Tuesday, January 6, 2009

அழுதாமலை

அழுகை நதி என்று ஒரு நதியா ? ஆம் இருக்கிறது ,இதைச்
சபரி யாத்திரைக்கு நடந்துச்செல்லும் பகதர்கள் காணலாம்
ஒரு அரக்கியின் கண்ணீர் ஒரு நதியாகவே ஓடுகிறது என்றால் வியப்பாக இருக்கிறது .அந்த
அரக்கியின் பெயர் மகிஷி.மகிஷியை வதம் செய்ய மணிகண்டன் அம்பு எய்ய அது மகிஷியைத்
தாக்கியது.அவள் உடலைத் துளைத்தது .அவள் அப்படியே சரிந்து விழ அவளது தீய
எண்ணங்களும் குணங்களும் சரிந்து வீழ்ந்து விட்டன ,அவள் தவறை உணர்ந்து ஸ்ரீஐயப்பனிடம்
அழுதபடியே மன்னிப்பு கேட்டாள் ,அப்போது அவளது கண்ணீர் ஆறாகப் பெருகி அழுதா நதியாக ஆனதாம் அவள் போரிட்ட இடம் அழுதா மலையானது.

சபரி மலைக்குப் போகும் பக்தர்கள் முதலில் அழுதாநதியில் குளிக்க வேண்டும் பின் அந்த நதியிலிருந்து ஒரு கல்லை எடுத்துக்கொண்டு தன்னிடத்தே வைத்துக்
கொள்ள வேண்டும் பின் பல மேடு பள்ளங்களைக் கடந்து அந்த மேடு முடியும் தருவாயில்
அந்தக் கல்லைப் போட்டு விடவேண்டும் எந்த இடத்தில் போட வேண்டும் என்பதைத்
தெளிவாக எழுதியும் வைத்திருக்கின்றனர் அதன் பெயர் "கல்லிடும் குன்று" இங்கு ஏன் எல்லோரும் கல்லைப் போடவேண்டும்? மகிஷியோடு உடல் அங்கு பூதங்கணங்களால் புதைக்கப்பட்டதாம் ,பூதகணங்கள் பல கற்களைப்போட்டு புதைத்தனராம் இதை நினனவு கூறும் சம்பவம் தான் கல் போடும் சம்பவம் ,

பின் வருகிறது கரிமலை கரி என்றால் சம்ஸ்கிருதத்தில் யானை , இதிலிருந்து தெரிகிறது
அந்தக்காடு முழுதும் யானைகள் இருக்கும் காடு என்று ,,கடும் விரத்ம் இருந்து ஐயப்பனின்
நாமம் ஒன்றே மனதில் இருத்திச்செல்லும் பகதர்களுக்கு இந்த இடத்தில் ஐயப்பனே துணை இருந்து கை கொடுப்பார் ,இந்தப் பாதை ஏறுவது மிகக் கடினம். மன திடத்துடன் பல பக்தர்கள்
ஏறுகிறார்கள் , இப்போதெல்லாம் சிலர் பம்பா நதிக் கரையிலிருந்து சபரி யாத்திரை ஆரம்பிக்கிறார்கள்

ஸ்வாமியே சரணமய்யப்பா

No comments: