Sunday, November 18, 2007

மனித ஈரம் எங்கே

மா ,,மா,, கத்துக்கிறேன்
கழுத்தைத் திருப்புகிறாள்
என் அழகு அம்மா ,,
ஓரக்கண்ணால்
பார்க்கிறாள் ,
முகத்திலே ஒரு பரிதாபம்
எப்படி வருவாள் என்னிடம்
கட்டப்பட்டிருக்கிறாள்
ஒரு கோடியில் ,
வெயிலின் கடுமையில் நான் ,,
என்னைப் பிரித்த மகானுபாவன்
சுயநலவாதி மாட்டுக்காரன்
பால் பெருக்க ஊசி எடுப்பான்
என் அம்மாவுக்கு
ஒரு சுருக்,,,,,,,,,,
வாலை ஆட்டி மறுப்பாள்
அம்மா என்று அழைப்பாள்
பொறுமையுடன் வலி பொறுப்பாள்
பாலும் சுரப்பாள் மக்களுக்கு

நான் குடிக்க பாலில்லை
மக்கள் மனதில் ஈரமில்லை
மாட்டுக்காரன் என்னைக் கழட்ட
வாலைத் தூக்கி ஓடுகிறேன்
என் அம்மா என்னை நக்குகிறாள்
எனக்கும் பாலை ஊட்டுகிறாள்
முட்டிப் பார்த்தும் பாலில்லை
அம்மா கண்ணீர் வடிக்கிறாள்
அன்புடன் விசாலம் ,

No comments: