Saturday, January 31, 2009

சூரியனுக்கு கோயில்கள்

எல்லா அன்பர்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள் பொங்கும்மங்களம் எங்கும் தங்குக,,சூரியன் உத்தராயணத்தில் பிரவேசிக்கும் நாள்தான் இந்தப் பொங்கல் திருநாள் இதை மகா சங்கராந்தி என்று வடக்கில் சொல்வார்கள் சூரிய பகவான் நமக்குக் கர்மயோகத்தை விளக்குகிறார், நம் மனதிலுள்ள இருளை நீக்கி ஞானம் என்ற ஒளியைப்பெற்றுக் கொள் என்று சொல்லாமல் தன் மூலமாகத் தெரியப் படுத்துகிறார் அந்தச் சூரியச் சக்தி{solar energy}யினால் தான் உலகமே இயங்குகிறது ஒரு நாள் சூரியன் இல்லையென்றால் உலகமே இருள் தான் . மழை வருவதும் செடி கொடிகள் வளருவதும் நமக்கு உணவு கிடைப்பதும் இந்த ஆதவனால்தான் சூரியன் என்றாலே அப்பழுக்கிலாதத் தனமை ஒழுங்கு {perfection} ஒரே சீரான ஓட்டம் பிரதி பலன் பார்க்காமல் செய்யும் கடமை எல்லோரும் சமம் என்ற நோக்கு தன் ஒளியை எல்லோருக்கும்தந்து தான் இன்பமுறல் என்றெல்லாம் நமக்குப்பார்க்க முடிகிறது "தத்வ மஸி" என்றத் தத்துவம் விளங்குகிறது இந்த நன்நாளில் ஆதித்ய ஹிருதயமும் காயத்திரி மந்திரமும் ஜபித்தால் அதனுடைய சக்தியே தனிதான் இத்தனைச்சக்தி தரும் சூரியனுக்கு மிகவும் குறைவாகத்தான்கோயில்கள் இருக்கின்றன ,எனக்குத் தெரிந்து குமபகோணம் அருகில் இருக்கும் சூரியநாராயணர் கோயில் ஒரிஸ்ஸாவில் இருக்கும் கொனாரக் பின் காஞ்சியில்இருக்கும் இஷ்ட சித்தீசம் என்னும் ஒரு கோயில். என் நினைவில் வருகின்றன.இஷ்டசித்தீசம் கோயிலில் வடகிழக்கில் துர்க்கைஅமர்ந்திருக்கிறாள் தென் கிழக்கில் சூரியன் விளங்க நடுவில் இறைவன் கச்சாபேசன் அருள் புரிகிறார் ,சூரியனுக்குரிய நாள் ஞாயிறு ,,இத்தினத்தில் சூரிய வழிபாடு பூசை நட்க்க்கிறது . மயூரசன்மன் என்ற மன்னனுக்கு கண்பார்வை இல்லாமல் பின் சூரியனை வழிப்பட்டுசூரிய சதகம் என்னும் நூலை இயற்றினானாம். தீவிரமாக் அந்த வழிப்பாட்டில் மனம்ஈடுபட அவன் கண்ணொளி பெற்றானாம் இங்குக் கார்த்திகை மாதம் ஞாயிறு மிகச்சிறப்பு வாய்ந்தவை.இந்தத் தினத்தில் பக்தர்கள் இஷ்ட சித்தி தீர்த்தத்தில்
நீராடி பின் ஒரு புது மண் சட்டியில் மாவிளக்கு மாவு போல் வைத்து பின் அதன் நடுவில் அகல் தீபம் ஏற்றி வைத்து பின் அதற்கு நைவேத்தியப்பொருளகள் சமர்ப்பித்து பின் தலையில் சுமந்துக்கொண்டு கோயிலை வலம் வருவார்களாம்,இதனால் தலைவலி காதுவலி கண்ணில் ஏற்படும் கோளாறுகள்எல்லாம் போய்விடும். இந்த நேர்த்திக்கடனை கர்த்திகை ஞாயிறு செய்ய இயலவில்லை என்றால் திருவாதிரை அன்று செய்ய வேண்டும்.சூரிய நாராயணர் கோயில் ஒரு பரிகாரக்ஷேத்ரமாக விளங்குகிறது ஒருவர் ஜாதகத்தில் சூரியன் நீச்சனாக இருந்தாலும் அல்லது சத்ரு ஸ்தானத்தில் இருந்தாலும் இங்கு வந்து பரிகாரம் செய்துக்கொள்கின்றனர் இந்த ஒரு இடத்தில் தான் அடுத்து வருவது சூரியநாராயணர் கோயில் இது கும்பகோணம் அருகில் உள்ளது,வெள்ளெருக்குச் செடிகள்பல இங்கு இருக்கின்றன , இந்தக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் சூரியபகவான் நடுநாயகமாக தன் இருமனைவிகளுடன் அமர்ந்து அருள் பாலிக்கிறார் . அவரைச்சுற்றி மற்ற கோளகளின் நாயகர்கள் தங்கள் மனைவியுடன் அமர்ந்து அருள்புரிகின்றனர் எல்லோருக்கும் தனித்தனி சிறு கோயில் உண்டு ,இது போன்றஅமைப்பு உள்ள கோயில் இது மட்டுமே ,,,,,அடுத்து வரும் சூரியன் கோயில் ஒரிஸ்ஸாவில் இருக்கும் கொனாரக் இது கங்கைநதி தீரத்தில் அமைந்துள்ளது இந்தக்கோயில் பலதடவைகள்படையெடுப்பால் சூரையாடப்பட்டு அதன் பல பாகங்கள் சிதிலடைந்துவீணாகிப்போய்விட்டது தவிர இயற்கையின்சீற்றத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் பாழ்பட்டு விட்டதுஎஞ்சி இருக்கும் கோயிலைப் பார்க்க பல வெளி நாட்டவர்கள் வருகின்றனர்,இதன் கட்டடக் கலை மிகச்சிறப்பு வாய்ந்தது இதன் கலை நுட்பத்தைச் சொல்ல இயலாது . அங்கு இருக்கும் சிற்பங்களும் செதுக்கின விதமும் மிகவும் வியப்படைய வைக்கின்றன.முதலாம் நரசிம்மதேவன் 13ம் நூற்றாண்டில் மிகவும்வித்தியாசமான முறையில் இதைக் கட்டினான். கற்கள் நடுவேஇரும்புத்துண்டுகளின் இணைப்புக் கொடுத்துக்கட்டப்பட்டுள்ளது சூரியன் ஏழு குதிரைகள் கொண்ட தேரில் பவனி வருகிறான்அந்தத் தேரின் சக்கிரங்கள் 24அந்தச்சக்கிரங்களின் வேலைப்பாடு மிகவும் மனதைக்கவர்கிறது .பிற்காலத்தில் சூரியனின்சிலை அகற்றப்பட்டு
தற்போது பூரியில் இருப்பதாகச் சொல்கிறார்கள் ,இந்த கோயிலில் விளங்குகளின் சிலைகள் பறவைகளின் சிலைகள் அதைத்தவிர தேவ்தேவிகள் அபசரஸ் போன்ற அழகிகள் எல்லாம் மிக நுணுக்கமாகச்செதுக்கப்பட்டிருக்கின்றன , குழந்தைகளும் இந்த விலங்குகள் பறவைகளால் ஈர்க்கப்படுகின்றனர் ,இளைஞர்களுக்கு காமசூத்ராவின்அடிப்படையில் பல சிற்பங்கள் அங்கே காணப்படுகின்றன .வயதானவர்களுக்கும் தேவ தேவிகள்அருள் புரிகின்றனர் ,கோயில் மூன்று பிரிவுகளாக உள்ளது சூரியன் ஒவ்வொரு நாலு மாதத்தில் ஒவ்வொருபிரிவின் வழியாக தன் ஒளியைத் சூரியனார் மீது வீச வைக்கிறான்,இந்தக்கோயிலை யுனெஸ்கோ உலகப்பாரமபரியச்சின்னமாகப் பாதுகாத்து வருகிறதுசூரியனைப்பூஜிப்பது சௌரமதம் என்கிறார்கள்..பொங்கல் என்பதே விவசாயிகள் புது நெற்கதிரை எடுத்துஅதில் பொங்கல் படைத்து இறைவனுக்கு நன்றி சொல்லும் நாள் இங்கு இறைவன்சூரிய பகவான் தான்அவனில்லாது வெளிச்சம் இல்லை மழை இல்லைமழை இல்லையென்றால் பயிறும் இல்லை ,,,.ஏழைத் தன் வியர்வைச் சிந்தி ஒவ்வொருத் துளிகளையும் தன் பயிறுக்குள் அர்ப்பணித்துநமக்கு உண்வாகக் கொடுக்கிறார்கள் அவர்கள் அந்த விளைச்ச்லுக்காக கடவுளுக்குமறக்காமல் தங்கள் முதல் சாகுபடிக் கதிரை அர்ப்பணிக்கிறார்கள் .நாம் இன்று நமக்குஉண்வை வழங்கும் அவர்களை நினைத்துக் கொண்டு அவர்கள் பயன் படும்படிஎதாவது நல்லக் காரியம் செய்து ஒரு புது விதமாகக் கொண்டாடலாமே

No comments: