Sunday, April 15, 2007

வர்ணப் பூச்சிற்கு ஒரு திருவிழா!

வட நாட்டில் ஹோலி என்ற பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டடுவார்கள் பலவருடங்கள் அங்கேயே நான் இருந்து விட்டதால் அதை இன்று ஒரு கவிதையின் மூலம் நினைவு கொள்கிறேன்.
எல்லா அன்பர்களுக்கும் என் அன்பு கனிந்த ஹோலி வாழ்த்துக்கள்!

வர்ணப்பூச்சிற்கு ஒரு திருவிழா!
தண்ணிர் பீச்சிற்கு ஒரு தனி விழா,
அன்பை வெளிப்படுத்தும் இந்த நாள்,
இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு நாள்,
ஆண்கள் பெண்கள் ஆலிங்கனம்,
அன்பில் களிக்கும் அவர்கள் மனம்,
"ஹோலி"என்ற பெயராம் இந்நாள்,
வசந்த காலம் நுழையும் திருநாள்
அன்பு மகன் தன் தாய்க்கு வண்ணம் பூச,
தாயும் நேசத்துடன் அவனை அணைக்க
வண்ணங்களின் கலவையில் முகம் மறைய,
மனம் ஒன்றே திறநது அன்பு வெளிப்பட
அந்த அன்பில் இறைசக்தியும் ஒளிர
"ஹோலி ஹை...ஹோலி" என்ற கோஷம்
கறுப்பும் சிவப்புமாய் அப்பிய வேஷம்,
காதல் மன்னர்களுக்கும் தனிப்பட்ட கொண்ட்டாட்டம்.
கன்னிப் பெண்களுக்கு அன்று படு திண்டாட்டம்,
சினிமா கதாநாயகி போல் நீரில் நனைய,
ஈரத்துடன் மேனியின் அழகும் விளங்க,
"பாங்" என்ற போதையில் பலரும் மிதக்க,
"ராதா கிருஷ்ணரின் பாவத்தைக் காட்ட,
எங்கும் மகிழ்ச்சி எங்கும் உல்லாசம்,
எங்கும் அணைப்பு எங்கும் உத்சாஹம்,
வரும் பௌர்ணமியில் இந்த "ஹோலி" திருநாள்
"ஹோலிகா" அரக்கி எரிந்த இந்த நாள்...


அன்புடன் விசாலம்

No comments: