Thursday, March 29, 2007

தியானம் 2

ஆனந்தமயீ சைத்தன்யமயீ சத்யமயீ பரமே.
தியானம் தொடருகிறது. தியானம் ஆழ்மனதிலிருந்து வரும் சக்தியால் தன்னையே அறிதல்எனலாம்.

அதற்கென்று பலமணிகள் காட்டினிலே அல்லது தனிப்பட்ட இடத்திலே
உட்ககார்ந்து தியானம் செய்ய தேவையே இல்லை. அன்புடன் ஒரே சிந்தனையுடன்,
ஒரே சித்தத்துடன், ஒரே இலட்சியத்துடன் தியானித்தாலே போதும். அந்த நேரம் நம் ஒரே குறிக்கோள் கடவுள்தான். நினைப்பது அந்த சக்தியை. நம் மூச்சும் அதுவே, அன்பும் அதுவே,
வசிப்பதும் அதுவே, ஸர்வம் பிரும்ம மயம். இது நிச்சயமாக அறிவு சம்பந்தப்பட்டது இல்லை. இதை அறிவுடன் சம்பந்தப்படுத்தினால், சிதறிப்போகும். வாக்குவாதங்கள் வளரும்.
உள்ளே ஆழமாகப் போவதற்குபதில், சிதறிப்போகும்.இது முழுமையாக ஆத்மா சம்பந்தப்பட்டது.
இல்லறம். துறவறம் நமக்கு தெரிந்ததே. அன்னை கூறுகிறாள்... ”துறவறத்தின் சிறப்புக்கள் தியானம், தபஸ் போன்றவை. ஸன்யாசி யோகி, ரிஷி போன்றவர்களுக்கு இந்த சிறப்பு உண்டு. ஆனால் நாம் இல்லத்தில் இருந்துக்கொண்டே துறவறத்தின் உயர்வுகளை நாம்
கொண்டு வரலாம். அப்போது நம் வாழ்வு பூரணம் பெறுகிறது. அதைப் பெற ஆன்மா வாழ்விலிருந்து வெளி வந்து வாழ்வை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே பூரண யோகம்.
பகவான் அரவிந்தர் கூறுகிறார் "குணங்களைத் தூய்மை படுத்தினால் வாழ்வு தூய்மை
படுகிறது.தூய்மையான வாழ்வு அதன் ஆன்மாவுக்குவிடுதலை அளிக்கிறது.வாழ்வின்
ஆன்மா வெளி வ்ந்து பூலோக ஸ்வர்கம் ஆக்குகிறது "

"purified mind move to touch the purified spirit
purified life permits purified soul to emerge into life "

இதுவே தியானத்தின் தத்துவம்.. இவ்வளவு ஆழமாக போக.நாம் பக்குவம் ஆகாததால்
ஒருமுகமாக சமர்ப்பணத்துடன் கடவுளுடன் நேரில் பேசுவது போல் பேசினாலே நமக்கு
பலன் கிடைக்கும். நம் கண் எதிரே ஒரு மீரா, ஒரு ஆண்டாள், ஒரு நந்தனார் இவர்களைப் பார்க்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தெய்வமாகலாம். சிறிது முயற்சி,
சிறிது உழைப்பு,முழு நம்பிக்கை இருந்தால் உள்ளே ஒளிந்திருக்கும் தெய்வத்தன்மையை தேடி அதனுடன் ஒன்றி சைத்திய புருஷனை வெளிக்கொணரலாம்.
ஆனாலும் இந்தப் பக்குவத்தை அடையஒரு குரு தேவை.குரு கிடைப்பதும் நம் பூர்வ புண்யம்தான் தானே கற்று செய்வதைவிடஒரு குருவின் ஆசியுடன் செயவதுமிக சிறப்பு
ஆசீர்வாதத்திற்கு அவ்வளவு பலன். அவர் நம்மை தியானம் மூலம் உயர்துகிறார். தகுந்த
சமயத்தில் நம் ஆர்வத்திற்கேற்ப கடவுளே தகுந்த குருவை நமக்கு அனுப்பி வைக்கிறார்
நான் முதலில் கற்றுக்கொண்ட தியானம் ராமகிருஷ்ண மடம் டில்லியில். அங்கு தீக்ஷை
எடுத்து மூலமந்திரத்தை ஜபிக்க வேண்டும் குருவை நம் கண் முன்னால் நிறுத்திக் கொள்ளல் வேண்டும். அதன் பின் எடுத்த தியானம் தீப ஒளி தியானம் பகவான் பாபா
வினுடையது. மிகவும் எளிமையானது. சக்தியானது. விடிகாலையில் மனதை தூய்மை
யாக வைத்து ஒரு ஆசனத்தில் அமர்ந்து ஒரு சின்ன விளக்கு அல்லது மெழுகு வர்த்தி
ஏற்றி அன்புடனும் சிரத்தையுடனும் அந்த சுடரை ஒன்றி கவனித்து அந்த ஒளியை
இரு புருவத்திற்க்கு நடுவில் கொண்டு வந்து, பின் அதை நம் இதயத்திற்கு கொஞ்சம்
கொஞ்சமாக நகர்த்தி அன்பை ஒரு தாமரை மலர்போல் பாவித்து ஒவ்வொரு இதழாக
விரிய விட வேண்டும். இப்போது அந்த ஒளி பெரிதாக வளர்ந்து உடல் முழுவதும் பரவி
நம்மை அந்த தெய்வத்தன்மைக்கு அழைத்துப் போகிறது. தினம் ஒருமுறை இதை பழக
எண்ணங்கள் புனிதமாகி, மனிதனும் தெய்வ சக்தி பெறுகிறான்………….மேலும் வளரும்

1 comment:

Balamurali said...

வசிப்பதும் அதுவே. ஸர்வம் பிரும்ம மயம்.இது நிச்சயமாக அறிவு சம்பந்தப்பட்டது இல்லை.இதை அறிவுடன் சம்ப்ந்தப்படுத்தினால். சிதறிப்போகும். வாக்குவாதங்கள் வளரும்.
உள்ளே ஆழமாக போவதற்குபதில்.சிதறிப்போகும்.இது முழுமையாக ஆத்மா சம்பந்தப்பட்டது.

சத்தியமான வார்த்தை!

"ஆனாலும் இந்தப் பக்குவத்தை அடையஒரு குரு தேவை.குரு கிடைப்பதும் நம் பூர்வ புண்யம்தான் தானே கற்று செய்வதைவிடஒரு குருவின் ஆசியுடன் செயவதுமிக சிறப்பு

சமயத்தில் ந்ம் ஆர்வத்திற்கேற்ப கடவுளே தகுந்த குருவை நமக்கு அனுப்பி வைக்கிறார்"

குருவே நமஹ!