Sunday, April 8, 2007

இப்படியும் நடக்குமா?


தலைநகரம் தில்லியில் நாய்டா என்ற இடம். கிழக்கு தில்லியில் உள்ளது. அதில் சுமார் 30 பள்ளிச் செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனார்கள் இப்பொது அதைக் கண்டு பிடித்ததில் அவர்களைக் கெடுத்து பின் கொலை செய்து சில
அங்கங்களை விற்று பின் எரித்திருக்கிறார்கள்.
கல் நெஞ்சக்காரர்கள், எப்படி இதுபோல் நடந்து கொள்ளமுடியம். என் நெஞ்சுபொறுக்கவில்லையே! கொஞ்சம் மாதங்கள் முன்புதான் செஞ்சோலை ரோஜா செலவங்கள் கருகினர். அந்தக் காயம் இன்னும் மனதில் இருக்கும் போதே... இன்னொன்றா? குழந்தைகள் தெயவம் என்பார்களே... இவ்வளவு ஈனமான எண்ணம் தோன்றினால், அவர்கள் மனிதர்கள் அல்லர் அரக்கர்கள்தான் நான் நாய்டாவிற்குப் போயிருக்கிறேன்.அந்தக் குழந்தைகளைப் பார்க்காவிட்டாலும் கூட இருந்தது போல் உணர்வு வருகிறது. சர்கார் பல லட்சம் அந்தப் பெற்றோர்களுக்கு தருவதாக இருக்கிறார்கள். உயிரின் விலை பத்து லட்சம்! என் நெஞ்சு குமுறுகிறது. கடவுளே! இவர்கள் கல் மனதை மாற்றி ஈரப்பசையைத் தருவாயா?

அன்புடன் விசாலம்



No comments: