தில்லியில் ஒரு சமயம் என்னை ஒரு புத்தமத கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள், அதில் எல்லோரும் பிரார்த்தனை பின் தியானம் பின் அவர்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது, அதன் பின் செவிக்கு ரசமான உணவு, அதாவது பாஸிடிவ் சிந்தனை கொண்ட பாடல்கள், பின் நடனம் என்று பல அம்சங்கள் இருந்தன. என்னை அவர்கள் வயலின் வாசிக்க அழைத்திருந்தனர். அதன் பாட்டு "ஹே மாலிக் தெரே பந்தே ஹம்... அன்றுதான் முதன் முதலாக அந்தப் புத்த மதக் கூட்டத்தைப் பார்த்தேன், ஒரு அறையில் அழகான பர்மா தேக்கினால் ஆன மர அலமாரி அதில் பலவிதமான வேலைப்பாடுகள் கண்களைக் கவர்ந்தன. ஊதுவத்தியின் நறுமணம் ஊரைத் தூக்கியது, அந்த அலமாரியின் உள்ளே எதோ பாலி மொழியில் ஒரு மந்திரம் போல் எழுதி இருந்தது. ஒரு தலைவி ஒரு சேகண்டி எடுத்து, மூன்று முறை டண்... டண்... டண்... என்று தட்டினாள். பின் ஒர் கிண்டிபோல் உள்ளதிலிருந்து தெளிவான சற்று நறுமணமுள்ளத் தீர்த்தம் எடுத்துத் தெளித்தாள். சங்கு முழங்கியது... நிறைய பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. பின் எல்லோரும் கண்களை மூடிக்கொண்டனர். பின் அவர்கள் ஒரே குரலில் மந்திரம் சொல்ல ஆரம்பித்தனர், ஆஹா வண்டுகள் ரீங்காரம் செய்வது போல் ஓம் என்ற சத்தம் என் காதில் கேட்டது, அந்த ஹால் முழுவதும் தென்றல் வீசுவது போல் வரிசையாக அடுக்கடுக்காய் வந்தது. அவர்கள் சொன்னது "நம்யோஹோ ரெங்கே க்யூ..." இதைச் சற்று மூக்கால் சொல்லுகிறார்கள். நானும் கூடச் சொன்னேன் இதை தினமும் ஜபித்தால் எல்லா வித்ததிலும் வெற்றிதான் என்கிறார்கள் மன அமைதி கிடைக்கவும் இதைச் சொல்கிறார்கள். இதுவே வேகம் குறைவாகவும் பின் வேகமாகவும் மொழிகிறார்கள். அவர்களுக்கு சில எண்ணிக்கைகள் இருக்கின்றன, அது பிரகாரம் செய்கிறார்கள், இந்த இயக்கத்தின் தலைவர் மாகிகுச்சி Makiguchi,nikko shonan joshe Toda பின் கடசியில் அவர்கள் தங்கள் குருமார்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுமுடிக்கிறார்கள்,
ஷோய் ஷோஹோ ந்யோஸீஸோ nyo ze so
ந்யோஸீ ஷோ ந்யோ ஸோதாய் ,
ந்யோ ஸீரீகீ ந்யோஸீ ஸா
ந்யோ சீ இன் ந்யோஸீ என்,
ந்யோ ஸீகா ந்யோஸீ ஹோ
ந்யோ ஸீ ஹான் மக் காக்யோ டோ
ஷோய் ஷோஹோ ந்யோஸீஸோ nyo ze so
ந்யோஸீ ஷோ ந்யோ ஸோதாய் ,
ந்யோ ஸீரீகீ ந்யோஸீ ஸா
ந்யோ சீ இன் ந்யோஸீ என்,
ந்யோ ஸீகா ந்யோஸீ ஹோ
ந்யோ ஸீ ஹான் மக் காக்யோ டோ
சேகண்டியால் மூன்று தடவை டண்... டண்... டண்... என்று அடித்து முடிவு பெறுகிறது. அந்த ஹாலில் நற்றலைகள் பரவி என் உடலுக்குள் ஊடுருவிச் செல்வதை நான் உணர்ந்தேன்.
புத்தம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!
தம்மம் சரண கச்சாமி!
அன்புடன் விசாலம்
அன்புடன் விசாலம்
No comments:
Post a Comment