Saturday, January 24, 2009

தேசிங்கு ராஜன்

சிங்கவரம் அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது ,இதுசெஞ்சிக்கு வடக்கே ஐந்து கிமீ தூரம் உள்ளது இக்கோயில் மலையின் மேல் இருப்பதால் 125 படிகளைக் கடக்க வேண்டும்,எல்லோரா போல் ஒரே பாறையைக்குடைந்து செய்யப்பட்டக்கோயில் ,,,,,இந்தப்பாறையிலேயே முன் புறம் இரு தூண்கள் மிகப்பெரிய அளவில் நிற்க உள்ளே நீண்ட கருவறை தெரிகிறது .அங்கு ஆதிசேஷன் சுருண்டுக் கிடக்க அந்தப்படுக்கையில் அனந்தசயனமாக அரங்கன் சயனித்திருகிறார் , இந்த அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம் ,எந்த வேலைச்செய்தாலும் இந்தஅரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம் இங்குத் தாயார்சன்னதியும் இருக்கிறது தேசிங்கு ராஜன் தன் செஞ்சிக்கோட்டைஅரண்மனையிலிருந்தே அந்த்க் கோயிலுக்குச்செல்ல சுரங்கப்பாதைஅமைத்தாராம் அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச்செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது எந்தப்போருக்குச்சென்றாலும் தேசிங்கு இந்த அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம் அவரது கடைச்ப்போரின் போதும் அந்த ரங்கநாதனிடம்"நான் போருக்குப்போகவேண்டும்உத்தரவு கொடுங்கள் என்று கேட்டார் ,ஆனால் அரங்கநாதன் உத்தரவு தராமல் தன் சிரத்தை திருப்பிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது மொகலாயப்பேரரசின் படைத் தளபதியாக ஸ்வரூப் சிங் என்பவர் மிகத்திறமையுடன் கைக்கொடுத்தார் பல எல்லைகளை விரிவுபடுத்தினார் , 17ம் நூற்றாண்டில் செஞ்சியில் ஒரு பகுதியை ஆட்சிக்காகத்தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்வரூப் சிங் அங்கு அனுப்பப்பட்டார். இந்த ஸ்வரூப் சிங், அவரது மனைவி ராமாபாய்க்கு சிங்கம் போன்று அழகியவீரன் பிறந்தான். அவனது பெயர் தேஜாசிங் இந்தத் தேஜாசிங்தான் ராஜா தேசிங்கு ஆனார் , சிறுவயதிலேயே பல ஆயுதங்களுடன் விளையாடுவான் புலிகளுடன் சண்டைப் போடுவானாம் ,தில்லியில் நீலவேணி என்ற குதிரையை அடக்க ஸ்வரூப் சிங்அழைக்கப்பட்டார் ஆனால் அவரால் அதை அடக்க முடியவில்லைஇதனால் அந்த மன்னன் இவரைச் சிறையில் அடைத்தான் சிறுவன் தேஜாசிங் தன் தந்தையைக் காணாமல் தாயிடம் இதைப்பற்றிக்கேட்டான் அதற்கு அவன் தாய் அவர் சிறையில் அடைக்கப்பட்டக் காரணத்தைக்கூறினாள் உடனேயே அங்குச்சென்றான் அப்போது அவனுக்கு 15 வயது தானாம்அந்த நீலவேணி என்ற குதிரையை அடக்கி தன் தந்தையை மீட்டுவந்தான் , இதற்குப்பரிசாக படைத்தலைவன் பீம்சிங் தன் மகளைத் திருமணம் செய்துக்கொடுத்தான்.ஸ்வரூப்சிங் ஆட்சியைத் தொடர்ந்தார் ஆனால் இறந்து போனார் .தேசிங்கு ராஜாவாக விரும்பினான் ஆனால் அவனை ராஜாவாக முடிச்சூடுவதை ஆர்க்காட்நவாப் மறுத்தார் ஏனென்றால் தேசிங்கு தில்லியில் கப்பம் கட்ட மறுத்ததே காரணம் . ஆனாலும் அஞ்சா நெஞ்சத்துடன் பரம்பரை உரிமை விடாமல் எதிர்ப்புகளையும் முறியடித்துவிட்டு தானே மன்னராகமுடிசூட்டிக்கொண்டார்ஆர்க்காடுநவாப் போருக்கு அழைத்தான் அப்போதுதான் தான் போருக்குப்போகலாமா என்று அரங்கனைக் கேட்க கோயிலுக்குச்சென்றார் ஆர்க்காடு நவாப்மீது அவர் மிகவும் கோபத்தில் இருந்ததால் போருக்குச்செல்லும் வேகமும் அதிகமாக இருந்தது , கோயிலில் திருவரங்கன் தன்தலையைத் திருப்பி மறுப்புத்தெரிவித்தும் ஆறிலும் சாவு நூறிலும்சாவு நான் மடிந்தால் வீரமரணமாக மடிவேன் என்று கூறி போருக்கு வந்தார். தர்மத்தை,மீறி ஆர்காடு நவாப் சாததுல்லாகானால் நயவஞ்சகமாக தேசிங்கு கொல்லப்பட்டார் என்று கூறப்டுகிறது. அவருடன் அவர் மனைவியும் உயிரை விட்டாள் ,நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன. கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணியின் சமாதியும் இருக்கிறது அரங்கன் சன்னதியில் திருமணம் செய்தால் எல்லா வளமும் பெற்று தம்பதிகள் மிகச்சிறப்பாக வாழ்வார்கள் என்று நம்புகிறார்கள் இங்கிருக்கும்மக்கள். ,மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறப்பு விழாவும் வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாக நடைப்பெறுகின்றன பூதேவியுடன் வாராக மூர்த்தியும் அமைந்துள்ளது இங்குஅமையப்பெற்ற குளமும் சுனையும் இயற்கை எழிலில்அழகுடன் விளங்குகிறது மாசிமகம் திருவிழாவும் வீதிஉலாவில்அரங்கன் அலங்காரங்களுடன் ஆடி அசைந்து வருவது ந்ம்மைப்பரவசமடைய்ச்செய்கிறதுஅங்கு இருக்கும் கிராம மக்கள் இன்றும் தேசிங்கு ராஜனின் சரித்தரத்தைநாட்டுப்பாடலாக பாடுகின்றனர் வில்லுப்பாட்டும் நடக்கிறதுஎல்லாம் அவருடைய வீரம் தீரம் வெளிப்படும் பாட்டுக்கள் இத்தனைச்சிறுவயதிலேயே பலப்போர்களைச்ச்ந்தித்து வெற்றிக்கண்டு செஞ்சியை ஆண்டதேசிங்கு என் மனதில் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு விட்டார் என்றுசொல்லவும் வேண்டுமா ?

No comments: