Friday, September 7, 2007

கணபதி பப்பா மோரியா

மூஷக வாஹன மோதக ஹஸ்தா சாமர கர்ணா
விளம்பித சூத்ர வாமன ரூபா மஹேஸ்வர புத்ர
விக்ன வினாயக பாத நமஸ்தே ,,,,,,,,,

இந்த ஸ்லோகம் பிள்ளையார் சதுர்த்தி அன்று விசேஷமாகச் சொல்வார்கள் தினமுமே இதைச் சொல்ல வேண்டும்
இதன் பொருள் ,,ஒ வினாயகா தடங்களைக் களைபவரே மூஞ்ஜுரை வாகனமாக வைத்திருப்பவரே கையில் குழக்கட்டை ஏந்தி இருப்பவரே ,குள்ளமாக இருப்பவரே அகலமான
காதைக் கொண்டிருப்பவரே மஹேஸ்வரரின் புத்திரரே
பெரியத் தும்பிக்கை உடையவரே உங்கள் பாதங்களை
நமஸ்கரிக்கிறோம்
கணபதியின் பிறந்த் நாள் ஆவணிமாதம் சதுர்த்தி அன்று
வரும் ,அவருடைய மந்திரம்,,ஓம் கங்கணபதயே நம:
"ஓம் ஸ்ரீ கணேசாய நம: என்றும் பூஜிப்பார்கள்

கணபதியின் காயத்ரி
"தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்திப் பிரஜோதயாத் "

கணபதியையே எல்லா பூஜைகளுக்கும் முதலில் ஆரமப
பூஜையாகச் செய்கிறோம் விகனமில்லாமல் முடித்து
வைக்க வேண்டிக்கொள்கிறோம் அவர் எலியை
வாகனமாக வைத்திருப்பது நமது அஹங்காரத்தை அட்க்குவது ,அவரது பெரிய யானைத் தலை அறிவை
வெளிப்படுத்துகிறது எந்தக் கடவுள் உருவத்திற்கும்
இல்லாத ஒரு தனிப் பெருமை கண்பதியிடம் உள்ளது
அவரது உருவத்தை உற்று நோக்கினால் "ஓம் "
என்ற பிரணவம் நமக்குத் தென்படும் , தும்பிக்கையுடன்
சேர்த்துப் பார்க்க வேண்டும் வைணவர்கள் அவரைத்
தும்பிக்கை ஆழ்வார் என்று சொல்வார்கள்

ஒரு வேடிக்கையானப் புராணக்கதை பார்க்கலாம்

கணபதிக்கு மோதகம் என்றால் மிகவும் பிடிக்கும் ,
ஒரு பிறந்த நாளின் போது அவருடைய பகதர்கள்
எல்லோரும் மோதகம் படைக்க அவரும் அவைகளைத்
தின்று விட்டார் தம் வாகனத்தில் அமர்ந்து இரவில்
ஒரு சுற்று வலம் வந்தார் ,இருட்டில் அந்த எலி தடுக்கித்
தடுமாறியது ,அந்தப் பக்கம் ஒரு பாம்பு ஓடியது எலி அந்தப் பாம்பைப் பார்த்து பயந்தது ,,எலி அப்படியே
கீழே சாய கணபதியும் அப்படியே சரிந்து கீழே விழுந்தார் ,வயிறு திறந்து குழக்கட்டைகள் வெளியே வர
அவைகள்: கீழே விழாதபடி உள்ளே அழுத்தி அந்தப்
பாம்பைப் பிடித்து தன் இடுப்பில் பெல்ட்டு போல்
கட்டிக்கொண்டார் இதை எல்லாம் வானத்திலிருந
சந்திரன் பார்த்து பின் சிரித்தான் ,இதில் கோபம்
அடைந்த அவர் தன் ஒரு தந்தத்தை ஒடித்து அவரைத்
தாக்கினார் சாபமும் " யார் சதுர்த்தி அன்று சந்தரனைப் பார்க்கிறாரோ அவர் புகழ் மங்கும் " சந்திரன் மன்னிப்புக்
கேட்டவுடன் "கங்கணபதயே நம; என்று சொல்பவர்களுக்கு
எப்போதும் க்ஷேமம் உண்டாகும் என்று ஆசிவழங்கினார் ,,குழந்தைகளே நீங்களும் கணபதியைத்
தொழுது அவர் ஆசி பெறுங்கள்



அன்புடன் அம்மம்மா
,

No comments: