனக்கு நீ நீயாகவே இரு
என்றுபோல் நீ ஒரு கற்பகத் தரு

அன்புடன் விசாலம்