Sunday, April 8, 2007

ஸ்ரீ ஆண்டாள்

அன்புள்ள குழந்தைகளே நல்லாசிகள்! தனுர் மாதம் என்ற மார்கழி பிறந்து விட்டது.

இந்த மாதம் மிகச் சிறந்த மாதம். கீதையில் கண்ணன் சொல்கிறார்...மாதத்திலே சிறந்த

மார்கழியாக நான் இருக்கிறேன்! இந்த மாதத்தில் காலை திருப்பாவை பாடி ஸ்ரீரங்கநாதனை

ஆராதிப்பார்கள். அந்த ஸ்ரீ ஆண்டாளைப் பற்றி ஒரு கவிதைப் பாடலாமா?

பாடிய பின் அவள் கதையும் கேட்கலாம்!

பெரியாழ்வார் அருமையுடன் கண்டெடுத்த முத்தே

துளசிச் செடி அருகில் உதித்த தேவியே,

பூதேவியின் மறு அவதாரமே,

கோதை என்ற பெயர் பெற்றவளே,

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே,

கண்ணனை மணக்கத் துடித்தவளே,

தான் சூடிய மாலை கண்ணனுக்கு இட்டவளே,

கண்ணனை மணக்க பாவை நோம்பு நூற்றவளே,

திருப்பாவையை உருகிப் பாடியத் தலைவியே,

மணமக்ளாய் அலங்கரித்து வந்தவளே,

ஸ்ரீ ரங்கநாதனைக் காண ஓடோடியும் சென்றவளே,

திருவரங்கத்தில் பெருமாளுடன் ஒன்றறக் கலந்தவளே,

ஸ்ரீ ஆண்டாள் என்று புகழும் பெற்றவளே..!

அன்புடன் அம்மம்மா விசாலம்

No comments: