Monday, April 30, 2007

மே தினம்-எல்லாமே இனிப்புத்தான்!


முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே ஒரு அன்புப் பிணைப்பு, விசுவாசம், நேர்மை முதலியவைகள் இருத்தல் மிக அவசியம்.முதலாளிகளும் தொழிலாளிகளின் குடும்பத்தைத் தம் குடும்பமாகவே பார்த்தல் வேண்டும். அவர்களுக்கு மிக இன்றியமையாத வீடு, குழந்தைகளுக்குக் கல்வி ஆரோக்கியமான சூழ்நிலை, மருந்துகள்
வாங்க வசதி, ஓய்வு பெற்றவருக்கு ஒய்வூதியம், மருத்துவம் விடுமுறை, விடுதி, முதலியவைகளை ஏற்படுத்தி,வருடம் இரு முறை அவர்களுடன் கலந்து சுற்றுலா சென்று , ஜாதி பேதம் அந்தஸ்து பார்க்காமல் அவர்களுடன் கேளிக்கைகளில் பங்கு கொண்டு ஒரே குடும்பமாக பார்த்தால் தொழிலின் வளர்ச்சிப் பெருகும். அது பெருகினால் நாட்டின்
பொருளாதாரம் பெருகும். இந்த விஷயத்தில் சக்தி மசாலா கம்பெனி, ராம்கோ நிறுவனங்கள், விகேயென் நிறுவனம் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்றவர்களைப் பாராட்ட வேண்டும், அவர்கள் தொழிலுடன் சேர்ந்து நாட்டிற்கு தொண்டும் செய்கிறார்கள்.
வாழ்க தொழிலாளர் தினம்!



ஒரு கவிதை தொழிலாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்


உழைக்கும் வர்க்கம் வியர்வை சிந்த
தனி நிர்வாகம் அவர்களை மேலும் உந்த,
வேலையில் ஒரே கட்டுப்பாடு,
தினக் கூலியிலும் குறைபாடு,
அடிமையாக்கி அவர்களை மிரட்ட,
சிக்கல்கள் அங்கு பின்னிக் கொள்ள,
போராட்டங்கள் தலை தூக்க,
இரு வர்க்கத்தின் உறவுக் குன்ற,
வந்தது முடிவில் கதவடைப்பு,
ஒரு பெரிய அடி ஏழை வயிற்றில்,
குழந்தைகளோ நடுத் தெருவில்,
இத்தகைய நிகழ்ச்சி...
பொருளாதார வீழ்ச்சி...
வாழ்வுக்கொரு தாழ்ச்சி...
உரிமைகளை நிலை நாட்ட...
வன்முறைகள் தலை தூக்க...
ஒரு பெரிய பூட்டு கதவில் சிரிக்க...
மனதிலே அழுகிறான்...
நேர்மை உழைப்பாளி...


வளரும் தொழிற்சாலை
நல்லிணக்கத்தால்,
உயரும் அது
நல்லுறவுகளால்,
தவறுக்கு தேவை ஒரு மன்னிப்பு,
மெமோ நோட்டீஸ் புறக்கணிப்பு
இணக்கம் குறைவதில்லை,
இயக்கம் நிற்பதில்லை,
உருவாக்கம் பன்மடங்கு பெருக...
ஆர்வம் அங்கு போட்டி இட...
வளர்ச்சிக்கு அன்பு உரம் போட்டு...
ஆரோக்கியப் போட்டி வளர்க்க...
மனம் நிறைந்த தொழிலாளி...
மனம் ஒன்றிச் செயல்பட...
உற்பத்தி பெருகும்,
பொருளாதாரம் சீர்படும்,
தேவை தொழிலாளிக்கு...தொழிலில் அக்கறை!
வேண்டும் முதலாளிக்கு... அவர்களின் அக்கறை!
இரண்டும் நிலைத்தால்
சிரிதளவும் கசப்பல்ல
எல்லாமே இனிப்புத்தான்


வாழ்க தொழிளாளர்களின் தினம்!
தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள்!
அன்புடன் விசாலம்

No comments: