Friday, September 7, 2007

தாமரை இலைத் தண்ணீர்

தாமரை இலைத் தண்ணீர் போல் ,,,,,,,,,


இந்தப் புகைப்படம் நானேதான் ,
தனிமையில் இனிமைக் காணும் நான் ,
என் முன்னே நிழற்படங்கள்
பழைய நினைவுச் சித்திரங்கள் ,
அழகான ஒரு வீடு,அன்பு மகனுக்கு,

பார்த்துப் பார்த்து இழைத்தேன் ,
அவன் ருசியில் பிணைத்தேன் ,
ஒவ்வொரு அறையும் பேசும் ,
என் மகனின் வாசனை வீசும்
சுவற்றில் பல விசிறிகள்
"ஜாக்கி சேனனின் போஸ்டர்கள்
கூடவே டென்னிஸ் வீரர்கள்
அழகிய கிரிக்கெட் மன்னர்கள்,
மனம் பிடித்து வசித்தோம் ,
ஒரு வருடம் இனித்தோம் ,

மேலே மேலே படிப்பு ,
ஹாஸ்டலில் இருப்பு ,
அவன் அறை எப்போதும் காலி தான் ,
எல்லாமே ஒரே போலிதான் ,
பல பொருட்களில்,அவன் நினைவு ,
எப்போதும் அவன் கனவு ,
கிடைத்தது வேலை அயல் நாட்டில் ,
தனித்திருந்தேன் நான் நம் நாட்டில்
முதலில் வந்தன அன்பு கடிதங்கள் ,
கூடவே வந்தது திருமணப்படங்கள்
அவன் அறை என்னைப் பார்த்து சிரித்தது
என் ஏக்கத்தை அது ரசித்தது ,
வ்ருடங்கள் உருண்டன ,
கண்ணீரும் பெருகின
கீதைக் கண்களைத் திறந்தது
தாமரை இலைப் போல்
ஞானம் பிறந்தது
மாயை உணர்ந்தது ,
பற்றுடன் பற்றற்றவளானேன்
கடமைச் செய்யும் தாயானேன் ,
எங்கிருந்தாலும் வாழ்க
உன் நினைவில் நான் மலர்வேன்,


அன்புடன் விசாலம்

,

No comments: