"ஹலோ... ஹலோ...
நான் தான் செல்
எப்போதும் உங்கள் கையில்
அட்க்கம் உங்கள் பையில்,
சீமான்களிடமும் நான்,
ஏழைகளிடமும் நான்,
வித்தியாசம் இல்லை,
சாதி பேதமும் இல்லை,
அவசரத்திற்கு மட்டும்...
என்று நான் வந்தேன்,
ஆனால் மலிவு விலையில்...
இன்று மலிந்து போகிறேன்,
நன்மை காணவே வந்தேன்
தீமைகளைக் காண்கிறேன்,
எங்கும் காதல்...
காதல் வளர
"இன்கமிங்ஸ் " இலவசம்,
கேடகவே பரவசம்,
கிளம்பும் பல நிறுவனங்கள்
கூடவே போட்டிகள்,
கத்திரிக்காய் வியபாரம்,
போல் ஆனது விவகாரம்
கோவிலில் குருக்கள்,
கூடவே மலர்ந்த பூக்கள்,
மந்திரங்கள் பாதி வாயில்,
நடு நடுவே பேசுவது செல்லில்,
கடவுளும் காத்திருக்கிறார்,
பொறுமையுடன் நிற்கிறார்,
மேடையில் ஒரு சங்கீதம்...
தன்னை மறந்து வந்த கீதம்
மாமேதை வித்துவான் பாட
இங்கு ஒருவர் செல்லும் பாட,
பாடகருக்கு வந்தது கோபம்,
கச்சேரி முடிந்து எழுந்தது தாபம்
வாகனத்தில் ஒரு ஓட்டம்
ஆனால் என் மேல் அதிக கவனம்,
காதலில் மறந்து பேசுவது மனம்
இது தவறாமல் நடப்பது தினம்,
சாலை விதிகள் கண்ணின்று மறைவு,
காதல் பேச்சில் மனமும் நிறைவு,
அதோ ஒருவன் தன்னை மறக்க
எஸ்,எம் எஸ் ஜோக்கில் தானே சிரிக்க
வேகமாய் வந்த பைக்கும் மோத
நானும் அவனுடன் ஒன்றாக் விழ,
ஸெல்போன் காதலன் மடிகிறான்,
அவனுடன் நானும் மடிகிறேன்
அமுதமும் விஷம் அளவுக்கு மீறினால்,
வேண்டாம் இந்தப் பரிட்சை
ஆபத்து செல்லினால்...
அன்புடன் விசாலம்.
,,
Friday, August 31, 2007
ஒரு செல் பேசுகிறது
Posted by Meerambikai at 10:33 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment