Wednesday, May 2, 2007

மாயாப்பூர் நரசிம்மர்




:ஓம் ஸ்ரீ நரசிம்ஹாய நம:


நவகிரஹப் ப்ரீதியில் செவ்வாய்க்கென்று இந்த ஸ்ரீ நரசிம்ஹவதாரம் படிக்க ஒரு சிறந்த பரிகாரமாகும்

பிரத்யாசிஷ்ட புராதன ப்ரஹரணக்கிரமா:
க்ஷணம் பாணிஜை:
அஸ்யாத் த்ரிணீ ஜகத்யகுண்ட மஹிமா,
வைகுண்ட கண்டீரவ:
யத்பிராதுர்பவனா தவந்த்ய ஜடரா
யாத்த்ருச்சிகாத் வேதஸாம்,

யா காசித் ஸஹஸா மஹஸுர க்ருஹ
ஸ்ததூணா பிதாமஹ்ய பூத்...


இப்போது நடந்த சம்பவத்திற்கு வருவோம், மேற்கு வங்கத்தில் ஒரு கோவில் அது இஸ்க்கான் இயக்கத்தைச் சேர்ந்தது அங்கு ஒரு சமயம் திடீரென்று கொள்ளைக் கூட்டம் வந்து கோவிலை ஒரு கலக்கு க்லக்கியது. ராதாவின் சிலை ஸ்ரீபிரபுபாதரின் சிலை ஸ்ரீ கிருஷ்ணரின் சிலை என்று, எடுத்துக் கொண்டு ஓடினர், அப்போது ஒருவர் அங்கு ஸ்ரீ
நரசிம்ம ஸ்வாமியின் உருவம் வைக்க இதுப்போல் நடக்காது என்றார், பின் அது போல் பெரிய ஆசார்யார்களிடம் கேட்டு சிலை வடிக்க முயன்றனர். அந்தச் சிலை உக்ர நரசிம்மர், அவர் கிரீடம் சுற்றி அக்னிப் பிழம்புகள், கண்களில் க்ரோதம், உடலில் ஒரு ஆக்ரோஷம் என்று செதுக்க வேண்டும். இந்த மாதிரி செதுக்க ஒருவரும் முன் வரவில்லை. கடைசியில் ஒரு தமிழ் நாடு ஸ்தபதி சிலை செதுக்க முன் வந்தார்.
அவரும் முதலில் செய்ய விரும்பவில்லை ஆனாலும் காஞ்சிப் பெரியவரிடம் உத்தரவு கேட்டு பின் சம்மதித்தார். உக்ர நரசிம்ஹரை வடித்தால் பிரதிஷ்டை செய்தால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதால் எல்லோரும் அதை வடிக்க பயந்தனர்.

அது ஸ்தாணு நரசிம்மர் அந்த நரசிம்மர் தான் தூணிலிருந்து உக்ரமாக வந்து ஹிரண்ய கசிபுவை அழித்தார் ,ஆகையால் அதை வடிக்காமல் வேறு மாதிரி வடிக்கும்படி முதலில் பெரிய ஆசாரியார் சொன்னார். பின் ஒரு வாரம் கழித்து அவரே இஸ்கானுக்கு இதே செதுக்கு என்று கடிதம் எழுதினாராம். அதற்குத் தகுந்த கல் தேர்வு செய்வது மிக மிக கஷ்டமானது, அந்தக் கல்லுக்கு உயிரோட்டம் வேண்டும். என்றும்
அதைக் குறிப்பிட்ட வகையான் வண்டு துளைப் போட்டு உள்ளே போயிருக்குமானால் அநதக் கல்லுக்கு உயிர் உண்டு என்றும் கண்டு பிடிக்கும் வழி காட்டினார். அந்தச் சிலயை வடிக்க ஒரு ஆண்டு ஆனது. அந்த நரசிம்மர் 120அடி ஆனது அதை வைத்துவிட்டு ஸ்தபதி
ஊர் செல்ல திடீரென்று ஊரெல்லாம் மழை பொழிந்தது. ஆனால் ஸ்தபதி வீடு தீ பிடித்துக் கொண்டது. எல்லா மக்களும் இந்தச் சிலையை தய்வுசெய்து மாயாபூருக்கு உடனே கொண்டுச் செல்லுங்கள், எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று முறையிட அந்தச் சிலை ஒரு லாரியில் மாயாபூருக்கு வந்தது. நடுவில் பல விதமான சங்கடங்கள் வந்து பின் சிலை வந்து சேர்ந்தது. பரமாச்சரியார்களின் அனுக்கிரஹத்தினால்
உக்கிர சிலை சாந்தமானது. பூஜை செய்ய ஆரம்பித்த அர்ச்சகர்கள் அவர் முகம் பார்க்கவே அஞ்சி பாதங்களப் பார்த்து அர்ச்சனைச் செய்ய நர்சிம்மர் ஒருவர் கனவில் வந்து இந்தக் கோவிலையும் உங்கள் யாவரையும் ரக்ஷிக்கவே வந்துள்ளேன், பயப்படத் தேவை இல்லை என்று அவர் தோளைக் குலுக்கினாராம்... மறுநாள் அவர் தோளில் நரசிம்மரின் நகங்களின் அழுத்தம் தெரிந்ததாம், அன்றைய தினத்திலிருந்து மிகச் சிறந்த விதத்தில் பூஜை நடந்து வருகிறது


:ஓம் ஸ்ரீ நரசிம்ஹாய நம:

No comments: