Saturday, January 31, 2009

சூரியனுக்கு கோயில்கள்

எல்லா அன்பர்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள் பொங்கும்மங்களம் எங்கும் தங்குக,,சூரியன் உத்தராயணத்தில் பிரவேசிக்கும் நாள்தான் இந்தப் பொங்கல் திருநாள் இதை மகா சங்கராந்தி என்று வடக்கில் சொல்வார்கள் சூரிய பகவான் நமக்குக் கர்மயோகத்தை விளக்குகிறார், நம் மனதிலுள்ள இருளை நீக்கி ஞானம் என்ற ஒளியைப்பெற்றுக் கொள் என்று சொல்லாமல் தன் மூலமாகத் தெரியப் படுத்துகிறார் அந்தச் சூரியச் சக்தி{solar energy}யினால் தான் உலகமே இயங்குகிறது ஒரு நாள் சூரியன் இல்லையென்றால் உலகமே இருள் தான் . மழை வருவதும் செடி கொடிகள் வளருவதும் நமக்கு உணவு கிடைப்பதும் இந்த ஆதவனால்தான் சூரியன் என்றாலே அப்பழுக்கிலாதத் தனமை ஒழுங்கு {perfection} ஒரே சீரான ஓட்டம் பிரதி பலன் பார்க்காமல் செய்யும் கடமை எல்லோரும் சமம் என்ற நோக்கு தன் ஒளியை எல்லோருக்கும்தந்து தான் இன்பமுறல் என்றெல்லாம் நமக்குப்பார்க்க முடிகிறது "தத்வ மஸி" என்றத் தத்துவம் விளங்குகிறது இந்த நன்நாளில் ஆதித்ய ஹிருதயமும் காயத்திரி மந்திரமும் ஜபித்தால் அதனுடைய சக்தியே தனிதான் இத்தனைச்சக்தி தரும் சூரியனுக்கு மிகவும் குறைவாகத்தான்கோயில்கள் இருக்கின்றன ,எனக்குத் தெரிந்து குமபகோணம் அருகில் இருக்கும் சூரியநாராயணர் கோயில் ஒரிஸ்ஸாவில் இருக்கும் கொனாரக் பின் காஞ்சியில்இருக்கும் இஷ்ட சித்தீசம் என்னும் ஒரு கோயில். என் நினைவில் வருகின்றன.இஷ்டசித்தீசம் கோயிலில் வடகிழக்கில் துர்க்கைஅமர்ந்திருக்கிறாள் தென் கிழக்கில் சூரியன் விளங்க நடுவில் இறைவன் கச்சாபேசன் அருள் புரிகிறார் ,சூரியனுக்குரிய நாள் ஞாயிறு ,,இத்தினத்தில் சூரிய வழிபாடு பூசை நட்க்க்கிறது . மயூரசன்மன் என்ற மன்னனுக்கு கண்பார்வை இல்லாமல் பின் சூரியனை வழிப்பட்டுசூரிய சதகம் என்னும் நூலை இயற்றினானாம். தீவிரமாக் அந்த வழிப்பாட்டில் மனம்ஈடுபட அவன் கண்ணொளி பெற்றானாம் இங்குக் கார்த்திகை மாதம் ஞாயிறு மிகச்சிறப்பு வாய்ந்தவை.இந்தத் தினத்தில் பக்தர்கள் இஷ்ட சித்தி தீர்த்தத்தில்
நீராடி பின் ஒரு புது மண் சட்டியில் மாவிளக்கு மாவு போல் வைத்து பின் அதன் நடுவில் அகல் தீபம் ஏற்றி வைத்து பின் அதற்கு நைவேத்தியப்பொருளகள் சமர்ப்பித்து பின் தலையில் சுமந்துக்கொண்டு கோயிலை வலம் வருவார்களாம்,இதனால் தலைவலி காதுவலி கண்ணில் ஏற்படும் கோளாறுகள்எல்லாம் போய்விடும். இந்த நேர்த்திக்கடனை கர்த்திகை ஞாயிறு செய்ய இயலவில்லை என்றால் திருவாதிரை அன்று செய்ய வேண்டும்.சூரிய நாராயணர் கோயில் ஒரு பரிகாரக்ஷேத்ரமாக விளங்குகிறது ஒருவர் ஜாதகத்தில் சூரியன் நீச்சனாக இருந்தாலும் அல்லது சத்ரு ஸ்தானத்தில் இருந்தாலும் இங்கு வந்து பரிகாரம் செய்துக்கொள்கின்றனர் இந்த ஒரு இடத்தில் தான் அடுத்து வருவது சூரியநாராயணர் கோயில் இது கும்பகோணம் அருகில் உள்ளது,வெள்ளெருக்குச் செடிகள்பல இங்கு இருக்கின்றன , இந்தக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் சூரியபகவான் நடுநாயகமாக தன் இருமனைவிகளுடன் அமர்ந்து அருள் பாலிக்கிறார் . அவரைச்சுற்றி மற்ற கோளகளின் நாயகர்கள் தங்கள் மனைவியுடன் அமர்ந்து அருள்புரிகின்றனர் எல்லோருக்கும் தனித்தனி சிறு கோயில் உண்டு ,இது போன்றஅமைப்பு உள்ள கோயில் இது மட்டுமே ,,,,,அடுத்து வரும் சூரியன் கோயில் ஒரிஸ்ஸாவில் இருக்கும் கொனாரக் இது கங்கைநதி தீரத்தில் அமைந்துள்ளது இந்தக்கோயில் பலதடவைகள்படையெடுப்பால் சூரையாடப்பட்டு அதன் பல பாகங்கள் சிதிலடைந்துவீணாகிப்போய்விட்டது தவிர இயற்கையின்சீற்றத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் பாழ்பட்டு விட்டதுஎஞ்சி இருக்கும் கோயிலைப் பார்க்க பல வெளி நாட்டவர்கள் வருகின்றனர்,இதன் கட்டடக் கலை மிகச்சிறப்பு வாய்ந்தது இதன் கலை நுட்பத்தைச் சொல்ல இயலாது . அங்கு இருக்கும் சிற்பங்களும் செதுக்கின விதமும் மிகவும் வியப்படைய வைக்கின்றன.முதலாம் நரசிம்மதேவன் 13ம் நூற்றாண்டில் மிகவும்வித்தியாசமான முறையில் இதைக் கட்டினான். கற்கள் நடுவேஇரும்புத்துண்டுகளின் இணைப்புக் கொடுத்துக்கட்டப்பட்டுள்ளது சூரியன் ஏழு குதிரைகள் கொண்ட தேரில் பவனி வருகிறான்அந்தத் தேரின் சக்கிரங்கள் 24அந்தச்சக்கிரங்களின் வேலைப்பாடு மிகவும் மனதைக்கவர்கிறது .பிற்காலத்தில் சூரியனின்சிலை அகற்றப்பட்டு
தற்போது பூரியில் இருப்பதாகச் சொல்கிறார்கள் ,இந்த கோயிலில் விளங்குகளின் சிலைகள் பறவைகளின் சிலைகள் அதைத்தவிர தேவ்தேவிகள் அபசரஸ் போன்ற அழகிகள் எல்லாம் மிக நுணுக்கமாகச்செதுக்கப்பட்டிருக்கின்றன , குழந்தைகளும் இந்த விலங்குகள் பறவைகளால் ஈர்க்கப்படுகின்றனர் ,இளைஞர்களுக்கு காமசூத்ராவின்அடிப்படையில் பல சிற்பங்கள் அங்கே காணப்படுகின்றன .வயதானவர்களுக்கும் தேவ தேவிகள்அருள் புரிகின்றனர் ,கோயில் மூன்று பிரிவுகளாக உள்ளது சூரியன் ஒவ்வொரு நாலு மாதத்தில் ஒவ்வொருபிரிவின் வழியாக தன் ஒளியைத் சூரியனார் மீது வீச வைக்கிறான்,இந்தக்கோயிலை யுனெஸ்கோ உலகப்பாரமபரியச்சின்னமாகப் பாதுகாத்து வருகிறதுசூரியனைப்பூஜிப்பது சௌரமதம் என்கிறார்கள்..பொங்கல் என்பதே விவசாயிகள் புது நெற்கதிரை எடுத்துஅதில் பொங்கல் படைத்து இறைவனுக்கு நன்றி சொல்லும் நாள் இங்கு இறைவன்சூரிய பகவான் தான்அவனில்லாது வெளிச்சம் இல்லை மழை இல்லைமழை இல்லையென்றால் பயிறும் இல்லை ,,,.ஏழைத் தன் வியர்வைச் சிந்தி ஒவ்வொருத் துளிகளையும் தன் பயிறுக்குள் அர்ப்பணித்துநமக்கு உண்வாகக் கொடுக்கிறார்கள் அவர்கள் அந்த விளைச்ச்லுக்காக கடவுளுக்குமறக்காமல் தங்கள் முதல் சாகுபடிக் கதிரை அர்ப்பணிக்கிறார்கள் .நாம் இன்று நமக்குஉண்வை வழங்கும் அவர்களை நினைத்துக் கொண்டு அவர்கள் பயன் படும்படிஎதாவது நல்லக் காரியம் செய்து ஒரு புது விதமாகக் கொண்டாடலாமே

என் தந்தையின் டைரியிலிருந்து ,,,,,,, குடியரசு தினம் ஜனவரி 26 -- 1950 என் தந்தையின் டைரியில் முதல் குடியரசு தினம் கொண்டாடிய குறிப்பு இருந்தது தில்லியில் நடந்த நிகழ்வும் சென்னையில் நடந்த நிகழ்வும் இருந்தன , சென்னையில் நடந்ததை எழுதுகிறேன். குடியரசு தினத்தை முன்னிட்டு 8000 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டனர். மாலை ஐந்து மணிக்கு சென்னை கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் விழா நடக்க இருந்தது பகல் 2 மணியிலிருந்தே கூட்டம் சேரஆரம்பித்து விட்டது சுமார் இரண்டு இலட்சம் இருக்கலாம்.திடீரென்று நிசப்தம் ,,,, கோச்சு வண்டியின் சப்தம் ஆம் கவர்னர் தம்பதி கோச்சில் ஸ்டேடியத்தை நோக்கி வந்துகொண்டிருந்தனர் நெருக்கமாக இரு குதிரைகள் ராஜ நடைப் போட்டு அவரது கோச்சுடன் வந்துக்கொண்டிருந்தன . அதில் ஒருவர் போலீஸ் உதவி கமிஷனர் திருஆர் எம் மகாதேவன்மற்றொருவர் சார்ஜெண்ட் மேஜர் லூயிஸ் ,,,,கவர்னரின் வரவேற்பு மிகப்பிரமாதமாக இருந்தது சென்னையின் முதன் மந்திரி பி எல் குமாரசாமி ராஜா ஓடி வந்து வரவேற்றார்,போலீஸ் படையும் மரியாதைச் செலுத்தினர் அங்கு ஒரு மேடையில் தேசியக்கொடிதயாராக வைக்கப்பட்டிருந்தது கவர்னர்அங்குச் சென்று தேசியக்கொடியைப் பறக்கச் செய்தார் பின் அதற்கு மரியாதை அளித்தார் உடனே இராணுவப்படைகளும் மரியாதைச்செலுத்தின ,மாலையிலிருந்து இரவு வரை மெரினா கடற்கரையில் வாணவேடிக்கை கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக இருந்தது வனொலியில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது காலையில் வந்தேமாதரம் பாடல் டீஅர் விஸ்வநாத சாஸ்திரி தொகுத்தது பின்மதுரை சோமசுந்தரம் கச்சேரி ,பின் டில்லியில் நடந்த குடியரசு விழாவின் நேர் முக வர்ணனை ,மாலை திருவெண்காடு பி சுப்பிரமண்யப்பிள்ளை நாதஸ்வரம் பின்குமாரசுவாமி ராஜாவின் குடியாட்சி சிறப்புறை ,,என் எஸ் கிருஷ்ணன ,டிஏ மதுரம் அவர்களின் "விந்தை மனிதன் "இரவு திருமதி எம்.எஸ் சுப்பலட்சுமி அவர்களின் கச்சேரி ,,,,,இத்துடன் வானொலி நிகழ்ச்சியும் முடிவடைந்தது ,,,,,,,,ஆஹா பழையகால என் தந்தை நினவுகளை நானும் மனதில்கொண்டுவந்து பார்க்கிறேன் இப்போது டிவியில் பல சானலகள்
அதில் கச்சேரி என்பது மிக மிக குறைவு ,பல சினிமா கதாநாயகர்கள் நாயகிகள்வந்து தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்கின்றனர் யாராவது தேசத்திற்கு உழைத்து எங்கேயோ ஒரு சின்னவீட்டில் வாழ்ந்து வரும் சுதந்திர தியாகிகளைக் கண்டு பேட்டி எடுத்து டிவி முன் அழைத்து கௌரவிக்கலாமே ,இதே போல் அந்தக்காலத்தில் இருந்த கவிஞர் எழுத்தாளர் ,தியாகிகள் வீரர்கள் போன்றவர்களை அழைத்துஅவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளச்சொல்லாமே என் இனிய குடியரசு வாழ்த்துகள் அன்புடன் விசாலம்

மூன்று நபர்கள்

ஒரு கோடீஸ்வரர் இருந்தார் .அவர் இரக்க சுபாவமுள்ளவராகவும்இருந்தார் ஆகையால் அவர் அடிக்கடி தானமும் செய்து வந்தார் ஒரு நாள் அவர்தானம் செய்ய ஆரம்பித்ததில் ஒரு ஏழை அவரைஅணுகினான் ," ஐயா எனக்கு ஐந்து ரூபாய் வேண்டும் .தாருங்கள் "என்றான் அதற்கு அவர் "என்ன இத்தனை அதிகாரத்துடன் கேட்கிறாய் .நீ ஏழ்மை நிலையில் இருந்தாலும் அகம்பாவம் கொண்டிருக்கிறாய் .நான் உனக்கு இரண்டுரூபாய் தருகிறேன் .எடுத்துக்கொண்டு போய் வா " என்றார் அவன் முணுமுணுத்தபடி அதைவாங்கிக்கொண்டு நகர்ந்தான். இரண்டாவதாக இன்னொரு ஏழை வந்தான் , தயங்கியபடியே நின்றான் பின் "ஐயாரொம்ப பசி ஐயா நாலு நாட்கள் ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்கவில்லை எனக்கு பெரிய மனது செய்து உதவுங்கள் என்றுகைகூப்பியபடி வேண்டினான்வ்கோடீஸ்வரரும் அவனது பணிவினால் மனம் மகிழ்ந்து " இந்தா பத்து ரூபாய் சந்தோஷமாக எடுத்துக்கொள் திருப்தியாக சாப்பிடு "என்றார் அவனும் மகிழ்ச்சியுடன் அதைப்பெற்றுக்கொண்டுபோய்ச்சேர்ந்தான்மூன்றாவதாக மற்றொரு ஏழை வந்தான் .அவன் அங்கு வந்ததும் வணங்கினான் " ஐயா வணக்கம் உங்கள் நல்ல குணத்தைப் பற்றிகேள்விபட்டிருக்கிறேன் ஆகையால் இந்த நல்ல மனிதரைத்தரிசிக்க வந்தேன் தானத்தில் சிறந்தது அன்னதானம் அதை நீங்கள்மிகச்சிறந்த முறையில் செய்து வருகிறீர்கள் ஏழைகளுக்கு நீங்கள் தான் தெய்வம் "என்றான் இத்தனைப் பேசியும் தனக்கு பசி என்றோ ஏதாவது கொடு என்றோ கேட்கவில்லை ,கோடீஸ்வரர் அவனது பணிவான இனிய பேச்சினால் கவரப்பட்டார் பின்"ஐயா வெகுதூரம் நடந்து மிகக் களைப்புடன் வந்திருப்பீர்கள்,முதலில் உணவுசாப்பிடுங்கள் பின் பேசலாம் "என்றார் ,அவனும் உணவு உட்கொண்டான் பின் ஐயா மிக்க நன்றி" என்றான்"இப்பொழுது சொல்லுங்கள் நான் மேலும் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று ""ஐயா என் பசிக்கு நல்ல உணவு அளித்தீர்கள்,வேறு என்ன வேண்டும் ?என் மீதுகாட்டிய அன்பை என்னவென்று சொல்வது? அந்த இறைவன் எல்லா நலன்களையும்கொடுப்பாராக"இதைச்சொல்லும் போதே மனம் நெகிழ்ந்து போனான் அவன் ,கோடீஸ்வரருக்க்கு அவன் மேல் இருந்த மதிப்பு பன்மடங்கானதுஅவனைத் தன்னுடனே இருக்க அன்பு வேண்டுகோள் விடுத்தார்அவருக்கு உதவி செய்யவும் ஒரு வேலைப் போட்டுக்கொடுத்தார்அவனுக்கென்று ஒரு சின்ன வீடும் கட்டிக்கொடுத்தார் முழு ஆதரவும் அளித்தார்இந்தக் கதையில் நாம் கோடீஸ்வரரைக் கடவுள் என்று எடுத்துக்கொள்ளலாம்மூன்று ஏழைகள் மூன்று வித பக்தர்கள்கடவுளிடம் என்ன கேடகவேண்டும் என்றும் எப்படிக்கேடக வேண்டும் என்றுயோசிக்காதவர்கள் முதல் வகைகடவுள் கொடுத்தது போதும் என்று திருப்தி அடைந்து தங்களுக்குதேவையானதை அவர் அறிவார் என்று உணரும் பகதர்கள் இரண்டாவது வகைஇறைவா எல்லாம் உன்னிடம் சமர்ப்பணம் எல்லாம் நீயேஉன் அருளால் தான் எங்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஒவ்வொரு மூச்சிலும் அந்த இறைவனையே நினைக்கும் பக்தர்கள் மூன்றாவது வகை ,,,,அவனன்றி ஒரு அணுவும் அசையாது

.அன்புடன் விசாலம்

Saturday, January 24, 2009

காத்தருளவாய் மாருதியே

அருள் புரிவாய் மாருதியே

அருள் புரிவாய் மாருதியே

அல்லல் களைவாய் மாருதியே

வீரம் ஞானம் வெற்றி தந்து

மன உறுதி வழங்கும் மாருதியே

அசோக வனத்தில் அன்னையைக் கண்டாய்

அவள் சோக மனதில் ஆறுதல் தந்தாய்

ஸ்ரீ ராமனுடைய தூதனும் ஆனாய்

,எண்ணியதை முடித்தும் வைத்தாய் மாருதியே

இராம நாமத்தில் மூழ்கிப்போனாய் ,

சீதைக்கு கணையாழியும் கொடுத்தாய்

வாயு வேகத்தில் சஞ்சீவி கொண்டு

இலக்குவன் உயிரைக்காத்து நின்றாய்

.அஞ்சனைக்குமாரன் மாருதியே

சிறிய திருவடி மாருதியே

சிரஞ்சீவி பட்டம் பெற்ற மாருதியே

பஞ்ச முகமான மாருதியே ,

ஈரேழு தலமும் புகழ்ந்து வணங்கும மாருதியே செங்கமலத்திருவின் திருவருள் பெற்ற மாருதியே

காமனை வென்றவனே!காலத்தை வென்றவனே

காத்தருள்வாய் , நின் தாள் பணிந்தேன் அனுமானே

அன்புடன் விசாலம்

தேசிய இளைஞர்கள் தினம்

ஜனவரி 12 ல் ஸ்வாமி விவேகானநதரின் பிறந்த நாள் ,இந்தத் தினம் தேசியஇளைஞர்களின் தினமாகக்கொண்டாடப்படுகிறது ஒரு இளைஞன் தேசப் பற்று ,வீரம் , ஒழுக்கம் மனிதநேயம் நற்பண்புகள் ,தளர்ந்து போகாத நெஞ்சம் ,இலட்சியத்தை நோக்கி வெற்றிப்பாதை வகுத்தல் ,மனோதைரியம் ,பெரியவர்கள் மேல் அன்பு மரியாதை முதலியவைகளைக் கொண்டிருந்தால் அந்தநாடும் முன்னேறும் என்கிறார் சுவாமி விவேகானந்தர் அவர் மேலும் அவர் சொல்வது"நம்பிக்கையே இறைவன் .....தன்னிடம் தானே நம்பிக்கை இழப்பது இறைவனிடம்நம்பிக்கை இழப்பதாகும் ""தூய்மையும் ஞானமும் நம்மிடமிருந்து வெளியேறும் போதுதான் சமயச்சண்டைகள் மனிதனிடம்ஆரம்பமாகின்றன""பெயர் புகழ் சொர்க்கம் என எதுவொன்றையும் கருதாமல் நன் முயற்சிகளில்ஈடுபடுவார்கள் எல்லாநாடுகளிலும் இருக்கிறார்கள் .தாம் வாழும் மக்களின் நடுவே பயன் கருதாமல்நறுமணத்தைப் பரப்பிக்கொண்டுஇருக்கும் மலர்களைப் போன்றவர்கள் இவர்கள்" அவர் வாழ்க்கையில் ஒரு அனுபவம் ஒரு முறை ஸ்வாமி விவேகானந்தர் ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்தார் அப்போது சில ஆங்கிலேயர்கள்ஏறினர் விவேகானந்தரின் உடை அவரது முண்டாசு போன்ற கோலத்தைப் பார்த்துசிரித்தனர் ஆங்கிலத்தில் கேலி செய்தனர் எல்லாம் இவரும்கேட்டுக்கொண்டிருந்தார் ,பின் ரயில்நிலைய அதிகாரி வந்தார்அவருடன் சுவாமி சரளமாக ஆங்கிலத்தில் பேசினார் ,பின் ஒரு ஸ்டேஷனின் ரயில் நின்றுவிட்டுக் கிளம்பியதும் அவர்கள் கேட்டனர்'நாங்கள் உங்களைப் பற்றி கேலியாகவும் கிண்டலாகவும் பேசினோமே!நீங்கள் ஏன் ஒன்ரும்கேட்கவில்லை? கோபமும் வரவில்லை?சண்டைக்கும் வரவில்லையே?"அதற்கு அவர் விடையளித்தார்"" நான் முட்டாள்களச் சந்திப்பது இது முதல் தடவையல்ல"அந்த மஹானுக்கு கரம் குவித்து வணங்குகிறேன் ,,அவரது பிறந்த திதி சப்தமிதிதியில் ஹஸ்த நட்சத்திரம்இந்த மாதம் 17ந்தேதி வருகிறது

தாய்க்கு நிகரேது ?

மரங்களில்லாத சாலையைக்கண்டேன்

,நாணயமில்லா வர்த்தகம் கண்டேன் ,

தன்நலமிக்க மக்களைக் கண்டேன்

,பண்பில்லாத கல்வியைக் கண்டேன் .

நேர்மையற்ற அரசியல் கண்டேன் .

குறுகிய மனத்துடன் கூட்டங்கள் கண்டேன்

.விரிந்த பார்வையில்லாத மதத்தினைக் கண்டேன்

ஒற்றுமையற்ற ஜன சமுதாயம் கண்டேன் ,.

அன்பில்லாத உறவினர்கள் கண்டேன்

உறவினரில்லா வீட்டைக்கண்டேன்

போலி சாமியார் வளர்வது கண்டேன் ,

இதயமில்லா விக்ஞானம் கண்டேன்

அர்த்தமற்ற கொச்சை பாடலகள் கண்டேன்

அனுபவமில்லாத உபதேசம் கண்டேன்

ஆடைக்குறைவின் பேஷன் கண்டேன்

.பிஞ்சிலே பழுக்கும் மழலைகள் கண்டேன்

தீவிரவாதம் வலுக்கக் கண்டேன்

பணத்திற்கு கொலையும் செய்யக் கண்டேன்

பாசம் ,அனபு குறையக் கண்டேன்

லஞ்சப்பேய் வளரக் கண்டேன்

முதியோர் இல்லத்தில் கூட்டம் கண்டேன்

.விவாகரத்தும் பெருகக் கண்டேன்

தேர்தலில் தில்லுமுல்லு நடக்கக் கண்டேன்

,எல்லாப்பொருளிலும் கலப்பைக்கண்டேன்

இத்த்னையும் கண்டேன் ,கண்டேன்

ஒன்று மட்டும் மாறாது இருக்கக் கண்டேன்.

அதுவே தாயின் உள்ளமெனெ

என் மனம் சொல்லக்கண்டேன்

அங்கு வற்றா பாசம் கண்டேன்

இதற்கு நிகரேது என புரிந்தும் கொண்டேன் .'

கலைவண்ணம் அங்குக்கண்டேன்

நான் ஒரு சமயம் மணவர்களைச் செஞ்சிக்கோட்டைக்கு அழைத்துப் போயிருந்தேன்.அங்கு ஒரு பெரிய மஹாவிஷ்ணு அழகாக ஒரு குன்றின் மீதுபள்ளிக்கொண்டிருக்கிறார் ,இந்தச்சிலையைப்போல் பெரிய சிலை வேறு எங்கும்கிடையாது என நினக்கிறேன் இது மஹாபலிபுரத்தில் உள்ள சிற்பக்கலையை ஒட்டிஅமைந்த ஒன்று செஞ்சிக்கோட்டைக்கு மூன்று மைல்களுக்கு அப்பால் இந்தப்பள்ளிக்கொண்ட பெருமாளைக் காணலாம் சிலையின் நீளம் இருபது அடி ,உயரம்ஒன்பது அடி சிங்கவரத்தில் அமைந்த இந்த ரங்க நாதனை வழிப்பட்டவன் நம் தேசிங்கு மன்னன். தெய்வீக அழகில் உருவ அமைப்பில் இதன் அழகு சொல்ல இயலாது திண்டிவ்னத்திலிருந்து திருவண்ணாமலைப்போகும் பாதையில்பிரசித்தப்பெற்றசெஞ்சிக்கோட்டையைக் காணலாம் அங்கு இருக்கும் ஒவ்வொரு தூணும் மிகவும் அழகாக சிற்பக்களஞ்சியமாக விளங்குகிறதுகோட்டை வாசலில் நம்மை வரவேற்பவன் ஒரு வீரன் அவன் பெரிய மீசையுடன்கம்பீரமாக கையில் கத்தியும் கேடயமுமாக நின்றுக்கொண்டிருக்கிறான், அதைத்தாண்டிப்போனால் இன்னொருஅதிசயத்தைக் காண்கிறோம் ஒரு சிறு குன்றில் ஆஞ்சநேயர்விஸ்வரூப காட்சி நமக்கு அளிக்கிறார். மிகச் சக்தியுள்ள ஆஞ்சநேயரைப்பார்க்கவும் நேர்த்திகடனைச் செலுத்தவும் மக்கள்வந்தவண்ணம் உள்ளனர் .மலைக்கோட்டைக்குள் நெற்களஞ்சியங்களைக் காண்கிறோம்.அத்துடன்கொத்தளங்களும் பெரிய கலயாணமண்டபங்களும் இருக்கின்றன ,இவைகள் பழைய மன்னர்களின்சாதனைகளுக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு , மதுரை வீரன் சிலையும்,,தாயும் சேயும் மகிழும் குரங்குகளின் சிலைகளும் மிக அற்புதமாகச்செதுக்கப்பட்டுள்ளன கோட்டைக்குள் ஒரு பாழடைந்தவெங்கடநாரயணரின் கோயிலும் காண்ப்படுகிறது பகைவர் வாரமல்காத்துக்கொள்ள பெரிய அகழியும் கட்டப்பட்டிருந்தன .உள்ளே நடக்க நடக்க பல காண இருக்கின்றன ,நான் இதற்கே மிகவும் களைத்து விட்டதால் அதிகம் பார்க்க இயலவில்லை,இளைஞர்களுக்கு மலை ஏறும் பயிற்சிக்கும்adventure செய்யவும் மிகச் சிறந்த இடம் ,பல பள்ளியிலிருந்துஇந்த இடத்திற்கு உல்லாசப்பயணம் செய்கிறார்கள் கூடவே சரித்திரமதிப்புப் பெற்ற திரு தேசிங்கு ராஜனின் கோட்டைகளையும்காட்டுகிறார்கள்.இது போல் சரித்திரப்புகழ் பெற்ற பல இடங்களைக்காட்ட மாணவ மாணவிகளின் மனது விரிவடையும் தேச் வீரர்களைப் பற்றிதெரிந்துக்கொள்ளவும் முடியும் வெறும் ஏட்டுப் படிப்பை விட இது போல்practical knowledge மிகவும் உதவுகிறதுமனதில் ஆணித்தரமாக பதிகிறது ,

பகுள பஞ்சமி

ஸ்ரீ த்யாகராஜ ஆராதனை பகுள பஞ்சமி அன்று திருவையாற்றில் அவரது பிருந்தாவனத்தில் மிகச் சிறப்பாக நடக்கும். அன்றையத் தினம் பெரிய சங்கீத மேதைகள் அவர் இயற்றியப்பஞ்ச ரத்ன கீர்த்தனங்களைப் பாடுவார்கள்.அப்போது அவரது சிலைக்கும் அபிஷேகம்அராதனை,பூஜைகள் நடக்கும் .அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் .அவர் தன் ஐந்து வயதிலிருந்தே ஸ்ரீராமநாமத்தைஜபிக்க ஆரம்பித்தார் சுமார் 95கோடிகள் ஜபித்திருக்கிறார், ஒரு சமயம்அவ்ர் திருப்பதிகோவிலுக்குப் போய் திரும்பி வந்துக் கொண்டிருந்தார் அப்போது ஒரு இடத்தில்ஒரே கூட்டம் ,.என்னவென்று விஜாரித்ததில் ஒருவன் கிணற்றில் விழுந்துஇறந்து விட்டான் என்றுத் தெரிய வந்தது அதாவது ஒரு பிராமணன் தன் மனைவி,குழந்தையுடன் அங்கிருக்கும் ஒரு கோவிலுக்குப் போனான், இருட்டிவிட்டதுஒரு ஆலயத்திற்குள்சென்று இரவைக் கழித்துவிட்டுச் செல்ல நினைத்தான் ஆனால் அந்தக் கோவில் உள்ளேத்தாழிடப்பட்டிருந்தது என்ன செயவது என்றுத் தெரியாமல் அங்கிருக்கும் மதில்மேல் ஏறி உள்ளேக் குதித்து பின் உள் இருக்கும் தாழ்பாளைத் திற்க்கலாம்என்று எண்ணி உள்ளேகுதித்தான் அவ்வளவுதான் டம் என்றச் சத்தத்துடன் கிணற்றில் விழுந்து விட்டான்நீரில் மூழ்கி தத்தளித்து செத்துப்போனன் ,.அவள் மனைவி வாசலில் தன்கணவன் இவ்வள்வு நாழியகியும் வெளியில் வரவில்லையெ என்று கவலையுடன்அழுது ஊரைக் கூட்டினாள் /எல்லொரும் கோவில் உள்ளேத்தேடி பின் அவனைக்கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.அவன் கழுத்தில் துளசி மாலைஇருந்தது அவன் சிறந்த விஷ்ணு பகதன் என்று தியாகராஜஸ்வாமிக்குத்தெரிந்து,பின் "நா ஜீவோ தாரா என்றுத் தெலுங்கில் ஒரு பாட்டு அதாவது அந்த மனிதனின் உயிரைத் தந்துவிடு ராமாஎன்று உள்ளம் உருகிப் பாடினார் அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போலஉயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை ,,,,,, "ராம நாமம்" ஒரு சிறந்த மந்திரம் இதை எப்போதும் ஜபிக்கலாம்ப்டுக்கையிலும் ஜபிக்கலாம் அதன் சக்தியே தனிவாருங்கள் நாமும் ராம நாமம் சொல்லலாமே ,,,,,,,,,,,, பொங்கல் நன்நாளுடன் திருவள்ளுவர் தினமும்ஸ்ரீ தியாகபிரும்மத்தின் ஆராதனை தினமும் சேர்ந்து வந்த இந்நாளை மறக்காமல்வழிபடுவோம் விசாலம் ,

பொறுப்பை உணரும் நாள் எதுவோ?

ஒருவன் தான் செய்யும் பணியே தெய்வமாக மதித்து செயல்படவேண்டும் அதில் தான்அவனது சிறப்பு அடங்கியுள்ளது சில வங்கியில், வாடிக்கையாளர்கள் செக் புத்தகத்துடன் நிற்க ஊழியர்களில் ஒருவள் தன் செல்லில் சிரித்து பேசிக்கொண்டிருக்கிறாள் சரியென்று அடுத்த இடத்தில் போனால் அங்கு.மற்றொருவன் தான் குடிக்கும் டீயை ரசித்துக்கொண்டிருக்கிருந்து தன்அருகில் இருக்கும் ஒருவனிடன் போகும்படி கையைக்காட்டுகிறான் .அங்குச்சென்றால் அது தன் வேலை இல்லை அதைக்கவனிக்க வேறு ஒருவர் வரவேண்டும் என்றுகூறி வேலையில்லாமல் அமர்ந்திருக்கிறான் ,வேறு சிலர் தான் பார்த்தசினிமாவை விமர்சன்ம் செய்துகொண்டிருக்கிறார்கள் ,இவர்களது வேலை அரசுசமபந்தப்படிருப்பதால் பாதுகாப்பானது ஆகையால் ஒருவரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்து இருக்கிறது தவிர அப்படி யாரையாவது விலக்க நேர்ந்தால் யூனியன் சேர்ந்து வேலை நிறுத்தம் என்று ஆரம்பித்து விடுகிறார்கள்,தில்லியில் ஒரு பெயர் போன வங்கியில் குளிர்காலத்தில் ஆபீஸ் வந்துஅமருவதே 10 மணிக்கு மேல். அதுவும் தவிர குளிருக்காக சூடான டீ குடித்து முடிக்க ஒரு 30 நிமிடம்,பின் 1 மணி ஆவதுற்கு முன்பே லஞ்சுக்கு தயார் ஆகிவிடுகின்றனர்.சிலர் சாதாரண் மனிதனானாலும் தன்னைப் பிறர் முன்னால் ஒரு பெரிய மனிதனாய்க் காட்டிக்கொள்வார்கள் அவர்கள் நம்மை முட்டாள் ஆக்கியும் விடுவார்கள்;சிலர் ஒழுங்காக வேலைச்செய்பவனையும் மாற்றி " நாளை பார்த்துக்கொள்ளலாம் இப்போது கிளம்புபார்டிக்கு " என்று வலுக்கட்டாயமாக இழுத்தும் போய் விடுகிறார்கள் ,மாதா அம்ருதானந்தமயி மா ஒரு சொற்பொழிவில் சொன்ன கதை ஞாபகம் வருகிறதுசேனையில் ஒருவனுக்கு கர்னல் பதவி கிடைத்தது வேலைஉயர்வு தான் புதியபொறுப்பு எடுத்துக்கொண்ட அவனுக்குத் தலைகால்தெரியவில்லை அன்றே அந்தக்கர்னலைப் பார்க்க ஒருவன் வந்தான் அவன் உள்ளேநுழைந்ததும் கர்னல்போனை எடுத்து "ஹலோ யர்ர் பேசுவது? ஜனதிபதி கிளிண்டனா?குட் மார்னிங் ?எதாவது விசேஷம் உண்டா ?நான் இன்றுதான் சார்ஜ்எடுத்துள்ளேன் நிறைய பைல்கள் குவிந்து இருக்கின்றன நான்பின்னர் பேசுகிறேன் "இப்படிப்பேசி அந்தப்போனை வைத்தார் வந்தவன் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தான் ."ஏனப்பா என்ன வேண்டும்? இன்னும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய்?கர்வமான குரலில் கேட்டார்வந்தவன் " மன்னிக்க வேண்டும் நான் தொலைப்பேசி நிலயத்திலிருந்துவருகிறேன் உங்கள் போனுக்கு உடனேகனெக்சன் கொடுக்கும்படி உத்தரவு கிடைத்தது நேற்று வைத்த போன் இது,அதற்கு இன்னும் கனெக்சன் கொடுக்கவில்லை அதில்தான் நீங்கள் பேசினீர்கள் "இந்த இடத்தில் முட்டாள் ஆனது யார் ?இதுபோல் தினமும் பலமுறைகள் நாம் முட்டாள் ஆகிறோம்தற்பெருமை நம்மை எங்கு இழுத்துச்செல்கிறது ?முன்பு காபி ஆற்றிக்கொடுத்து இட்லி விற்ற ஒருவர் தனது உழைப்பினாலும்அந்தப் பணியைத் தெய்வத்திற்கு சம்ர்ப்பித்துவிட்டுமுயற்சியையே மூலதமாகக் கொண்டார் இன்று அவரது ஹோட்டல்பல வெளிநாடுகளிலும் வியாபித்து இருக்கிறது .

தேசிங்கு ராஜன்

சிங்கவரம் அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது ,இதுசெஞ்சிக்கு வடக்கே ஐந்து கிமீ தூரம் உள்ளது இக்கோயில் மலையின் மேல் இருப்பதால் 125 படிகளைக் கடக்க வேண்டும்,எல்லோரா போல் ஒரே பாறையைக்குடைந்து செய்யப்பட்டக்கோயில் ,,,,,இந்தப்பாறையிலேயே முன் புறம் இரு தூண்கள் மிகப்பெரிய அளவில் நிற்க உள்ளே நீண்ட கருவறை தெரிகிறது .அங்கு ஆதிசேஷன் சுருண்டுக் கிடக்க அந்தப்படுக்கையில் அனந்தசயனமாக அரங்கன் சயனித்திருகிறார் , இந்த அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம் ,எந்த வேலைச்செய்தாலும் இந்தஅரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம் இங்குத் தாயார்சன்னதியும் இருக்கிறது தேசிங்கு ராஜன் தன் செஞ்சிக்கோட்டைஅரண்மனையிலிருந்தே அந்த்க் கோயிலுக்குச்செல்ல சுரங்கப்பாதைஅமைத்தாராம் அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச்செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது எந்தப்போருக்குச்சென்றாலும் தேசிங்கு இந்த அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம் அவரது கடைச்ப்போரின் போதும் அந்த ரங்கநாதனிடம்"நான் போருக்குப்போகவேண்டும்உத்தரவு கொடுங்கள் என்று கேட்டார் ,ஆனால் அரங்கநாதன் உத்தரவு தராமல் தன் சிரத்தை திருப்பிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது மொகலாயப்பேரரசின் படைத் தளபதியாக ஸ்வரூப் சிங் என்பவர் மிகத்திறமையுடன் கைக்கொடுத்தார் பல எல்லைகளை விரிவுபடுத்தினார் , 17ம் நூற்றாண்டில் செஞ்சியில் ஒரு பகுதியை ஆட்சிக்காகத்தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்வரூப் சிங் அங்கு அனுப்பப்பட்டார். இந்த ஸ்வரூப் சிங், அவரது மனைவி ராமாபாய்க்கு சிங்கம் போன்று அழகியவீரன் பிறந்தான். அவனது பெயர் தேஜாசிங் இந்தத் தேஜாசிங்தான் ராஜா தேசிங்கு ஆனார் , சிறுவயதிலேயே பல ஆயுதங்களுடன் விளையாடுவான் புலிகளுடன் சண்டைப் போடுவானாம் ,தில்லியில் நீலவேணி என்ற குதிரையை அடக்க ஸ்வரூப் சிங்அழைக்கப்பட்டார் ஆனால் அவரால் அதை அடக்க முடியவில்லைஇதனால் அந்த மன்னன் இவரைச் சிறையில் அடைத்தான் சிறுவன் தேஜாசிங் தன் தந்தையைக் காணாமல் தாயிடம் இதைப்பற்றிக்கேட்டான் அதற்கு அவன் தாய் அவர் சிறையில் அடைக்கப்பட்டக் காரணத்தைக்கூறினாள் உடனேயே அங்குச்சென்றான் அப்போது அவனுக்கு 15 வயது தானாம்அந்த நீலவேணி என்ற குதிரையை அடக்கி தன் தந்தையை மீட்டுவந்தான் , இதற்குப்பரிசாக படைத்தலைவன் பீம்சிங் தன் மகளைத் திருமணம் செய்துக்கொடுத்தான்.ஸ்வரூப்சிங் ஆட்சியைத் தொடர்ந்தார் ஆனால் இறந்து போனார் .தேசிங்கு ராஜாவாக விரும்பினான் ஆனால் அவனை ராஜாவாக முடிச்சூடுவதை ஆர்க்காட்நவாப் மறுத்தார் ஏனென்றால் தேசிங்கு தில்லியில் கப்பம் கட்ட மறுத்ததே காரணம் . ஆனாலும் அஞ்சா நெஞ்சத்துடன் பரம்பரை உரிமை விடாமல் எதிர்ப்புகளையும் முறியடித்துவிட்டு தானே மன்னராகமுடிசூட்டிக்கொண்டார்ஆர்க்காடுநவாப் போருக்கு அழைத்தான் அப்போதுதான் தான் போருக்குப்போகலாமா என்று அரங்கனைக் கேட்க கோயிலுக்குச்சென்றார் ஆர்க்காடு நவாப்மீது அவர் மிகவும் கோபத்தில் இருந்ததால் போருக்குச்செல்லும் வேகமும் அதிகமாக இருந்தது , கோயிலில் திருவரங்கன் தன்தலையைத் திருப்பி மறுப்புத்தெரிவித்தும் ஆறிலும் சாவு நூறிலும்சாவு நான் மடிந்தால் வீரமரணமாக மடிவேன் என்று கூறி போருக்கு வந்தார். தர்மத்தை,மீறி ஆர்காடு நவாப் சாததுல்லாகானால் நயவஞ்சகமாக தேசிங்கு கொல்லப்பட்டார் என்று கூறப்டுகிறது. அவருடன் அவர் மனைவியும் உயிரை விட்டாள் ,நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன. கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணியின் சமாதியும் இருக்கிறது அரங்கன் சன்னதியில் திருமணம் செய்தால் எல்லா வளமும் பெற்று தம்பதிகள் மிகச்சிறப்பாக வாழ்வார்கள் என்று நம்புகிறார்கள் இங்கிருக்கும்மக்கள். ,மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறப்பு விழாவும் வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாக நடைப்பெறுகின்றன பூதேவியுடன் வாராக மூர்த்தியும் அமைந்துள்ளது இங்குஅமையப்பெற்ற குளமும் சுனையும் இயற்கை எழிலில்அழகுடன் விளங்குகிறது மாசிமகம் திருவிழாவும் வீதிஉலாவில்அரங்கன் அலங்காரங்களுடன் ஆடி அசைந்து வருவது ந்ம்மைப்பரவசமடைய்ச்செய்கிறதுஅங்கு இருக்கும் கிராம மக்கள் இன்றும் தேசிங்கு ராஜனின் சரித்தரத்தைநாட்டுப்பாடலாக பாடுகின்றனர் வில்லுப்பாட்டும் நடக்கிறதுஎல்லாம் அவருடைய வீரம் தீரம் வெளிப்படும் பாட்டுக்கள் இத்தனைச்சிறுவயதிலேயே பலப்போர்களைச்ச்ந்தித்து வெற்றிக்கண்டு செஞ்சியை ஆண்டதேசிங்கு என் மனதில் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு விட்டார் என்றுசொல்லவும் வேண்டுமா ?

குடியரசு தினம் 1950

என் தந்தையின் டைரியிலிருந்து குடியரசு தினம் ஜனவரி 26 -- 1950 என் தந்தையின் டைரியில் முதல் குடியரசு தினம் கொண்டாடிய குறிப்பு இருந்தது தில்லியில் நடந்த நிகழ்வும் சென்னையில் நடந்த நிகழ்வும் இருந்தன , சென்னையில் நடந்ததை எழுதுகிறேன்குடியரசு தினத்தை முன்னிட்டு 8000 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டனர்மாலை ஐந்து மணிக்கு சென்னை கார்ப்பரேஷன்ஸ்டேடியத்தில் விழா நடக்க இருந்தது பகல் 2 மணியிலிருந்தே கூட்டம் சேரஆரம்பித்து விட்டது சுமார் இரண்டு இலட்சம் இருக்கலாம்.திடீரென்று நிசப்தம் ,,,, கோச்சு வண்டியின் சப்தம் ஆம் கவர்னர் தம்பதி கோச்சில் ஸ்டேடியத்தை நோக்கி வந்துகொண்டிருந்தனர் . நெருக்கமாக இரு குதிரைகள் ராஜ நடைப் போட்டு அவரது கோச்சுடன் வந்துக்கொண்டிருந்தன அதில் ஒருவர் போலீஸ் உதவி கமிஷனர் திருஆர் எம் மகாதேவன்மற்றொருவர் சார்ஜெண்ட் மேஜர் லூயிஸ் ,,,,கவர்னரின் வரவேற்பு மிகப்பிரமாதமாக இருந்தது. சென்னையின் முதன் மந்திரிபி எல் குமாரசாமி ராஜா ஓடி வந்து வரவேற்றார்,போலீஸ் படையும் மரியாதைச் செலுத்தினர் அங்கு ஒரு மேடையில் தேசியக்கொடி தயாராக வைக்கப்பட்டிருந்தது கவர்னர்அங்குச் சென்று தேசியக்கொடியைப் பறக்கச் செய்தார் பின் அதற்குமரியாதை அளித்தார் உடனே இராணுவப்படைகளும் மரியாதைச்செலுத்தின ,மாலையிலிருந்து இரவு வரை மெரினா கடற்கரையில் வாணவேடிக்கை கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக இருந்ததுவனொலியில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது காலையில் வந்தேமாதரம் பாடல் டீஅர் விஸ்வநாத சாஸ்திரிதொகுத்தது பின்மதுரை சோமசுந்தரம் கச்சேரி ,பின் டில்லியில் நடந்தகுடியரசு விழாவின் நேர் முக வர்ணனை ,மாலைதிருவெண்காடுபி சுப்பிரமண்யப்பிள்ளை நாதஸ்வரம் பின்குமாரசுவாமி ராஜாவின் குடியாட்சி சிறப்புறை ,,என் எஸ் கிருஷ்ணன ,டிஏ மதுரம் அவர்களின் "விந்தை மனிதன் "இரவு திருமதி எம்.எஸ் சுப்பலட்சுமி அவர்களின் கச்சேரி ,,,,,இத்துடன் வானொலி நிகழ்ச்சியும் முடிவடைந்தது ,,,,,,,,ஆஹா பழையகால என் தந்தை நினவுகளை நானும் மனதில்கொண்டுவந்து பார்க்கிறேன் இப்போது டிவியில் பல சானலகள்அதில் கச்சேரி என்பது மிக மிக குறைவு ,பல சினிமா கதாநாயகர்கள் நாயகிகள்வந்து தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்கின்றனர் யாராவது தேசத்திற்கு உழைத்து எங்கேயோ ஒரு சின்னவீட்டில் வாழ்ந்து வரும் சுதந்திர தியாகிகளைக் கண்டு பேட்டி எடுத்துடிவி முன் அழைத்து கௌரவிக்கலாமே ,இதே போல் அந்தக்காலத்தில் இருந்தகவிஞர் எழுத்தாளர் ,தியாகிகள் வீரர்கள் போன்றவர்களை அழைத்துஅவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளச்சொல்லாமே என் இனிய குடியரசு வாழ்த்துகள் அன்புடன் விசாலம்

Thursday, January 15, 2009

ஆருத்ரா தரிசனம்

நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா ,,,,,திருவாதிரை நக்ஷத்திரம் அன்று மார்கழியில்
வரும் பண்டிகை ஆருத்ரா தரிசனம் ,, ஆஹா அந்தக் காலை நேரம் சுடச்சுட களி கிளறி
ஏழுகறி குழம்பும் செய்து நடராஜரைத்தியானம் செய்து வாழை இலையில் வைத்து
நடராஜருக்குப் படைக்க உண்டாகும் ஆனந்தமே தனி தான் ,இந்தத் திருநாளில் முன்னொரு
சமயம் தேர் விழாவின் போது நடந்த ச்ம்பவம் {நான் படித்தது} என் நினைவுக்கு வருகிறது
தில்லைத் தாண்டவ நடராஜா தேரில் பவனி வ்ந்துக் கொண்டிருந்தார் ,நான்கு வீதிகளிலும்
பவனி வர வேண்டும் அப்போது ஒரு வீதியில் ஒரு ஓரமாக ஒருவர் நடராஜரைப் பார்க்க
ஆசையாக நின்றுக் கொண்டிருந்தார் அவர் பிறப்பினால் அவர் தூர விலகி நின்றுக்
கொண்டிருந்தார் .ஆவலாக அந்தக் கூத்தனாரைக் கண்கொண்டுக் களிக்க எதிர்ப்பார்த்துக்
கொண்டிருந்தார் ,அப்போது தேர் அவர் அருகில் வரும் போது நின்றுவிட்டது நகரவில்லை
தேரின் சக்கரம் மண்ணில் புதைந்து விட்டது பல பேர்கள் முயற்சித்தும் அசைந்துக்
கொடுக்கவில்லை ,அப்போது ஒரு குரல் கேட்டது ,,"சேந்தா தேர் ஓடப் பல்லாண்டுப்
பாடு,,"ஆம் அங்கு நின்றவர் சேந்தனார் .....,,கடவுள் ஜாதி மதம் என்றுப் பார்ப்பதில்லை
அவர் பார்வையில் எல்லோரும் ஒன்றுதான் ஒரு ஓரமாக நின்ற சேந்தன் பாட ஆரம்பித்தார்,
"மன்னுகத் தில்லை வள்ர்கநம்
பகதர்கள்,வஞ்சகர் போய் அகல
பொன்னின் செய மண்டபத்துள்ளே புகுந்து
புவனியெல்லாம் விளங்க,,,,,,,,,,,,,,,,
தில்லைத் திருப்பல்லாண்டு முதல் திருப்பதிகத்தைப் பாடினார் சேந்தனார், தேர் எளிதாக
அசைந்துக் கொடுக்க நான்கு வீதிகளிலும் வலம் வர சோழமன்னன் பரவசம் அடைந்து
சேந்தனை நோக்கி வேகமாக வந்து அவரை வணங்கினார், இதைப் பற்றிக் கோவிலில்
கொடிமரத்தின் கீழ் எழுதியுள்ளது என்கிறார்கள்.மிகவும் கூடடம் இருந்ததால்
என்க்குப் பார்க்க முடியவில்லை ,
திரு பாபநாசம் சிவன் அவ்ர்களின் பாட்டு என்னை மிகவும் கவர்ந்தது


சிதமபரம் என மனங்கனிந்திட ஜபம்செய்யக் கொடிய
ஜனன மரணபய மொழிந்திடும் சிவ,,{சிதமபரம்}

ப்தஞ்சலியும் புலிப் பதந்திகழ் முனியும்
நிதம் பரவவரு ணிறைந்த வுருவொடு
கதம்ப மலரணி குழலொடு திகழ்சிவ
காமிமருவும் ஸ்வாமியை எனது கனக்
ஸபேசனை நடேசனைத் தொழு சிவ {சிதம்பரம்]


மோஹாந்தகாரமதில் முழுகியழிந் தென்னாளும்,
மோசம் போகாதே என் மூடநெஞ்சமே
சோகாந்தமுற நர ஜன்மமுமிழந்து கொடுந்
துன்பந்தரும் நரக் வாதை மிஞ்சுமே
ஸ்ரீகாந்தனும் ஸரஸ்வதீ காந்தனும் பணிய
தேஹாந்தத்துள் நடிக்கும் ஆனந்தத் தாண்டவதை
தாஹாந்த மடையக்கண் டேகாந்தக்களிபெற
தத்தரிகிட தீம் த்ரிகிட திமிதக
தளாங்குதோம்தகு எனவே நடமிடு ,,{சிதம்பரம்}



இதில் தேஹாந்தத்துள் நடிக்கும் ஆனந்தத் தாண்டவத்தை என்பது மிகச் சிறந்த நடராஜரின் தத்துவம் ...இந்தப் பாட்டில் மிகவும் அழகான வரிகள் நடராஜரைத் துதிப்போம்
சூடாக களியும் குழம்பும் ருசிப்போம்

கல்வியும் வேலை வாய்ப்பும்

தற்கால கல்வியில் ந்ம் எல்லோருக்கும் ஒத்து வரும்படி பல விதமான பிரிவுகள்
சமீப காலமாக அதிகரித்துள்ளன. ,நிறைய வேலை வாய்ப்பும் அதனால் ஏற்பட்டுள்ளன
ஆனால் ஒரு டாக்டர் ஆனாலோ அல்லது இஞ்ஜினியர் ஆனாலோதான் சிறந்த படிப்பு
அந்த பிரிவில் படித்தவன் தான் சிறந்தவன் என்றக் கணிப்பு மாற்றப் பட வேண்டும் .
எல்லோருக்கும் அந்தப்பிரிவில் ஆர்வமோ ,அல்ல்து லட்சியமோ இருக்க வாய்ப்பு இல்லை
அப்போது பெற்றோர்கள் தன் மக்களை அவர்கள் விருப்பமில்லாமல் தாங்கள் நினைத்தது
தான் படிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது தவறு . சித்திரம் வரைவதில்
ஆர்வம் உள்ள ஒருவனை "ஆமாம் நீ படம் வரைந்துக் கிழிக்கப் போகிறாய் ,,,அதுதான் சோறு போடுமா?என்று அவனது உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளாமல் இருக்கும் பெற்றோர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்,
என் பள்ளியில் மணி அடிப்பவனின் மகன் ,,குஷிராம் என்று பெயர் அவன் அம்மா
பாத்திரம் தேய்த்து படிக்க வைத்தாள் அவ்னுக்கு அவ்வள்வு படிப்பு வரவில்லை
ஆனால் அவனுக்கு மின்சார பழுது பார்ப்பதில் ரொம்ப ஆர்வம் , கஷ்டப்பட்டு 8 வது
தேறினான் அத்ற்கு பின் அவனால் முடியவில்லை நாங்கள் எல்லோரும் பணம்
சேர்த்து அவனை ஒரு மின்சார சம்பந்தப்பட்ட வகுப்பிற்கு அனுப்பி வைத்தோம்
ட்ரெய்னிங் இன்ஸ்டிடூயூட் ல் சேர்த்து இப்போது அவன் அதில் வெகு வேகமாக
முன்னேறி தற்போதுஒரு கடையே திறந்துள்ளான் அவனில்லாமல் ஒரு கல்யாண்மும்
நடப்பதில்லை அவன் தான் விளக்கு அலங்காரம் செய்கிறான்
நம் திரு ஹரிஹரன் கஜல் புகழ் ,, படிப்பில் பெரிய அளவு இல்லை என்றாலும் அவன்
குரல் வள்மும் பாட்டில் இருக்கும் உயிரும் எல்லோரையும் வளைத்துப் போட்டது
சின்ன வயதிலிருந்து அவ்ர் எனக்கு நல்ல பழக்கம்
நான் ஒரு தடவை ஜெனீவா போயிருந்தபோது ஹோலிப் பண்டிகை இருந்தது
அதற்கு நிறைய இந்தியர்களைக் கூப்பிட்டிருந்தார்கள் நானும் போயிருந்தேன்
அப்போது ஒரு இளைஞன் புல்கானின் தாடியுடன் மிகவும் ஸ்டைலாக
நடனம் ஆடிக்கொண்டிருந்தான் .பின் நடு நடுவே என்னைப் பார்த்து புன்னகைத்தான்
எனக்கு எங்கேயோ பார்த்தாற்போல் இருந்தது பதிலுக்கு நானும் புன்னகை வீசினேன்
உடனே அவன் ஓடி வந்து "மேடம் நான் தான் மஹேஷ் ,, உங்கள் பிடிதத மாணவன்
என்றான் பின் குனிந்து என் பாதத்தை ஒற்றிக் கொண்டான்
இங்கு எங்கே ? என்றுக் கேட்டேன் "நீங்கள் சொன்னது போல் நான் டெக்ஸ்டைல் டிசைன்
எடுத்துப் படித்தேன் இப்போது எக்ஸ்போர்ட் பிஸ்னஸ் செய்கிறேன்" எல்லாம் உங்கள்
ஆசிகள்தான் என்று சொன்னதும் நான் சுவர்க்கத்திற்கே போய்விட்டேன் ஒரு ஆசிரியைக்கு
தன் மாண்வன் பணிவாக பண்ம் இருப்பினும் கர்வமில்லாது குருவின் காலில் விழுந்தால்
அதை விட மகிழ்ச்சி வேறு ஏது?
இப்போது கல்வி ஹோட்டல் மெனேஜிங் மாடலிங் , நடிப்பு கல்லூரி ஹேர் ஹோஸ்டஸ்
டிரெய்னிங் சில்ப கலை தோட்டக்கலை என்று பலவிதமாக இருந்து வேலை வாய்ப்பும்
கிடைக்கிறது அதை நன்றாக உபயோகப் படுத்திக் கொள்ளலாம் செய்யும் தொழிலே தெய்வம் என்பதை வளர்த்துக் கொண்டால் உலகமே நம் முட்டியில் தான்
ஆனால் கூட நேர்மை ஒழுக்கம் .அன்றன்று காரியங்களை அப்போதே முடிததல்
மனிதாபிமானம் போன்றவைகள் இருந்தால் எதையும் சாதிக்கலாம்

கல்வியில் education in human value என்பதைக் கொண்டு வர வேண்டும்
அதற்கு நல்ல ஆசிரியர்கள் தேவை அதற்கு ஆசிரியர்கள் மன ம்கிழ்ச்சியாக இருக்க வேண்டும் அவர்கள் வீடு சுபீட்சமாக இருக்க வேண்டும் அவர்களுக்குத் தேவையான
செல்வம் கிடைக்க வேண்டும் மாணவர்களை குழந்தைகளாகவும் அதே சமயம்
தன் நண்பர்களாகவும் நினைத்துப் பழக வேண்டும் ,,To sir with love " சினிமா இதற்கு
நல்ல உதாரணம்

ஒரு அறிஞர் சொல்லுகிறார் unless knowledge is transformed into wisdom and wisdom is expressed
into charecter education is a wasteful process ,,,,,,,,,the end of education is charecter and the end of knowledge is love .

தங்கம் சொத்து பணம் ,,,இவைகளைவிட நமக்கு கல்வி வழியாகக் கிடைக்க வேண்டியச்
சொத்து உண்மை அன்பு ஒழுக்கம் சாந்தி அமைதி ,, இந்த இரத்தினங்கள்
வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவைகள். இவைகளை இதயம் என்ற வங்கியில்
சேர்த்து வைப்போம் ......
அன்புடன் விசாலம்
....

கல்வியும் வேலை வாய்ப்பும்

தற்கால கல்வியில் நம் எல்லோருக்கும் ஒத்து வரும்படி பல விதமான பிரிவுகள்
சமீப காலமாக அதிகரித்துள்ளன. ,நிறைய வேலை வாய்ப்பும் அதனால் ஏற்பட்டுள்ளன
ஆனால் ஒரு டாக்டர் ஆனாலோ அல்லது இஞ்ஜினியர் ஆனாலோதான் சிறந்த படிப்பு
அந்த பிரிவில் படித்தவன் தான் சிறந்தவன் என்றக் கணிப்பு மாற்றப் பட வேண்டும் .
எல்லோருக்கும் அந்தப்பிரிவில் ஆர்வமோ ,அல்ல்து லட்சியமோ இருக்க வாய்ப்பு இல்லை
அப்போது பெற்றோர்கள் தன் மக்களை அவர்கள் விருப்பமில்லாமல் தாங்கள் நினைத்தது
தான் படிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது தவறு . சித்திரம் வரைவதில்
ஆர்வம் உள்ள ஒருவனை "ஆமாம் நீ படம் வரைந்துக் கிழிக்கப் போகிறாய் ,,,அதுதான் சோறு போடுமா?என்று அவனது உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளாமல் இருக்கும் பெற்றோர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்,
என் பள்ளியில் மணி அடிப்பவனின் மகன் ,,குஷிராம் என்று பெயர் அவன் அம்மா
பாத்திரம் தேய்த்து படிக்க வைத்தாள் அவ்னுக்கு அவ்வள்வு படிப்பு வரவில்லை
ஆனால் அவனுக்கு மின்சார பழுது பார்ப்பதில் ரொம்ப ஆர்வம் , கஷ்டப்பட்டு 8 வது
தேறினான் அத்ற்கு பின் அவனால் முடியவில்லை நாங்கள் எல்லோரும் பணம்
சேர்த்து அவனை ஒரு மின்சார சம்பந்தப்பட்ட வகுப்பிற்கு அனுப்பி வைத்தோம்
ட்ரெய்னிங் இன்ஸ்டிடூயூட் ல் சேர்த்து இப்போது அவன் அதில் வெகு வேகமாக
முன்னேறி தற்போதுஒரு கடையே திறந்துள்ளான் அவனில்லாமல் ஒரு கல்யாண்மும்
நடப்பதில்லை அவன் தான் விளக்கு அலங்காரம் செய்கிறான்
நம் திரு ஹரிஹரன் கஜல் புகழ் ,, படிப்பில் பெரிய அளவு இல்லை என்றாலும் அவன்
குரல் வள்மும் பாட்டில் இருக்கும் உயிரும் எல்லோரையும் வளைத்துப் போட்டது
சின்ன வயதிலிருந்து அவ்ர் எனக்கு நல்ல பழக்கம்
நான் ஒரு தடவை ஜெனீவா போயிருந்தபோது ஹோலிப் பண்டிகை இருந்தது
அதற்கு நிறைய இந்தியர்களைக் கூப்பிட்டிருந்தார்கள் நானும் போயிருந்தேன்
அப்போது ஒரு இளைஞன் புல்கானின் தாடியுடன் மிகவும் ஸ்டைலாக
நடனம் ஆடிக்கொண்டிருந்தான் .பின் நடு நடுவே என்னைப் பார்த்து புன்னகைத்தான்
எனக்கு எங்கேயோ பார்த்தாற்போல் இருந்தது பதிலுக்கு நானும் புன்னகை வீசினேன்
உடனே அவன் ஓடி வந்து "மேடம் நான் தான் மஹேஷ் ,, உங்கள் பிடிதத மாணவன்
என்றான் பின் குனிந்து என் பாதத்தை ஒற்றிக் கொண்டான்
இங்கு எங்கே ? என்றுக் கேட்டேன் "நீங்கள் சொன்னது போல் நான் டெக்ஸ்டைல் டிசைன்
எடுத்துப் படித்தேன் இப்போது எக்ஸ்போர்ட் பிஸ்னஸ் செய்கிறேன்" எல்லாம் உங்கள்
ஆசிகள்தான் என்று சொன்னதும் நான் சுவர்க்கத்திற்கே போய்விட்டேன் ஒரு ஆசிரியைக்கு
தன் மாணவன் பணிவாக பணம் இருப்பினும் கர்வமில்லாது குருவின் காலில் விழுந்தால்
அதை விட மகிழ்ச்சி வேறு ஏது?
இப்போது கல்வி ஹோட்டல் மெனேஜிங் மாடலிங் , நடிப்பு கல்லூரி ஹேர் ஹோஸ்டஸ்
டிரெய்னிங் சில்ப கலை தோட்டக்கலை என்று பலவிதமாக இருந்து வேலை வாய்ப்பும்
கிடைக்கிறது அதை நன்றாக உபயோகப் படுத்திக் கொள்ளலாம் செய்யும் தொழிலே தெய்வம் என்பதை வளர்த்துக் கொண்டால் உலகமே நம் முட்டியில் தான்
ஆனால் கூட நேர்மை ஒழுக்கம் .அன்றன்று காரியங்களை அப்போதே முடிததல்
மனிதாபிமானம் போன்றவைகள் இருந்தால் எதையும் சாதிக்கலாம்

கல்வியில் education in human value என்பதைக் கொண்டு வர வேண்டும்
அதற்கு நல்ல ஆசிரியர்கள் தேவை அதற்கு ஆசிரியர்கள் மன ம்கிழ்ச்சியாக இருக்க வேண்டும் அவர்கள் வீடு சுபீட்சமாக இருக்க வேண்டும் அவர்களுக்குத் தேவையான
செல்வம் கிடைக்க வேண்டும் மாணவர்களை குழந்தைகளாகவும் அதே சமயம்
தன் நண்பர்களாகவும் நினைத்துப் பழக வேண்டும் ,,To sir with love " சினிமா இதற்கு
நல்ல உதாரணம்

ஒரு அறிஞர் சொல்லுகிறார் unless knowledge is transformed into wisdom and wisdom is expressed
into charecter education is a wasteful process ,,,,,,,,,the end of education is charecter and the end of knowledge is love .

தங்கம் சொத்து பணம் ,,,இவைகளைவிட நமக்கு கல்வி வழியாகக் கிடைக்க வேண்டியச்
சொத்து உண்மை அன்பு ஒழுக்கம் சாந்தி அமைதி ,, இந்த இரத்தினங்கள்
வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவைகள். இவைகளை இதயம் என்ற வங்கியில்
சேர்த்து வைப்போம் ......
அன்புடன் விசாலம்
....

சூடிகொடுத்த நாச்சியார்

அன்பு குழந்தைகளே நீங்கள் ஆண்டாளின் படம் பார்த்திருப்பீர்கள் , முக்கியமாகத் தலையில் பெரியக் கொண்டை அதைச் சுற்றி முத்துமாலை ,அந்த முத்து மாலையின் ஒரு பகுதி கொண்டையின் உச்சியிலிருந்து தொங்கி ஊஞ்சல் ஆட அழகோ அழகு மாறு வேஷப் போட்டியிலும் உங்களில் சிலர் ஆண்டாள் வேஷம் போட்டிருக்கலாம் ,,அந்த ஆண்டாளின்
கதையைப் பர்ப்போமா!

பன்னிரெண்டு ஆழ்வார்களின் நடுவில் ஒரு பெண்ணாக பூஜைகுரியவராக ஒரு பெரிய
இடம் பெற்று ஸ்ரீரங்கநாதனுக்கு அருகிலேயே இருக்கும் பாக்கியம் பெறற பூதேவியின் அவதாரம் அவர். .திரு விஷ்ணுசித்தர் என்ற ஒரு பக்தர் தினமும் கண்ணனுக்கு பூக்கள்
பறித்து த் தொடுத்து கோவிலில் கொண்டுபோய்க் கொடுப்பார் ஒரு சமயம் அவர் ஒரு முக்கிய வேலையாக வெளியே சென்றார் அப்போது ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது சற்று நின்று சத்தம் வந்த இடத்திற்குப் போக அங்கு ஒரு துளசி செடியின் கீழ் ஒரு அழகிய பெண் குழந்தையைக் கண்டார் ,தனக்கு குழந்தை இல்லாதக் குறையைத்
தீர்க்க அந்த எம்பெருமானே இந்தக் குழந்தையைக் கொடுத்திருக்கிறார் என்று ம்கிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தார் பூமியிலிருந்து கண்டெடுத்ததால் கோதை என்று பெயரிட்டு வளர்த்தார் அந்தப் பெண்ணிற்கு எல்லாக் கலைகளும் , கண்ணனைப் பற்றியும்
மற்ற நல்லொழுக்கம் தமிழ் , வேதாந்தம் போன்றவைகளும் கற்றுக் கொடுத்தார்
கண்ணனைப் பற்றிக் கேட்கக் கேட்க அவரையே மண்க்க ஆசைக் கொண்டாள்,
கண்ணன் மேல் அளவில்லாதக் காதலினால் அவனுடன் ஒடி விளையாடி,கண்களை பொத்தி ஒளிந்துக் கொண்டு கற்பனை உலகத்தில் மிதந்தாள் ,அவள் அழகாக
கண்ணனுக்காக மாலைக் கட்டி அதைத் தானே அணிந்துக் கொண்டு நிலைக்கண்ணாடியில்
பார்த்து ரசித்து பின் அந்த மாலையை கண்ணனுக்கும் அணிவிப்பாள்,இதே போல் நடக்க
ஒரு நாள் கோதையின் அப்பா மாலையை கோவிலுக்கு எடுத்துப் போக கையில் எடுத்தவுடன் அதில் கோதையின் நீள முடி இருந்ததைப் பார்த்தார் மிகவும் ம்னம் வருந்தி
அன்று மாலையைக் கோவிலில் கண்ணனுக்கு அணிவிக்காமல் இருந்து விட்டார் அன்றிரவு
கடவுள் அவர் கனவில் வந்து "கோதையின் நறுமணம் அவள் அணிந்துக் கொடுக்கும்
மாலையை நான் அணியாததால் இன்று வரவில்லை அவளை நான் ஆட்கொள்ள
விரும்புகிறேன் அவளை நன்கு மணப் பெண் போல் அலங்கரித்து ஸ்ரீரங்கத்திற்கு
ஸ்ரீஅரங்கநாதனிடம் அழைத்து வா "என்றார், பெரியாழ்வார் இதைக் கேட்டு மலைத்து
நின்றார்.பின் அந்தக் கண்ணன் புரோகிதர்களிடமும் கனவில் வந்து ஆண்டாளை
முத்துப் பல்லக்கில் அழைத்து வரவும் மற்றக் கல்யாண ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னார் இதே போல் அவர் குறிப்பிட்ட நாளில் எல்லோரும் சூழ கோதை என்ற ஆண்டாள் அழகாக அலங்கரித்து வர, மேள தாளங்கள் முழங்க க் கோவில் அருகில் வந்தவுடன் ஸ்ரீ ஆண்டாள் பல்லக்கிலிருந்து குதித்து மிக மகிழ்ச்சியுடன் போக
ஸ்ரீ ரங்கநாதரும் சிலையிலிருந்து வெளியே வர ஸ்ரீ ஆண்டாளை அணைத்துக் கொண்டு
மறைந்தார் ,,,
ஸ்ரீஆண்டாள் துள்சியின் அவதாரம் பூதேவியின் மறு அவதாரம் இவர் எழுதியத் திருப்பாவை மிகச் சிறப்பு வாய்ந்தவை மார்கழி மாதம் ஒவ்வொன்றாகப் பாட மனம் தூயமைப் பெறும் வாருங்கள் திருப்பாவை கற்ருக் கொண்டுப்
பாடலாம் ,,,

Tuesday, January 6, 2009

நேருஜிக்கு தன் மகள் சௌ இந்திராபிரயதர்சினியை ஒரு மகன் போல் வளர்க்க ஆசை,ஏனென்றால் அவருக்கு முதலில் ஒரு ஆண்மகவு பிறந்து உடனேயே இறந்து விட்டது , ஆகையால் இந்திராஜியை அவர் மகனாக நினைத்து அவருக்கு குதிரை ஓட்டும் பயிற்சி ,நீச்சல் பேட்மிண்டன்,முதலியவைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தித்தந்தார் ,அவரது தைரியமும் உடனடியாக்த் தீர்மானித்து செயல் புரியும்மனோதிடமும் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது .அவரை அவரதுதந்தை அன்புடனும் அத்துடன் கண்டிப்பு ஒழுங்குமுறையுடனும் வளர்த்தார் ,அவர் இந்தியாவை மிகச்சிறந்த நாடாக ஆக்கவும் கனவு கண்டார் .அந்தக் கனவை அவர் மகள் செயல்படுத்தினார் .இந்திராஜி மிகச்சிறந்த அறிவாளி .நடக்கப் போவதை முன் கூட்டியே சிந்தித்து செயல் படுவதில் திறமையனவர். இந்த அறிவு அவருக்கு அவர் படித்த பல புத்தகங்ளினால் மேலும் கூர்மையானது ,அவரதுதந்தை அவருக்கு அவரது பிறந்த நாளுக்கு புத்தகங்கள்தான்பரிசாகத் தருவாராம் ,தவிர அவர் தன் மகளுக்கு எழுதும் கடிதங்களும்சிந்தனையைத் தூண்டக்கூடியதாகவே இருக்கும் அந்தமாதிரி புத்தகங்களில் "Glimpses of world history"யும் Letters from a fatherti to a daughter " என்ற்வைகளைப் பலமுறை அவர் படிப்பாராம் .மிகவும் தரமிக்க புத்தகங்களைப் படித்ததால் அவர் எண்ணங்களும்உயர்ந்து நின்றன . அவரது தந்தை சுதந்திரப்போராட்டத்தில்அல்மோரா ஜெயிலில் இருந்தபோது 1935ல் புத்தாண்டு முதல் நாள்ஸ்யின்ஸ் ஆப் லிவ்விங் " என்ற புத்தகம் அனுப்பி வைத்தார்.இதைப்படித்தவுடன் இந்திராஜியிடம் ஒரு நல்ல மாற்றம்ஏற்பட்டு திடநிச்சியம் அசாத்திய துணிச்சல் போன்றவை வெளிப்பட்டன ,அவர் "ஜோன் ஆப் ஆர்க்"புத்தகம் படித்தப்பின் "அப்பா நானும்ஜோன் ஆப் அர்க்"போல் மிகவும் வீரமான பெண்மணி ஆவேன் "என்றார் .இவரது தாய் திருமதி கமலா நேருவும் மிகவும் மென்மையானவர்,பண்புள்ளவர் .இவரிடமிருந்து இந்திராஜி எளிமை , புன்முறுவல் ,அடக்கம் .பணிவு எல்லாம் கற்றுக்கொண்டார் ,ஆனால் அவரதுஅன்னை உடல் நலம் குன்றி டி பி யால் மிகவும் அவதிப்பட்டதால் நேருஜியின்
பொறுப்பு மிக அதிகமானது .அவரை நாலு வருடங்கள் பூனாவில் படிக்க அனுப்பிவைத்தார் .ஆனால் அம்மையாரோமூன்று வருடத்திலேயே நாலு வருடப்படிப்பை முடித்து விட்டார் .பினவர் சந்தினிகேதனில் படிக்கச்சென்றார்,அங்கு எல்லோருக்கும் மிகவும்வியப்பு தான் ,எத்தனைப் பெரிய கோடீஸ்வரி ஒரு சாதாரண இயற்கைச்சூழலால்சூழப்பட்ட ஒரு பள்ளியில் வந்துஎப்படி படிப்பார் ? அவர் எப்படி வருவார்?காரிலா ?வேலயாட்களுடனா?என்று பலசந்தேகங்கள்,,,,,,,,ஆனால் அவர் நட்ந்து ஒரு பழைய சூட்கேஸுடன் கையில்ஒரு படுக்கையுடன்வந்தது நம்பமுடியாததாக இருந்தது , அங்கும் மணிபுரி நடனம்கற்றுக்கொண்டார் அங்கு எல்லோர் உள்ளமும் கொள்ளைக்கண்டார் அவர் பின்ஆக்ஸ்போர்டு படிப்பு முடிந்தப்பின் இந்தியா வந்துசுதந்திரப்போராட்டத்தில் ஈடு பட்டார் ,வானர சேனா என்றும் ஒரு பிரிவைஆரம்பித்த்து போராட்டத்தில் பங்கு கொண்டு தன் தந்தைக்கும் உதவுவாராம் ,"விளையும்பயிர் முளையிலேயே தெரியும் என்றபடி சிறுவயதிலிருந்தே ,தேசப்பற்றுடன் வளர்ந்த இவர் இன்று எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பெற்றிருக்கிறார்,அவரது வயது பிறந்த நாள் நவம்பர் 19 ,,,,,,,,,,,என்னைக்கவர்ந்த அவரை நினைத்து வணங்குகிறேன் ,,,,,

அழுதாமலை

அழுகை நதி என்று ஒரு நதியா ? ஆம் இருக்கிறது ,இதைச்
சபரி யாத்திரைக்கு நடந்துச்செல்லும் பகதர்கள் காணலாம்
ஒரு அரக்கியின் கண்ணீர் ஒரு நதியாகவே ஓடுகிறது என்றால் வியப்பாக இருக்கிறது .அந்த
அரக்கியின் பெயர் மகிஷி.மகிஷியை வதம் செய்ய மணிகண்டன் அம்பு எய்ய அது மகிஷியைத்
தாக்கியது.அவள் உடலைத் துளைத்தது .அவள் அப்படியே சரிந்து விழ அவளது தீய
எண்ணங்களும் குணங்களும் சரிந்து வீழ்ந்து விட்டன ,அவள் தவறை உணர்ந்து ஸ்ரீஐயப்பனிடம்
அழுதபடியே மன்னிப்பு கேட்டாள் ,அப்போது அவளது கண்ணீர் ஆறாகப் பெருகி அழுதா நதியாக ஆனதாம் அவள் போரிட்ட இடம் அழுதா மலையானது.

சபரி மலைக்குப் போகும் பக்தர்கள் முதலில் அழுதாநதியில் குளிக்க வேண்டும் பின் அந்த நதியிலிருந்து ஒரு கல்லை எடுத்துக்கொண்டு தன்னிடத்தே வைத்துக்
கொள்ள வேண்டும் பின் பல மேடு பள்ளங்களைக் கடந்து அந்த மேடு முடியும் தருவாயில்
அந்தக் கல்லைப் போட்டு விடவேண்டும் எந்த இடத்தில் போட வேண்டும் என்பதைத்
தெளிவாக எழுதியும் வைத்திருக்கின்றனர் அதன் பெயர் "கல்லிடும் குன்று" இங்கு ஏன் எல்லோரும் கல்லைப் போடவேண்டும்? மகிஷியோடு உடல் அங்கு பூதங்கணங்களால் புதைக்கப்பட்டதாம் ,பூதகணங்கள் பல கற்களைப்போட்டு புதைத்தனராம் இதை நினனவு கூறும் சம்பவம் தான் கல் போடும் சம்பவம் ,

பின் வருகிறது கரிமலை கரி என்றால் சம்ஸ்கிருதத்தில் யானை , இதிலிருந்து தெரிகிறது
அந்தக்காடு முழுதும் யானைகள் இருக்கும் காடு என்று ,,கடும் விரத்ம் இருந்து ஐயப்பனின்
நாமம் ஒன்றே மனதில் இருத்திச்செல்லும் பகதர்களுக்கு இந்த இடத்தில் ஐயப்பனே துணை இருந்து கை கொடுப்பார் ,இந்தப் பாதை ஏறுவது மிகக் கடினம். மன திடத்துடன் பல பக்தர்கள்
ஏறுகிறார்கள் , இப்போதெல்லாம் சிலர் பம்பா நதிக் கரையிலிருந்து சபரி யாத்திரை ஆரம்பிக்கிறார்கள்

ஸ்வாமியே சரணமய்யப்பா

நீவருவாய் என

அன்பு மகனேஏன் இந்தக் கோபம் ?

ஏன் இந்தத் தாபம் ?

இதில் என்ன லாபம் ?

மரத்தின் பின்னே நீ,ஒளிந்திருந்திருப்பது ஏன் ?

என்ன தான் செய்கிறாய்?அசையாமல் நின்றபடி,,,,

,காணத்துடிக்கும் நான்காத்து நிற்கும் நான் ,

உன் பசியை நான் அறிவேன் .

அன்புப் பாலைச் சுரப்பேன்,

மா என்று அழைப்பாயே!துள்ளி ஓடி வருவாயே !

வந்துபுட்டான் பாவி மனுசன்

பால் கறக்கும் சின்னசாமி

பாலை ஒட்டக் கறந்து புட்டான்

என் கண்ணீர் வடிவது தெரியலயா

!என் மன நிலை நீ அறியலயா ?"

பால் குவளையும் கையுமாய்நடந்தான்

மரத்தடிக்கு சின்னசாமி ,

அலாக்காகத் தூக்கினான் கன்றை,

,வைக்கோல் சிதறி விழுந்தது.

அம்மா "என்ற ஆசைக் குரலுமில்லை ,

பசுவின் அலறல் மட்டும்

காற்றில் கலந்து அழுதது .

Monday, January 5, 2009

சுவாமியே சரணமய்யப்பா

ஸ்வாமியே சரணமய்யப்பா,,,,,,,,,,"பள்ளிக்கட்டு சபரிமலைக்க்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" என்றகோஷங்கள் கேட்கின்றன குருஸ்வாமி வழிக்காட்ட பகதர்கள் பின் செல்கின்றனர்முதலில் போகும் இடம் எரிமேலிபேட்டைஇங்கு பகதர்கள் பேட்டை துள்ளல் செய்கிறார்கள் இந்த இடத்தில் தான் ஸ்ரீமணிகண்டன் மகிஷியுடன் போர்செய்தான் இதை நினைவுகூரும் நிகழ்ச்சிதான் இது,அவர்கள் பாடும் பாட்டு நமையும் பாடவைக்கிறது "ஸ்வாமியே அய்யப்ப ,அய்யப்பஸ்வாமியே ,,சுவாமி திந்தக்க தோம் தோம் ஐயப்ப திந்தக்க தோம் தோம் என்றகோஷத்துடன் பாடல் , ,,,,,,,பேட்டைத்துள்ளிக்குப்பின் எரிமேலி சாஸ்தா பின் வாபரின் தரிசனம்,,,,,அதன் பின் காட்டு வழி தொடங்குகிறதுஅவர்கள் ஒரு நாள் தங்குவது பம்பாநதி தீரத்தில் தான் , இந்தப்பம்ப நதியை தக்ஷிண கங்கை என்றும் கூறுகிறார்கள் ,இது மிகச் சிறப்பு வாய்ந்த இடம் ஏனென்றால் ஐயப்பனைப் பிறக்கச் செய்தஇடமல்லவோ ? ஈசனும் மோகினி அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணுவும் தங்கள் சக்தியைஒன்று கலக்கச் செய்து ஹரிஹரனை உண்டாக்கிய இடம் ,அதோடு மட்டுமல்ல! பந்தளராஜா குழந்தை ஹரிஹரனைக் கண்டு எடுத்த இடமும் இதுதான் .இங்கு குளித்து பின் பூஜை செய்தப்பின் பக்தர்களுக்கு கிடைக்கும்சாப்பாட்டை "பம்பாசத்தி" என்கின்றனர் வடை பாயசத்துடன்சக்கைவரட்டி எரிசேரி ஓலன் , அவியல் , என்று பல ஐட்டங்கள்இருக்கும் சரியான பிறந்த நாள் விருந்துதான் .இந்த விருந்திலேசாதி இல்லை பேதமில்லை பண்க்காரரென்று இல்லை ஏழையென்றும் இல்லை ,எல்லோரும்ஒரே குலம் எல்லோரும் ஒரே இனம் என்றபடி அமைகிறது ,தவிர ஐயப்பனும் பகதர்வடிவில் வந்து அமர்ந்து "சத்தி"saddhi}உண்வாராம் ஆகையால் எல்லாபக்தர்களும் தம் அருகில் அமர்ந்திருப்பது ஐய்யப்னோ என்று எண்ணி மகிழ்ந்துபோவார்கள்.இதற்கு சமைப்பது இலேசல்ல ,,எத்தனைக் கூட்டம் ,,,அன்னதானம் நடந்தபடியேஇருக்கும் ,இதற்கென்று மூட்டப்பட்ட விற்கின் சாம்பல் மகா பிரசாதமாக ஆகிவினியோகிக்கப்படுகிறது இதனால் வளர்க்கும் அடுப்புக்கள் 108 ,,இந்தஅடுப்புச் சாம்பலை அல்லது பஸ்மத்தை பிரசாதமாக கன்னிசாமி வீடு எடுத்துவரவேண்டும்ஹரித்துவாரில் கங்கா மாதாவுக்கு மாலை ஆர்த்தி காட்டுவார்கள்ஒவ்வொரு அகல் விளக்கோ அல்லது பனை ஓலையில் விளக்கோ ஏற்றி ஆர்த்தி முடியும்தருவாயில் அவைகளை கங்கை நதியில்மிதக்க விடுவார்கள் ஒரே சமயத்தில் நூறுகண்க்கான விளக்குக்ள்மித்ந்துப்போவது கண்கொள்ளாக்காட்சிதான் ,,அதேபோல் இங்கும்மூங்கிலால் செய்யப்பட்ட சிறு சப்பரங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துநதியில் விடுவார்கள்,இவரது இருமுடிகளை ஐய்யப்னாகவே நினைத்து அவற்றுக்கும் தீபபராதனைச் செய்து பின் தலையில் ஏற்றி வைப்பார் ,,,,,,,பமபா நதி பார்க்க மிக அழகு ,,,கோயிலுக்கு போக முடியாதவர்கள் பம்பா நதி தீரத்திற்காவது அவசியம் போக வேண்டும் சபரி மலைக்குப் போகும் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சிறப்பைக் கொண்டுள்ளது ,,,,அங்குப் போக அனுஷ்டிக்கும் நியதிகளால்ஒரு ஒழுங்கு முறை , மனத்தூய்மை எல்லாம் ஒன்றாக நினைக்கும் பக்குவம்எல்லாம் வந்துவிடுகிறது ஒரு வேளை சாப்பாடு பின் பலகாரம் என்பதில் சீரணசக்தி சீராக இயங்குகிறது ,படாடோபம் அஹங்காரம் மறைகிறது ,தேகப்பயிற்சி போல் நிறைய நடை இருப்பதால் உடல் சீராகுகிறது ,மனம் ஒருமைப்படுகிறது ,ஞாபகச்சக்தி பெருகுகிறது ,

பூலோக வைகுந்தம் ஸ்ரீரங்கம்

ஸ்தலங்களில் முதனமையானதும் அருள் மிகு ரங்கநாதர் சயனகோலத்தில் இருக்கும் க்ஷேத்திரமும் ஸ்ரீரங்கமாகும் இங்கு நடக்கும் உத்சவங்கள் யாவுமே மிகச்சிறப்பு வாய்ந்தவை ,அதிலும் மார்கழி மாதம் நடைப்பெறும் வைகுநத ஏகாதசி மிக முக்கியப்பங்கு வகிக்கிறது "பகல் பத்து " ",இராப்பத்து" இயற்பா என்று 21 நாட்கள் பாடப்படும் பகல்பத்தின் போது திரு அரங்கநாதர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுவார் ,இராப்பத்தின் போது பெருமாள்ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி சேவைச் சாதிப்பது தொன்று தொட்டே நிகழ்ந்து வருகிறது
"மாதங்களில் நான் மார்க்ழியாக இருப்பேன்" என்று கீதையின் நாயகன் சொன்னார் .இந்த மாதத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி திரு ஆண்டா.ளும் பாவை நோன்பு நூற்று அந்தஸ்ரீரங்கநாதனையே மணந்து அவருடன் ஐக்கியமானாள் ,அதே மார்கழியில் தான் இந்த வைகுண்ட ஏகாதசியும் வருகிறது ,ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆனி மாதம் சுக்ல ஏகாதசிமுதல் ஐப்பசிசுக்ல ஏகாதசிவரை இருக்கும் காலங்களில் யோக நித்திரைசெய்கிறாராம் . இதனால் இது சயன ஏகாதசி என்று கூறப்படுகிறது .ஆவணி மாதம் வரும் சுக்ல ஏகாதசியன்று வலது பக்கம் திரும்பிப்படுப்பதால் இதை பரிவர்த்தன ஏகாதசி என்றும் கூறப்படுகிறது ,பின் கார்த்திகை மாத சுகல ஏகாதசியை கைசிக ஏகாதசி என்கின்றனர் மார்கழிமாதம் தேவர்களுக்கு உஷா காலம் ,இந்த மாதத்தில் வரும் வைகுந்த ஏகாதசியில் திருவாய்மொழி ஓதப்படுகிறது பகல் பத்து நேரத்தில் திருமொழிப்பாசுரங்கள் சொல்லப்படும். பின் இராப்பத்தில் திருவாய் மொழிப்பாசுரங்கள் அபிநயங்களுடன் அரையர்களால் சேவிக்கப்படும் பத்தாம் நாள் திருநாளில் பெருமாள் மோகினி அவதாரத்துடன் வருவார் ,பின் வைகுந்த ஏகாதசியன்று நம்பெருமாள் ரத்ன அங்கியில் ஜொலிப்பார் மூலவரோ முத்தங்கியுடன் அழகு மிளிரக் காட்சி அளிப்பார் இதைக்காணக் கோடிக்கண்கள் போதாது, அத்தனை அழகு ,,,,வைகுந்த ஏகாதசிய்ன்று காலை 4 மணிக்க நம்பெருமாள் பரமபத வாசல் வழியே வந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளுகிறார் .இதையே "சுவர்க்க வாசல் திறப்பு"என்று கூறுகின்றனர் இந்த வைபவத்தில் தாம் நடுநாயகமாகப்பெருமாள் எழுந்தருளி நிற்க அவருக்கு எதிரில் அனைத்து ஆழ்வார்களும் வரிசையாக எழுந்தருளியிருக்கின்றனர் .இந்தக்காட்சி இந்த மார்கழி மாதத்தில் தான் காண முடியும் இத்துடன் இராப்பத்து எட்டாம் நாள் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வந்து வேடுபறி கண்டருளுவர். பின் நம்மாழ்வார் மோட்சம் சேவிப்பது என்ற வைபவமும் கண்கொளாக்காட்சியாகும் இந்த உற்சவம் திருமங்கையாழவார் காலத்திலிருந்தே தொடங்கி இன்றும் நடைப்பெறுகிறது இத்துடன் இந்தவருடம் ஸ்ரீராமானுஜரின் முக்கிய சீடரான திரு கூரத்தாழ்வார் அவர்களின் 1000 வது ஆண்டும் சேர்ந்து வருகிறது அரசனுக்கும் அஞ்சாது ஸ்ரீ நாராயணனே பரம் பொருள் என்று வாதாடி வெற்றிக்கண்டு வைணவத்திற்காக தன் கண்களும் இழந்து வாழ்ந்தவரும் குருபக்த்தியில் மிகச்சிறந்து விளங்கிய திருகூரத்தாழ்வாரையும் வணங்கி அவர் அருள் பெறுவோம் குருவருள் ,திருவருள் இரண்டும் கிடைத்து வாழ்க்கையின் பலனைஅடைவோம் ,,,,,ஓம் நமோ நாராயணாய
அன்புடன் விசாலம்

Sunday, January 4, 2009

அவரவர் கண்ணோட்டம்

அவரவர் கண்ணோட்டத்தில் அவன் ஒரு திருடன்
அவன் மயங்கிக் கிடந்தான் . . குடித்துவிழுந்து கிடந்தான் .
பார்த்தான் ஒரு திருடன் ,
"பாவம் திருடிக்களைத்தானோ?
இரவெல்லாம் திருடினானோ?"
எண்ணம் அங்கு வலுத்தது.
மனமும் அதையே நினைததது .
அங்கிருந்து விலகினான்.
வந்தான் ஒரு வலிப்பு நோய்க்காரன் ,
ஒரு நிமிடம் அங்கு நின்றான்
கண்டு வருந்தினான் .
"ஐயோ!பாவம் ,,வலிப்பு வந்து விழுந்தானோ"
எண்ணம் அங்கு வலுத்தது
மனமும் அதையே உணர்ந்தது .
அடுத்து வந்தார் ஒரு உண்மை சாது.
கண்டார் அவனை அவர் நினைப்பில்
,,"சமாதி நிலையில் இருக்கிறானோ?
தொடுவேன் அவன் பாதம்
"எண்ணம் அங்கே வலுத்தது
அதையே செய்ய வைத்தது
அன்புடன் விசாலம்

தாய்க்கு நிகரேது

மரங்களில்லாத சாலையைக்கண்டேன் ,நாணயமில்லா வர்த்தகம் கண்டேன் ,தன்நலமிக்க மக்களைக் கண்டேன் ,பண்பில்லாத க்ல்வியைக் கண்டேன் .நேர்மையற்ற அரசியல் கண்டேன் .குறுகிய மனத்துடன் கூட்டங்கள் கண்டேன் .விரிந்த பார்வையில்லாத மதத்தினைக் கண்டேன்ஒற்றுமையற்ற ஜன சமுதாயம் கண்டேன் ,.அன்பில்லாத உறவினர்கள் கண்டேன்உறவினரில்லா வீட்டைக்கண்டேன்போலி சாமியார் வளர்வது கண்டேன் ,இதயமில்லா விக்ஞானம் கண்டேன் அர்த்தமற்ற கொச்சை பாடலகள் கேட்டேன் அனுபவமில்லாத உபதேசம் கேட்டேன் ஆடைக்குறைவின் பேஷன் கண்டேன் .பிஞ்சிலே பழுக்கும் மழலைகள் கண்டேன் தீவிரவாதம் வலுக்கக் கண்டேன் பணத்திற்கு கொலையும் செய்யக் கண்டேன் பாசம் ,அனபு குறையக் கண்டேன் லஞ்சப்பேய் வளரக் கண்டேன் முதியோர் இல்லத்தில் கூட்டம் கண்டேன் .விவாகரத்தும் பெருகக் கண்டேன் தேர்தலில் தில்லுமுல்லு நடக்கக் கண்டேன், எல்லாப்பொருளிலும் கலப்பைக்கண்டேன் இத்தனையும் கண்டேன் ,கண்டேன் ஒன்று மட்டும் மாறாது இருக்கக் கண்டேன் .அதுவே தாயின் உள்ளமெனெ என் மனம் சொல்லக்கண்டேன் அங்கு வற்றா பாசம் கண்டேன் இதற்கு நிகரேது என புரிந்தும் கொண்டேன் .'அன்புடன் விசாலம்

தாயின் பூரிப்பு

உன் செவ்விதழில் என் நெஞ்சம் சிலிர்க்கிறது ,.உன்வில்லொத்தப்புருவத்தில் என் மனம் மலர்கிறது .உன் முனகும் மொழியில் ,என் உள்ளம் பூரிக்கிறது உன் ஒப்பனையிலா அழகில் .என் சிந்தைப் பரவசமாகிறது . உன் தாமரைவிழிச் சுழற்சியில் ,என் என் உடல் உன்னை அணைக்கிறது உன் பட்டுப்போன்றக் கரங்களில்என் உள்ளம் பஞ்சு போல் மிருதுவாகிறது உனக்கு பாலூட்டும் வேளையில் .என்னை சுவர்கத்திற்கு அழைத்துச்செல்கிறது ,இந்த இனிமையான வேளையில்என் கணவரின் முகமும் தோன்றுகிறது இரண்டு மூன்றான நிலையில்மனம் இறைவனுக்கு நன்றிச்சொல்கிறது