Friday, September 12, 2008

மஹாளயம்

அன்பு குழந்தைகளே நம் நாட்டுக் கலாசாரம் என்று வருகையில் மாஹாளய தினங்கள்
பற்றியும் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் இல்லையா? அதைப்பற்றித்தான் இப்போது
சொல்லப்போகிறேன் ,பிறப்பு என்றால் கூடவே இறப்பு என்ற சொல்லும் வந்துவிடும் இறப்பு
என்பது இல்லை என்றால் இந்தப் பூமியின் பாரம் மிக அதிகமாகி அதனால் பல பக்கவிளைவு
தான் உண்டாகும் இறந்துப்போனவர்களை நாம் பித்ருக்கள் என்று சொல்கிறோம் இந்த மூதாதையர்கள் மாதப்பிறப்பு ,அமாவாசை, மஹாளயதினங்கள் போன்ற நாட்களில் பூலோகத்திற்கு சூக்ஷம ரூபத்தில் வருகிறார்கள் ,அவர்களை நாம் பார்க்க முடியாது ,ஆனால்
அவர்கள் நம்மைப் பார்த்து மகிழ்ந்து நாம் தானம் செய்வதைப் பெற்றுக்கொண்டு நல்லாசிகள்
வழங்குவார்கள்.நம் குடும்பத்தை மனதார ஆசீர்வதிப்பார்கள்.
உங்களில் சிலர் உங்கள் அப்பாவோ அல்லது தாத்தாவோ வாத்தியார் முன்னிலையில்
அமர்ந்துத் தர்ப்பணம் செய்வதைப் பார்த்திருப்பீர்கள் அவர்கள் முக்கியமாக வைத்துக்கொள்வது
கறுப்பு எள்,தர்ப்பை ,அரிசி{மஞ்சள் கலக்காத அக்ஷ்தை} வெற்றிலை ,பாக்கு .தண்ணீர் ,,,,,,,
பஞ்சாத்திரம் உத்த்ரணி ,,,
நம் வாழ்க்கையில் தெய்வத்தின் அனுக்கிரஹம் எத்தனைத் தேவையோ அத்தனைத்தேவை
சந்ததிகளை ஆசீர்வதிக்கும் பித்துக்களின் ஆசிகள் ,வீட்டில் தர்ப்பணம் செய்யும் போது
மந்திரங்கலின் மூலம் உபயோகப்படுத்தும் பொருட்களின் சக்தியின் மூலம் இறந்துபோன
முன்னோர்கள் வந்து கொடுக்கும் தானங்களை சூக்ஷம ரூபத்தில் பெற்று மனபூர்வமாக ஆசிகள்
வழங்குகின்றனர் இந்த நாட்களில் அன்னதானம் தக்ஷிணைத் தானம் தான்யம் தானம்
வாழைக்காய், அரிசிதானம் கொடுக்கும் வழ்க்கம் உண்டு .இதன் பலன்கள் நம்க்கு அவசியம்
கிடைக்கும்
இந்த மஹாளய நாட்கள் ஆவணி மாதம் பௌர்ணமிக்கு மறு நாள் பிரதமையிலிருந்து
ஆரம்பிக்கும் சம்ஸ்கிருதத்தில் பிரதமை என்பது ஒன்றைக்குறிக்கும் அதாவது முதல்
நாள் பின் த்விதியை என்று அமாவாசை வரை முடியும் இது 15 நாட்கள் ,இந்த அமாவாசையில் தான் கொலு பொம்மை வைக்க ஆரம்பிப்பார்கள் இவைகளை திதிகள்
என்பார்கள் இந்தத் திதிகளில் எதாவது ஒருதிதியில்தான் இறந்து போனவரின் திதியும் வரும் ,அந்தத் திதியை ஞாபகம் வைத்துக்கொண்டு அன்று மூதாதையர்கள் மற்ற பல

இறந்தவர்களை நினைவுக்கூறி தகுந்த சடங்குகளால் அவர்களைத் திருப்தி செய்கிறார்கள்
நாம் ஏன் அவர்களை நினைக்க வேண்டும்? ஆம ஒருவர் பிறந்த் தினத்திலிருந்து இறந்தவரை எத்தனை நல்லக்காரியம் செய்திருப்பார்கள் ,எத்தனைத் தியாகம் செய்திருப்பார்கள் ,எத்தனைச் சாதனைகள்.எத்தனை வீரச்செயலகள் எத்தனைச் சோதனைகளைச் சந்தித்திருப்பார்கள் ,,,,,,,அவர்களை நினைத்துப் பார்க்கும் கடமையும்
மகன்கள் மகள் பந்துக்களுக்கு உண்டல்லவா? அவர்கள் இறந்தாலும் அவர்கள்
ஆசியில் நாம் நல்வாழ்வு வாழ்கிறோம் .
சிலர் இது போல் செய்ய விருப்பமில்லாமல் இருந்தாலும் அவர்கள் ஏழைகளுக்கு அல்லது
தேவைப்படுபவர்களுக்கு அன்னதானமோ ,துணிகள் தானமோ அல்லது வேறு வித்த்தில்
தானம் செய்து இதை நிறைவேற்றுகிறார்கள்
நம் மூதாதையர்கள் சூக்ஷ்ம ரூபத்தில் வரும் நாட்கள் கிரஹண புண்யகாலம் ஆடி அமாவாசை
தை அமாவாசை ஆடி மாதப்பிறப்பு தைமாதப்பிறப்பு பின் மாஹாளய நாட்கள்,,,,,

சிலர் நதிதீரத்திலும் சென்று தர்ப்பணம் செய்வார்கள்
இதற்கு வடக்கில் சிறந்த இடங்கள் வடக்கில் காசி ஹரித்வார் ரிஷிகேஷ் விஷ்ணுப்பிராயக் ருத்ரப்பிரயாக் ,புஷ்கர்

தெற்கில் திருச்சி காவேரி,ஸ்ரீரங்கம் கும்பகோணம் திலதர்ப்பணபுரி கோதாவரி தீரம்
ராமேஸ்வரம் கன்னியாகுமாரி முதலியவைகள்

அன்புடன் விசாலம்

No comments: