Sunday, April 8, 2007

குடியரசு தினம்

ஆங்கில ஆதிக்கம் கீழ்,
ஐந்நூறு ஆண்டுகள் நாம்,
கத்தியின்றி இரத்தமின்றி,
அஹிம்சை என்ற கொள்கைப் பற்றி,
சுதந்திரம் பெற்றோம்!
பல தியாகங்கள் கற்றோம்,
முழு சுதந்திரம், நம் குடியரசு தினம்,
கொடுத்தது மக்கள் ஆட்சிக்கு பலம்,
சுதந்திரத்தின் முழுமை,
மக்களின் பல உரிமை,
எழுத்தின் மூலம் சட்டங்கள்,
காத்து நிற்கும் வட்டங்கள்,
வந்தது குடியரசு தினம்.
நமக்கெல்லாம் கொண்டாட்டம்,
முப்படைகள் அணிவர,
அழகு சீருடை ஒரு மிடுக்கைத் தர
பாரதத் தலைவருக்கு வணக்கம் செலுத்த,
மனம் கொள்ளை போகிறது,
தேசப் பற்று மிளிர்கிறது,
வீரக் குழந்தைகள் பரிசைப் பெற,
நாட்டு வீரர்கள் பதக்கங்கள் பெற,
பலதரப் பட்ட காட்சி மாடல்கள்,
கூடவே முழங்கும் அழகிய பாடல்கள்
பள்ளிக் குழந்தைகளின் சிறந்த அமைப்பு,
பல நடனங்களின் சிறந்த கருத்து,
முடிவில் பறக்கும் விமானங்கள்,
பிரமிக்க வைக்கும் கரணங்கள்,
ஒளிவீசும் அதன் வாலகள்,
மேலிருந்து உதிரும் பல பூக்கள்,
ஆஹா! அழகே அழகு நம் குடியரசு தினம்,
உரிமைக் காப்போம்! என்று சொல்லும் மனம்.


அன்புடன் விசாலம்

No comments: